வாழ்க்கை - கவிதை

கவிதை போட்டி இல :- 017

Apr 5, 2023 - 13:33
Apr 7, 2023 - 10:41
 0  75
வாழ்க்கை - கவிதை

வாழ்க்கை


கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் உண்மையான மகிழ்ச்சி, மற்றவை மகிழ்ச்சியை போல் தோன்றும் அனுபவங்களே..


எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும்
உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. 


அது உங்கள் நேரம்..
உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்... என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள்..
வாழ்க்கையை அனுபவியுங்கள்..


இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. 
உங்களுக்கான இன்பத்தை  மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்...


நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..
இறுதியாக ஒரே ஒரு வார்த்தை..
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்...
அனுபவித்து வாழுங்கள்.
வாழ்க்கை அழகானது..

நன்றி் :- ஷங்கரி சிறிதரன்

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1