நட்பு
கவிதை போட்டி இல :- 065

நட்பு
மானிடர்களைப் பிணைக்கும்
மகோன்னதப் புனிதமே
மறக்காத நினைவுகளை
மறவாமல் பரிமாறுமே........
காலங் கடந்தும்
காவியமாய் மீட்டிப்பார்க்க
மனதில் பதிந்த
பசுமையான நினைவதாம்......
மட்டில்லா மகிழ்ச்சிகளை
எண்ணிலடங்கா துன்பங்களை
பரிமாறும் தருணமதாம்
தன் தோழியின் தோல் சாய்ந்து......
கைகோர்த்துக் கதை பேசி
பொழுதுகளை அரட்டையாக
போக்கிடுமே என்றென்றும்
பொன்னான நேரமதை.......
சிறுசிறு சண்டைகள்
பரிசுகளின் பரிமாறல்கள்
மறவாத பிறந்ததினம்
அழியாதவை நினைவுகளை விட்டு...........
காலத்தின் கோலத்தில்
புனிதமாய்ப் பூத்த
உன்னத கைகோர்ப்பு
பிரியாது என்றென்றும் – நினைவை விட்டு.......
நன்றி:- மு.இ.பாத்திமா றுஷ்தா.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>