இலக்கியங்களும் அதன் போக்குகளும்

இலங்கையில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப்பாதை

Mar 14, 2023 - 21:17
Mar 14, 2023 - 21:19
 0  61
இலக்கியங்களும் அதன் போக்குகளும்

உலக மொழிகளுள் மிகவும் பழைமை வாய்ந்ததும் முதன்மையானதுமான தமிழ் மொழியின் வளர்ச்சி போக்கில் தமிழ் வளர தொண்மை காலம் தொட்டே இலக்கியங்களின் பங்கு இன்றி அமையாததாக அமைந்துள்ளது. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த சங்க காலத்தில் தொடங்கி இன்று வரையிலும் இலக்கிய வகிபங்கு தமிழ் வளர்ச்சியின் சான்றாக அமைந்துள்ளது. அவ்வாறு இலக்கியங்களின் வளர்ச்சி போக்கில் கால மற்றும் தொழிநுட்ப நிலை என்பன மாற்றமுற்று காலத்தின் தேவையின் பால் மருவி வந்துள்ளமையை நாம் அறிவோம். 

முதல் இலக்கிய தோற்ற காலங்களில் தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் அக் காலத்தின் சான்றுகள் மற்றும் ஆதாரங்களாக தன் பரம்பரையினர் இடம் கொண்டு சேர்க்கும் முனைப்போடு எடுக்கப்பட்ட பெரும் முயற்சியே இலக்கிய வடிவங்கள் ஆகும். முதல் இலக்கிய வடிவங்கள் பாரிய தொகுப்பொன்றின் மிக குறுகிய சாராம்சத்தினை கண்டதாக கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை பதிவேடாக பதித்து தன் அடுத்த சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற் கொண்டு வந்துள்ளனர்.

அவ்வாறு ஆரம்ப இலக்கிய தோற்ற காலத்தில் மிக குறுகிய சாராம்சத்தினை கொண்ட இலக்கியங்களுக்குள் கல்வெட்டுக்களையும் செப்பு,பித்தலை,பொன் முதலான தகடுகளையும் ஓலைச் சுவடுகளும் பதிவேடுகளாக அமையப் பெற்றிருந்தன. உதாரணம் கொண்டு நோக்கினால் நிஸங்க மல்ல மன்னனது கல்பொத்த கல்வெட்டு, பனாக்கடுவ செப்பு சாசனம், முதலானவற்றை அடையாளப்படுத்தி அறிந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறு தோற்றம் பெற்ற இலக்கிய வடிவங்கள் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் பின்னணியில் துரித விஞ்ஞான மெய் நிகர் வளர்ச்சியின் போக்கில் டிஜிட்டல் எனப்படுகின்ற அதி நவீன வலைப் பதிவுகளின் வழியதில் பயணிக்கின்றது.

இவ்வாறான இலக்கிய வடிவங்களின் தோற்ற காலத்தில் இருந்து படிப் படியான மாற்றத்தை அடைந்து இன்றைய வலைப் பதிவு எனும் நிலையை அடையும் வரையான வளர்ச்சி போக்கு பற்றி சற்று விரிவாக இக் கட்டுரையின் வழி தெளிவுற நோக்குவோம். 

இலங்கை திரு நாட்டினது முதற்கால இலக்கிய வடிவங்கள் இலங்கை மன்னர்களது வீரச் சிறப்புக்களையும் போர் வெற்றியின் நினைவு பகிர்வுகளாகவும் கொடை சிறப்புக்களை போற்றுவதாகவுமே அமையப் பெற்றதை வரலாற்று சான்றுகளை முதற் கொண்டு அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. அவ்வாறு இலங்கையில்  கல்வெட்டு சான்றுகளை கடந்து நூல் வடிவம் தோன்றிய முதல் சிங்கள வரலாற்று இலக்கியமான மகா வம்சத்தில் தொடர்ந்து தீப வம்சம் வழியதில் சிங்கள மொழி மூல இலக்கிய வடிவங்களின் தோற்றம் ஆரம்பமாகியதென அடையாளப்படுத்தலாம். இதே போல மறு முனையில் இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் போக்கானது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேற்கைத்தேயரது மிஷனரி இயக்கங்கள் வழியதில் தோன்றிய கிரிஸ்துவ மத போதனைகள் மற்றும் இந்து மத ரீதியிலான சைவ போதணைகள், அனுஷ்டானங்களையும் பற்றிய துண்டு பிரசுரங்களில் தொடங்கி  படிப்படியாக விவேகானந்தர்,ஆறுமுக நாவலரின் வழி தடத்தில் நூல் வடிவங்களில் தோற்றம் பெறலாகியது.  இவ்வாறு தோற்றம் பெற்ற இலங்கையின் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் குறுகிய கால பின்னணியில் பெரும் வளர்ச்சியை அடைந்தது என்பதினை எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தினை பெரும் ஆதாரமாக கொண்டு அறிந்து கொள்ள கூடியதாக அமைகின்றது. 

இவ்வாறு ஈழத்தின் இலக்கிய துறையின் பெரும் வளர்ச்சியின் வெற்றி பயணத்தில் இன்று வரை வழித் துணையாக அமைந்தது தென்னிந்திய இலக்கிய துறை என்றால் அது பொய்க்காது. அதன் படி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தொண்மை முதல் இன்று வரையும் தென்னிந்திய இலக்கிய வளர்ச்சியின் சமச்சீரான போக்கிலேயே ஈழத்தினதும் இலக்கிய செல் நெறியானது அமைகின்றது. அவ்வாறு தென்னிந்திய இலக்கிய வளர்ச்சியின் போக்கில் முதற் காலத்தில் செய்யுள் நடையில் உருவாக்கம் பெற்ற தமிழ் இலக்கியங்கள் பிற் காலத்தில் படிப்படியாக உரை நடைத் தன்மையினை பெற்றுக் கொண்டுள்ளது என்பது நாம் அறிந்ததே இந் நிலையை பின்னணியாக கொண்டே ஈழத்திலும் மாற்றமுற்று பயணித்துள்ளது. அவ்வாறு செய்யுள் இலக்கிய வடிவத்தில் இலக்கிய வளர்ச்சியில் முன்னின்றோருள்  திருவள்ளுவர்,அவ்வையார்,முதற் கொண்டு நாயன்மார்கள் முனிவர்கள் வரையிலும் இது நீண்டுள்ளது. 

இதன் அடுத்த கட்டமான உரைநடை இலக்கியங்களது வளர்ச்சிப் போக்கானது எழுர்ச்சி பெற்ற நிலையதில் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் பல முனைப்பான வடிவங்களை கொண்டு நகர்ந்து இன்று வரையும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு பிற்கால உரை நடை போக்கின் துரித தன்மையின் வடிவங்களே பத்தி எழுத்துக்களாகவும், பின் கட்டுரைகளாகவும், நாவல்களாகவும் வளர்ச்சி போக்கில் கவிதை இலக்கியங்களாகவும் அதுவும் மருவி இன்று ஹஐக்கூ கவி வடிவம் வரை பயணித்து வந்துள்ளது. அவ்வாறு உரைநடை தோற்ற நாள் முதல் இன்று வரையிலும் மிக பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கிய வடிவம் பத்தி எழுத்துக்கள் எனும் வடிவமாகும்.

பத்தி எழுத்துக்கள் எனும் வடிவமானது பத்திரிக்கையில் வெளிவருகின்ற செய்திகளை முதற் கொண்டு ஆய்வு கட்டுரைகள் நிகழ்வு தொகுப்புகள் அடங்களாக பத்திரிக்கையில் வரும் இலக்கிய செல் நெறியை பத்தி எழுத்துக்கள் என இலக்கியவாதிகள் அடையாளப்படுத்துகின்றனர். இது பத்திரிக்கையின் தோற்றம் முதலே தொழில் ரீதியான இலக்கிய வடிவமாக கைக் கொண்டு பயன்படுத்துகின்றனர் பத்தி எழுத்தாளர்கள்.  இப் பத்தி எழுத்துக்களின் வழியதில் தோற்றம் பெற்றதே கட்டுரைகளாக அமையப் பெருகின்றன. கட்டுரைகளானது பத்தி எழுத்துக்களை ஒத்து போவதாகவே ஒரு முழுமையான, தெளிவான தகவல் கட்டமைப்பை தொண்டதோ உரை தொகுதியே கட்டுரை என விபரிக்கின்றனர் இலக்கியவாதிகள். இக் கட்டுரையின் வழியாக தெளிவானதும் நம்பகமானதுமான தகவல் பரிமாற்றத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம், இது பத்தி எழுத்துக்களின் சாயலில் சமச்சீராகவே பயணிக்கின்றது.

கட்டுரை எனும் இலக்கிய வடிவங்களில் இருந்து சற்று நீண்டுச் செல்லும் தகவல் களஞ்சியங்களை பாகங்களின் தன்மையில் மாற்றி அமைபதன் ஊடாக நாவல் எனும் இலக்கிய வடிவம் தோற்றம் பெருகின்றது. அவ்வாறு வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சி போக்கு முன்மாதிரியான வாழ்வியல் தன்மையின் சிறப்பு முதலானவற்றை தெளிவாக வெளிப்படுத்தும் நோக்கில் அமையப் பெருகின்றது. மறுபுறம் தொண்மை காலத்தில் மனித ஆளுமைகளை கொண்டு இடம்பெற்ற நாடகங்களின் எழுத்தாக்க பிரதி செயற்பாட்டு வடிவில் சிறுகதை எனும் இலக்கிய வடிவங்களாகவும் அச் சிறுகதை இலக்கியமானது முடிவை நீட்டி சற்று விரிந்து செல்லுமாயின் அது தொடர்கதையாக பாகங்களின் துணையோடு நாவல் எனும் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுகின்றது.

இவ்வாறு இலக்கிய வடிவங்களுள் பத்தி எழுத்துக்கள்,கட்டுரைகள்,சிறுகதைகள்,நாவல்,குறு நாடகம் முதலானவற்றிலிருந்து சற்று வேறுபட்டு செய்யுளின் சாயலை கொண்டு தகவல் தொகுதி ஒன்றின் பரந்த தகவல் களஞ்சியத்தை சுருங்க கூறி விரிவாக விளக்க வைக்கும் தன்மைக் கொண்டதே கவிதை இலக்கியமாகும். இக் கவிதை இலக்கியத்தின் முதற் பகுதி செய்யுளை தழுவியதாக அமையப் பெறினும் தென்னிந்திய புதுமைக் கவி பாரதியின் வழித் தோண்றலில் இருந்து வசன நடையில் பாட்டு வடிவத்தை கலந்த சந்த நயத்தோடு கூடிய வடிவமாக அமையப் பெற்றது. முதற் பகுதியில் தொடர் கவியாக தோற்றமுற்று கால மாற்றத்தின் வழியதில் தனி கவிதை என வளர்ந்து இன்று வரி கவிதை வடிவமான ஹஜக்கூ வரை விரிவடைந்து வந்துள்ளது. இக் கவிதை இலக்கியத்தின் தனி சிறப்பு குறுகிய கால நேர மாற்றத்திற்கு ஏற்றாற் போலும் இலகுவில் வாசித்து புரிந்து கொள்ளும் வகையிலும் அடர்த்தி நிறைந்த கருப் பொருளை ஐதான சொற் பயன்பாட்டை கொண்டு இலகுவில் விபரிப்பதாகவும் அமையும் அதே வேளை புதிரை வாசகனிடம் ஒப்படைக்கும் செல் நெறியானது இன்றைய நவீன காலத்திலும் பெரும் வரவேற்பை பெற்றதும் வாசகர்களால் பெரிதும் விரும்பத் தக்கதாகவும் கவிதை இலக்கியம் அமைந்திருப்பது சிறப்புக்கு உரியதாகும்.

இருபத்தோராம் நாற்றாண்டின் இன்றைய நவீன அதி துரித விஞ்ஞான வளர்ச்சி கால கட்டத்தில் பதிவேடுகள் புத்தகங்கள் முதலானவற்றை கடந்து மீண்டும் நடை முறைத் தன்மையை ஒத்த நிலைக்கு மாற்றமுற்று வந்துள்ளது என்றால் ஏற்க வேண்டியதே. அதாவது முதற் காலத்தில் பேசு மொழியிலிருந்து மேடை நாடகங்களில் இருந்து அவற்றில் மருவலால் உருவான எழுத்தாக்க வடிவமானது மீண்டும் மருவி எழுத்தாக்கங்களில் இருந்து எளிய நடையாக மீண்டும் செயற்பாட்டு வடிவை பெற்றுள்ளது. அவ்வாறு நிகழ்வுகளின் நினைவு பதிவாக எழுத்தாக்கம் பெற்றவை இன்று மீண்டும் நினைவுகளின் மீட்டலாய் செயற்பாட்டு வடிவம் பெற்று வருகின்றது. இச் செயற்பாட்டு வடிவமே இன்றைய திரைப்படங்களாக வளம் வருகின்றன. வரலாற்று நினைவாக எழுந்த அக்கால தொடர் கதைளும் பெரும் நாவல்களும் இக் காலத்தில் மீண்டும் திரை கதைகளாக எழுச்சி பெற்று திரைபட நிகழ் காட்சிகளாக உருவம் பெருகின்றன. இதற்கான பெரும் உதாரணங்களை இன்றைய பல திரை படங்களை கொண்டு அறிந்து கொள்ளலாம். அவ்வாறு வரலாற்று காவியமாக முதற் காலத்தில் தோற்றம் பெற்ற இராமாயணம் கூட இன்றைய நவீன தன்மையின் பால் நிஜ உருவம் பெற்றுள்ளது என்பதே இதனடிப்படையில் எடுத்துரைக்கப்படுகின்றது.

இவ்வாறான இன்றைய நவீன மயப்பட்ட காலத்தலும் இன்னும் ஆங்காங்கே அரும்பி முலைக்கின்ற புத்தக வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணமாகவும் தன் எண்ணப்பாட்டை வழிப்படுத்தும் வண்ணமும் பல எழுத்தாளர்களாலும் கவிஞர்களாலும் பல இலக்கிய படைப்புக்கள் இன்றும் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் கூட இவ் இலக்கிய தொகுப்புக்கள் நேரடி நூல் வடிவமாக அன்றி நிகழ் நிலை நூல் வடிவமாகவும் மின் நூல் வடிவமும் பெற்று நவீனம் கொண்டு வெளிவருகின்றது என்பதே இத்தாலான தெளிவு தன்மையாகும்.

இவ்வாறான துரித விஞ்ஞான வளர்ச்சியின் பின்னணியில் இன்றைய இலக்கிய வடிவங்கள் காட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் முதலானவை இன்று ஏடுகளுக்கு மாறாக வலையத்தள பதிவுகளாக இணையங்களில் பதிவாக்கப்பட்டு வருகின்றன. பத்தி எழுத்துக்கள் இன்று மின் எழுத்துக்களாக தொடர்கின்றன. என்றாலும் கூட இன்றைய வலைப் பதிவுகள், மின் இதழ்கள் எவ்வளவு தூரம் இலக்கிய துறையின் வெற்றிப் பாதையில் சென்றுள்ளதோ அங்கிருந்து சற்று திரும்பி பார்க்கும் போது சற்று பின்னடைவு தன்மையை கொண்டிருப்பதையும் அறிய முடிகின்றது. 

என்ன பின்னடைவு ? இன்றைய நவீன வளர்ச்சியின் கால பின்னணியில் இலக்கிய ஆர்வலர்களை வாசகர்களை நாளுக்கு நால் இழந்து பயணிக்கின்றதோ எனும் எண்ணம் மேலோங்குகின்றது. அதாவது இணையத்தின் உறவாளர்கள் அதிகரித்தாலும் கூட அதிக நேரம் நவீன செயலிகளை பயன்படுத்துவதன் ஊடாக உடலியல் மற்றும் கண் சார்ந்த நோய் நிலைகளை எதிர் நோக்கும் நிலையும் தொடர்ந்திடுமோ என்ற பயமும் அதிகரிக்கின்றது. மறுபுறம் இன்றைய இளைய சமூகம் இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்துகின்றதா என எண்ணிப் பார்த்தால் அது கேள்விக் குறியாகவே உள்ளது.

இவ்வாறான நிலைகளை கடந்து இணையத்தையும் வலைதள தேடல்களையும் செம்மையாக்கி பொழுதுபோக்குக்காய் இணையத்தளத்தினை பயன்படுத்தும் போது தரமான மின் இலக்கிய வடிவங்கள் வலை பதிவுகள் முதலானவற்றை தெரிவு செய்து கற்றறிந்து இலக்கிய வளர்ச்சியிலும் நம் பொதுமை சார் தேடல் தன்மையையும் துரிதப்படுத்திக் கொள்வோம் தகவல் களஞ்சியங்களான இலக்கிய வடிவங்களின் உச்ச பயனை அடைந்து கொள்ள முயற்சிப்போம். வாழ்க்கைப் பாதையை சிறப்புற அமைத்து கொள்வோம்.



நன்றி - அன்புடன் மலையக கவிஞன் : மு.அனுஷன்

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow