மனமதின் கரை அது - இஸ்லாமிய பாடல்

இஸ்லாமிய பக்தி பாடல் வரிகள்

Apr 7, 2023 - 22:03
 0  24

சின்னதோ பெரியதோ பாவம் அது வேண்டாம்... 
மனமதின் கரை அது அதன் நிழலும் பட வேண்டாம்... 

சிறு வார்த்தையிலும் அது வந்துவிடும் 
சிறு பார்வையிலும் அது நிகழ்ந்து விடும்... 
எம் வாழ்வின் பாவங்கள் அகன்று வாழ்ந்திடவே...
நன்மைகள் செய்துடு. ஓ. ஓ. ஓ.... 

சின்னதோ பெரியதோ பாவம் அது வேண்டாம்.... 
மனமதின் கரை அது அதன் நிழலும் பட வேண்டாம்...

சின்ன ஒரு வார்த்தையிலே  பொய் சொல்லல் பாவம் தான்... 
சில நேரம் மனதிற்குள் திட்டுவதும் பாவம் தான்... 
விளையாட்டில் சிறு உயிரை கொள்ளுவதும் பாவமடா... 
வல்லவனின் நினைவின்றி வாழவதும் பாவமடா... 

பாவங்கள் செய்யாமல் பூ உலகில் வாழ்ந்திடுவோம்... 
நன்மைகள் பல செய்து சுவனத்தை அடைந்துடுவோம்... 

சின்னதோ பெரியதோ பாவம் அது வேண்டாம்.... 
மனமதின் கரை அது அதன் நிழலும் பட வேண்டாம்...

ஐ வேலை தொழுகை அது தவறுவதும் பாவம் தான்... 
அழகான நோன்பது விடுவதும் பாவம் தான்... 
ஏழைக்கு கொடுக்காமல் சேர்ப்பதும் பாவமடா... 
வட்டியின் வாசமது பட்டாலும் பாவமாடா... 

பவத்தின் தண்டனையே அது பெரும் பயங்கரமே... 
தௌபாக்கள் செய்து நாம் நலமோடு வாழ்ந்திடுவோம்... 

சின்னதோ பெரியதோ பாவம் அது வேண்டாம்.... 
மனமதின் கரை அது அதன் நிழலும் பட வேண்டாம்...

அயலாரை துன்புரித்து வாழ்வதும் பாவம்தான்... 
உறவை நீ துண்டித்து வாழ்வதும் பாவம்தான்... 
பெற்றோரின் மனம் தனை நொந்தாலும் பாவமடா... 
பார்க்கின்ற பாவம் அது கெட்டாலும் பாவமடா... 

தீன் என்ற வாழ்வில் நீ நுழைந்து விடு நண்பனே...
மறுமை தான் வாழ்க்கை இதுவல்ல நண்பனே... 