உங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..
நாமும் எம் குழந்தைகளும்

நான் என்பது இங்கு நான் மட்டுமே என் குழந்தை என்பது எனது என் கணவரின் உயிராகும் என் குழந்தையை நான் எவ்வாறு கஷ்டப்பட்டு இந்த உலகத்திற்கு இறைவனின் துணையுடன் கொண்டு வந்து சேர்த்தேனோ அதேபோன்று என் குழந்தையை நன்றாக பராமரித்து இவ்வுலகத்தில் இறைவனின் துணையுடன் நன்றாக வாழ வைக்க வேண்டும்
இவ்வுலகில் குழந்தையை சரியாக பராமரித்து வளர்ப்பது என்பது சில தாய்மாருக்கு கடினமாகவும் சில தாய்மாருக்கு இலகுவாகவும் இருக்கலாம் எவ்வாறாக இருந்தாலும் எமது குழந்தையை நாமே பராமரித்து வளர்க்க வேண்டும்.
இன்று வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் சில தாய் தந்தையர்கள் தமது கனவுகளை பிள்ளைகளின் மேல் திணித்து பிள்ளைகளின் வாழ்வினை வீணாக்குகின்றனர் அதாவது என் குழந்தை அப்துல் கலாம் ஆக வேண்டும் என் குழந்தை வானில் பறக்க வேண்டும் நீரில் நீந்த வேண்டும்….. இவ்வாறெல்லாம் நினைத்து பிள்ளைகளை கல்வி கற்க வைக்கின்றோம். என்ற பெயரில் வதைக்கின்றனர். அவ்வாறின்றி
முதலில் நாம் எமது குழந்தைகளை நேசிக்க வேண்டும்.
எவ்வாறு நேசிப்பது? அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் கொடுத்து பிடித்ததை எல்லாம் நிறைவேற்றுவது மட்டுமா? இல்லை நேசிப்பது என்பது பிடித்த விளையாட்டு பொருட்களையோ பிடித்த உணவுப் பொருட்களையோ விலை உயர்ந்த ஆடைகளையோ பெரிய பாடசாலையில் சேர்த்து விடுவதோ மட்டுமல்லாமல் ஒரு குழந்தையை நேசிப்பது என்பது சுயத்தை துறந்து தலையை குனிந்து முதுகுத்தண்டை வளைத்து நீங்களே விளையாட்டு பொருட்களாக மாறுவது , அவர்கள் ஏறி,இறங்கி, தொங்கி விளையாட ஒரு மரமாக மாறுவதும் மரமாக மாறிய பின் கிளைகளின் நிழலில் அமர வைத்து அவர்கள் சொல்கின்ற கதைகளை எல்லாம் முடியுமானவரை கேட்பது, அவர்கள் கடிக்கும் போது இனிப்பாகவும் பிடிக்கும் போது கைக்குள் அடக்கமாகவும் மாறுவது நீங்கள் கற்றறிந்ததை தெரிந்ததை நல்லதை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல.. அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றை நீங்கள் கற்றுக் கொண்டு கற்றுக் கொடுப்பதுவே நாம் என் குழந்தையை நேசிப்பதாகும்.
உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள்
இன்று நாம் தான் குழந்தையை நேசிக்கின்றோம் என்ற பெயரில் அவர்களை வதைத்துக் கொண்டிருக்கின்றோம் வாட்டுகின்றோம் அவர்கள் உணர்வுகளை நாம் கருத்தில் கொள்வதில்லை மாறாக எமது உணர்வுகளையே திணிக்கின்றோம் பரிட்சையில் முதலாவது என் குழந்தை ஓட்டப்பந்தயத்தில் முதலாவது என் குழந்தை என இவ்வாறு முதலிடம் வந்தால் மட்டுமே பெருமையாக பேசுகின்றோமே தவிர இதைத் தாண்டி கீழ் மட்டத்தில் இருந்தால் அவர்களை அடித்து துன்புறுத்தி வதைக்கின்றோம் ஏன் ஒவ்வொரு குழந்தை இடமும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட முடியாத தனித்துவங்கள் காணப்படுகின்றன இதை நாம் ஒருபோதும் அறிவதில்லை சில குழந்தைகள் உண்மை பேசும் ஒழுக்கம் வேணும் பகிர்ந்து அளிக்கும் அன்பு செலுத்தும் இவ்வாறு பல்வேறு நல்ல பண்புகளைக் கொண்டு காணப்படும் இதை அறிந்தாலே போதும் எனது குழந்தையும் இவ்வுலகில் பவளமே என உணர முடியும். இதனையே ஒரு பாடல் வரி வரியாக கூட கூறியிருக்கின்றார்கள் அதாவது" எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே அவர் நல்லவர் ஆவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்று குழந்தை பராமரிப்பில் அன்னையின் கவனமே முக்கியம் என வலியுறுத்தி இருக்கின்றன எம் குழந்தைகள் எமது செல்வங்கள் அவை பெருக வேண்டுமே தவிர அழிந்து விடக் கூடாது
கைத் தொலைபேசி ஆபத்தானது
இன்று இந்த உலகம் வளர்ந்து வருகின்றது நவீனத்துவம் அடைந்து விட்டது இருந்த இடத்திலிருந்து கொண்டே உலகத்தை பார்த்து விடலாம் கைக்குள் உலகத்தை கொண்டு வந்தது கையடக்க தொலைபேசி என்ற நீ குழந்தைகளின் கையில் தொலைபேசியை கொடுத்துவிட்டு அவர்கள் அவர்களின் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர் குழந்தைகளே இத்தொலைபேசியினால் இன்று சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள் பப்ஜி ,பிரீ பையர் என்ன விளையாட்டுகளையும் ஆபாச திரைப்படங்களையும் வாட்ஸ் அப் பேஸ்புக் என வெவ்வேறுபட்ட வகையில் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் கையடக்க தொலைபேசியில் சீரழிவுகள் உள்ளது என்று நான் கூறவில்லை மாறாக உயர்வுகளும் காணப்படுகின்றன அதாவது ஒரு குளத்தில் குதித்தால் மீன்கள் ,கற்கள் , சகுதிகள் என பல்வேறுபட்டவை காணப்படுகின்றன நாம் சகுதிகளிடம் செல்லாமல் மீன்களையோ விலை உயர்ந்த கற்களையோ பெற்றுக் கொள்ள முடியும் இவ்வாறு தான் கையடக்க தொலைபேசிகளும் இவற்றை நாம் குழந்தைகளுக்குப் புரிய வைத்து எனது கையடக்க தொலைபேசியை நம்மடக்கத் தொலைபேசியாக மாற்ற முயற்சிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
உணவுகளை தேர்ந்தெதடுக்க கற்றுக்கொடுங்கள்
நான் குழந்தைகளுக்கு சாப்பிட நடக்க கற்றுத் தருவதைப் போலவே தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும் எவ்வாறெனில் குழந்தை சாக்லேட் கேட்டால் அன்பாக நாளைக்கு வாங்கித் தருகிறேன் என்று சொல்லுங்கள் குழந்தை இப்பவே வேணும் என அழுதாலும் நாளைக்கு தான் என உறுதியாகச் சொல்லுங்கள் என்னிடம் உறுதி இல்லாவிட்டால் குழந்தைகளின் பிடிவாதம் அதிகரித்தே செல்லும் மேலும் குழந்தை கேட்பதற்கு வீட்டில் உள்ள அனைவரும் ஒரே பதிலையே கூற வேண்டும் அப்பா இல்லை என்று சொன்னால் என்ன நான் வாங்கித் தாரேன் செல்லம் என நாம் கூறக்கூடாது அவ்வாறு கூறினால் குழந்தைகளுக்கு குளிர் விட்டு போய்விடும் மேலும் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும் எரிச்சலோ கோபமும் கொள்ளக் கூடாது அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் குழந்தை யாரும் என்னைகவனிக்கவில்லை என்று எண்ணி அழுகையை நிறுத்தி விடும் எமது குழந்தை என்னிடம் ஒரு பொருளைக் கேட்கிறது எனின் அப்பொருள் குழந்தைக்கு தேவையா இல்லையா என முடிவு செய்வது குழந்தைகள் அல்ல நாமே ஏனெனில் நாமே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர்கள்.
பிடிவாதம் பிடிப்பதை தவிர்க்க கற்றுக்கொடுங்கள்
இக்காலத்தில் பெற்றோர்கள் அனைவரும் பெருமையாக சொல்லும் விடயம் தான், என் குழந்தை "சென்சிடிவ்"ஆக இருக்கின்றான்....என்ன சென்சிடிவ்? குழந்தைகள் சென்சிட்டிவாக இருக்கின்றார்களா? அல்லது பெற்றோருக்கு குழந்தைகள் வளர்க்க தெரியவில்லையா? இந்த கேள்விக்கு தான் "பிரபல குழந்தைகள் மனநல நிபுணர் ஜெயந்தி" சில பதில்களை கூறி இருக்கின்றார் நான் சில தாய்மார்களை சந்தித்து இருக்கின்றேன் சிலர் கூறுவர் என் குழந்தை ஒரு விஷயத்தை நினைச்சிட்டுனா அழுது அடம் பிடித்து ஆவதே சாதிச்சிடுவான் அப்படியே எங்க அப்பா மாதிரி இன்னும் சிலர் நான் எங்க குழந்தைக்கு எதையும் இல்லை என்று சொல்வதில்லை அந்த காலத்துல நான் தான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம் பசங்களுக்கு கஷ்டம் தெரியக்கூடாது.. என்று பெருமையுடன் சொல்வார்கள் இப்படி தான் போல எதையும் ஏற்க தயாராக இருக்கின்ற குழந்தையின் மனதில் தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கின்ற எண்ணத்தை விதைத்து அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை நிரம்பச் செய்கின்றனர். இத்தவறை செய்பவர்கள் பெற்றோர்களே பெற்றோர்கள் தமது குழந்தைகளில் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தத்தான் இவ்வாறெல்லாம் செய்கின்றார்கள் உண்மையில் குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் உள்ள பெற்றோர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று கூறினார் இக்கருத்தைக் கொண்டு நாம்செயல்படுவோமானால் எமது குழந்தைகளை நாமும் சிறந்த முறையில் பராமரிக்க முடியும் . ஒரு விவசாயின் குழந்தைக்கு வெறுமனே நெல்லை விற்று வரும் பணத்தின் அருமை மட்டும் காட்டக்கூடாது மாறாக அந்தப் பணத்தில் இருக்கும் தனது தந்தையின் வியர்வையும் காட்ட வேண்டும் உழுது,நெல்லிட்டு, நீர் இறைத்து,பராமரித்து இவ்வாறு இதில் பல கஷ்டங்கள் உள்ளன என்று கூற வேண்டும். தற்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் தமது பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கின்றனர் என்பதனை "காணொளிகள்"மூலம் மாணவர்களுக்கு பாடசாலையில் காட்டுகின்றனர் இவ்வாறு நாமும் செய்வோம் ஆனால் எமது குழந்தைகளுக்கும் கஷ்டங்களை உணர வைக்க முடியும் எம் குழந்தை நோ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக சொல்லாத வரையில் பெற்றோரின் எந்த கஷ்டமுமே குழந்தைகளுக்கு தெரியாது அத்தோடு நமக்கு செய்ய வேண்டியது பெற்றோர்களான இவர்களின் கடமை என்றுதான் எடுத்துக் கொள்வார்கள் தவிர நம்மில் எவ்வளவு பிரியம் இவர்களுக்கு என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள் எனவே தான் குழந்தைகளுக்கு எமது கஷ்ட நஷ்டங்களை கூறிக் கொடுத்து எடுத்துக்காட்டி அவர்களை பராமரிக்க வேண்டும்
எமது குழந்தை என்னிடம் ஒரு பொருளை கேட்கிறது அதன் விலை அதிகம் என்றால் இந்த பொருளின் விலை மிகவும் அதிகம் அம்மாவிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை என உண்மையான காரணங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள் அப்போதுதான் பணத்தின் அருமையும் பெற்றோரின் புதுமையும் குழந்தைகளுக்கு புரியும் எந்த குழந்தை கேட்டதை எல்லாம் மிக எளிதாக கிடைத்து விடுகின்றதோ அந்தக் குழந்தை மன தைரியம் குறைந்ததாகவும் தோல்வியை தாங்கிக் கொள்கின்ற சக்தி இல்லாததாகவும் தான் வளரும் தான் நினைத்த ஏதோ ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால் கூட மனமுடைந்து போய் வாழ்வின் நிம்மதியையும் சந்தோசத்தையும் விளக்கத் தொடங்கி விடுகின்றது எனவேதான் எமது குழந்தை கேட்கும் பொருளை நாம் பெற்றுக் கொடுத்தாலும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் நாம் எமது குழந்தைகளை வாழ்வில் எந்த விஷயத்திற்கும் அனுசரித்து வாழ சொல்லிக் கொடுக்க வேண்டும் மாறாக தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என பிடிவாதமாக எமது குழந்தை வளருமே ஆனால் வாழ்வில் எல்லா விடயங்களிலும் தோற்றுவிடுவார்கள் எனவேதான் நமது குழந்தையின் பிடிவாத குணத்தை தவிர்த்து அனுசரித்து வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்" பிடிவாதம் பிற்காலத்தில் தீமையை பிரதிபலிக்கும்"
குழந்தைகளுடன் உரையாடுங்கள்
நாம் குழந்தையை பராமரித்து வளர்ப்பதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் தான் நாம் எமது குழந்தைகளுடன் உரையாடுவது இன்று அநேகமான வீடுகளில் ஒருவர் ஒருவரோடு உட்கார்ந்து பேசுவதில்லை அவரவர் ஒவ்வொரு இடத்திலிருந்து தமது தொலைபேசிகளே பார்த்துக் கொண்டிருக்கின்றன இது பாரியதொரு ஆபத்தான நிலையை உருவாக்குகின்றது இவற்றுக்கு மாறாக நாம் எமது குழந்தைகளுடன் நன்கு உரையாட வேண்டும் நாம் எமது குழந்தைகளுடன் பேச பேச தான் அந்த குழந்தை பெற்றோருடன் நெருக்கமான அன்பும் பரஸ்பரமும் கொண்டு காணப்படும் நாம் உரையாடுவதனாலே எமது பிள்ளையின் மனதை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும் மேலும் அவர்களின் தேவைகள் என்ன என்பதும் அவர்கள் எத்திசையை நோக்கி செல்கின்றனர் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும் சில குழந்தைகள் சில விடயங்களை பெற்றோரிடம் கூற தயங்குவார்கள் தயக்கத்தை உடைத்து குழந்தைகளை என்னிடம் நட்பாக பேச வைக்க வேண்டியது குழந்தை வளர்ப்பின் அவசியமான ஒன்றாகும் இன்று அனேகமான பெற்றோர் குழந்தை பாடசாலைக்கு செல்லும்போது பல ஆலோசனை கூறுவர் நன்றாக படிக்க வேண்டும் ஆடைகளை அசுத்தப்படுத்தக் கூடாது…இவ்வாறெல்லாம் ஆனால் குழந்தை வீட்டுக்கு வரும்போது ஏதாவது பொருளை தொலைத்தாயா ஏன் ஆடை இவ்வளவு அழுக்காக இருக்கிறது இவ்வாறெல்லாம் கேட்பார்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து மாறாக நாம் குழந்தைகளிடம் நல்ல முறையில் பேச வேண்டும் அதாவது நீ யாருக்காவது சாப்பிட ஏதாவது கொடுத்தாயா யாருக்காவது நல்லது செய்தாயா? இவ்வாறு கேட்டு அவர்களுடன் உரையாடி அவர்கள் அன்றைய நாள் பொழுதை எவ்வாறு கழித்தனர் என்பதனை நாம் அறிந்து செயல்பட வேண்டும் நாம் அதிகமாக எமது குழந்தைகளுடன் உரையாடுவதன் மூலமே அவர்களுடன் பாரிய பரஸ்பரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவேதான் நாம் குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றோமோ அதே அவர்கள் பிற்காலத்தில் பிரதிபலித்துக் காட்டுகின்றனர் எமது குழந்தைகளை நன்றாக பராமரித்து நல்லதை கூறி நன்றாக வளர்த்து நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும்" இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்கள்"
Whats Your Reaction?






