விடுமுறை நாள் - கவிதை
கவிதை போட்டி இல :- 027

"என் மனம் தேடுகிறது
என் மனதுக்குள்
இருக்கும்-நீ
எங்கே வசிக்கிறாய் என்று
உன்னை காண
ஆசைப்பட்ட நாட்கள்
இன்று முடிவுக்கு
வந்து விட்டது!
எனக்கு விடுதலை
தந்து விட்டது!
என் நினைவுகளால்
நான் எட்டிப்பார்த்து கொண்டிருக்கும்
என் ஜன்னலோர
கனவுகளுக்கு
விடை கொடுக்க வருவாயா?
வந்து
விடை ஒன்று தருவாயா?
மனதுக்குள் உன்னை பற்றி ஆயிரம் ஆசைகளை சுமந்து கொண்டு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
என் விடுமுறை நாட்களை..."
நன்றி :- நிலா பிரான்சிஸ்..
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






