நினைவுகளும் திருத்தனுமே - காதல்
கவிதை போட்டி இல :- 063

தூரவிழிப் பார்வைக்குள்
நீதோன்றி மறைகின்றாய்
உன்னைத் தேடிடவே
உள்ளம் வாடிடுதேகாதல் வலைக்குள்
சிக்கித் தவிக்கிறது
கொஞ்சிப் பேசிடவே
உள்ளம் துடிக்கிறதுஉன்னருகே நானிருக்க
ஊமையாகிப் போகின்றேன்
இதயமும் படபடக்க
வார்த்தைகளும் தடுக்கிறதேஇதயங்கள் இடம்மாற
காதல்மழை பொழிகிறதே
தென்றலும் வீசிடவே
தெம்மாங்கு பாடிடுதேஓரக்கண் பார்லையாலே
காதல்மொழி பகிர்கின்றாய்
உள்ளத்து நினைவுகளை
சொல்லாமல் சொல்கின்றாய்எண்ணமெல்லாம் நீயாக
நினைவுகளும் உனதாக
எடுத்தியம்பும் வார்த்தைகளும்
கவிதைகளாய்ப் பொழிகிறதே....நன்றி:- நதீரா வசூக்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>