காதல் - கவிதை
கவிதை போட்டி இல :- 035

காதல்
பகலவன் வரும் வேளை என் இதழ் மலர
அவன் மறையும் வேளை என் முகமோ வாட
பிறை வரும் வேளை என் கண்ணொரம் கண்ணீர் தேங்க
நிலவை பார்த்த படி என் இரு விழிகள்...!!!
பிறையோ என் கண்ணீரில் சூழ்ந்த படி இருளை கடக்க
மறு நாள் ஆதவன் என் கண்ணீரை வாங்கி்க் கொள்ள
காலம் என் கண்ணீரில் அழிவதை புரியா என் விழிகளுக்கு
நான் எப்படி ஆறுதல் கூற போகிறெனோ.
நன்றி :- பி.பிரேமிகா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>