உண்மையான காதல் - கவிதை
கவிதை போட்டி இல :- 031

உண்மையான காதல்
-------------------------------------"இந்த உலகில் உன்னை
நேசித்தது என் தவறல்ல
அன்பே..உலகத்திலேயே உன்னை
மட்டும் உயிருக்கு உயிராய்
சுவாசித்தது தான் என் தவறு..!உன்னை நான் மறந்து விட்டேன்
என்று.. நீ எண்ணும் வேளையில்
பிரிந்திருக்கும் என் உயிர்..!இதயமும் ஒரு சிறை தான் இதில்
குற்றம் செய்பவர்கள்
மாட்டிக் கொள்வதில்லை.. பாசம்
வைத்தவர்கள் மட்டுமே மாட்டிக்
கொள்கிறார்கள்..மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்..
அடுத்த ஜென்மம் என்று ஒன்று
இருந்தால் அதில் நீயே வேண்டும்..
உறவாக மட்டுமல்ல.. உயிராக
நான் நேசிக்கும் அளவு
நீ என்னை நேசிக்க வேண்டாம்..
ஆனால் என் நேசம் எந்தளவு என்று
புரிந்து கொண்டாலே போதும்..!நீ என்னுடன் இல்லாமல் இருக்கும்
தருணங்களில் நூறு உறவுகள்
அருகினில் இருந்தாலும் நான்
தேடுவது “தனிமை” தான்..!"
நன்றி :- M. A. M Salman
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






