காதலால் காதலுடன் -இறுதி பகுதி (தொடர்கதை)
வாழ்வியல் கதைகளின் இனிமையான இணைப்பு. உணர்வுப்பூர்வமான கதைகளுடன் உங்கள் மனதை மயக்கும் ஒரு பயணம்

சில நாட்களாய் காவியா கதிரின் கண்களுக்கு தெரிவதில்லை.தெரிவதில்லை என்பதை விட என்பதை விட தெரிய விரும்பவில்லை என்பதே உண்மை.
என்று அவன் மேஹாவுடனான திருமணத்தை பற்றி யோசிக்கிறேன் என்றானோ அன்றிலிருந்து அவனை விட்டு விலகியிருக்கிறாள் காவியா.தான் தொலைவில் சென்றால் அவன் தன்னை மறந்து மற்ற பெண்ணை மணப்பான் என்ற ஒரு நப்பாசையில்.
கதிர் மேஹா வீட்டுல இருந்து தகவல் கேட்டுட்டே இருக்காங்க என்ன பதில் சொல்லறது கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தவனிடம் டீயை கொடுத்த படியே ராதிகா கேட்க.
விழியை மூடி திறந்தவன் ஒரு நிமிடத்தின் பின்னர் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிடுங்கமா என்று விட்டு டீயை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்றான்.
மகிழ்ச்சி பொங்க கணவனை தேடி ஓடினாள் ராதிகா..என்னங்க என்னங்க எங்க இருக்கீங்க நீங்க .
இங்க தான்மா இருக்கேன் எதுக்கு இப்படி வயசு பொண்ணு மாதிரி துள்ளிக்கிட்டு ஓடி வார மனைவியை மெல்லமாக கடிந்து கொண்டார் சிவராமன்.
எல்லாம் நல்ல விஷயம் தாங்க நீங்க மேஹா வீட்டுக்கு போன் போட்டு பையன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்னு சொல்லுங்க என்றவளின் சந்தோஷ சாரல் சிவராமன் மீது தூறிட அவரும் மகிழ்ச்சியோடு மேஹா வீட்டுக்கு அழைத்து தகவல் கூறினார்.
அனைவருக்கும் மகிழ்ச்சி கதிரின் மனம் மாறும் முன்னரே இன்றே தட்டை மாத்தி கொண்டு அடுத்த வாரமே திருமணம் செய்ய முடிவெடுக்க சிவராமனும் சம்மதம் தெரிவித்தார்.
ராதிகா கதிரை ஆஃபிஸ் செல்ல வேண்டாம் என்று தடுத்து விட அவனும் ஆஃபிஸ் செல்லவில்லை அடுத்த சில மணி நேரங்களில் வேலைகள் வேகமாக நடைபெற மேஹாவோடு மேஹாவின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள் தட்டு தாம்பூலத்தை தூக்கி கொண்டு.
கதிர் வீட்டிற்கு வந்த மேஹா சும்மா இருக்க முடியாமல் சென்று மேகலாவையும் ராஜாவையும் அழைத்து கொண்டு வந்தாள்.
என்ன இருந்தாலும் அவங்க தானே கதிர் உன்னோட அம்மா அப்பா அவங்க இல்லாம நம்ம கல்யாணம் எப்படி நடக்கும் அதான் கூட்டிட்டு வந்தேன் என மேஹா விளக்கமும் கொடுக்க வெற்று புன்னகையை மட்டுமே அவளுக்கு பரிசாய் கொடுத்தான் கதிர்.
பாவம் அவன் அமைதி கண்டு மகிழ்ந்த யாருக்கும் தெரியவில்லை ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலும் ஒரு நாள் அமைதி கொள்ளும் அமைதி காக்கும் பூமியும் ஒரு நாள் பூகம்பமாய் வெடித்து சிதறும் என்று.
கதிர் கிடைத்த மகிழ்ச்சியில் அவனை ஒட்டிக்கொண்டே நின்றாள் மேஹா.நிச்சைய தாம்பூலம் மாற்ற பட்டு திருமணம் தேதியும் குறிக்கப்பட அனைவருக்கும் சந்தோஷம்.
அடம் பிடித்து கதிரை ஷாப்பிங் அழைத்து கொண்டு வந்தாள்.கதிர் இந்த டிரெஸ் எனக்கு எப்படி இருக்கு முட்டி வரை இருந்த ஒரு கவுனை எடுத்து மேலே வைத்து கொண்டு மேஹா கேட்க கதிரின் மனம் ஒரு நொடி அவளை காவியாவுடன் ஒப்பிட்டு பார்த்தது.
கதிரே இந்த மாதிரி ஆடைகளை வாங்கி தந்தாலும் அவள் மறுத்து சுடிதார் புடவைகளை மட்டுமே தேர்வு செய்வாள்.அத்தனை நேர்த்தியாய் இருக்கும் காவியாவின் உடை அலங்காரம்.அதை நினைத்து பார்த்தவன் மேஹாவிடம் ம்ம் நைஸ் என்று முடித்து கொண்டான்.
என்ன கதிர் ரொம்ப அமைதியாவே இருக்க ஏதாவது பேசு கதிர்..அவனை சீண்ட திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான் கதிர் நா அந்த பக்கமாய் போய் டிரஸ் பாக்குறேன் என நைஸாக நழுவி விட்டாள் மேஹா.எல்லாம் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வதென்ற பயம் தான்.
ஷாப்பிங் செய்து முடிக்கவே மாலையாகி விட அதற்கு பின்னும் அவனுக்கு விடுதலை வழங்காது பப்பிற்கு அழைத்து கொண்டு சென்ற மேஹா மீது கதிரிற்கு உண்டான கோபத்திற்கு அளவே கிடையாது இருந்தும் அவன் அமைதி காத்ததன் காரணம் அவனே அறிவான்.
பப்பிற்கு சென்றும் மேஹா சும்மா இருக்காது குடித்து விட்டு இஷ்ட்டம் போல் ஆட துவங்க கதிரிற்கு மூளையில் மின்னல் வெட்ட அவள் குடித்த போதை குறைந்த மதுவில் தான் தயாராய் வைத்திருந்த போதை மாத்திரையை கலந்து வைத்தான்.
அவன் எதிர் பார்த்ததை போல மேஹாவும் அதை குடித்து விட்டு தள்ளாடி கொண்டிருக்க அவளை கைத்தாங்கலாக காரிற்கு அழைத்து வந்தான் கதிர்.
மேஹாவை காரில் அமர வைத்தவன் காரை ஸ்டார்ட் செய்து ஒரு ஆள் அரவமற்ற சாலையில் நிறுத்தா மேஹாவோ போதையில் நெளிந்து கொண்டிருந்தாள்.
மெல்ல அவள் புறம் திரும்பிய கதிரோ ஹேய் மேஹா என்ன பாரு..பாரு என அவள் கன்னத்தை தட்ட..கண்களை சுருக்கி அவனை பார்த்தவளோ ஹேய் கதிர் டார்லிங் நீ இங்கே என்னடா பண்றே.
பேபி நாளைக்கு உனக்கும் அந்த காவியாவுக்கும் கல்யாணம் தானே அவ எப்படி உன்ன வெளியே விட்டா எப்போ பார்த்தாலும் முந்தானைல முடிஞ்சு வச்சிக்கிட்டே தானே திரிவா எப்படி வெளியே வந்த..ஓஹோ அது சரி நாங்க போட்ட ப்ளான் வர்க்கவுட் ஆகிடுச்சா நீ அவள சந்தேக பட்டு விட்டுட்டு வந்துட்டியா என்றாள் குழைந்த குரலில்.
உண்மைகள் வெளிவர போகிறது என்று அவள் முகத்தை அமைதியாய் பார்த்திருந்தான் கதிர்.
நா உன்ன எவ்வளவு லவ் பண்ணேன் தெரியுமா..அவ்ளோ லவ் உன்மேல அதான் உன் அம்மா அப்பா கிட்ட சொல்லி உன்ன நிச்சயம் பண்ணுனா நீ என்னடான்னா அந்த காவியாவ கண்டதும் என்ன வேண்டானு சொல்லிட்ட.
அந்த நேரம் எனக்கு வெறி அவ்வளவு வெறி அந்த காவியாவ கொன்னு போடுற அளவுக்கு வெறி.ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு கிட்ட என் காதல் தோத்து போனத என்னால தாங்கிக்க முடியல நீ காவியா காவியானு அவ பின்னாடியே சுத்துனதா பார்க்க பார்க்க அவள துடிக்க துடிக்க என் கையாலேயே குத்தி கொல்லனும் போல இருந்துச்சு.
அதுக்காக தான் நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம் என்க..நாங்க எல்லாரும்னா யாரெல்லாரும் அவளிடம் கேட்டான் கதிர்.
நாங்க எல்லாரும்னா நாங்க எல்லாரும் தான் நா,உங்க அம்மா,உங்க அப்பா எனோட அப்பா அம்மா எல்லாரும் தான்.
எல்லாரும் சேர்ந்து காவியாவ உன் கிட்ட இருந்து பிரிக்க நினைச்சோம்.அவள உன் முன்னாடி நடத்தை கெட்டவளா காட்ட நினைச்சோம் அதுக்காக தான் வாசன குடிச்சிட்டு காவியா ரூம்ல ஒளிஞ்சிருக்க சொல்லி அனுப்பி வைச்சோம்.
அதுக்கு முனாடியே காவியாவுக்கு மயக்க மருந்து கொடுத்துட்டேன்.நாங்க ப்ளான் பண்ண மாதிரியே காவியா மயங்கி கெடக்க நீ வார நேரம் பார்த்து அவ ரூம்ல இருந்து வாசன் வந்தான்.
எங்க நீ வாசன புடிச்சா உண்மை தெரிஞ்சிருமோனு கூட்டத்தில உள்ளவங்கள பேசிவிட்டு வாசன நைசா தப்பிக்க வச்சேன்.எல்லாருமே காவியாவ தப்பா பேசும்போது அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு.ஆனா நீ..நீ அவள முழுசா நம்புன பாரு..அந்த நம்பிக்கைல நா தோத்து போய்ட்டேன்.
ஏன்டா ஏன் உனக்கு அவ மேல மட்டும் அத்தனை காதல்..கண்ணு முன்னாடியே கண்ட காட்சிய கூட நம்பாம அவ காதல் மேல நம்பிக்கை வைக்கிற..அவள விட எந்த வித்ததுல நா குறைஞ்சு போய்ட்டேன்...அழகுலயா,அறிவுலயா,
பணத்துலயா எதுலடா நா குறைஞ்சு போய்ட்டேன்.. நானும் அவள மாதிரி தானே உன்னை உண்மையா காதலிச்சேன்..ஆஆஆ....அவன் சட்டையை பிடித்து கொண்டு ஆக்ரோஷமாக கத்தினாள் மேஹா.
முகம் இறுகி போய் அமர்ந்திருந்தான் கதிர். எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் கூடவே இருந்து குழி பறித்திருக்கிறார்கள் அதோடு ஒருத்தியின் உயிரையும் பறித்திருக்கிறார்கள்.எத்தனை வன்மம் இருந்திருந்தால் ஒரு பெண்ணாய் இருந்து கொண்டே மற்றொரு பெண்ணை கேவல படுத்தியிருப்பாள் நினைக்க நினைக்க வெடித்து சிதற காத்திருக்கும் லாவா குழம்பாய் அவன் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.
அப்பறம் காவியா எப்படி இறந்து போனா அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அவன் கேட்க எக்காளமாக கைக்கொட்டி சிரித்தாள் மேஹா..ஹாஹா...அவ எங்க செத்து போனா நாங்க தான் அவள கொன்னோம்.. என்றவளின் விழிகளில் காவியாவின் மீதான வஞ்சம் அப்பட்டமாய் தெரிந்தது.
அன்று கதிர் சென்ற பிறகு நடந்தவற்றை விளக்கி கூற ஆரம்பித்தாள் மேஹா.
மற்றவர்களின் தூற்றலை கேட்டு காவியா கலங்கி போய் இருக்க அவளை மார்பில் சாய்த்து ஆறுதல் படுத்தினான் கதிர்.
எனக்கு எதுவும் தெரியல கதிர் அவன் யார்னே எனக்கு தெரியாது முன்ன பின்ன அவன பார்த்தது கூட இல்ல.அவன் எப்படி என் ரூமுக்கு வந்தான் நா எப்படி மயங்கி போனேன் எதுவுமே புரியல அழுது வடித்தாள் காவியா.
நீ எதுக்கு அம்மு ஃபீல் பண்ற..மத்தவங்க பேசினத எல்லாம் மனசுல வச்சிக்காத நா உன்ன நம்புறேன்.கவலை படாம தூங்கு இல்லனா மார்னிங் டயர்டா இருப்ப கல்யாண பொண்ணு மூஞ்சி சோர்ந்து போய் இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும் அழுதவளை தேற்றியவன் அவளை படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற சிறிது நேரத்திலேயே மேஹா அன்ட் கோ அங்கு வந்து சேர்ந்தார்கள்.உறங்கி கொண்டிருந்த காவியா முகத்தில் தண்ணீரை எடுத்து ஊற்றினாள் மேஹா.
பதறியெழுந்த மேஹா முகத்தை துடைத்து கொண்டு பார்க்க அங்கே இருந்தவர்களை கண்டு முகம் சுருங்கி..என்ன மேஹா இது எதுக்காக தண்ணிய எடுத்து ஊத்தினே கொஞ்சம் காட்டமாகவே கத்தி விட்டாள்.
ஏய் என்னடி சவுண்டு கூடுது.. பிச்சைக்கார நாயே..காவியா முடியை பிடித்து தூக்கினாள் மேகலா.
அத்தே...வலிக்கிது விடுங்க.. யாருக்கு யாருடி அத்தை.. நீயெல்லாம் எனக்கு மருமகாள..இதோ இவ தான் எனக்கு மருமகள்.. உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பை தாரோம் ஒழுங்கு மரியாதையா விடியிறதுக்குள்ளே நீ தப்பானவனு உன் கைப்படவே ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடி போய்ரு இல்ல நடக்குறதே வேற..
நா எதுக்கு ஓடி போகனும் நா தான் எந்த தப்பும் பண்ணலையே..கதிர் கூட என்ன முழுசா நம்புறான் நா ஏன் போகனும்.
ஹோ என் புள்ளைய மயக்கி எங்க சொத்தையெல்லாம் ஆட்டைய போடலாம்னு தானே அவன கல்யாணம் பண்ணிக்க பாக்குற சொல்லு உனக்கு எவ்வளவு பணம் வேணும் ராஜா கேட்க.
கரச்களால் காதை பொத்தி கொண்டாள் காவியா.தயவு செஞ்சி அப்படி சொல்லாதிங்க மாமா எங்க காதல கொச்சை படுத்தாதிங்க அவள் கண்ணீர் சிந்த..இப்படியே கண்ணீர் வடிச்சு வடிச்சு தான் என் புள்ளைய மயக்கிட்டா.
இதோ பாருடி எங்களுக்கு உன்ன சுத்தமா புடிக்கல மரியாதை சொல்லும் போதே ஓடிரு இல்லனா உயிராவது மிஞ்சும்.
என்ன எல்லாரும் மிரட்டி பாக்குறிங்களா உயிரே போனாலும் நா கதிர விட்டு போக மாட்டேன்.இப்போவே போய் உங்கள பத்தி கதிர் கிட்ட சொல்றேன்..என் வீரு கொண்டு சென்ற காவியாவை வழி மறித்து நின்றார்கள் மதனும் சேதுவும்.
எங்கடி ஓட பாக்குற உயிரோட இருந்தா தானே கதிர் கிட்ட சொல்லுவ என்ற மேஹாவோ காவியாவின் கழுத்தை பிடித்து நெறித்தாள் மேகலாவும் மேஹாவின் தாயும் காவியின் கைக்கால்களை அழுத்தி பிடித்து கொள்ள வெறி கொண்டு அவள் கழுத்தை நெறித்தாள் மேஹா.
மூச்சுக்கு சிரமமாய் கண்கள் சொருகி போன காவியா இறுதியாய் தன்னவன் நினைப்பை மட்டுமே மனதில் சுமந்து கொண்டு இன்னுயிரை நீத்தாள்.
சேதுவையும் மதனையும் அழைத்து யாரும் அறியாத வண்ண காவியாவின் உடலை ஆலமரத்தில் தூக்கிட்டு தொங்க விட கூறினார்கள் அவர்களும் அதே போல் செய்து முடித்து பணத்தை வாங்கி கொண்டு சென்று விட்டார்கள்.ஆனா நானே எதிர் பார்க்காத ஒன்னு அந்த வாசன் நம்ப கம்பெனிக்கே வந்தது தான் உன் கண்ணுல படாம அவன காப்பாத்த பார்த்தேன் பாவி அதுக்குள்ளே செத்து போய்ட்டான்.
மேஹா கூறி முடிக்கையில் கதிரின் கண்ணீர் கூட வத்தி போயிருந்தது.இனி அழுக கண்ணீர் கடனாய் தான் கேட்க வேண்டும்.
நீ அழாத பேபி உன்ன நா நல்லா பார்த்துக்குவேன் என அவனை கட்டியணைக்க வர தீப்பட்டது போல அவளை உதறி தள்ளினான் கதிர்.
எத்தனை அழகான காதல் அவர்களது மலரும் முன்னமே கருகி போனது கயவர்கள் செய்த சதியால்.
எதுவும் பேசாத கதிர் மேஹாவை கொண்டு அவள் வீட்டில் இறக்கி விட்டு வந்தான்.
நெருப்பிலிட்ட புழுவை போல அவன் உள்ளம் துடித்து கொண்டிருக்க தன் வீட்டிற்கு சென்றான் அங்கே மேகலாவும் ராஜாவும் இருக்க நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வந்த மகனை கண்டு சந்தோஷம் கொண்டனர்.
என்னப்பா கதிர் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க இப்போ தான் அம்மா அப்பாவ பார்க்க தோனுச்சா மேகலா வருதத்துடன் கேட்க.
மன்னிச்சிடுமா உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் மேஹாவோட காதல புரிஞ்சிக்காம போய்ட்டேன் என முகத்தை மூடி குழுங்கி அழ தங்கள் மகன் மனதை மேஹா மாற்றிவிட்டாள் என பெற்றோர் உள்ளுக்குள் குத்தாட்டம் போட..கண்ணை துடைத்து கொண்ட கதிரோ..அம்மா உங்களுக்கு என் கையால சமைச்சு போடனும்னு ஆசையா இருக்கு நா உங்களுக்காக சமைக்கவா என ஏக்கமாய் கதிர் கேட்க அவர்களும் சரியென தலையாட்டி வைத்தனர்.
மர்மமாய் சிரித்து கொண்ட கதிரோ அவர்களுக்காய் சமைத்து அவனே பறிமாரியும் விட அவர்கள் உண்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும் உடல் வெட்டி வெட்டி இழுத்தது வாய் ஒரு பக்கமும் கை கால்கள் ஒருபக்கமும் கோணி போனது.
என்ன ரெண்டு பேரும் உண்மையா மனசு மாறிட்டேன்னு நினைச்சிங்களா..ஹாஹா ..என் காவியாவ சாகடிச்சதுக்கு இது உங்களுக்கு நா கொடுத்த தண்டனை.மொத்தமா முடிச்சிரலாம்னு தான் நினைச்சேன் ஆனா மனசு வரல நீ ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சமா துடிச்சு துடிச்சு சாகனும்.
அதுக்கு தான் உங்களுக்கு செயற்கையா பக்க வாதம் வரவைக்கிற மருந்து சாப்பாட்டுல கலந்து கொடுத்தேன்.இனி கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் சாவுங்க என்றவன் இந்த சொத்துக்காக தானே காவியாவ கொன்னிங்க..இந்த சொத்து மொத்தத்தையும் காவியா அம்மா அப்பா பேர்லையே எழுதி வைக்க போறேன் ரெண்டு பேரு வீதில கெடங்க அப்போ தான் புத்தி வரும் என்றவன் சொத்து பத்திரங்களை எடுத்து கொண்டு கீழே விழுந்து கிடப்பவர்களை தாண்டி செல்ல பெற்றவர்கள் உள்ளம் துடித்து போனது.
காவியாவின் வீட்டிற்கு சென்ற கதிர் யாரிடமும் பேசாமல் அமைதியாய் அறைக்கு சென்று உறங்கி விட ஏதோ கலைப்பு என்று ராதிகாவும் சிவராமனும் விட்டு விட்டார்கள்.
மேகலாவும் ராஜாவும் வேலைக்காரன் மூலமாக ஹாஸ்பிடலில் சேர்க்க படி பக்கவாதம் அவர்களை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கையை விரித்து விட்டார்கள்.
மறுநாள் தகவல் அறிந்து அனைவரும் ஹாஸ்பிடல் வந்து பார்த்து செல்ல ஊருக்காக கதிரும் சென்று வந்தான்.போதையில் உளறியது எதுவும் மேஹாவுக்கு நினைவில்லாது போக என்னேரமும் கதிரை ஒட்டி கொண்டே திரிந்தாள்.கதிரிற்கு கடுப்பாக இருந்தாலும் மேஹாவிற்கு பதிலடி கொடுக்க சரியான தருணம் பார்த்து காத்திருந்தான்.
அதோ இதோவென திருமண நாளும் வந்தது.அனைத்தையும் சாதித்து விட்ட மகிழ்ச்சியில் மேஹா தயாராகி கொண்டிருந்தாள் அவள் அறையில்.
காவியா தூக்கில் தொங்கிய அதே ஆலமரத்தடியில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் காவியா.யாருக்கும் தெரியாமல் இங்கே மறைந்து நின்று அவளும் கதிரும் காதல் செய்த நாட்கள் ஏராளம்.அந்த அழகிய நாட்கள் அனைத்தையும் அவள் மனது அசை போட்டு பார்து இப்போது மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
மேஹாவை திருமணம் செய்து வைக்க காவியாவிற்கு விருப்பம் இல்லையென்றாலும் அவள் காதலுடன் கதிரை நன்றாய் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருக்கவே செய்தது.காவியா எடுக்கும் எந்த முடிவாய் இருந்தாலும் அது கதிரின் நன்மைக்காக மட்டுமே.அதனால் தானே அவள் அவன் எத்தனை முறை கேட்டும் கதிரின் பெற்றோரை பற்றி வாயை கூட திறக்கவே இல்லை.
இன்னைக்கு எனக்கு கல்யாணம் அத வந்து பார்க்காம இங்கே வந்து என்ன பண்றே அம்மு... பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு எழுந்தாள் காவியா.அங்கே கதிர் தான் நின்று கொண்டிருந்தான்.
ஒரு மாசம் ஆச்சு உன்ன பார்த்து என் கல்யாணத்துக்கு கூட வர தோனலையா உனக்கு..கதிர் பாவமாய் கேட்க அவனை ஓடி வந்து அணைத்து கொண்டாள் காவியா.அவனும் அவளை அணைத்து கொள்ள விருட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.
என்ன என்று புருவம் உயர்த்தி கேட்ட கதிரை விலத்தி தள்ளி விட்டு வீட்டை நோக்கி ஓடிய காவியாவின் கரத்தை பிடித்து இழுத்தான் கதிர்.
என்ன விடு கதிர் நா போகனும் என்றவள் அவன் கரதிலிருந்து தன் கரத்தை விடுவிது கொண்டு ஓட அங்கே வாசலில் மண கோலத்தில் இருந்த மேஹாவும் அவள் நலன் விரும்பிகளும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்து செல்ல பட்டனர்.
கதிர் தான் அவள் போதையில் உளறியதை வீடியோவாக எடுத்து போலீஸில் கொடுத்திருந்தான்.மேஹா கட்டிய காதல் கோட்டை எல்லாம் மணல் கோட்டையாக சரிந்து போனது.
அனைத்தையும் தாண்டி காவியா வீட்டிற்குள் செல்ல சிவராமன் ஒரு புறம் தலையில் கையை வைத்து அமர்ந்திருக்க ராதிகா அழுதழுது சோர்ந்து போய் கிடந்தாள்.உள்ளம் பதறி போன காவியா தனதறைக்கு செல்ல அங்கே கதிர் இருந்தான்.
கதிர்.....காவியா கதறியழுதிட அவளை அணைத்து கொண்டான் அவள் பின்னால் ஓடி வந்த கதிர்.அப்போ முன்னால் இருக்கும் கதிர்..??அவனே தான் காவியாவின் காதல் அரக்கனே தான்.யாருக்காக காவியா உயிரை துறந்தாளோ அவனே தான் தூக்கில் தொங்கி கொண்டிருந்தான்.தன்னவள் முடிவுக்கு நீதி வழங்கிவிட்டு தன் முடிவை தேடி கொண்டான்.இரண்டு போலீஸ் காரர்கள் இறந்த உடலை கயிற்றை பிரித்து இரக்கி கொண்டிருந்தார்கள்.
ஏன்டா இப்படி பண்ணுன ஏன்..கதறியழுதவள் அவன் மார்பில் குத்த.
இனி நம்ம காதலுக்கு யாரும் குறுக்க வர மாட்டாங்க அம்மு பூமியல விட்ட காதல சொர்கத்துல தொடருவோம் வா என அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றான் இல்லை இல்லை அழைத்து சென்றது கதிரின் ஆத்மா.
இனி அவர்களை யாரும் பிரிக்க மாட்டார்கள்.அவளை அள்ளி கொஞ்ச அவனுக்கு தடையில்லை தொட்டு தழுவ தடையில்லை அவர்களுக்கான உலகில் அவர்கள் காதல் மட்டுமே நிறைந்திருக்கும்.தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்ற அறிவுரை எல்லாம் காதலர்களிடம் எடுப்படாது.
காதல் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடும்.ஜாதி,மதம்,பணம், அந்தஸ்து பார்க்கும் பொல்லாத உலகில் இருந்து விடுதலை பெற்றது அவர்களது காதல்.
காதலால் காதலுடன் என்றும் அவர்கள் காதல் நிலைத்திருக்கும்.
முற்றும்.