வானொலி - கல்வி கட்டுரை
தகவல் பரிமாற்றத்தில் வானொலிகள்

தகவல் பரிமாற்றத்தில் வானொலிகள்
மனித சமூகத்தின் வாழ்வியலில் தகவல் பரிமாற்றம் என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது. மனித தோற்றத்திலிருந்து தன் குடும்ப கட்டமைப்புக்குள், குழுக்களுக்குள், சமூகத்துக்குள் என தொடங்கி நாடாளவிய மற்றும் சர்வதேசம் வரையிலும் இத் தகவல் பரிமாற்ற முறையானது இன்று வரையிலும் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு மனித சமூகத்துக்குள் மிக அவசியமானதும் முக்கியத்துவம் கொண்டதுமான தகவல்களை இன்று வரையிலும் முன்னிலையில் இருந்து பரிமாற்றி வருகின்ற பிரதான ஊடகங்களாக அஞ்சல் சேவை, பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி மற்றும் இணையம் முதலானவைகள் இன்று வரையிலும் தன் தனித் தன்மையினாலும் விரைவு தகவல் பரிமாற்றத்தாலும் முதன்மையானவைகளாக அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு தனித் தன்மை கொண்ட இத் தகவல் பரிமாற்ற துறையில் வானொலி சேவைகள் வழங்கும் முக்கியத்துவம், வானொலி சேவையால் சமூகத்துக்கு கிடைக்க பெறும் சாதக, பாதக தன்மைகள் மற்றும் இலங்கையில் வானொலியின் வளர்ச்சி போக்கு முதலானவற்றை இக் கட்டுரையின் வழியாக விரிவாக நோக்குவோம்.
மனித தோற்ற சமூகத்தில் தகவல் பரிமாற்ற முறைமையாக அமைந்த தூது அனுப்பல் எனும் நடைமுறைக்காக விலங்குகள்,பறவைகள் மற்றும் மனித வலு முதலானவை பயன்படுத்தப்பட்டு வந்தன எனினும் அறிவியல் வளர்ச்சி தன்மையை முதற் கொண்டு மேற்குலக நாடுகளுள் அஞ்சல் சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்றமானது வலு பெற்றது. இவ்வாறு மேற்குலக நாடுகளில் நிலவிய அஞ்சல் பரிமாற்ற சேவையானது மேலைத்தேய காலணித்துவத்திற்கு உற்பட்டிருந்த கீழைத்தேய நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான பின்னனியில் விஞ்ஞான துரித வளர்ச்சி போக்கில் அலேக்ஸாண்டர் கிரகம்பெல்லால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைப்பேசி , மார்க்கோணியால் உருவாக்கப்பட்ட வானொலி முதலான ஊடகங்களின் வருகையினால் பிற் காலத்தில் தகவல் பரிமாற்ற முறைமையானது துரித கதியில் முன்னேற்றம் அடைந்தது. இவ்வாறு தொலைப்பேசியின் வருகையானது அக்கால இராணுவ துறையில் இரகசிய உரையாடல் தன்மைக்கு பெரிதும் உதவிய அதே நேரம் வானொலியின் அறிமுகமானது இரானுவ குழுக்களிடயே ஒரே நேரத்தில் தகவல்களை நம்பக தன்மையுடன் கொண்டு செல்ல முடிந்தது. இவ்வாறு இராணுவ துறையினரிடத்திலான தகவல் பரிமாற்ற முறைக்கு பலம் சேர்த்த வானொலி சேவையானது பிற்காலத்தில் உலகளாவிய ரீதியில் செய்தி பரிமாற்ற ஊடகமாக தோற்றம் பெற தொடங்கும் அளவிற்கு தனி தன்மை கொண்டது.
இவ்வாறான சிறப்பு பெற்ற வானொலி சேவையானது, அறிவியற் கால பின்னணியில் புவியியல் தகவல் தொழிநுட்பம் (Global Information System) மற்றும் பூகோள இடநிலைப் படுத்தல் முறைமை (GPS) முதலான தொழிநுட்பங்களின் துரித தன்மையோடு இணைந்ததாக தோற்றம் பெற்ற தொலையுணர்வு தொழிநுட்பத்தின் (Radio System) வழியாக இயக்கம் பெறுகின்றது. அதாவது வானொலி சேவை மையத்திலிருந்து வான் வெளியில் நிருவப்பட்டிருக்கின்ற செய்மதிகளுக்கு தொலையுணர்வு பண்பலைகள் ஊடாக தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டு அச் செய்மதிகளில் இருந்து செம்மையாக்கப்பட்ட தகவல்களாக பண்பலைகள் மூலமாக கடத்தப்பட்டு வீடு முதலான கட்டமைப்புக்களுக்குள் இயங்குகின்ற வானொலி இயந்திரங்களுக்கு கொண்டு சேர்த்து ஒலி வடிவமாக்கி தகவல்களை சமூகத்துக்கு பரப்பும் பணியினை மேற் கொள்கின்றது.
அவ்வாறு முதற் காலத்தில் வானொலி அலைகள் ஊடாக நாடளாவிய ரீதியில் செய்தி பரிமாற்றமானது இடம்பெற தொடங்கிய அதே நேரம் இவ் வானொலி சேவை மையங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்த நிறுவணக் கட்டமைப்புக்குள்ளேயே இடம்பெற்று வந்தது. இவ்வாறு அமைந்த வானொலி சேவை மையங்களானது அரசின் தலையீடினால் அரசு சார் சாதக தன்மைகளை மாத்திரமே பரிமாற்றும் தன்மை கொண்டனவாக செயற்பட்டன. எனினும் அரசியல் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் அரசின் சட்ட ஏற்பாட்டு திருத்தங்கள் ஊடாக குறிப்பாக ஊடக சுதந்திரம்,கருத்து பகிர்வு சுதந்திரம் , மற்றும் தகவல் அறியும் சட்டங்கள் முதன்மையானவற்றின் மூலமாக தனியார் வானொலி செய்தி பரப்பு மையங்களினதும் தோற்றமானது ஆரம்பம் பெற தொடங்கியது. அவ்வாறு தோற்றம் பெற்ற தனியார் வானொலி மையங்களின் ஊடாக பரிமாற்றப்பட்ட செய்திகளானது பொதுத் தன்மை கொண்டதாகவும் மறு புறம் அரசின் பிழைகளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பவைகளாகவும் தோற்றம் பெற தொடங்கின.
இவ்வாறு தனியார் வானொலிகளின் செய்தி பரிமாற்ற ஊடகங்களானது தோற்றம் பெற தொடங்கிய நாளதிலிருந்து அரசின் ஆட்சி மற்றும் செயற்பாட்டு தன்மை முதலானவைகள் வெளிப்படைத் தன்மைக் கொண்டதாக அமையத் தொடங்கின. மறுபுறம் அரசை மையமாக கொண்ட செய்திகளுக்கு அப்பால் நாட்டில் வாழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், நாடளாவிய ரீதியிலான அரசியலுக்கு வெளியில் சமூக, பொருளாதார நிலைத் தன்மை முதலானவற்றில் தொடங்கி படிப்படியாக காலநிலை சார் தகவல்கள் மற்றும் பல சுவாரசிய தகவல்கள் அடங்களாக சர்வதேச செய்திகள் வரையிலும் வானொலி மையங்களூடாக பரிமாற்ற பட்டு ஒலிபரப்பாக்கப்பட்டன. இவ்வாறு வளர்ச்சியுற்ற வானொலி சேவையானது பிற்காலத்தின் அரச மற்றும் தனியார் ஊடகங்களின் போட்டித் தன்மை காரணமாக சமூகத்தை கவரும் வண்ணம் தம் வானொலி ஒலிபரப்புக்களை கட்டமைத்து தனக்கான வாசகர் வட்டத்தை கவர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டது.
இவ்வாறான நிலை பின் அதிக வாசகர்களை கொண்ட வானொலி சேவையாக தனித் தன்மையை ஏற்படுத்தி கொள்ளும் நோக்கில் செய்தி பரிமாற்றத்துக்கு அப்பாற் பல பொழுதுபோக்கு அம்சங்களையும் வானொலி ஒலிபரப்புக்குள் இணைத்து கொண்டு செயற்பட்டது. இவ்வாறு வானொலி செய்தி பரிமாற்றத்துக்காக தனியான நேர கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு ஏனைய நேரங்களில் திரைப்படங்கள் நாடகங்கள் நாட்டார் கலைகள் முதலானவற்றிலிருந்து பெறப்பட்ட பாடல்களை வானொலி சேவை ஊடாக ஒலி பரப்பி மக்களையும் வாசகர்களையும் கவர்ந்தது. இதன் தொடர்ச்சியாக நகைச்சுவைகள், பட்டிமன்றங்கள்,ஒலிபடங்கள்,ஓசை நாடகங்கள் முதலானவற்றை தன் வானொலி ஒலிபரப்பு சேவையில் இணைத்து கொண்டு வாசகரை கவரும் வகையில் பயணித்தது. இவ் வானொலி சேவைக்கும் அவற்றின் போட்டித் தன்மைக்கும் வலு சேர்க்கும் விதமாக நாடளாவிய ரீதியில் சிறப்பு பெற்ற விற்பனை நிலையங்கள்,தொழில் நிறுவனங்கள்,சேவை மையங்கள் முதலானவற்றின் விளம்பரங்கள் ஒலி வடிவில் விளம்பரப் படுத்தப்பட்டன. இதனால் வானொலி சேவைக்கு வாசகர்களுக்கு அப்பாற் வருமானங்களும் நிதி கட்டமைப்புக்களும் கிடைக்க பெறலாயின. இதற்கு மேலாக வானொலியில் செய்தி அறிவிப்பிற்கு மறு புறம் பொழுதுபோக்கு அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் விளம்பரங்களை அறிவிப்பு செய்வதுக்குமாக வானொலி சேவை மையங்களுக்கு சிறந்த மற்றும் நகைச்சுவை பாங்கான பேச்சாளர்கள் ,வானொலி வர்ணணையாளர்களாகவும் அறிவிப்பாளர்களாகவும் பணி புரிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இவற்றுக்கு மேலாக பிற்காலத்தில் அதிகரித்த விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை வர்ணணைக்கு ஒழுங்கு செய்யும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வானொலி கட்டமைப்புக்குள் இணைத்து கொள்ளப்பட்டனர். இதனையொட்டியதாக வானொலி செய்தி சேவைகளின் தரத்தை மேம்படுத்த பிரதேச மட்டத்திலிருந்தே செய்திகளை ஒலிபரப்பும் தன்மைக்கு முன்வந்தது இதனால் ஊடக துறை சார் ஆர்வம் கொண்ட இளைஞர் யுவதிகள் பிரதேச ரீதியிலான வானொலி செய்தி தொகுப்பாளர்களாக வானொலி சேவையில் இணைந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இவற்றுக்கு மேலாக பிற் காலத்தில் வானொலி துறையில் உள்வாங்கப்பட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு நாடளாவிய ரீதியில் இசைத் திறமை கொண்டவர்களும் மண்வாசனை மிக்க நாட்டுபுற பாடகர்களும் பாடலாசிரியர்களும் வானொலித் துறையில் இணைத்து கொள்ளப்பட்டனர். இதே போல மறு புறத்தில் ஒலிக் குறும்படங்கள் மற்றும் ஒலி நாடகங்கள் முதலானவை வானொலி சேவையில் பொழுதுபோக்கு அம்சங்களாக இணைத்து கொள்ளப்பட்டதன் விளைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு திறமை வாய்ந்தவர்களுக்கு வானொலி துறையில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு வானொலி துறையின் வளர்ச்சி பாதையில் வானொலி நிகழ்ச்சி கட்டமைப்பக்களுக்கு ஏற்றாற் போல பணி புரிவோரது எண்ணிக்கை தன்மையும் அதிகரிக்க தொடங்கியது. மறுபுறம் வானொலி துறை சார் ஆர்வம் கொண்ட இளைஞர்,யுவதிகளுக்கு தன் விருப்பத் தொழிலாக வானொலி துறையை தெரிவு செய்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறான தனித்துவ தன்மைக் கொண்டு இன்று வரையிலும் வெற்றி கரமாக பயணித்து வந்துள்ள வானொலி தகவல் பரிமாற்ற சேவையின் சாதக தன்மைகளாக அங்கு தெளிவானதும் உடனுக்குடனானதுமான விரைவு செய்தி பரிமாற்ற தன்மை,திறமைமிக்க இளைஞர் யுவதிகளை மையமாக கொண்டு நிலவுகின்ற தொழில் வாய்ப்புக்கள்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் தனி திறன் கொண்டவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வானொலி துறையில் நிகழ்ச்சிகளூடாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட போட்டி களங்கள் என்பனவும் இவற்றுக்கு மேலாக விற்பனை முகவர்களுக்கும் தொழில் நிறுவணங்களுக்கும் தன் வணிக தன்மையை அடையாளப்படுத்தி கொள்ள வானொலி துறை ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரப்படுத்தல் வாய்ப்பு தன்மை முதலானவற்றை அடையாளப்படுத்தி கூற முடிகின்றது.
இதே போல இவ் வானொலி சேவையில் காணப்படுகின்ற குறைகள் எனும் தன்மையில் நோக்கும் போது, இன்றைய சில தனியார் வானொலிகள் அரசின் அல்லது பிரதானமானதொரு அரசியற் கட்சியின் கைப் பாவைகளாக செயற்பட்டு வருகின்றமை, வானொலி துறையில் அதிக வாசகர்களை கவர்ந்து தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் மறு புறம் அதிக விளம்பரதாரர்களை தன் வசப்படுத்தி கொள்ளும் நோக்கிலும் வானொலி சேவை பிரதான பணியான செய்தி பரிமாற்றத்திற்கு முன்னுரிமை வழங்குவதை தவிர்த்து ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றமை ,வானொலி துறையை விருப்ப தொழிலாக கொள்வோருக்கான சம்பள கொடுப்பனவானது ஏனைய துறையினரை விடவும் ஒப்பிட்டளவில் மிக குறைந்த வருமானமாக அமைகின்றமை, மற்றும் வானொலி துறை சார் பணியாளர்கள் நேர காள வரையறை கடந்து சுழற்சி முறையில் இடம்பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றமை முதலானவைகளும் மறுபுறத்தில் ஒப்பிட்டளவில் அதிக தொகையினை வழங்கும் விளம்பர தாரர்களுக்காக சந்தைக்கு ஏற்பற்ற ,பொருத்தமற்ற மற்றும் தரமற்ற பொருட்களுக்கு விளம்பரம் செய்து குறித்த வானொலி சேவையை விரும்பும் வாசகர்களின் நலனை பாதிப்புக்கு உள்ளாக்கும் நடைமுறைகள் முதலானவற்றை வானொலி துறை சார் குறைத் தன்மையாக அடையாளப்படுத்த முடிகின்றது.
இவ்வாறு பல சாதக பாதக பக்கங்களை கொண்டு பயணிக்கும் வானொலி துறை எதிர் நோக்கும் சவாலாக போட்டித் தன்மை நிலவுகின்றது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியின் பால் தகவல் பரிமாற்ற ஊடகங்களில் வானொலிகளுக்கு அப்பாற் நிழற் பட வர்ண தொலைக்காட்சிகள் வினைத்திறன் மிக்க கையடக்க தொலைபேசிகள்,இணையத்தள நிகழ்நிலை காட்சியாக்க செய்தி பரிமாற்றம் மற்றும் நவீன செய்தி பரிமாற்ற செயலிகள் முதலானவற்றின் வருகையால் இன்றைய கால ஓட்டத்தில் வானொலி சேவை துறையை விரும்பும் வாசகர்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைவடைந்து உள்ளமையானது இன்றைய காலக்கட்டத்தில் வானொலி துறை எதிர் நோக்கும் பாரிய சவால் நிலையாக உள்ளது. எவ்வாறாயினும் பல தடைகளை கடந்து இன்று வரையிலும் தன் தனித் தன்மையால் சிறப்பு பெற்று பயணித்து வாசகரிடத்தில் தனக்கான இடத்தை பிடித்து வைத்துள்ள வானொலி துறையானது மீண்டும் போட்டி தன்மைகளை கடந்து வெற்றி பாதையில் பயணித்து வாசகர்களின் முதல் விருப்பத் தெரிவாக மாற்றமுற நாமும் வானொலி துறை பற்றி திரும்பி பார்த்து வானொலி சேவைகள் ஊடாக பயன் பெற்றுக் கொள்வோம். வானொலி துறை மீண்டு தனித்துவம் பெற கைகொடுத்து துணை நிற்போம்.