வாழ்க்கை - கவிதை
கவிதை போட்டி இல :- 071

வாழ்க்கை
நிலையில்லா உலகில் நீ,
நான், நாம், அனைவரும் நிரந்தரமில்லை.
பொய்யான கோலம் பூண்டு
போலியாக நடிக்கின்றோம்
இதுவே அற்ப வாழ்வு.
மானிடா! நிதர்சன வாழ்வினை அறிந்திடு.
நேற்று யென்பது நிலையில்லை.
நாளை யென்பதும் நிலைப்பதில்லை.
இந்த வினாடி மட்டுமே நிரந்தரம்.
இதனை அறிவாய் நீ.
ஆறு வயதினில் சின்னஞ்சிறு மழலையாக,
இருப்பதாறினில் தேடிக்கொண்டகணவன், மனைவியாக
நாற்பத்தாறினில் இருப்போமோ தெரியவில்லை.
அதை அறிந்தும் தொடரும் நம் பயணம்.
அசடர்களுக்கு முன்வரிசைலும் இடமுண்டு.
அசண்டையாளர்களுக்கு பின்வரிசைலும் இடமில்லை.
அடிமை வாழ்வுதனில் அனைத்தும் தொடர்வதில்லை.
என்றோ ஒரு நாள் முடிந்துவிடும்.
கோடி பொன்னை தேடினாலும்
தேடி பணத்தினை ஓடினாலும்
நாடி செல்வது என்னவோ மண்ணைத்தான்.
இதை அறிவதே வாழ்வின் நிதர்சனம்.
அறிந்தால் தெளிந்திடும் உன் மனம்.
அறிவற்ற மானிடனே வாழ்வின்
நிதர்சனங்களை புரிந்திடு.
நீ தறிகெட்டு;நெறிகெட்டு;
தளைகெட்டு
மாளாமல் நெறியுற்ற நேர்வழியில் சென்றிடு .
வாழ்வு வளப்படும்.
மாயை உலகினில் நிரந்தரமில்லாததை அறிந்திடு.
அறியும் நொடி தீமைகளை விலக்கிடு.
ஆசைகளை ஒழித்திடு.
துறவினை கைக்கொண்டிடு.
வாழ்வு இனித்திடும்.
ஊசிகளும் மருந்துகளும்
௨ருக வைக்கும் வார்த்தைகளும்
வாழ்க்கையில் வழமை.
புரிந்து நடந்தால் மாத்திரமே வாழ முடியும்.
மானிடா இதை ௨ன் சிந்தையில் பதியவை..
நன்றி:- வாழையூர் அபி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>