நட்பு - கவிதை

கவிதை போட்டி இல :- 039

Apr 6, 2023 - 20:12
Apr 7, 2023 - 10:30
 0  132
நட்பு - கவிதை

நட்பு
**

எங்கிருந்து வந்தோம்
  எப்படி ஒன்றினோம்
எதுவுமே அறியவில்லை
  இணைந்தோம் நட்பாய்

ஒருகோப்பையில் உண்டோம்
  ஒன்றாய் உறங்கினோம்
ஒருவருக்கு ஒருவர்
  உண்மையாய் இருந்தோம்

ஒருவருக்கு வலித்தால்
  இருவரும் அழுதோம்
ஒருவரின் களிப்பில் இருவரும் மகிழ்ந்தோம்

உள்ளத்தைப் பகிர்ந்தோம்
  உறவாய்த் திகழ்ந்தோம்
உணர்வினால் இணைந்து
  உடன்பிறப்பிலும் மேலானோம்

எந்த வகையிலும்
  பிரியாத வரமாய்
எதிர்பார்ப்பு இல்லாத
  நட்பாய் ஆனோம்

தவறு செய்திடினும்
  தள்ளிப் போய்விடாது
தட்டிக் கேட்டிடும்
  துணிவும் நட்புக்கே

உறவுகள் சிலவேளை
  உதறித் தள்ளிவிடும்
உண்மையான நட்பு
  உயிருள்ளவரை தொடரும்

சண்டைகள் போட்டிடினும்
  வினாடியும் விலகிடாது
சரிவிடுவென சமாதானமாய்
  கைகோர்த்தே நிலைத்திடும்

முகம்நோக்கி அகமறிந்து
  அகத்துன்பம் நீக்கிட
தன்னையே அர்ப்பணித்து
  தன்நட்பை மகிழ்விப்பான்

தேடித்தேடி வந்தே
  தேவைகள் அறிந்து
திதத்திக்கப் பேசுவதும்
  சிறந்த நட்பாம்

ஆயிரம் மலர்கள்
  அர்ச்சனைக்கு வந்திடும்
நட்பெனும் மலர்கள்
  நந்தவனத்தில் இருக்கும்வரை

நன்றி:- திருமதி தயாளனி சிவநாதன்

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1