இயற்கை - கவிதை

கவிதை போட்டி இல :- 034

இயற்கை - கவிதை

இயற்கை

கடவுளிடம், 
மழையை கேட்டேன் மரத்தை கொடுத்தான். 
கனியை கேட்டேன் கற்பகத்தருவை கொடுத்தான்.
உணவைக் கேட்டேன் சிறிய விதையைக் கொடுத்தான்.
உலகை கேட்டேன் அவ் விதையினை உற்று நோக்கென்றான்!!!

காயும் கனியும் இலையும் கிளையும் 
வேரும் விழுதுமாய் வியாபித்திருக்கும் விருட்சமிதற்கு
உயிராய் அமைந்ததும் ஓர் விதையே!!!

பாதை வழியே பல மரங்கள் பார்
தன்னிலே பகட்டாய் மிளிர்கின்றனவே!
கைக்கெட்டும் கனிகளை தந்தது எவனே!
நிழல் கொற்றும் கிளைகளையும் படைத்தவன் அவனே!

விதி சமைத்தான் விதை தன்னிலே...
விழித்திடு மனிதா விதை மரமும்
விதி மாற்றும்!

                                பி.பிரேமிகா 

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1