இயற்கையின் கொடையதே வாழ்வு! - கவிதை
கவிதை போட்டி இல :- 057

இயற்கையின் கொடையதே வாழ்வு!
உயிகளின் கூடு இயற்கை
உணர்ந்துநீ ஐக்கியம் ஆகு
பயிர்களும் பட்சியும் கூட
பயன்தரும் வாழ்வது நிமிர!வலையதாய் உறவுகள் இணைந்து
வகையதாய்ச் சமநிலை பேணு
உலையது வைத்திட வேண்டாம்
உயிரெலாம் அடிப்படை அலகே!சடமாகும் ஐம்பூதம் யாவும்
சாத்தியம் வாழ்வது நீள
மடமையால் அதனைநீ அழித்தால்
மாண்டுதான் போகுவாய் உலகில்!இயற்கையின் கொடையதே வாழ்க்கை
இணக்கமாய் வாழ்வதை நகர்த்து
இயல்பினை கெடுத்துமே வாழ்ந்தால்
ஈனமும் உன்னையே சேரும்!வளங்களும் உயிர்களும் சிதைக்கா
வண்ணமாய்ப் பல்வகை பேணு
விளங்கிடும் இயற்கையே உந்தன்
இறையதாய் மடிதனில்க் காத்து!
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>