சாட் ஜி.பி.டி உலகிற்கு ஆபத்தா? Is ChatGPT dangerous for humanity?

"சாட் ஜி.பி.டி தனி நபர்களின்  இரகசிய தரவுகளை சட்டதிட்டங்களுக்கு எதிரான முறையில் சேமித்து அதை அனுமதியில்லாமல் தனது சொந்த தேவைகளுக்காக அதை பகிரங்கபடுத்துகின்றன"

Apr 2, 2023 - 11:23
Feb 4, 2025 - 14:27
 0  58
சாட் ஜி.பி.டி உலகிற்கு ஆபத்தா? Is ChatGPT  dangerous for humanity?

சாட் ஜி.பி.டி(chat gpt) உலகிற்கு ஆபத்தா?.

உலகில் பல தொழில்நுட்பங்கள் மற்றும் ஆக்கங்கள் கலைகள் உலகில் தோன்றி மறுக்கப்பட்டு மறக்கப்பட்டு வருகின்றன்மை ஒரு வழக்கமான  நிகழ்வுகளில் ஒன்று தான்   அதே  போல்  பல  தொழில்நுட்பங்களும் அதனை உயிர் நாடியாக கொண்டு உருவாக்கப்பட்ட பல தொழில்நுட்ப இயந்திரங்களுக்கும் இதே நிலைமகளுக்கு தான் தள்ளப்படுகின்றன் இதற்கு பின்னால் பல மனித சமூக காரணங்கள் மற்றும் உலக அரசியல் காரணங்கள் வியாபார உத்திகள் போன்ற பல காரணங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் சமீபகாலமாக ஒரு பெயர் எல்லா உலக மக்களின் வாய்களிலும் பேசப்பட்ட ஒரு பெயர் தான் இந்த சாட் ஜி.பி.டி என்னும் AI தொழில்நுட்ப கருவிதான் .

இது கடந்த வருடம் அதாவது 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல பில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டு OPEN AI என்னும் நிறுவனத்தின் வடிவமைப்பு அனுசரனையுடன் பல தொழில்நுட்ப ஜாம்பவனான்களின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டதே இந்த சாட் ஜி.பி.டி ஆகும்.

சமீபத்தில் இந்த உலகையை ஆக்கிரமித்த ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும்.  இப்பொழுது இந்த சாட் ஜி.பி.டி க்கு உலக நாடுகளின் பக்கம் குறிப்பாக வல்லரசு நாடுகள் இதற்கு பலத்த எதிர்ப்புக்களை அள்ளி விசுறுகிறார்கள் . உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மாஸ்க் மற்றும் ஒரு சில பாரிய நிறுவனங்களின் முதலாளிமார்கள் கூட இந்த சாட் ஜி.பி.டி க்கு தமது எதிர்ப்பலைகளை காட்டியவண்ணம் உள்ளனர்.

இதற்கான காரணங்கள் தான் என்ன இதற்கான மறைமுக பின்ணனி என்ன? என்பது முழுமையாக எவருக்கும் தெரியாத வண்ணமே உள்ளன. இருப்பினும் ஒரு சில நியாயமான சமூக காரணங்களும் உள்ளன என்பது பற்றி நாம் அறிந்த விடயமே ஆகும்.  எனக்கு தெரிந்த சில விடயங்களை இங்கே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் யாவரும் அறிந்த ஒரு பொதுவான விடயத்தை பார்ப்போம்.  

இந்த சாட் ஜி.பி.டி மனிதர்களின் பல வேலை வாய்ப்புக்களை பறிக்கின்றது என்பது யாரும் அறிந்த விடயம் தான். இன்றைய காலங்களில் தமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வேலையில்லா பிரச்சினை இருக்கின்றது என்று தெரியும் அதையே நமது   மனித குலத்தால் சமாளிக்க முடியவில்லை இதில் சாட் ஜி.பி.டி வேற எரிகின்ற நெருப்பில் பெற்றோல் ஊற்றுவது போல் இருக்கின்றது.  நூறு மனிதர்கள் செய்யும் வேலைகளை இந்த ஒரு AI கருவி செய்கின்றது அவ்வாறாயின் இந்த நூறு மனிதர்களின் வேலை என்னவா ஆகின்றன.  எந்த நிறுவனமும் தமது செலவுகளை முடிந்தளவு குறைத்து உச்ச இலாபத்தையை அடைய விரும்பும்.  இதனால் பலரின் வாழ்க்கைக்கை கேள்விக்குறியாகிவிடுகின்றன. அவர்கள் கஷ்டப்பட்டு பல வருடம் படித்த பட்டப்படிப்புகள் மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை நாசமாகின்றன் சிலர் வேலையின்மையினால் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளகின்றார்கள்.

அது மாத்திரம் இன்றி இந்த சாட் ஜி.பி.டி இல் அல்கோரிதம் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுவது ஒரு விசேட தன்மை வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது ஆனால் இந்த அல்கோரிதம் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல மோசடிகள் ஏற்படுகின்றன. இந்த அல்கோரிதம் மனிதனின் சமூக மற்றும் தொழில்நுட்ப நடத்தைகளை நன்கு புரிந்து ஊடுருவல் செய்து மனிதன் எதை எல்லாம்   செய்யவிரும்புகின்றானோ அதை அவன் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் மூலம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்கின்றன,

விரிவாக சொல்லப்போனால் நீங்கள் மர்ம கதைகளை படிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் அதை ஒரு வலைத்தளங்களில் ஒரு தடவை தேடுகின்றீர்கள் இதை அல்கோரிதம் என்னும் AI வகை தொழில்நுட்பம் இதை நுணுக்கமான முறையில் அவதானம் செய்கின்றன. பின்னர் நீங்கள் வேறு எதையாவது வலைத்தளங்களில் தேடினாலும் முதலில் நீங்கள் அதிகம் தேடிய மர்மகதைகள் தான் அடிக்கடி வரும் நீங்கள் YOUTUBE இல் அதிகம் தேடிய ஒரு தேடல் வீடியோ உங்கள் பரிந்துரை பட்டியலில் அடிக்கடி வந்து உங்களை அவ் வீடியோக்களை பார்வையிட உங்களை தூண்டும். இதனால் உங்களை அவ் விடயத்திற்கு உங்களை அடிமையாக்குகின்றன. ஒருவரை இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றி சமுதாய சீர்கேடுகளை உண்டாக்குகின்றன. அதாவது ஒரு ஆண் மனிதனை பெண் மனிதனாக்குகின்றன. ஒரு பெண் மனிதனை ஆண் மனிதனாக்குகின்றன உலகம் படைத்த ஆண் பெண் வேறுபாட்டை அழிக்கின்றன. இதன் மூலம் ஒரு நல்லவர் அதாவது சமூகத்திற்கும் அதில் வாழ்கின்ற மக்களுக்கு நன்மைகள் செய்பவர்களின் வலைத்தளங்களை ஊடுருவல் செய்து வீடியோ எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவர்கள் தீய விடயங்கள் செய்வது போல் வீடியோ சித்தரிப்புக்களை மேற்கொள்ளகின்றன இதனால் சமூதாயத்திற்கு நன்மைகளை செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைகின்றன. இதனை பயன்படுத்தி சிலர் அரசியல் செய்து ஆட்சி பீடம் ஏறுகின்றனர்.  

இவை கல்வித்துறையை கூட விட்டுவைக்கவில்லை

மாணவர்களின் சுயகற்றல் நடவடிக்கைகளை பாதிப்படைய செய்கின்றன.  அதாவது ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் ஒரு கட்டுரையை எழுத கொடுக்கின்றன்றார்  அதை அந்த மாணவன் என்ன செய்கின்றான் உடனே சாட் ஜி.பி.டி யில் அதை அந்த தலைப்பில் அவனது முறையில் அதை தேடல் செய்கின்றான் அதை copy அதாவது நிகழ் பிரதி செய்து ஆசிரியரிடம் காட்டி பாராட்டடுக்களை பெறுகின்றான் . இதனால் இதை அடிக்கடி செய்து தனது சுயமாக சிந்தித்து படிக்கும் திறனை இழக்கின்றார்கள் இதனால் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இவ்வாறான தொழில்நுட்பங்கள் தடுகின்றன என்பன மனதை மிகவும் வருத்தமடைய செய்கின்றன.  ஒரு பத்துவயது சிறுவன் முப்பது வயதில் ஒரு இளைஞன் தெரிந்து கொள்ளும் பாலின இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றான். இது சமூக சீர்கேடுகளை உருவாக்குகின்றன.

இந்த சாட் ஜி.பி.டியினால்  அதிகமாக மக்கள் பயன்படுத்தும் எழுத்து மென்பொருள்கள் மற்றும் கணக்கீட்டு செயன்முறைக்கு அதிகமாக பயன்படும் விரிதாள்(excell sheet) மென்பொருள் மற்றும்  தகவல்களை ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு திறம்பட விபரனப்படுத்த  பயன்படும் power point (காட்சியப்படுத்தல்) போன்ற அலுவலக மென்பொருள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அலுவலக செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் மாற்றங்களை இந்த தொழில்நுட்ப உருவாக்கியுள்ளதாக ஒரு விமர்சனமும் எழுந்தவண்ணம் உள்ளது.  சாட் ஜி.பி.டி யை கட்டுப்படுத்தி அதை தடை செய்யுமாறு முதன்முதலில் தமது குற்றச்சாட்டை உலகிற்கு முன்வைத்தது இத்தாலியின் தனிநபர் தரவுக்கட்டுப்பாட்டு ஆணையகம் ஆகும். இந்த ஆணையகம் முன்வைத்த குற்றச் சாட்டு என்னவென்றால் 

"இது தனி நபர்களின்  இரகசிய தரவுகளை சட்டதிட்டங்களுக்கு எதிரான முறையில் சேமித்து அதை அனுமதியில்லாமல் தனது சொந்த தேவைகளுக்காக அதை பகிரங்கபடுத்துகின்றன" என்பதை ஆகும் .

இத்தாலியின் தனிநபர் தரவுக்கட்டுப்பாட்டு ஆணையகத்தின் முறைப்பாடுகளை பின் தொடர்ந்து இன்னும் பல நாடுகளும் இது தொடர்பான தொடர்ச்சியான எதிர்ப்புக்களை இந்த சாட் ஜி.பி.டி தொடர்பாக தெரிவித்தவண்ணம் உள்ளனர். இது மாத்திரம் இன்றி இத்தாலி,சீனா, ரஷ்யா மற்றும் ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் இந்த சாட் ஜி.பி.டி யை நமது நாட்டில் தடை செய்யும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. இதனால் சாட் ஜி.பி.டி யின் சர்வதேச சந்தை உட்பிரவேச வாய்ப்புக்கள் ஒரு சில நாட்களாக சரிவடைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளன. இந்த சாட் ஜி.பி.டி யை ஆரம்பத்தில் வடிவமைக்கும் பணிகளில் எலான் மாஸ்க் களமிறங்கி  இருந்தாலும் இடை நடுவில் இதில் இருந்து விலகியமை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் ஒன்றாக பார்க்கப்படுகின்றன.

இவ்வாறான ஒரு நபர் இதிலிருந்து இடை நடுவில் விலகியது சாட் ஜி.பி.டி க்கு ஆரம்பத்தில் விழுந்த முதல் அடியாக பார்க்கப்பட்டது.  இதில் பயன்படுத்தப்படும் அல்கோரிதம் என்னும் தொழில்நுட்பத்தை இன்னும் சிறிது காலங்களில் சர்வதேச நாடுகளில் போர் நடவடிக்கைககளுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் ஒரு தகவல்கள் உலாவுகின்றன்.  ஜி.பி.டி  உருவாகி ஒரு வருடம் கூட இன்னும் ஆகவில்லை அதற்கிடையே இவ்வளவு குற்றச்சாட்டுக்களை ஏற்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இன்னும் இதன் பரிசோதனை காலங்கள் கூட முழுமையாக நிறைவுபெறவில்லை அதற்கிடையே உலக நாடுகள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு இதை தடைசெய்ய சொல்வது சரியா பிழையா என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.