தமிழர் மருத்துவம் என்றால் என்ன?
பாரம்பரிய தமிழ் மருத்துவம். 1 நோய் பெருகக் காரணம் என்ன? இயற்கை மருத்துவம் என்றால் என்ன?

பாரம்பரிய தமிழ் மருத்துவம்.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. மனிதன் ஒருவனுக்கு எவ்வளவு செல்வம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் அவன் பூரண சுகதேகியாக இருந்தால் தான் அவன் வாழ்வு திருப்திகரமானதாக அமையும்.
இவ் உலகில் நாளுக்குநாள் புதிய நோய்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனால் பல மனித உயிர்களும் பலியாகிக்கொண்டுதான் இருக்கின்றது. இதை நான் மருத்துவத்தின் ஒரு குறையாக பார்க்கவில்லை இருப்பினும் இதுவே நிதர்சனமான உண்மையாகும்.மருத்துவத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றை நாம் அறியும் போது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. மருத்துவத்தில் உடலுக்கு மட்டும் மருந்து உடலுக்கு மட்டும் மருந்து கொடுப்பது மற்றும் மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது மற்றும் ஆன்மாவிற்கு மட்டும் மருந்து கொடுப்பது இது தவிர இந்த மூன்றிற்கும் சேர்த்து கொடுப்பது. அப்படிப்பட்ட மருத்துவங்கள் முப்பத்தி நான்கு மருத்துவ முறைகள் உள்ளன என்பது உள்ளன என்பது ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உண்மையாகவே முப்பத்தி நான்கு மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் நான் இங்கே குறிப்பிடா விட்டாலும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன். சித்த மருத்துவம்,ஆயுர்வேத மருத்துவம்,யூனானி மருத்துவம்,காந்த மருத்துவம்,ரெய்கி மருத்துவம், வர்ம மருத்துவம்,அக்குபஞ்சர் மருத்துவம்,அக்குபிரஷர் ,மலர் மருத்துவம்,மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம்,நம்பிக்கை மருத்துவம்,ஜோதிட மருத்துவம்,மசாஜ் மருத்துவம்,தியான மருத்துவம் போன்ற மருத்துவத்தில் ஆரம்பித்து மருத்துவ ஆலோசனை பெறுதல் மருத்துவம் வரை முப்பத்தி நான்கு மருத்துவம் உள்ளது.
இவ் மருத்துவ துறையில் இந்தியர்கள்,எகிப்தியர்கள்,சீனர்கள்,கிரேக்கர் மற்றும் அமெரிக்க குடிகளான மாயன்கள் மற்றும் செவ்விந்தியர்கள் போன்றவர்கள் மருத்துவ துறையில் கொடிகட்டி பறந்தவர்கள் . இவைககள் எத்தைனயோ இருந்தாலும் கிரேக்க மற்றும் சீன மருத்துவ துறைக்கு பின் மிகவும் பழமையானதும் சிறப்புமிக்கதுமான மருத்துவமாக எமது தமிழ் பாரம்பரிய மருத்துவம் காணப்படுகின்றது. தமிழ் பாரம்பரிய மருத்துவம் என்பது சித்த மருத்துவம் ஆகும்.
சித்த வைத்தியத்தில் மகத்துவமிக்க மருத்துவ முறைகள் காணப்படுகின்றது. இது முழுமையாக இயற்கை சுற்றியுள்ள மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட வைத்திய முறைகள் ஆகும் இதனால் இதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
இம் மூலிகைகளை பெற்றுக்கொள்வது மிகவும் சிரமமான செயலாகும் ஏன் என்றால் இவை காடுகளிலும் மற்றும் மலைப்பகுதிகளிலுமே செறிந்து காணப்படுகின்றது. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு மருத்துவ சிறப்பு குணங்கள் உள்ளது அவை நோய்களை குணப்படுத்த வல்லது. இந்த மூலிகைகள் தூய்மையாக்கபட்டு தூள்களாக மற்றும் மூலிகை சாறுகளாக உருமாற்றி தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவ தேவைகளுக்கு பயன்படுகின்றன. சித்த வைத்தியத்தில் மூலிகைகளை போன்று தாவர வேர்களும் மருந்துகளாக பயன்படுகின்றன. இது ஏன் இலைகள் மற்றும் வேர்கள் மட்டும் சித்த வைத்தியத்தில் பயன்படுபவன அல்ல இறைவனால் இயற்கையாக படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் ஒரு மகத்துவமான மருத்துவ குண இயல்புகள் உள்ளன. அவற்றை கண்டறிந்து இயற்கை முறையிலே அதாவது இரசாயனங்களை சேர்க்காது மருத்துவமாக மாற்றும் அபூர்வமான ஆற்றல் இயற்கையிலேயே சித்தவைத்தியத திற்கே உள்ளது.
இவ் வைத்தியம் பல்லாயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறை ஆசியுடன் சித்தர்களினால் அருளப்பட்ட ஒரு உண்ணதமான கலை இந்த சித்த வைத்தியக்கலையாகும்.அவ்வாறானா சித்தர்களில் அகத்திய சித்தர் முக்கியமானவர் ஆவார். இவர் ஒரு மகாமுனியாவார். இவரால் பல பெறுமதிமிக்க வைத்திய குறிப்புகள் உலகிற்கு வழங்கப்பட்டதுள்ளது இவை போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவைகள் ஆகும். சித்த வைத்தியம் ஆரம்ப காலங்களில் எல்லாம் வனங்களுக்கு அண்மித்த பகுதிகளில் மற்றும் ஆலயங்களுக்கு அருகில் குளம் மற்றும் ஆறுகளுக்கு அண்மித்த பகுதிகளில் சிறு குடில்கள் அமைத்து மக்களுக்கு இலவசமாக சித்தர்களினாலும் அவர்களின் வழித்தோன்றல்களினாலும் வைத்திய முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.சித்த வைத்தியம் வெறுமனே சிகிச்சை முறை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கை முறையாகவும் பேணிவந்தால் நமது வாழ்க்கை சிறக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இவ் சித்த வைத்தியம் மனிதர்களின் ஐம்புலனுக்கும் பொருந்தக்கூடியதும் உகந்ததும் ஆகும்.
பாரம்பரிய தமிழ் மருத்துவம் பக்கவிழைவுகள் அற்றது . நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாக குணப்படுத்துகின்றது. பாரம்பரிய மருத்துவம் அன்றாட உணவுகள் மற்றும் மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் தீர்ப்பவையாகும். உடலை மட்டுமோ உடலின் தனி உறுப்பை மட்டுமோ கவனத்தில் கொள்ளாது ஒவ்வோர் உறுப்பும் ஒட்டுமொத்த உடலின் பாகம் என்னும் முழுமை உணர்வைக் கொண்டவை.
தமிழ் பாரம்பரிய மருத்துவம் அதிகப்படியான செலவு அற்றது. அது மாத்திரம் இன்றி இவ் மருத்துவத்தின் குண இயல்புகள் மற்றும் வைத்திய முறைகளை படிக்காத பாமர மக்களினாலும் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும்.கடந்த சமீப காலமாக உலகினுள் புதிதாக நுழைந்த பல நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவம் சிறப்பான நல்லதொரு பலாபலனை அளித்துள்ளது இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.குறிப்பாக சொல்லப்போனால் சிக்குன் குனியா காய்ச்சலை குணமாக்கவும் , குணமான பின் பல நாட்கள் நீடித்த மூட்டுவலி,சோர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இம் மருத்துவ சிகிச்சை பெரிதும் தீர்வாக காணப்படுகின்றது. இது ஏன் சமீப காலத்தில் ஒட்டு மொத்த உலகையும் உலுக்கிய கொரோனா வைரைசை கூட அழிக்கவல்லது, இந்த சித்த மருத்துவம். இதற்கான சான்றுகளை தொலைக்காட்சி மற்றும் செய்திப்பத்திரிகைகளில் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொண்டிந்தோம்.
இந்த சித்த பாரம்பரிய தமிழ் மருத்துவம் இலகுவாகவே அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக் கூடிய விதத்தில் இயல்புடையதாகின்றது இதனால் மனிதர்களின் உடலினுள் இலகுவாக சென்றடைந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மனிதர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது. பாரம்பரிய தமிழ் மருத்துவம் மருந்துகளையோ மருந்து பெயர்களையோ அல்லது அதன் தயாரிப்பு முறைகளையோ அல்லது அவற்றின் சேர்மானங்களையோ மறைத்து வைக்காமல் அவற்றை பெறும் இடங்களையும் முறைகளையும் முறையாக அறிவித்து வெளிப்படையான முறையில் மக்களை சென்றடைகின்றது.இம் மருத்துவம் நம் பருவநிலைகள்,வாழ்நிலைகளை கணக்கியல் கொண்டு சிகிச்சை முறைகளை உருவாக்கியுள்ளது இதனால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது மாத்திரம் இன்றி தொற்று நோய்களுக்கான பரிகாரத்தில் இந்த சித்த பாரம்பரிய மருத்துவம் மிகவும் வலிமையானதாக உள்ளது. ஆனால் இந்த சித்த வைத்தியத்திற்கு கிடைக்கும் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக்க குறைவாகவே உள்ளது. நம் நாட்டில் கூட ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய குறைந்தளவான சித்தவைத்தியசாலைகளை உள்ளது.
ஆங்கிலேய வைத்தியசாலைகளுக்கு கிடைக்கின்றனவற்றில் பாதியளவான உட்கட்டமைப்பு மற்றும் நிதி நிர்வாக வசதி கூட இவ் வைத்தியசாலைகளுக்கு கிடைப்பது இல்லை இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அது மாத்திரம் இன்றி ஆங்கிலேய மருத்துவ கல்வி வைத்தியர்களுக்கு சமூகத்தில் கிடைக்கின்ற மரியாதை அந்தஸ்து கூட சித்தமருத்துவக்கல்வி வைத்தியர்களுக்கு கிடைப்பது இல்லை. சித்த வைத்திய முறையில் நோய்களை குணமாக்குவதற்கு சிலநாட்கள் ஆனாலும் மீண்டும் அந்த நோய் நம்மை வந்து தாக்காது ஆனால் நவீன வைத்திய முறை மருத்துவத்தில் விரைவாக நோய்க்கிருமிகள் அழிக்கப்படுகின்றன ஆனால் முற்றுமுழுதாக நோயை குணப்படுத்த முடியுமா ?? என்பது இதைப்போன்ற கேள்விக்குறியாகவே உள்ளது.
அது மாத்திரம் இன்றி நவீன மருத்துவத்துறையில் கவனக்குறைவு ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும் .நான் நவீன மருத்துவம் நவீன மருத்துவம் என்று குறிப்பிடுவது ஆங்கிலேய அல்லது அல்லோபதி மருத்துவம் ஆகும். தமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் கோட்பாடாக தாவர,விலங்கு, உலோகம் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுபவன என்பதே ஆகும்.
சீரிய சிறந்த வாழ்க்கையை தமிழ் பாரம்பரிய மருத்துவமான இவ் சித்த வைத்தியம் எமக்கு கற்றுத்தருகின்றன. தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம் உருவான காலகட்டம் இதன் வரலாற்று ஆரம்ப கட்டம் தொடர்பான எந்தவிதமான தெளிவான தகவல்களும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை இதிலிருந்து சித்த மருத்துவம் மிகவும் பழமையான வரலாற்று தொன்மையை கொண்டது என புலப்படுகின்றன.இது சித்தர்களின் பரம்பரையினூடாக தோற்றம் பெற்றது என்று மட்டும் தெளிவாக அறியக்கூடியதாக உள்ளது. இதன் மருத்துவ குறிப்புகள்,மூலிகைகள் அவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் ஓலைச்சுவடிகளில் பதியப்பட்டு மிகவும் பாதுகாப்பானதாகவும் இரகசியமானதாகவும் பேணப்பட்டுள்ளது என்பதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. இதனால் தான் அக்காலங்களில் ஓலைச் சுவடிகள் மாபெரும் பெறுமதிவாயந்தாக கருதப்பட்டது. இந்த சித்த மருத்துவத்தை வளர்ச்சியடைய செய்வதற்கு பதினெட்டு சித்தர்கள் தமது முழுநாள் தவத்தையும் ஞானத்தையும் இதற்காக அர்ப்பணிப்பு செய்துள்ளனர் என்பது புராதன கால தகவல்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.
சித்தர்கள் இந்த ஓலைச்சுவடிகளில் வெறுமனே மருத்துவ குறிப்பு இரகசியங்களை மாத்திரம் எழுதவில்லை எந்த எந்த காலங்களில் எவ்வகையான நோய்கள் இந்த உலகை தாக்கும் அதனை குணப்படுத்த எவ்வகையான மருந்தை பயன்படுத்தல் வேண்டும் என்பதை முன்கூட்டியே எழுதி வைத்துள்ளனர். இதைப் போன்ற பல பெறுமதிவாய்ந்த தகவல்கள் இவ்வகையான ஓலைச்சுவடிகளில் பதியப்பட்டது. இன்னும் பல பெறுமதிவாய்ந்த ஓலைச்சுவடிகள் இன்று வரை மண்ணினுள் புதையுண்டு காணப்படுகின்றது இவை மண்ணில் இருந்து மேலேயே வரும் பட்சத்தில் பல குணப்படுத்த முடியாத நோய்கள் மண்ணினுள் செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆங்கிலேயரின் வருகை மற்றும் அவர்களின் படையெடுப்பு காலங்களில் இவ் ஓலைச் சுவடிகள் அவர்களினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. ஆங்கிலேயரின் காலங்களிலே நமது பாரம்பரிய சித்த வைத்தியம் நலிவுற்று மக்களினால் மறுக்கப்பட்டது. தற்போது அழிவுறும் நிலைக்கு மாறியுள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக உற்றுநோக்கப்படுகிறது.
உண்மையிலே ஆங்கிலேய அதாவது நவீன மருத்துவத்தினால் குணப்படுத்த முடியாத பல நோய்களை சித்த வைத்திய முறையில் குணப்படுத்த முடிந்திருக்கிறது. புற்றுநோய் நவீன மருத்துவத்திற்கு மிகவும் சவாலான ஒரு விடயமாகும் ஆனால் இதை சித்தவைத்தியத்தியத்தில் குணப்படுத்திய வரலாறுகள் உண்டு ,
இது சித்த வைத்தியத்தை சிறக்க வைத்த நிகழ்வுகளாக பார்க்கபடுகின்றன.இது ஏன் பேசமுடியாத பிள்ளைகளை கூட ஒழுங்காக பேச வைத்திருக்கின்றது இந்த சித்த மருத்துவம் இதற்கு வசம்பு என்னும் சித்த மருத்துவ பொருள் உள்ளது.. நகர்ப்புறங்களில் சித்த வைத்தியங்கள் நலீவுற்று காணப்பட்டாலும் தற்போது கூட கிராமபுறங்களில் பாட்டி வைத்தியம் என்ற மாற்றுப்பெயரில் உயிர்ப்புடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நவீன மருத்துவத்துவத்தின் ஈர்ப்பும் இலாபகரமான மருத்துவ வியாபார வளர்ச்சியினாலும் பாரம்பரிய மருத்துவத்தின் மேன்மையை மக்கள் நாளடைவில் கண்டுபிடிக்கப கொள்ளா நிலை உருவாகியுள்ளது. எவ்வாறாயினும் இங்கே இருக்கும் மக்கள் பாரம்பரிய வைத்தியத்தை மறந்து நவீன மருத்துவத்திற்கு தமது ஈர்ப்பை காட்டினாலும் மேற்கத்திய மக்கள் நமது பாரம்பரிய சித்த வைத்திய முறையில் தமது ஈர்ப்பை சமீபகாலமாக காட்டிவருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கூட இவ் வைத்தியத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகிறார்கள்.
மருந்தே உணவு உணவை மருந்து என்பது பழமொழி இதற்கு எடுத்துக்காட்டான மருத்துவமே தமிழ் பாரம்பரிய மருத்துவம் ஆகும். மருத்துவம் மகத்தான சேவை. அது மனிதனின் அடிப்படை தேவையும் உரிமையும் ஆகும். அக் கடமையும் பொறுப்பையும் சரிவர பூர்த்தி செய்கிறது இந்த சித்த மருத்துவம் இது இலாப நோக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. சித்த வைத்தியத்தில் வெறுமனே மூலிகைகள் மாத்திரம் பயன்படுத்துவன இல்லை, இதுனுடன் சேர்த்து முத்திரைகளும் வைத்தியத்தில் பயன்படுகிறது. முத்திரைகள் சித்த வைத்திய முறையில் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கிறது.
இதில் சங்குமுத்திரை சித்த வைத்திய முறையில் அதிகமாக பயன்படுத்தும் முத்திரையாகும். இதை இலகுவாக செய்யக்கூடிய ஒன்றாகும். எவ்வாறு என்று பார்ப்போம். இடது கையின் மற்ற விரல்கள் வலது கைவிரல்களின் பின் பகுதியில் சாய்ந்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடுவிரல் நுனியை தொட்டுக் கொள்ளவும் மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்க வேண்டும் இந்த முத்திரையை சங்கு முத்திரையாகும். இந்த முத்திரையை செய்வதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கின்றது,காய்ச்சல் சுகமாகின்றது தைராய்டு நோய் குணமடையும் அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் குணமடைகின்றது பேச்சுத்திறன் அதிகரிக்கின்றது. பார்த்தீர்கள் தானே சித்த வைத்தியத்தில் எவ்வளவு இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் நோய்களை குணப்படுத்தலாம் என்று.
ஆனால் நவீன வைத்தியத்தியல் எதற்கு எடுத்தாலும் மாத்திரைகளும் ஊசிகளும் சத்திரசிகிச்சைகளும் தான் அதிகம் .இவை மனிதனின் உடல் உறுப்பு சதைகளை கிழித்து இரத்தத்தை அதிகமாக உடலில் இருந்து இழக்க வைக்கின்றன. இதுவே நவீன மருத்துவத்தின் செயற்பாடுகளாக தற்காலங்களில் இருக்கின்றது .நான் இவற்றை குறைகளாக கூறவில்லை நவீன மருத்துவத்தை தற்போது வியாபார நோக்கமாக மாத்திரமே பார்க்கப்படும் நிலைமயை இந்த மருந்து கம்பனிகள் உருவாக்கிவிட்டனர். இதுவே எனது மனஆதங்கம். ஆனால் சித்த வைத்தியம் அவ்வாறு இல்லை குறைந்தளவான செலவைக் கொண்டதும் சேவை மனப்பான்மை உடையதுமான மருத்துவம் ஆகும். சில பழங்குடி சார் மக்கள் இந்த சித்த மருத்துவத்தை இலவசமாக செய்கின்றனர்.
பாம்புகடித்த விசேஷத்தை முறிப்பதில் சித்த வைத்தியம் பெயர்பெற்றது. இதற்கு விசேட மூலிகைகள் காணப்படுகின்றன.சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படும் பொருளாக தேன் காணப்படுகின்றது. தேன் அதிகளவான மருத்துவத்தன்மை வாய்ந்தாக காணப்படுகின்றது. தேனீக்களிடம் இருந்து பெறப்படுகின்ற தேனை மருத்துவத்திற்கு பயன்படுத்திய பெருமை சித்த வைத்தியத்தையை சாரும். சித்த வைத்தியத்தில் இன்னும் அதிகப்படியான நன்மைகள் உண்டு இவற்றையெல்லாம் கூறியோ அல்லது கேட்டோ எழுதியோ புரிவதை விட உங்கள் நோய்களுக்கு சித்த மருத்துவ மருந்து பெற்று பாருங்கள் பின் உங்களுக்கே புரியும். இத்தகைய வைத்திய முறைகளை அழியவிடாது இதற்கு புத்துயிர் அளிக்கும் பட்சத்தில் இவ் உலகம் நோய் நொடிகள் இல்லாது இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் மனித இனம் வாழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.