தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 069

தாய்மை
****பெண்ணுக்குப் பேரழகு
கொடுப்பது தாய்மையே.....
பார்புகழ் போற்றிடும்
உத்தமியும் அவள்தானே.....உலகமே பிறந்தது
மானிடப் பிறவிக்காய்
உயிர் சுமப்பவள் அவள்தானே...அன்பின் சிகரமாய்
கருணையின் கடலாய்
குடும்பத்தின் குழவிளக்காய்
திகழ்பவளும் அவள்தானே.....உலகாலும் தலைவர்கள்
உயிர்காக்கும் நாயகர்கள்
உருவாக்கிட வழிகாட்டும்
ஆசானும் அவள்தானே....துன்பங்கள் துயரங்கள்
எதுவந்த போதிலும்
தாங்கி நிற்கும்
தாரகையும் அவள்தானே....நன்றி:- நதீரா வசூக்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>