செவ்வானம் நானே நீ அவந்திகையே..!-8 (தொடர்கதை)

காதல்

செவ்வானம் நானே நீ அவந்திகையே..!-8 (தொடர்கதை)

ஃபேக்றிக்கு போகாம இங்கே எதுக்கு வந்திருக்கோம் மாமா குட்டி அந்த இடத்தை கண்களால் ஆராய்ந்து கொண்டே ஒரு வித தவிப்புடன் கேட்டாள் அவந்திகா.

டைவர்ஸ்க்கு அப்ளை பண்ண தான் அசால்ட்டாக தோளை குலுக்கி சொல்லி விட்டு லாயர் வருகைக்காக காத்திருந்தான் வேந்தன்.

அட பாவி மனுஷ வெட்ட போற ஆட்டுக்கு மால போட்டு மஞ்ச தண்ணி தெளிக்கிற மாதிரி இதுக்கு தான் எனக்கு இத்தனை அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வந்தியா என்பதை போல அவனை பார்த்து வைத்தாள் அராத்து மனைவி.

இதழுக்குள் மறைத்த புன்னகையுடன் அவள் முக பாவனைகளை கமுக்கமாக கண்டு ரசித்த கள்வனவன் லாயரை கண்டதும் எழுந்து நின்றான் மரியாதை நிமித்தமாக.

வெல்கம் மிஸ்டர் வேந்தன் என்ன விஷயமா வந்திருக்கிங்க.. அவனுக்கு தெரிந்த லாயர் என்பதால் சகஜமாகவே பேசினார் அவரும்.

சார் இவங்க என் வைஃப் அவந்திகா.

அதெப்படி வேந்தன் தெரியாம போகும் இப்போ நெட்ல ட்ரெண்டிங்கே உங்க கலாட்டா கல்யாணம் தானே என் வக்கீலும் சிரிக்க வேந்தனும் பதிலுக்கு சிரித்து வைத்தான்.

சொலுங்க வேந்தன் எதும் முக்கியமான விஷயமா சிரிப்பில் இருந்து வக்கீல் சீரியஸ்க்கு தாவி விட்டார்.

யாஹ் சார் இவங்க அம்மா டெத் சம்பந்தமா பேச வந்திருக்கேன் என்க உடல் தூக்கி வாரி போட்டது அதிக்கு.

அந்த நாள் நினைவுகள் இதயத்தை குத்தி கிழிக்க உடல் நடுங்கியது அவளுக்கு.அவள் நடுக்கத்தை அருகில் இருந்தவன் உணர்ந்து கொண்டானோ என்னவோ அவள் கரத்தை ஆதராவாக பற்றி கொண்டான்.

சார் இவ அம்மா இருபது வருஷத்துக்கு முன்னாடி கொலை செய்ய பட்டிருக்காங்க அப்போ இருந்த போலீஸ் இத சாதரண விபத்தா மாத்தி கேஸ முடிச்சிட்டாங்க ஆனா இப்போ அதுக்கான ஆதாரம் என் கிட்ட இருக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி அக்யூஸ்ட்ட அரஸ்ட் பண்ணியாச்சு அவங்க வெளியே வராம நீங்க தான் இந்த கேசை எடுத்து நடத்தனும்.

ஒரே மூச்சில் அனைத்தையும் சொல்லி முடித்த வேந்தனை விழியகாலாது பார்த்து கொண்டிருந்தாள் அவந்திகா.இவனுக்கு எப்படி உண்மை தெரிந்தது குற்றவாளி என யாரை கூறுகிறான் என புரியாத பார்வை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.

இவங்க அம்மா எப்படி இறந்தாங்கனு சொல்ல முடியுமா வேந்தன் இது கொலைனு சொல்ல ஸ்டாராங் எவிடன்ஸ் ஏதும் இருக்கா.

அவந்திகாவோட அம்மா இவளுக்கு நாலு வயசு இருக்கும் போது ஊர்ல உள்ள ஏரில விழுந்து இறந்து போயிருக்காங்க.ஆனா அவங்க தன்னால விழுகல ரெண்டு பேர் அவங்கள தள்ளி விட்டு சாகடிச்சிருக்காங்க.அத கண்ணால பார்த்தா சாட்சி அவந்திகா மட்டும் தான் பட் இவ அப்போ சின்ன பொண்ணா இருந்தால உண்மைய சரியா சொல்லவும் தெரியல சின்ன குழந்தை சொன்ன உண்மைய யாரும் நம்பவும் இல்ல.

நீங்களே சொல்றிங்க அவந்திகா அம்மா இறந்த போது அவந்திகா சின்ன பொண்ணு அவளுக்கு விவரம் இல்லனு.இப்போ நாம கோட்ல சொன்னாலும் இததானே சொல்லுவாங்க இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்த கொலைய ஏன் அவந்திகா விவரம் தெரிஞ்சதும் சொல்லலனு சரியான கேள்வியை வக்கீல் கேட்டு வைக்க.

நீங்க சொல்றது சரிதான் சார் ஆனா இந்த கேசோட முக்கிய சாட்சி அவந்திகா இல்ல வேற ஒருத்தர்.நீங்க இந்த கேச எடுத்து நடத்துறதா இருந்தா சொல்லுங்க சார் சாட்சிய நானே கோட்ல ஆஜர் பண்றேன் என்றவன் பதிலுக்காக லாயரை பார்த்திருக்க அவரோ கண்டிப்பா நா எடுத்து நடத்துரேன் என வாக்கு கொடுத்தார்.

உனக்கு எங்கம்மாவ யார் கொன்னாங்கனு தெரியுமா வேந்தா...காரை ஸ்டார்ட் செய்தவனை கலங்கிய விழிகளுடன் கேட்டாள் அவந்திகா.

நல்லாவே தெரியும்..யார் கொன்னாங்க ஏன் கொன்னாங்கனு நல்லாவே தெரியும் என்றவன் அவள் புறம் திரும்பி நீ ஒன்னும் கவலை படாத கண்டிப்பா நியாயம் கிடைக்கும் இப்பவும் எப்பவும் நா உனக்கு துணையா இருக்கேன் இருப்பேன் இனி நீ இருட்ட பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது அவள் நெற்றியோடு  நெற்றி முட்டி அவன் இருக்க அவள் விழி உதிர்த்த கண்ணீர் அவன் முகத்தில் பட்டு தெறித்தது.

அவள் கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டவன் அவளை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டான்.

என் கிட்ட வேற ஏதாவது சொல்லனும்னு நினைக்கிறியா அதி என்க ஆமாம் என தலையாட்டினாள் அவந்திகா.

சரி சொல்லு என்பதை போல் அவன் அவள் முகம் பார்த்திருக்க.

குரலை செருமி கொண்டு பேச ஆரம்பித்தாள் அவந்திகா.

நாங்க கிராமத்துல இருக்கும் போது அப்பாவும் அண்ணனும் அண்ணன் ஸ்கூல் விஷயமா வெளிய போயிருந்தாங்க.நானும் அம்மாவும் துணி துவைக்க ஏரி பக்கமா போனோம்  வெயில் அதிகமா இருக்குனு அம்மா என்ன ஒரு மரத்தடியில உட்கார வச்சிட்டு அவங்க துணி துவைச்சிட்டு இருந்தாங்க அப்போ..அப்போ தான் உங்க அம்மாவும் ஜானு அப்பாவும் அங்க வந்தாங்க..

சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் உடல் மீண்டும் நடுக்கமெடுக்க அவளை இதமாய் அணைத்து கொண்டான் வேந்தன்.

தூரத்துல இருக்கவும் அவங்க என்ன பேசிக்கிட்டாங்கனு எனக்கு தெரியல ஆனா கொஞ்ச நேரத்துலயே அவங்க ரெண்டு பேரும் அம்மாவ தண்ணீல அழுத்துனாங்க அம்மா மூச்சு திணறி தவிச்சிட்டு இருந்தாங்க நா அம்மானு கத்திக்கிட்டே ஒடி வந்தேன் ஆனா நா வாரதுக்குள்ள அம்மா போய்ட்டாங்க என்றவள் கதறியழுதிட தன் தாயை நினைத்து தானே அருவருத்து போனான் வேந்தன்.

எப்படி அவளால் இப்படி ஒரு கொடூர செயலை செய்ய முடிந்தது ஆயிரம் தான் இருந்தாலும் தம்பியின் மனைவியல்லவா  இரண்டு பிள்ளைகளின் தாய் என்றுவாது இரக்கம் காட்டியிருக்கலாமே.

அதுக்கு அப்புறம் ஜானு அப்பா என்ன பார்த்து மிரட்டுனாரு அம்மா எப்படி செத்தாங்கனு கேட்டா தண்ணில விழுந்துனு சொல்லனும் எங்கள காட்டி கொடுத்த அப்பறம் உன்ன ராத்திரி பேய் வந்து பிடிச்சிட்டு போய்டும்னு சொன்னாரு.

நானும் பயந்துட்டு யார் கிட்டையும் எதுவும் சொல்லல ஆனா ராத்திரியான பயமா இருக்கும் யாரோ என்ன வந்து பயமுறுத்துவாங்க என் ரூம்க்கு வந்து என் மூஞ்சில தலகாணிய வச்சி அழுத்துவாங்க முகமூடி போட்டுகிட்டு ஒரு கை என்ன கொல்ல வரும் நா பயந்து ஓடி போய் அப்பா கூட படுத்துக்குவேன்.

மனுஷங்கள பார்க்கவே பயமா இருக்கும் யார் கூடவும் பேசவே பயமா இருக்கும்.நா இப்படி இருக்கத பார்த்து தான் அப்பா எங்கள இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தாங்க வந்த பிறகு தான் தெரியும் இங்கே தான் என் அம்மாவ கொன்னவங்க இருக்காங்கன்னு.

நா எதையும் காட்டிக்கல ஜானு அப்பா உங்க அம்மாவ பார்க்கும்போது எல்லாம் எனக்கு மறந்து போன மாதிரியே தான் இருந்தேன்.

ஆனா அத விட கொடுமை ஒன்னு இருக்கு என்றவள் பேச்சை நிறுத்தி அவன் முகத்தை பார்க்க அவனும் அவளை தான் பார்த்திருந்தான். 

அம்மா இல்லாத பொண்ணுன்னு என்னை நிறைய பேர்  Abuse பண்ண பார்த்தாங்க என்றிட மொத்தமாய் நெருங்கி போனான் வேந்தன்.

அதுல இருந்து யார பார்த்தாலும் அடிச்சிடுவேன் யாரையும் என்ன நெருங்க விட மாட்டேன் என்க..ஐந்து வயதில் தன் மீது கல்லை தூக்கி போட்ட அவந்திகா வேந்தனின் கண்முன்னால் வந்து போனாள்.

போக போக உன் மேல எனக்கே தெரியாம எதோ ஒரு நேசம் வளர்ந்தது நீ ஜானு மேல காட்டுற பாசம் எனக்கும் வேணும்னு மனசு ஏங்கும்.உன் கிட்ட பேச வந்தா நீ என்ன திட்டி அனுப்பிடுவ அதனாலேயே சண்டை போட்டாவது உன் கிட்ட பேசிடுவேன் என்று புன்னகைத்தாள் சேட்டை காரி.

நா வளர வளர அந்த ஏக்கமும் நேசமும் காதலா மாறுனுச்சு ஆனா அது உன் கிட்ட சொல்ல பயம் எங்க நீயும் உன் அம்மா மாதிரி இருப்பியோனு.ஜானுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் எனக்கும் அவள ரொம்ப பிடிக்கும் நாங்க காலேஜ் போகும் போது தான் அவ பிரபுவ காதலிக்கிறதே எனக்கு தெரியும் இது வரைக்கும் உன்ன காதலிச்சது அவ கிட்ட கூட சொன்னது இல்ல.

திடீர்னு உனக்கும் அவளுக்கும் கல்யாணம்னு சொல்லவும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அதான் அவள பிரபு கூட அனுப்பி வச்சிட்டேன்.நானே எதிர் பார்க்காத ஒன்னு தான் நீ எனக்கு தாலி கட்டுனது என வேந்தன் முகம் நோக்க அவனது கண்களும் கலங்கி போயிருந்தது.

தாயில்லாமல் எத்தனை வலிகளை அனுபவித்திருக்கிறாள்.அன்பிற்காக எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என என்னும் போதே நெஞ்சை அடைத்தது அவனுக்கு.சிறு வயது முதலே போராட்டங்கள் நிறைந்த வாழ்வு அவளது அருகில் இருந்தும் புரிந்து கொள்ளாமல் இருந்த தன்னையே நொந்து கொண்டான் .

காதலிப்பதை விட காதலிக்க படுவதே ஒரு வித போதை.ஜனனியிடம் காதலை வேண்டி தோற்றவன் அந்த காகலை அவந்திகாவிடம் பெற்றான்.இப்பொழுது நன்றாகவே தெரிந்தது அவள் விழிகளில் ஒளிந்திருந்த ஏதோ ஒன்று காதல் தான் என்று அதுவும் அவனுக்கான் காதலது.

நீண்ட நேரம் மௌனமாய் கழிய அவளை அழைத்து கொண்டு ஸ்டேஷன் சென்றான் வேந்தன்.அங்கே கம்பிகளுக்கு அந்த பக்கம் மாதவனும் சாரதாவும் இருந்தார்கள்.வேந்தனை கண்டதும் மீண்டும் நீலி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது விட்டாள் சாரதா.

வேந்தா இவ சொல்றத கேட்டுட்டு நீயும் அம்மாவ தப்பா நினைச்சிட்டியா நா உன்னோட அம்மாபா கொலை பண்ற அளவுக்கெல்லாம் போவனா..புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்து கொண்டே பேசியவளை ஏளனமாக பார்த்தான் வேந்தன்.

அவந்திகா தான் என் கிட்ட எல்லாத்தையும் சொன்னானு நா எதுவுமே சொல்லலையே அப்பறம் எப்படி நீங்க அவ சொல்றத கேட்டு நா தப்பா நினைச்சேன்னு சொல்றிங்க ஒற்றை புருவம் தூக்கி கேட்டவனை பார்த்து திருட்டு முழி முழித்தாள் சாரதா.

நா ஒன்னும் இங்க உங்க போலி டிராமாவ பார்க்க வரல இன்ஸ்பெக்டர பாக்க வந்தேன் ஓக்கே என்று சிம்ம குரலில் கரிஜித்தவன் இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டு செல்ல மகன் மீதும் ஆத்திரம் பொங்கியது அம்மாகாரிக்கு.

அவந்திகாவோடு ஃபேக்றிக்கு வந்தவன் அவளை வேலை செய்ய விட்டு விட்டு தன் வேலையில் மூழ்கிப் போக நேரம் போனதே தெரியவில்லை.மதிய நேரம் அவந்திகாவை தேட அவளை காணவில்லை ஊழியர்களிடம் விசாரிக்க அவள் போனை தூக்கி கொண்டு மேல் மாடிக்கு சென்றாதாக கூறி விட அவளை தேடி மாடிக்கு சென்றான் வேந்தன்.

மாடியில் அதி ஜனனியோடு போனில் பேசிக்கொண்டிருக்க வேந்தனும் வந்து சேர்ந்தான் ஹேய் பொண்டாட்டி உன்ன எங்கெல்லாம் தேடுறேன் நீ இங்கே இருக்க.என்ன தேட வைக்கிறதே உன் வேலையா போச்சுடி செல்லமாய் அவளை கடிந்து கொண்டே அவன் நடுந்து வர அவனை பார்த்து புன்கைத்து கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்த அவந்திகாவின் மார்பை தூரத்தில் இருந்து வந்து துப்பாக்கி குண்டு துளைத்து செல்ல அங்கேயே சுருண்டு விழுந்தாள் அவள்.

தொடரும்....