இந்து மதமும் வாழ்வியலும்

வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்து மதம்

Mar 13, 2023 - 13:30
Mar 14, 2023 - 20:01
 0  69
இந்து மதமும் வாழ்வியலும்

சாத்திரங்களின் தனித்துவத்தை தன்னகத்தே கொண்டது இந்துமதம். இந்துக்களின் பிரதான வழிகாட்டியாக வேதங்களும் இதிகாச இலக்கியங்களும் காணப்படுகின்றது. இவை மிகவும் புராதன காலத்திற்குரியது மட்டுமின்றி இவைகள் மனித வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் மற்றும் மக்களை சிறப்பானதொரு வாழ்க்கை வாழவைக்கும் கருவியாகவும் புனிதத்தன்மையடைகின்றன. இந்துமதம் உலகியல் வாழ்வில் ஈடுபட்டு அனுபவ முதிர்ச்சியினால் ஞானம் பெற்று அழகியல்  பற்றுக்களில் இருந்து தாமாகவே விடுபட்டு ஈடேற்றம் பெறுவதே வாழ்க்கை தத்துவமாக கொண்டு இயங்கி வருகின்றது. இதன் தத்துவங்களும் கோட்பாடுகளும் எங்களை தீவினைகளிலிருந்து விடுபட உதவிசெய்கின்றன. மனிதன் மனிதனாகவே வாழ வழிகாட்டியாக நிற்கின்றன. விரதங்களும் பண்டிகைகளும் வாழ்வின் உயரிய கட்டுப்பாடுகள் மற்றும் ஒற்றுமைகள் சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை நமக்கு கற்றுத்தருகின்றன. இந்து மதத்தின் தூண்களாக நாயன்மார்கள் மற்றும் சமயக்குரவர்களும் அவர்களினால் அருளிய கலைகள் மற்றும் தேவார,வேதப்படிப்பினைகள் காணப்படுகின்றன. இவைகள் காலத்தினால் அழியாத பொக்கிஷங்களாக விளங்குகின்றது. இவர்களினால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இன்றும் எம்மவர்களினால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

இந்து மதத்தில் கூறப்படும் பணிவும் பண்பும் வணக்க முறையுடனும் வாழ்க்கையுடனும் பின்னிப்பினைந்து காணப்படுகின்றது. சமீப காலத்தில் ஏற்பட்டிருந்த கொரனா பரவல் காலத்தில் ஒருவரையொருவர் சந்தித்தால் கைகளை குலுக்கிக்கொள்ளும் ஆங்கிலேயர்களின் இந்தப்பழக்கம் மருகி ஒருவரை சந்தித்தால் இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவிக்கும் இந்து சமய  பழக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால் இந்த பழக்கமுறை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தில் உருவாகி விட்டது. அது மாத்திரமின்றி கோயிலுக்குச் செல்லும் முன் கைகால்களை கழுவுதல், மஞ்சள் நீர் தெளித்து வீடுவாசல்களை துப்பரவு செய்தல் போன்ற இந்துமத பழக்கங்கள் கொரனா தொற்று பரவல் காலத்தில் காணப்பட்டதை யாராலும் மறுத்து விட முடியாத உண்மைகளாகும் . பெற்றோருக்கு மதிப்பளித்தல் பெரியவர்களை வணங்குதல் குருவை தெய்வமாக போற்றுதல் சத்தியத்தையும் தன்னடக்கத்தையும் கடைபிடித்தல் என்பன வாழ்க்கையில் பூரண நிறைவை பெற வழிவகுக்கும்.இந்து மதத்தில் சுகாதாரத்துடன் சேர்த்து சுத்தத்தையும் பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது  அதிகாலையில் எழுதல்   சுத்தமாக குளித்தல்  நன்றாக  தோய்த்து உலர்ந்த ஆடைகளை தினமும் அணிதலும் சைவ உணவுகளை உட்கொள்ளுதலும் மற்றும் யோகாசனம் செய்தல் என்பன மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. இதில் யோகாசனப் பயிற்சி செய்வது என்பது எமது உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தவல்லது. இவைகள் அனைத்தும் இந்துமதம் நமக்கு தந்த பொக்கிஷங்கள் ஆகும்.  

இவை மட்டுமே இல்லாது ஆலயங்களில் வீழ்ந்து வணங்குதல் தலையில் குட்டுதல் தோப்புகரணம் போடுதல் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி குவித்து வணங்குதல் கோயிலை வலம்வருதல் யாவும் வணக்கமுறைகளாக இருந்தாலும்  இந்து தத்துவத்தையும் உடல் ஆரோக்கியத்திற்கான விளக்கத்தையும் உயர்ந்த பண்புகளையும் உணர்த்தி வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது.


இதில் மேலே குறிப்பிட்ட தோப்புக்கரணம் போடுதல் என்பதை பற்றி சிறுவிளக்கம் கூற நான் விரும்புகின்றேன் அதாவது தோப்புகரணம் என்பது வலது கரங்களினால் இடது காதையும் அதேசமயம் இடது கரங்களினால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து எழும்புதல் ஆகும் இதன் போது நமது உடலின் உள்ள 72000 நாடி நரம்புகள் புத்துயிர் பெறுகின்றன. இதன் மூலம் நமது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இயங்குகின்றது மூளைக்கு செல்லும் ஓட்சினின் அளவும் அதிகரிக்கின்றன இதனால் மூளை சிறப்பாக இயங்கும் இதனால் தான் பெரியவர்கள் பரீட்சைக்கு செல்லும் முன் குறைந்தது மூன்று தடவையாவது விநாயகர் கோயிலுக்குச் சென்று         தோப்புக்கரணம் போட்டுவிட்டு பரீட்சைக்கு செல் என்று கூறுவார்கள் இதன் மூலம் நமது இந்து சமயத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு பழக்கத்திற்கு பின்பும் ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது என்பது நமக்கு தெளிவாக புலப்படுகிறது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மாதத்தில் சில நாட்கள் உணவருந்தாது இருத்தல் அதாவது விரதமுறைகள் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக இன்றைய விஞ்ஞானிகள் பலர் ஆய்வில் நிருபித்துள்ளனர்.

இந்து மதம் தத்துவங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கூறவில்லை நல்ல உறவுத்தன்மையை மேம்படுத்தல் போன்ற நல்ல வாழ்க்கைத்துவத்தையும் குறிப்பிடுகின்றது. அதாவது உழைத்துக்கழைத்த மனிதனுக்கு ஓய்வழித்து ஆனந்த மூட்டும் பண்டிகை தினங்களை உருவாக்கியுள்ளது.  இப்பண்டிகை மூலம் உறவுகள் ஒன்று சேர்கின்றன அதுமட்டும் இல்லாது விருந்தோம்பல், ஒன்று கூடல்,ஒற்றுமை,விட்டுக்கொடுத்தல்  இறைத்தன்மை என்பன மூலம் வாழ்க்கைக்கு மெரூகூட்டுகின்றன.