தீயில் விழுந்த மலரா..!

காதல் தொடர்கதை

தீயில் விழுந்த மலரா..!
  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 1

    கருப்பு நிற உடையணிந்த காவலர்கள் அந்த எட்டடுக்கு மாளிகையை சுற்றி துப்பாக்கி ஏந்தி காவல் காத்து நின்றார்கள்.இந்த மாளிகையை பூமியில் கட்டினார்களா இல்லை இந்திர லோகத்தில் இருந்த இந்திரனின் மாளிகையை பெயர்த்து பூமிக்கு கொண்டு வந்தார்களா எனும் வியக்கும் அளவிற்கு மிக பிரமாண்டமான மாளிகை அது.

    வாசலில் பதிக்கப்பட்ட பளிங்கு கற்களே அந்த பணக்காரனின் பணச்செழுமையை எடுத்து காட்டியது.வெளியே நின்று அந்த கோட்டையை யாரும் வாயை பிளந்து பார்த்தால் கூட வாயிலேயே சுட்டு விடுவான் நல்ல மனம் படைத்த அந்த கோட்டையின் உரிமையாளன் சுடுவதென்றால் நெருப்பினால் அல்ல துப்பாக்கியால்.

    மாளிகை அழகாயிருந்து என்ன பயன் அங்கே என்னேரமும் கேட்பதெல்லாம் அலறல், அழுகுரல்,மரண ஓலங்கள் மட்டுமே அதற்காக அங்கு பேய் இருக்கிறது என்றெல்லாம் எண்ண தேவையில்லை பேயை விட கொடூரமான மிருகம் இல்லையில்லை மிருகத்தை விட கொடூர மனிதன் ஒருவன்..ஒரே ஒருவன் மட்டும் தான் அங்கே வசிக்கிறான்.

    என்றும் போல இன்றும் அந்த கோட்டையில் மரண ஓலம் கேட்டு கொண்டு தான் இருக்கிறது.

    கோட்டையின் வாயிலை தாண்டி உள்ளே செல்லும் போதே மரண தேவனின் கோவிலுக்குள் செல்வதை போல உடல் நடுக்கத்தை உண்டு பண்ணும் படியாக ஒருவன் அலறிக்கொண்டிருந்தான்.

    சார் சார் என்ன விட்ருங்க இனி உங்க பக்கம் தலை வச்சி கூட படுக்க மாட்டேன் சார் ப்ளீஸ் சார் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன் சார் என்ன விட்ருங்க என அவன் எவ்வளவு கெஞ்சியும் அவன் மேல் இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை என்பதே உண்மை.

     தங்கள் எஜமான் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடிக்கும் விசுவாசமிகு நாய்கள் தான் அங்கிருக்கின்றன அதிலும் ஒரு கருப்பு ஆடு புகுந்து அந்த எஜமானுக்கே தெரியாமல் அவன் தொழில் சம்பந்தமான ஒரு ஃபைலை திருட பார்க்க சரியாக பொறியில் சிக்கி கொண்டது இனி கடவுளே நினைத்தாலும் அந்த ஆட்டை காப்பது கடினம்.

    எமனுக்கே எமன் போன்றவனிடமே வேலை பார்த்து கொண்டு அவன் வீட்டிலேயே திருட முனைந்தால் மன்னித்து விட்டு விட அவன் என்ன நல்லவனா இல்லையே.

    அந்த ஒருவனின் அலறல் சத்தம் அலாரம் சத்தம் போல் கேட்க சோம்பல் முறித்துக் கொண்டு உறக்கத்தில் இருந்து கண்விழித்தான் அந்த அரக்கன்.

    இறையை குறிவைத்து தாக்கும் கழுகை போல கூர் பார்வை..என்னேரமும் கோபத்தில் தகித்திருக்கும் சிவந்த விழிகள், முறுக்கி விட்ட மீசை அதன் கீழ் ஏளனமாக வளையும் இதழ்கள்,மாநிற தேகத்தில் உடற்பயிற்சியின் மூலம் முறுக்கேறிய புஜங்கள், செதுக்கி வைத்த உடலோடு பெண்களை கட்டியிழுக்கும் ஆணழகனாய் தூக்கத்தில் இருந்து எழுந்தான் அவன் விஷ்வமித்ரேஷ்வரன்.

    ஃபைனான்ஸ் உலகின் ஜாம்பவான் திரைப்படங்கள் முதற் கொண்டு அத்தனைக்கும் இவன் தான் ஃபைனான்ஸியர்.பணத்தை வைத்தே பணத்தை பெருக்கும் வித்தையறிந்தவன் வயது இருபத்தி ஒன்பது .

    டேய்..விஷ்வா சொடுக்கிட்டு அழைக்க அவன் அறை வாசலில் காவல் நின்ற காவலன் ஒருவன் அடித்து பிடித்து ஓடி வந்து அவன் முன்னால் பணிவாய் நின்றான்.

    சத்தம் பத்தல அவனுங்க ஒழுங்கா அடிக்கிறானுங்களா இல்ல எப்படி அடிக்கனும்னு அவனுங்கள நா வந்து அடிச்சு காட்டவா அவன் கர்ஜனையாய் கேட்க..இதோ இப்போவே போய் சொல்லிடுறேன் பாஸ் என்ற காவலாளி ஒரே ஓட்டமாய் ஓடி விட்டான் இல்லையென்றால் இன்னும் கொஞ்ச நேரம் அவன் இங்கிருந்திருந்தால் அவன் உயிருக்கு உத்திரவாதம் இருக்காதே.

    அந்த காவலாளி சென்ற சில வினாடிகளில் அடி வாங்கி கொண்டுருந்தவனின் அலறல் வானை பிளக்கும் அளவிற்கு கேட்டிட அதன் பின்னரே படுக்கையை விட்டு எழுந்த விஷ்வா உடற்பயிற் செய்ய தனி அறைக்கு சென்றான்.

    வெறி தனமாய் உடற்பயிற்சி செய்தவன் வியர்வை வடிய குளியலறைக்குள் புகுந்தான்.அங்கே அவனுக்காய் பாத் டப்பில் ரோஜாக்கள் நிரப்பப்பட்டிருக்க அதனை ஒரு நொடி ஏளனமாக பார்த்தவன் பின் குளித்து முடித்து வெளியே வந்தான்.

    அழகிய மங்கையொருத்தி ஆளுயர புகைப்படத்தில் அவனறையில் இருக்க அந்த புகைப்படத்தின் முன்னால் வந்து நின்றவனின் விழிகள் புரியாதை பாஷைகள் பேசின.இது அவனுக்கும் அவளுக்கும் மட்டுமான பாஷை போல என்னேரமும் கோபம் கொப்பளிக்கும் அக்கினி விழிகள் அவளிடம் மட்டும் அடங்கி போகும்.புரிய படாத நேசத்தில் புதைக்கப்பட்ட மலர் அவள்.

    சார்... வாசலில் இருந்து நடுங்கிய குரலில் அவனை அழைத்தான் காவலன் ஒருவன்.

    வாட்..திரும்பாமளே கேட்டான் விஷ்வா..

    சார் உங்கள பார்க்க மிஸ்டர் யாதவ் வந்திருக்காரு என அவன் சொல்ல ம்ம் நீ போ நா வாரேன் என்றவன் வெறும் சார்ட்சை மட்டும் அணிந்து கொண்டு காலை சத்து பானமாய் வெளிநாட்டு மதுவை வாயில் சரித்து கொண்டே ஆறடியில் அசராத அரக்கன் போல நடந்து கீழிறங்கி வர பயம் தொண்டையை அடைத்தது யாதவிற்கு.

    என்னாச்சு எதாவது தகவல் கிடைச்சதா சிம்ம குரலில் கேட்டவன் அங்கே அடி வாங்கி கத்தி கொண்டிருந்தவனின் உயிரை தன் ஒற்றை புல்லட்டில் எடுத்து விட மயக்கம் வராத குறையாக அமர்ந்திருந்தான் யாதவ்.

    உன் கிட்ட தான் கேட்டேன் எதாவது தகவல் கிடைச்சதா..

    ஆ..ஆமா...சார் போன வாரம்..என்னோட அசிஸ்டன்ட் ஊட்டி போயிருந்த போது ஒரு போட்டோ எடுத்தான்.

    இடியட் உன் அசிஸ்டன்ட் போட்டோ எடுத்தத சொல்லவா இங்கே வந்த கத்தியவன் துப்பாக்கியை யாதவ் புறம் திருப்ப..

    சா..சா.ர் அவசரா படாதிங்க அந்த போட்டுவுல நீங்க கேட்டது இருக்கு..என பதறிய யாதவ் அந்த புகை படங்களை விஷ்வாவிடம் காட்ட அவன் எதிர் பார்த்தது அதில் இருந்தது .

    இந்த போட்டோ மட்டும் தான் சார் கிடைச்சிருக்க க்ளு வேற எந்த தகவலும் கிடைக்கல..ஒரு வித பயத்துடன் கூறிய யாதவ் முன்னால் ஒரு கட்டு பணத்தை தூக்கி போட்டான் விஷ்வா இனி நா பார்த்துக்குறேன் நீ கிளம்பு என்றவன் அந்த போட்டோவை பத்திர படுத்தி கொண்டான்.

    அப்படியே சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடிய விஷாவினை யாரோ வெகு நேரமாய் பார்த்து கொண்டிருப்பதை போல ஒரு குறுகுறுப்பு தோன்ற கண்களை திறந்தவன் முன்னால் ஹாய் ஹேன்ட்சம்.. முகத்தில் ஒரு கிலோ மேக்கப்புடன் வந்து நின்றாள் ஒருத்தி.

    யார் நீ என்பதை போல விஷ்வா அவளை பார்க்க அதற்கு முன்பாக ஓடி வந்து விஷ்வா முன்பு நின்றார் செக்யூரிட்டி.

     

    ஹே ஓல்ட் மேன் நீ என்ன வீட்டுக்குள்ளே வார உங்க பாஸ் உனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டாரு போல.. நீயெல்லாம் கேட்டுக் வெளியே தான் நிற்கனும் உள்ள வர கூடாது.

    என்னாச்சு செக்யூரிட்டியை பார்த்து விஷ்வா கேட்க அவரோ மௌனமாய் தலை கவிழ்ந்து நின்றார்.

    அதான் கேக்குறார் இல்ல சொல்லு மேன் மேடமா வீட்டுக்குள்ள நா விடல அதனால மேடம் என்ன அடிச்சிட்டாங்கனு என்றவளின் எகத்தாள பேச்சில் விஷ்வாவின் பொறுமை பொங்கல் சாப்பிட போக செக்யூரிட்டியோ வேண்டாம் என்பதை போல விஷ்வாவை பார்த்தார்.

    ஏளனமாக இதழ் வளைத்து சிரித்தவன் தொலைப்பேசிக்கு வந்து நின்ற பெண்ணை பற்றிய மொத்த தகவலும் வந்தது.

    நீ இங்கே எதுக்கு வந்திருக்கனு தெரிஞ்சிக்கலாமா.. காரணத்தை தெரிந்தே விஷ்வா கேட்க அவளோ ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த காரணத்தை கூறலானாள்.

    உன்ன ஒரு பிஸ்னஸ் மீட்டிங்ல பார்த்தேன் பேபி பார்த்த நிமிஷமே பிடிச்சு போச்சு.. கண்டதும் காதல் உன் மேல.இது வரைக்கும் நா யாரையும் லவ் பண்ணது இல்ல என் அழகுக்கும் தகுதிக்கும் ஏத்தவன் நீ ஒருத்தன் தான் அதான் ப்ரப்போஸ் பண்ணலாம்னு வந்தேன் ஏற்கனவே அவளது நடை, உடையில் கொதித்து கொண்டிருந்தவன் இப்பொழுது அவளது திமிர் கலந்த பாவனை இன்னும் எரிச்சலை மூட்டியது .

    இதோ பாரு நா பொண்ணுங்க மேல கை வைக்கிறது இல்ல நா முழு அரக்கனா மாற முன்னாடி இங்கிருந்து ஓடி போய்ரு..

    இந்த திமிர் தான் மேன் உன் கிட்ட எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனால் நீ சொன்னா நா கேட்கனுமா என்ன..?? என் லவ்க்கு ஓக்கே சொல்லு நா இங்கிருந்து கிளம்புறேன் தெனாவெட்டாய் பேசியவள் கால்மேல் கால் போட்டு அவன் முன்னால் அமர ஓடி வந்த செக்யூரிட்டியோ அம்மாடி பிரச்சினை பண்ணாம போய்டுமா தம்பிக்கு இதெல்லாம் புடிக்காது எடுத்து சொல்ல முயல அவளோ மீண்டும் அவரை அறைந்து விட்டாள்.

    ஹே ஓல்ட் மேன் உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாஆஆ... காற்றில் மிதப்பதை போல விஷ்வின் கையில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

    நா சொல்லும் போதே நீ போய்ருக்கனும் செல்லம் தப்பு பண்ணிட்டே..இனி உன்ன யாரும் காப்பாத்த மாட்டாங்க..இந்த விஷ்வமித்ரேஷ்வரன் கோட்டைக்கே வந்து எனக்கே ஸ்கெட்ச் போடுற பாத்தியா நல்ல தில்லான ஆளு தான் ஆனா உன் தில்லு என் கிட்ட எடுபடாதே.

    என்ன சொன்ன கண்டதும் காதலா..??ஹாஹா நல்லா தான்டி ட்ரெயின் பண்ணி அனுப்பியிருக்கான் உன் பாஸு எதிரிகள் சூழ்ந்த உலகத்துல என்ன குத்த அம்பு எந்த பக்கம் இருந்து வருதுனு கூடவா தெரியாம இருப்பேன்.

    குரல்வளை அவன் இரும்பு கரத்தில் நெறிப்பட்டு கொண்டிருக்க அவன் பிடியில் இருந்து திமிறி வெளியே வர முயற்சி செய்தாள்.

    சரி அதெல்லாம் விடு அது என்ன வயசுல பெரியவர்னு கூட பார்க்காம கை நீட்டுற அடக்கம் ஒடுக்கம்னா என்னனு தெரியாதா உனக்கு என்றவன் மூச்சுக்கு ஏங்கியவளை தொப்பென்று கீழே போட்டான்.

    ஒழுங்கு மரியாதையா அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு..விஷ்வா உறும அவளோ அவனை முடியாது என்பதை போல பார்த்து வைத்தாள்.

    அவள் கூந்தலை கொத்தாக பற்றிய விஷ்வா இழுத்து தள்ளி விட செக்யூரிட்டி காலடியில் சென்று விழுந்தாள் அவள்.

    அவள் உயரத்திற்கு கீழே குனிந்த விஷ்வா மீண்டும் அவள் கூந்தலை பிடித்து தூக்கி..உன்ன கொல்ல எனக்கு ஒரு செக்கண்ட் போதும்..ஆனா கொல்ல மாட்டேன் உன்ன அனுப்பி வச்சான் பாரு அவன் கிட்ட போய் சொல்லுடி நீ சொன்ன வேலைய என்னால செய்ய முடியல நீ சொன்ன மாதிரி விஷ்வமித்ரேஷ்வரன மயக்க முடியலனு போய் சொல்லு போ அந்த மேனகையே வந்தாலும் என்ன மயக்க முடியாது போடி என நாயை அடித்து விரட்டுவதை போல அவளை பிடித்து வாசலில் தள்ளி விட்டவன் மீதிருந்த மதுவையும் வாயில் சரித்து கொண்டு அறைக்கு சென்றான்.

    தொடரும்.......

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 2

    ஊசிக்காற்றை போல காலை குளிர் உடலை துளைக்க காலையில் குளித்து முடித்தவள் குளிருக்கு இதமாய் சுட சுட தேனீர் ஊறிஞ்சிய படி  ஜன்னலின் வழியே மெல்ல நகர்ந்து சென்ற மேக கூட்டத்தையும் பனி மூட்டத்தையும் ரசிக்க ஆரம்பித்தாள் .

    அந்த மேகம் மூடிய சூரியனை தான் அவளும் தேடிக் கொண்டிருக்கிறாள் பனியும் மேகமும் தான் அவளுக்கு சதி செய்கின்றன போல எப்பொழுதும் அவள் தேடும் சூரியனை தங்களுக்குள் ஒளித்து வைத்து கொண்டு.

    வெறுமை உணர்வு மனதை ஆட்டுவிக்க தான் விரும்பியே தானே இந்த தனிமையை தேர்ந்தெடுத்தாள் அப்போது வெறுமை,தனிமை அத்தனை கொடுமையையும் எற்று கொண்டு தானே ஆகவேண்டும் என எதையோ எதிர்பார்த்து ஏங்கிய மனதிற்கு அவளே ஆறுதலையும் கொடுத்து கொண்டாள்.

    இயற்கையை ரசித்திருந்தவள் திடீரென கலக்கமுற்று கையில் இருந்த தேனீர் கோப்பையை அவசரமாக கீழே வைத்து விட்டு உள்ளே அறைக்கு ஓடினாள் அவள்.

    பச்சிளம் ரோஜா மொட்டொன்று உறக்கம் கலைந்து தாயின் மடி தேடி தூளியில் கை கால்களை உதைத்து அழுது கொண்டிருக்க தாயானவள் உள்ளம் துடித்து போக வேகமாய் பிள்ளையை தூக்கி கொண்டாள்.

    அச்சச்சோ என் குட்டி தங்கம் எழுந்துட்டிங்களா அம்மாவோட வருக்குட்டிக்கு பசிக்கிதா என்றவள் பிள்ளைக்கு அமுதூட்டி தட்டிக்கொடுக்க மீண்டும் உறங்கி போனான் மூன்று மாத கைக்குழந்தை விஷ்வா வர்தன்.

    பிள்ளையை தொட்டிலில் போட்டவள் அவன் எழும்பும் முன்னரே வீட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என வேகமாய் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க நேரம் ஒன்பது மணியை தொட்டது.

    பிள்ளைக்கு பாலூட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே அவளுக்காய் கொஞ்சம் சமைத்தவள் அவசர அவசரமாய் உண்டு விட்டு காத்திருக்க ஐந்து வயதில் இருந்து குமரிகள் வரை ஒரு சிறு பட்டாளம் அவள் வீட்டுக்கு வந்தன.

    டீச்சர் என அனைத்து பிள்ளைகளும் கத்தி கொண்டே ஓடிவர அனைவரையும் புன்னகை முகமாக வரவேற்றவள் உள்ளே சென்று ரேடியோவை ஆன் செய்ய 

    மார்கழித் திங்களல்லவா

    மதிகொஞ்சும் நாளல்லவா..

    பாடல் ஒளிக்க பிள்ளைகளை முன்னிருத்தி சேலையை தூக்கி இடையில் சொருகி கொண்டவள் நடத்தை பயிற்றுவிக்க ஆரம்பித்தாள்.

    மார்கழித் திங்களல்லவா

    மதிகொஞ்சும் நாளல்லவா..

    இது கண்ணன் வரும் பொழுதல்லவா

    ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

    விடை பெறும் உயிரல்லவா..

    நாட்டிய தாரகையாய் ஆடிக்கொண்டிருந்தவளை வாசலில் வருவோரும் போகும் ஆண்கள் விரசமாய் பார்த்து செல்ல கடுப்பான மாணவி ஒருத்தி கதைவை படாரென்று சாத்தி விட்டு வந்தாள்.

    ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்

    விடை பெறும் உயிரல்லவா..

    வருவாய் தலைவா

    வாழ்வேவெறும் கனவா.. அவளுக்காவே எழுதப்பட்ட வரிகள் போலும் நடனத்திலும் அவள் கண்ணனின் நினைவுகள் வாட்ட விழியோரம் துளிர்த்த கண்ணீரை மறைத்து கொண்டே ஆடி முடித்தாள் அவள். 

    அவளவன் கூட இப்படி தான் ஆயிரம் வேலையிருந்தாலும் அவள் ஆட ஆரம்பித்தால் சகலத்தையும் மறந்து அவன் மனது கொலுசணிந்த பாதங்களிலும் அஞ்சனம் தீட்டிய விழிகளில் வழியும் அபிநயங்களிலும்  லயித்து கிடக்கும்.

    அதையெல்லாம் எண்ணியவள் உள்ளம் குமுறிட.. இன்னைக்கு இந்த அளவுக்கு ப்ராக்டிஸ் போதும் எல்லாரும் நாளைக்கு வாங்க என அனைவரையும் அனுப்பி வைக்க அதில் ஒரு குட்டி பெண் அவள் சேலையை பிடித்து இழுத்தாள்.

    அவளோ அந்த சிறுமியின் உயரத்திற்கு குனிய மலர்... டீச்சர் உங்க முழு பேர் என்ன என கேட்க அழகாய் புன்கைத்தவள் சிறுமியின் நெற்றியில் முத்தமிட்டு மேனகா மலர்விழி என்றாள் கண்கள் சிமிட்டி.

    மேனகையே போலவே நாட்டிய தாரகை, அழகிலும் மேனகையை போன்றவள் குணத்தில் மலரினும் மெல்லியவள் அவள்.வீட்டிலேயே மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவிக்கிறாள்.

    சிலர் வீட்டிற்கு சென்று விட ஒன்றிரண்டு பிள்ளைகள் மட்டும் விஷ்வா வர்தனை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்தார்கள் அவனும் அவர்களுடன் கைக்கால்களை ஆட்டி விளையாடி கொண்டிருக்க வாசலில் நின்று யாரோ அழைக்கும் ஓசை கேட்க வெளியே சென்றாள் மேனகா.

    அங்கே முப்பத்திரண்டு பற்கை காட்டி கொண்டு ஒரு மாணவியின் தந்தை நின்று கொண்டிருந்தான்.அவன் பார்வையில் உடல் கூசி போனவள் முகத்தில் இலகு தன்மை மறைந்து இறுக்கம் குடி கொள்ள என்ன வேணும்.. என்றாள் இறுகிய குரலில்.

    மகளுக்கு டியூஷன் பீஸ் கொடுக்க வந்தேன் டீச்சர்..இந்தாங்க பீஸ் என்றிட அவள் கை நீட்டி பீஸை வாக்கும் போது தெரியாமல் பட்டதை போல அவன் விரல்கள் அவள் கரத்தை தீண்டிச் செல்ல தீவிழிப்பார்வையால் அவனை பஸ்பமாக்கினாள்.

    சாரி டீச்சர் மன்னிச்சிடுங்க.. தெரியாம பட்ருச்சுஉஉ..அவன் சொல்லி முடிக்கும் முன்னரே அவளது கரமும் தெரியாமல் பட்டிருந்தது அவனது கன்னத்தில்.

    இனி பீஸ் கொடுக்குறதுனா பசங்க கிட்டையே அனுப்பு இல்லனா உன் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்தனுப்பு இந்த மாதிரி பீஸ் கொண்டு வந்து குடுக்குற சாக்குல கை தெரியாம பட்டுச்சுனா அடுத்த வாட்டி என்னோட செருப்பு உன் மேல தெரியாம படும் விரலை நீட்டி அவள் எச்சரிக்கை செய்ய அவள் அடித்த கன்னத்தை கூட இதமாய் தடவி கொண்டே வாசல் வரை சென்றவன்.

    பச்ச புள்ளைய வச்சிக்கிட்டு தனியா இருக்கிறவ பெரிய பத்தினி மாதிரி பேசுறா..உத்தமியா இருந்தா புருஷன்காரன் கூடல்ல இருந்திருப்பான்..அவன் முனகி சென்றது நன்றாகவே அவள் காதில் விழுந்தது.

    ஒரு பொண்ணு தனியா இருந்தா கண்ட கண்ட நாயெல்லாம் இப்படி பேச தான் செய்யும்.. எல்லாம் இவனுங்க பொண்டாட்டிங்க குடுக்குற இடம்...உன் புருஷன் சரியில்ல கன்டிச்சு வைனு சொன்னா எந்த பொண்டாட்டிங்க நம்புறாளுங்க எம்புருஷன் ஸ்ரீ ராமன்னு எல்லாம் பார்ட்டு பத்திரம் வாசிக்கிதுங்க..நெடிந்து கொண்டே வந்தாள் மீனாட்சி மேனகா குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்.

    மீனாட்சிக்கு கணவன் இல்லை பிள்ளைகளும் திருமணம் முடித்து வெளிநாட்டில் செட்டிலாகி விட இருந்த வீட்டை வாடகைக்கு விட்டு கொண்டு வயதான காலத்தை போக்கி கொண்டிருக்கிறார்.

    அவ்வபோது மேனகாவிடம் வம்பு பண்ணும் தரங்கெட்ட ஜென்மங்களை தரிக்கெட்டு ஓட வைப்பதே மீனாட்சியின் தலையாய கடமையாய் இருக்கும்.

    அத விடுங்கம்மா என்ன காலைல இருந்து இந்த பக்கமே காணோம் உங்க பேரனை பார்க்க கூட வரல..

    அத ஏன் கேக்குற உன் வீட்டுக்கு மேல இருக்க மாடிய ஒரு குடும்பத்துக்கு வாடகைக்கு கேட்டான் அந்த புரோக்கர் பய.. சரின்னு நானும் தாரேன்னு சொன்னேன் காலைல காய்கறி வாங்க மார்கெட் போனப்போ தான் தெரியுது வாடகைக்கு கேட்டவன் பூரா பொறுக்கி பயலுங்க குடும்பம்னு சொல்லி ஏமாத்தா பாத்துருக்கானுங்க நா விடுவனா அந்த ப்ரோக்கர உண்டு இல்லனு பண்ணிட்டேன்ல.

    என் பழைய ஃபிரண்ட் மூலமா சென்னைல இருந்து ஒரு பையன் வாடகைக்கு வீடு கேட்டான் அந்த பையனுக்கே பேசி முடிச்சிட்டேன் எப்படியும் இன்னைக்கு சாயந்திரம் அந்த பையன் வீட்டுக்கு குடி வந்திருவான்.

    என்னமா பையன்னு சொல்றிங்க எதுவும் பிரச்சினையாகிடாதே கலக்கமாய் கேட்டாள் மேனகா ஏற்கனவே தனியாய் இருப்பவளை ஊர் ஒரு மாதிரியாக பேசுகிறது இதில் ஒரே வீட்டில் மாடியில் ஒரு ஆணும் கீழ் வீட்டில் இவளும் இருந்தால் உலகம் சும்மாவா இருக்கும்.

    அட நீ ஒன்னும் பயப்படாத கண்ணு நா அப்படி விசாரிக்காம வாடகைக்கு விடுவேனா.அந்த பையன் பார்க்க ஆளு நல்லா பாகுபலி மாதிரி இருக்கான் உன் கிட்ட வம்பு பண்ண வாரவனுங்க அவன் உருவத்தை பார்த்தே தெறிச்சு ஓட போறானுங்க பாரு மீனாட்சி இல்லாத காலரை தூக்கிவிட்டு கெத்தாய் சொல்ல சிறு தயக்கத்தோடு புன்னகைத்தாள் மேனகா.

    அப்பறம் அந்த பையன் வார நேரத்துக்கு நா வீட்டுல இருக்க மாட்டேன் இந்தா இந்த சாவிய வச்சிகோ அவன் வந்து கேட்டா கொடுத்துடு என்ன..தள்ளு நா போய் என் பேரனை பார்க்குறேன் காலைல இருந்து அந்த சேட்டை கார பையன பாக்கவே இல்ல மீனாட்சி அம்மா நகர்ந்து விட சோகமாய் நிலைப்படியில் அமர்ந்து விட்டாள் மேனகா.

    இன்னும் எத்தனை எத்தனை பிரச்சினைகளை தான் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டுமோ என எண்ணும் போதே கண்ணை கட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.

    ****

    தம்பி நானும் கூட வரட்டுங்களா ரெடியாகி கொண்டிருந்த விஷ்வமித்ரேஷ்வரன் முன்னால் வந்து கேட்டார் செக்யூரிட்டி மாணிக்கம்.

    உங்க உதவி தேவை படும் போது கண்டிப்பா கூப்பிடுறேன்.ஒற்றை வரியில் முடித்து கொண்டான் விஷ்வா.

    ஷியாம்...கோட்டையை உடைக்கும் வலிமை பொருந்திய குரலில் இதோ வந்தேன் பிரபு எனும் விதமாய் விஷ்வாவின் பீஏ ஷியாம் வந்து நின்றான்.

    நா திரும்பி வார வரைக்கும் வர்க் எல்லாத்தையும் கவனிச்சிக்கோ எதுவும் முக்கியமான ஃபைல்ஸ் சைன் போட இருந்தா எனக்கு மெய்ல் பண்ணு நா கரெக்ஷன் பண்ணிடுறேன் சொல்லி கொண்டே காற்றை போல வேகத்தை நடையில் கொண்டு அவன் நடக்க அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஷியாமும் ஓடி வந்து முதலாளி வழங்கும் கட்டளைகளை மண்டையில் வாங்கி கொண்டான்.

     

    உடலை இறுக்கி பிடித்த மெரூன் வண்ண சர்ட்டில் காற்றில் அலைபாயும் கேசத்தை கோதி கொண்டே நடந்து சென்றவன் முகத்தில் வழக்கத்திற்கு மாறான புன்னகை. அது இறையை வேட்டையாட போகின்ற மகிழ்ச்சியின் சுவடாய் கூட இருக்கலாம்.

    வேக எட்டுகளில் மாளிகையின் முன்னால் வர அங்கே அவனுக்கான பிரத்தியேக ஹெலிகாப்டர் தயராக இருந்தது அதில் ஏறியவன் தன் பயணத்தை ஊட்டியை நோக்கி தொடர அவனை பாவமாக பார்த்து நின்றார் மாணிக்கம்.

     விஷ்வா சென்ற சில வினாடிகளில் அவன் கோட்டையில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு எங்கோ முகம் தெரியாத ஒருத்தருக்கு சென்றது.

    அந்த பக்கம் என்ன கேட்க பட்டதோ தெரியவில்லை இந்த பக்கம் "பாஸ் இப்போ தான் கிளம்பி போறாரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஊட்டிக்கு வந்துருவாரு.." என அழைப்பு துண்டிக்க பட்டது.

    சொன்னது போலவே மீனாட்சியம்மா மாலையில் வீட்டில் இருக்கவில்லை எங்கே சென்றாரோ என தெரியாத மேனகா குட்டி பையனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே கொஞ்சமாய் கண்ணயர்ந்து போனாள்.

    யாரோ வெகு நேரமாய் கதவு உடைந்து விழும் அளவிற்கு தட்டிக் கொண்டிருந்த ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு குட்டி பையனை தொட்டில் போட்டு அறை கதவை சாத்தி விட்டு வெளியே வர..கதவு இன்னும் வேகமாக தட்டப்பட்டது.

    ஹாங் இருங்க வரேன்..வரேன்..மீனாட்சியம்மா கொடுத்த சாவியை எடுத்து கொண்டே வந்தவள் கதவை திறக்க.. வெளியே நின்றவனை கண்டு 1000w மின்சாரம் தாக்கியதை போல உரைந்து நின்றாள் மேனகா மலர்விழி..

    தொடரும்...

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 3

    வெளியே வந்து நின்றவனை காண்கையில் மேனகையின் கரங்கள் தன்னால் நடுக்கமுற கால்களோ அடுத்த அடி எடுத்து வைக்க மறுத்தன நிலை வாசலின் மீது ஒரு கையை தூக்கி பிடித்து மறுகையில் லக்கேஜை பிடித்து இதழ் வளைத்து அவளை ஒரு பார்வை பார்த்தவனை கண்டு சர்வமும் அடங்கி போனது அவளுக்கு.

    மீனாட்சி அம்மா கீ வாங்கிக்க சொன்னாங்க அவள் முகத்தில் தான் ஆயிரம் உணர்ச்சிகள் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்த வேலையில் தான் குறியாய் இருந்தான்.

    தயங்கி கொண்டே தலையை குனிந்தவாறு அவன் முன்னால் சாவியை மேனகா நீட்ட சாரி.. எனக்கு மாடிக்கு எப்படி போகனும்னு தெரியாது கொஞ்சம் வழி சொல்ல முடியுமா மேட..ம் அழுத்ததை கொடுத்து அவன் கேட்க எதுவும் சொல்லாமல் வீட்டின் உள் புறமாய் மாடிக்கு செல்ல அமையப்பெற்ற படிக்கட்டில் அவள் நடக்க அவள் பின்னால் வீட்டை சுற்றி முற்றி பார்த்துபடி அவன் வந்தான்.

    மேல் மாடிக்கு சென்றவள் அறை கதவை திறந்து விட அவளை ஒரு பார்வை பார்த்து கொண்டே உள்ளே சென்றவன் படாரென்று முகத்தில் அடித்தால் போல கதவை அறைந்து சாத்தினான் அவன்.

    கையை பிசைந்து கொண்டே மேனகா சாத்திய கதவையே வெறித்து பார்த்த படி நிற்க சடாரென்று மீண்டும் கதவு திறக்க பட்டது.இன்னும் போகாம இங்கேயே நின்னு என்ன பண்ற ஹோ வயசு பையன் பார்க்க நல்லா இருக்கானே மயக்கி போடலாம்னு பாக்குறியா இல்ல மயக்கிட்டு ஓடி போய்றலாம்னு நினைக்கிறியா.. அதெல்லாம் தான் உனக்கு கை வந்த கலையாச்சே ஊசியால் குத்து வதை போல பெண்ணவள் இதயத்தை விஷம் தோய்ந்த வார்த்தைகளால் குத்தி கிழித்தான் அவன் விஷ்வமித்ரேஷ்வரன்.

    அவன் பேச்சில் முனுக்கென கண்கள் பணித்து விட அவன் முன்னால் அழ கூடாது என உறுதியாய் நின்றவள் பார்வையை  வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.

    ஆனாலும் சும்மா சொல்ல கூடாது ஆளு முன்ன விட கலர் கூடி போய் நல்ல பப்பாளி பழம் மாதிரி தாண்டி இருக்க..

    பார்த்து பேசுங்க மிஸ்டர் என்ன பத்தி பேச எந்த உரிமையும் இல்ல உங்களுக்கு மேனகா அவன் முகத்திற்கு நேரே விரலை நீட்டி எச்சரிக்க கோபம் பொத்து கொண்டு வந்தது அவனுக்கு..யார் முன்னாடி விரல் நீட்டி பேசுற விரல உடைச்சிடுவேன்..மேனகா விரலை விஷ்வா மடக்கி பிடிக்க வலியில் முகம் சுருக்கினாள் மாது.

    போ போய் சமைச்சு வை..இனி விரல் நீட்டி பேசுற வேலை வச்சிக்கிட்டே கையையும் சேர்த்து வெட்டிடுவேன்..

    நா..நா எதுக்கு உங்களுக்கும்... சமைச்சு வைக்கணும்..அவன் மிரட்டியதில் அவளுக்கும் கோபம் வந்து விட எதிர் கேள்வி கேட்டு வைத்தாள் விஷ்வாவிடம்.

    பின்னே குக்கிங்கும் சேர்த்து தான் மீனாட்சியம்மாகிட்டே பணம் கொடுத்துருக்கேன் அவங்க தான் இன்னைக்கு நா வர மாட்டேன் என் வீட்டுல மே...ன..கா னு ஒருத்தி இருக்கா அவ கிட்ட சொல்லு சமைச்சி கொடுப்பானு சொன்னாங்க .

    டான்ஸ் ஆடிக்கிட்டு சும்மா தானே இருக்க போய் சமைச்சு வை போ.. அதுக்கு வேணும்னா உனக்கு பணம் கொடுக்குறேன் என அவள் கழுத்தை பிடித்து தள்ளி விட்டவன் மீண்டும் அறைக்குள் சென்றுவிட வழிந்த கண்ணீரையும் அவன் கீழை விழுந்ததில் அடிப்பட்டு கையில் வழிந்த ரத்தத்தையும் துடைத்து கொண்டே சென்றவள் சமைக்க ஆரம்பித்தாள்.

    இனி அந்த அரக்கனிடம் இருந்து எப்படி தப்புவது என நினைக்கும் போதே நெஞ்சு வலித்தது அவளுக்கு..அவளும் எத்தனை கஷ்டங்களை தான் தாங்குவாள் காலையிலேயே மீனாட்சியம்மா இவன் பெயரை சொல்லியிருந்தால் கூட அப்போதே  குழந்தையை தூக்கிக் கொண்டு எங்காவது ஓடியிருப்பாள்.

    இனி இவன் கண்ணை கட்டி விட்டு இங்கிருந்து தப்புவது என்பது கனவிலும் நடவாது காரியம் என மேனகா நன்றாகவே அறிவாள்.அப்படியே வெளியே சென்றாளும் இருபது வயது மங்கையை கையில் குழந்தையோடு எந்த நல்ல மனம் வாய்ந்தவர்கள் மீனாட்சி அம்மாவை போல ஆதரிப்பார்கள்.

    அக்கறை என்ற பெயரில் அவளை அடைய நினைக்கும் கண்களே ஏராளம்.

    பல யோசனைகளில் உழன்ற படியே சமைத்து முடித்தவளின் முதுகின் மீது  சூடான மூச்சு காற்று படவே திடுக்கிட்டு திரும்பினாள் மேனகா.

    மிக நெருக்கமாய் அரக்கன் நின்று கொண்டிருந்தான் திரும்பிய வேகத்தில் அவன் பரந்த மார்பின் மீதே முட்டி மோதி விலகி நின்றாள்.

    எ..என்.என்ன வேணும்.. இத்தனை அருகாமையில் அந்த அரக்கனை கண்டதில் வார்த்தை வர மறுத்து நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது.

    நீ..தான்..வேணும்..

    ஹாங் அவள் திருதிருவென விழிக்க..

    அது வந்து நீ சமைச்சது வேணும் சமையல் முடிஞ்சிதானு பார்க்க வந்தேன் என பொருந்தாத காரணத்தை சொல்லி விட்டு உணவு உண்ண அமர்ந்து விட அவளுக்கு ஐயோடா என்றானது.

    இப்பொழுது நிச்சையமாய் பரிமாற சொல்லி உயிரை வாங்குவானே அது கூட பரவாயில்லை அதற்குள் குட்டி பையன் எழுந்து விட்டால் அது வேறு பிரச்சினையாகி போகுமே.

    தன் விதியை நொந்து தலையில் அடித்து கொண்டவள் அவனுக்கு பரிமாறி சென்றாள் பார்வையால் அவளையும் வாயால் உணவையும் விழுங்கி கொண்டிருந்த விஷ்வா அவள் எதிர் பார்க்காத வேலையில் சேலையில் தெரிந்த சிற்றிடையை கில்லி வைத்து விட திடுக்கிட்ட மேனகா துள்ளி குதிக்க அவள் புடவையின் உள்ளே மறைத்திருந்த தாலி வெளியே வந்து காட்சி தந்தது அரக்கன் கண்களுக்கு.

    உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா...என்றான் தாலியை பார்த்த விஷ்வா யோசனையோடு.

    ஆமாம் என தலையாட்டினாள் மேனகா..உன்னெயெல்லாம் எந்த இளிச்சவாயன் கல்யாணம் பண்ணினான்..ஏதோ ஏமாந்தவன் கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டியா.. கூர்முனை கொண்ட கத்தியால் அவளை குத்தியிருந்தாள் கூட இவ்வளவு வலித்திருக்காது அவளுக்கு அவன் வார்த்தை உயிர்வரையிலும் வலியை உண்டு பண்ணிட கண்கலங்கி போனாள்.

    அவள் கண்ணீரை கண்டவன் ஆத்திரம் பொங்க..இப்படி அழுது அழுது தான்டி எல்லாத்தையும் சாதிச்ச இனியும் எதுக்குடி நீலி கண்ணீர் வடிக்கிற கோபத்தில் கண்மண் தெரியாதவன் சாப்பாட்டையும் தட்டி விட அனைத்து பாத்திரங்களும் கீழே விழுந்து உடைந்தன .

    உன்ன பார்க்க பார்க்க உடம்பெல்லாம் எரியுது போடி..என அவளை பிடித்து தள்ளி விட்டு போக அழுத படி தரையில் விழுந்து கிடந்தவளுக்து ஆறுதல் அளிக்க கூட யாரும் இல்லாத அவல நிலை.

    பெண்கள் மீது கைவைக்க மாட்டேன் கடவுளாய் மதிப்பேன் என நேற்று வீட்டிற்கு வந்த பெண்ணிடம் வீர வசனம் பேசிய மகா உத்தமன் மேனகாவை கண்டதும் எங்கே சென்று ஒளிந்து கொண்டான் என்று தான் தெரியவில்லை.

    உடைந்த கண்ணாடி பீங்கான்கள் கையை குத்தினாலும் கருத்தில் கொள்ளாதவள் அனைத்தையும் கூட்டி சுத்தம் செய்து விட்டு வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து விட்டு அறைக்கா செல்வதை மாடியில் இருந்தவன் கவனிக்க தவறவில்லை.

    யாரும் இல்லா தனிமரமாய் இருந்தாலும் அழுது கொண்டே வரும் அனையை சிரிப்போடு வரவேற்கவே சமத்து பிள்ளையாய் தொட்டிலில் கிடந்தான் விஷ்வா வர்தன்.

    அவன் இத்தனை நேரமும் அழாமல் இருந்ததே தாயவளுக்கு பெரிய உதவி தான்.கள்ளமில்லா பிஞ்சு முகத்தை கண்டதும் பட்ட துன்பமெல்லாம் பறந்தோடி போக பிள்ளையை தூக்கி கொண்டாள் மேனகா.

    உறங்காது எவ்வளவு நேரம் விழித்திருந்தாளோ அவளே அறியாள் விடியும் வரையிலும் அவள் கண் மூடவில்லை இரவு முழுவதும் குட்டி பையனை இறுக்கி அணைத்தபடி அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

    காலையில் கண்விழித்து விஷ்வா கீழிறங்கி வர அவள் அறை இன்னும் திறந்திருக்கவில்லை நாட்டியம் கற்று கொள்ள வந்த மாணவர்கள் அனைவரும் திரும்பி செல்வதை கண்ட விஷ்வா யோசனையாய் ஒரு மாணவியை அழைத்தான்.

    ஹே பாப்பா இங்க வா..ஏன் எல்லாரும் திரும்பி போறிங்க உங்க டீச்சர் இன்னைக்கு லீவா..

    இல்ல அங்கிள் டீச்சருக்கு உடம்பு சரியில்ல அதான் நாங்க எல்லாரும் திரும்பி போறோம் என்ற சிறுமி ஓடிவிட.. அவளுக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கும் எனக்கு பயந்துக்கிட்டே பொய் சொல்லியிருப்பா நடிப்பு காரி மனதில் அவளை வஞ்சிக்கொண்டே அறைக்கதவை தட்டினான் விஷ்வா.

    ஏய் மேனகா கதவை திறடி.. வந்து டீ போட்டு கொடு உன்னால நைட் வேற சாப்பிடல இப்போ நீ கதவை திறக்கல உடைச்சிக்கிட்டு உள்ளே வருவேன் அவன் கத்தி கொண்டிருக்கும் போதே வெளி வந்தாள் மேனகா.

    இரவெல்லாம் விழித்திருந்ததில் விழிகள் இரத்த சிவப்பேறி கிடக்க காய்ச்சலால் உடல் அனலாய் கொதித்தது. கால்கள் கூட நடக்கமுடியாது நடுங்கிட மெல்ல நடத்தவள் கிட்சனுக்குள் சென்று அவனுக்கு டீ போட அவனோ டீவியை ஆன் செய்து அதில் லயித்து போனான்.

    டீயை போட்டு அவன் முன்னால் வைத்தவள் சமையலையும் செய்து விட்டு அறைக்குள் முடங்கி விட அவனுக்கு தான் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

    மீண்டும் அவள் அறைக்கதவை தட்ட கடுப்பாய் போனது அவளுக்கு.

    என்ன தான் வேணும் உங்களுக்கு.. எதுக்கு இப்படி என்ன சித்திரவதை பண்ணிட்டு இருக்கிங்க காய்ச்சலின் வீரியத்தில் மேனகா கத்தி விட அவள் சத்தத்தில் பயந்த குட்டி பையன் வீரிட்டு கத்த நெஞ்சு தூக்க வாரி போட்டது மேனகாவிற்கு.

    என்ன ஏதோ பேபி அழற சவுண்ட் கேக்குது காதை..தீட்டி கேட்டான் விஷ்வா.உன் ரூம்ல இருந்து தான் சவுண்ட் வருது தள்ளு உள்ளே நுழைய முயன்றவனை வழி மறித்து நின்றாள் மேனகா.

    என் ரூம்க்குள்ள வார வேலையெல்லாம் வச்சிக்காதிங்க முதல்ல வெளிய போங்க..அவன் அவளை ஒரு பொருட்டாக கூட எண்ணவில்லை ஏதோ பொம்மையை தூக்கி ஓரமாய் வைப்பதை போல அவளையும் தூக்கி ஓரு பக்கமாய் நிறுத்தி விட்டு உள்ளே நுழைய பாதி தூக்கத்தில் விழித்து அழுது கொண்டிருந்தான் விஷ்வா வர்தன்.

    இது யாரோட பேபி..மேனகாவை பார்த்து விஷ்வா கேட்க என் குழந்தை தான் அதுக்கென்ன என்றாள் திமிராய்.

    உன்னோட குழந்தையா அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவன் குட்டி பையனை தூக்க கொள்ள புதிதாய் தன்னை தூக்கியிருப்பவனை அழுகையை நிறுத்தி விட்டு மலங்க மலங்க விழித்து பார்த்தான் மேனகையின் புதல்வன்.

    விஷ்வாவும் கண்களை உருட்டி குட்டி பையனை பார்க்க மீண்டும் அழ ஆரம்பித்தான் வரு குட்டி.

    கொஞ்சம் வெளியே போறிங்கலா அவன் பசில கத்துறான் குழந்தையை விஷ்வா கையில் இருந்து வாங்கி கொண்டு மேனகா கெஞ்சலாய் கேட்க யோசனையில் மூழ்கிய படியே அறையை விட்டு வெளியேறினான் விஷ்வா.

    தொடரும்...

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 4

    இமைகள் இரண்டிலும் பாறாங்கல்லை கட்டி வைத்தை போல கணமாய் இருக்க விழிகளை திறக்க முயன்றும் முடியவில்லை..யாராரோ உரையாடும் ஓசையும் அதனிடையே குட்டி பையனின் அழுகுரலும் கேட்க கடினப்பட்டு கண்களை திறக்க முயன்றது தாய் மனம்.

    சுருக்கென்று கையில் எறும்பு கடித்ததை போன்ற உணர்வு சிறிது நேரத்தில் குட்டி பையனின் அழுகுரலும் நின்று போனது அவளுக்கு பரிட்சைய பட்ட கரமொன்று அவளது தலையை வருடி கொடுப்பதை போல தெரிய இந்த முறை கஷ்ட்டப்படாலும் கண்ணை திறந்து விட்டாள் மேனகா.

    மீனாட்சி அம்மா அவள் தலையை வருடி கொண்டிருக்க வெள்ளை கோட்டு போட்ட டாக்டர் ஒருவரிடம் விஷ்வா பேசிக்கொண்டிருந்தான் அவன் ஒற்றை கரத்தில் முயல் குட்டியை போல அடங்கி போய் வாயில் விரலை வைத்து சப்பி கொண்டு மிரள மிரள பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா வர்தன்.

    அந்த டாக்டர் பெண்மணி விஷ்வாவிடம் சில மருந்துகளை கொடுத்து விட்டு சென்றார் சற்று நேரத்தின் முன்பு கையில் எறும்பு கடித்த உணர்வு அனேகமாக அவர் போட்ட ஊசியாக தான் இருக்க கூடும் என்று நன்றாகவே புரிந்து கொண்டாள் மேனகா.

    என்ன பாப்பா இவ்வளவு காய்ச்சல் அடிக்கிது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல.. பையனுக்கு பால் கொடுத்து தூங்க போட்டவ அப்படியே மயங்கி விழுந்துட்ட நல்லவேளை விஷ்வா தம்பி வந்தாரு இல்லனா புள்ளை கத்தி கத்தியே விரைச்சு போய்ருப்பான் நீயும் மயக்கத்துலயே கிடந்திருப்ப மீனாட்சி அம்மா கடிந்து கொள்ள மேனகாவின் கண்கள் விஷ்வா மீது படிந்தது.

    அவள் பேச்சு பார்வையை புரிந்து கொண்ட மீனாட்சி அம்மாவோ சரி இருடா பாப்பா நா போய் உனக்கு கஞ்சி வச்சி எடுத்துட்டு வாரேன் நீ அது வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடு என அவளை எழுப்பி சாய்ந்து கொள்ள வாகாக தலையணையை வைத்து விட்டு வெளியேற மேனகாவின் அருகில் வந்து அமர்ந்தான் விஷ்வா .

    இருவருக்கும் என்ன பேசிக்கொள்வதென்றே  தெரியவில்லை எதுவும் தெரிந்து விட்டதோ..உண்மை தெரிந்தால் என்ன செய்வானோ என்ற பயம் அவளுல் அவளிடம் கேட்க வேண்டிய பல கேள்விகள் அவனுல்.

    கீழை குனிந்த படி அமர்ந்திருந்த  மேனகாவின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான் விஷ்வா.அவளோ அவன் புறம் திரும்பியதுமே விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.

    உண்மைய சொல்லு இவன் எ..என்னோட பையன் தானே முகத்திற்கு நேரே விஷ்வா கேட்ட கேள்விக்கு மூடிய விழி வழியே கசிந்த கண்ணீரே பதிலை சொல்லியது ஆம் என்று.

    மௌனம் உணர்திய பதிலில் உதிரம் கூட உறைந்து போனது ஆடவனுக்கு.தன்னையே உரித்து வைத்து பிறந்திருப்பவனை தன் மகன் என நிரூபிக்க டீஎன்ஏ சர்டிபிகேட் எதுவும் தேவை படவில்லை அவனுக்கு அவளின் ஒற்றை துளி கண்ணீரே சிறந்த சாட்சியாகி போய்விட வேறு சாட்சி தேவையா என்ன..

    அப்போ இந்த தாலி..அவள் முகத்தில் இருந்த பார்வையை அகற்றாமலேயே அவன் கேட்டு வைக்க குழந்தைக்காக எனக்கு நானே கட்டிக்கிட்டேன் கண்ணை திறக்காமலே அவளும் பதில் கூற துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு.

    எந்த இடத்தில் நிதானம் தவறினான் என்று அவனுக்கு இந்த நிமிடம் வரையிலும் நினைவில் இல்லை நினைவில் வைத்திருப்பவளால்  அதை கூற முடியவில்லை காதலித்து அவள் கைவிட்டு சென்ற நாட்களில் கூட அவன் இந்தளவுக்கு வேதனை கொள்ளவில்லை  சிறு பெண்ணின் வாழ்வை காதல் என்று பெயரில் நாசம் செய்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கி நின்றது அரக்கனவனுக்கு.

    ஒரு வருட காலத்தில் தான் இன்றி தனியே எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.அவளது மனம் தன் அருகாமைக்கு எவ்வளவு ஏங்கியிருக்கும்.எத்தனை வலிகளோடு என் பிள்ளையை சுமர்ந்திருப்பாள்..ஐயோ அவளே ஒரு குழந்தை தானே அளுக்கும் ஒரு குழந்தையா..?அவள் தான் வீட்டை விட்டு போனாள் நீயாவது தேடியிருந்தாள் அன்றே மேனகாவை கண்டு பிடித்திருக்கலாமே..ஒரு வருடத்தில் அவளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு விட்டாயே என அவனது மனசாட்சி கேள்வி கேட்க..மௌனம் மட்டுமே அவனில் நிலைத்திருந்தது.

    மலர்... இதுவரை இல்லாத மென்மையை குரலில் தேக்கி அவன் அழைக்க அதற்கு மேல் பொறுமை கொள்ள முடியாதவள் அவன் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் அவளுக்கும் காதலின் வலிகள் உண்டு அவளுக்கும் பிரிவின் வேதனை உண்டு.அவனை பிரிந்து ஊட்டி வந்த பின் தான் கருவுற்றிருப்தையே உணர்ந்தாள் அந்த நாட்களில் அவனின் அருகாமைக்கு எவ்வளவு ஏங்கி தவித்துபோனாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

    அவள் கர்ப்பமாக இருந்தது மட்டும் அவனுக்கு தெரிந்திருந்தால் தங்க தட்டில் வைத்து தாங்கியிருப்பான் விஷ்வா.கங்காரு குட்டியை சும்பதை போல என்னேரமும் அவளை கையில் சுமந்து கொண்டே சுற்றியிருப்பான்.

    காய்ச்சல் கண்ட உடம்பில் அழ கூட தெம்பு இல்லை.நேற்று அவளை தூற்றியவன் இன்று அவள் கண்ணீரை கண்டு துடிக்கின்றான்..நேற்று முதல் அவனை விலக்கி வைக்க எண்ணியவள் இன்று அவனிடமே ஆறுதல் தேடுகின்றாள் எல்லாம் இந்த பொல்லாத காதல் செய்யும் லீலை.

    சரிடா ஒன்னும் இல்ல ரிலாக்ஸ் அழதா மலர்...அவள் உச்சியில் இதழ் பதித்து மெதுவாய் முதுகை வருடி கொடுக்க கொஞ்சம் அழுகை மட்டு பட்டது அவளுக்கு.

    டேய் நானும் இங்கே தான்டா என்னையும் கொஞ்சம் ரெண்டு பேரும் கவனிங்கடா எனும் விதமாய் இத்தனை நேரம் அமைதியாய் இருந்த குட்டி விஷ்வா சினுங்க ஆரம்பித்தான்.

    பெரிய விஷ்வா சின்ன விஷ்வாவை மெதுவாய் தட்டிக்கொடுக்க தகப்பனவன் கரத்தினில் சுகமாய் உறங்கி போனான் சின்னவன்.

    கஞ்சி காய்ச்சி கொண்டு வந்த மீனாட்சி அம்மா வெளியே நின்று அறை கதவை தட்ட உள்ள வாங்கமா என்ற மேனகா விஷ்வாவின் அணைப்பில் இருந்து எழுந்து கொண்டாள்.

    கொடுங்க நானே கொடுக்குறேன் மீனாட்சி கையில் இறுந்த கஞ்சை பிடுங்கி கொண்டான் விஷ்வா.கிழவியோ திருதிருவென விழித்தபடி அங்கிருந்து சென்று விட்டது.

    அவள் மறுக்க மறுக்க அனைத்தையும் ஊட்டிவிட்டவன்  அவளை படுக்க வைத்து தானும் அருகில் படுத்து கொள்ள அவளுக்கு தான் அவஸ்தையாய் போனது .

    கேட்கபட வேண்டிய கேள்விகள் ஏராளம் தீர்க்க பட வேண்டிய சந்தேகங்களும் ஏராளம் அவள் காய்ச்சலில் இருந்தால் மட்டுமே அந்த இரக்கமற்றவன் இதழ்கள் பூட்டி கிடந்தன.

    குட்டி விஷ்வாவை நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவன் பாறாங்கல் புஜத்தில் தலைவைத்து படுத்து கொண்டாள் மேனகா.

    விஷ்வாவின் போன் அலற அதனை எடுத்தவன் ஸ்பீக்கரில் போட்டான்.தம்பி போன காரியம் என்னாச்சு எதாவது தகவல் கிடைச்சதா.. செக்யூரிட்டி மாணிக்கம் அந்த பக்கம் கேட்க விஷ்வாவோ மேனகாவை பார்த்தான்.. மாணிக்கத்தின் குரல் கேட்டதில் உடல் தூக்கி வாரி போட்டது மேனகாவிற்கு.

    அ..ப்..பா என மேனகாவின் இதழ்கள் முனுமுனுக்க..வந்து சொல்றேன் என்றதோடு போனை கட் பண்ணி விட்டான் விஷ்வா.

    ஆம் செக்யூரிட்டி மாணிக்கத்தின் மகள் தான் மேனகா மலர்விழி.விஷ்வாவின் பெற்றோர் அவன் சிறுவயதிலேயே கருத்து வேறுபாடினால் பிரிந்து தங்களுக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விஷ்வாவை தனித்து விட்டுவிட்டார்கள் விஷ்வாவை வளர்த்தெல்லாம் அவன் தாத்தா தான்.

    விஷ்வாவின் பதினேழு வயதில் தாத்தாவும் போய்விட மீண்டும் அவனது அன்னையும் தந்தையும் வந்து நின்றார்கள் சொத்தில் பங்கு கேட்டு தாத்தாவின் வளர்ப்பில் இனிமையாய் இருந்தவன் அன்று தான் இரக்கமற்றவனாய் மாறி போனான் பெற்றோர் என்றும் பாராது அவர்களை அடித்து விரட்டினான்.

    பெற்றோரையே அடித்து துரத்தியதால் அவன் அருகில் வரவே யாராய் இருந்தாலும் அஞ்சி நடுங்கினார்கள் அந்த நேரம் பார்த்து அங்கு செக்யூரிட்டி வேலையில் இருந்து மாணிக்கத்தின் மனைவி இறந்து விட அவரின் எட்டு வயதான மகள் மேனகா மலர் விழியையும் விஷ்வாவிடம் சொல்லிக்கொண்டு தன்னோடே வைத்து கொண்டார்.

    தாய் இறந்த சோகத்தில் மேனகா தனிமையில் வாட அந்தந்த வேதனையை விஷ்வாவினாலும் உணர முடிந்தது .

    தனிமையில் இருந்த மேனகாவை பேசி பேசியே தேற்றியது விஷ்வாதான்.அனைவருக்கும் விஷ்வா ஒரு அரக்கன் கொடுங்கோலன் ஆனால் மேனகாவிற்கு மட்டும் அவன் விச்சு மாமா.எத்தனையோ தடவை மாணிக்கம் மேனகாவை மிரட்டியிருக்கிறார் விஷ்வா நமக்கு சம்பளம் தரும் முதலாளி அவனை விச்சு மாமா என்று கூப்பிட வேண்டாம் என்று.. அவளுக்கு அப்படி தானே வாயில் வந்து தொலைக்கிறது என்ன செய்ய.

    விஷ்வாவிடம் சொல்ல..உனக்கு எப்படி புடிக்கிதோ அப்படியே கூப்பிடு மலர் என்று முடித்து விடுவான்.டீவியில் போகும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ஆர்வ கோளாறில் தையா தக்கா என்று வீட்டில் குதித்து கொண்டிருந்தவளை நடனம் பயில அனுப்பியதே விஷ்வாதான்.

    நாட்டிய கால்களுக்கு தங்க கொலுசு போட்டு அழகு பார்த்தான்.அவளை பாடசாலைக்கு அனுப்பி அழகு பார்த்தான்அவள் நாட்டியம் பயின்று முடித்ததும் அரங்கேற்றம் செய்தான்.அவனின் மூர்க்க குணம் எப்பொழுதும் அவள் காலடியில் மண்டியிட்டு தான் கிடக்கும்.பால்ய வயதில் அவள் மேல் துளிர்த்த நேசம் அவளின் பருவ வயதில் காதலாய் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

    அவளுக்கும் அப்படி தான் ஊர் பெண்களின் அத்தனை பேரும் விஷ்வா பின்னால் சுத்த விஷ்வாவோ தன் மேல் காதல் கொண்டதில் அவளுக்கு சிறு கர்வமும் கூட உண்டு.

    நாட்கள் காதலுடன் இனிமையாய் நகர அவர்கள் இணைவுக்கான நாளும் பிரிவிற்குமான நாளும் வந்து தொலைத்தது.

    அன்று தான் மேனகாவிற்கு பத்தொன்பதாம் வயது பிறந்த நாள் அதனை சிறப்பிக்கும் முகமாக பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் விஷ்வா.

    சிவப்பு வண்ண லெஹெங்காவை உடுத்தி கண்ணாடி முன் நின்று தன்னையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள் மேனகா..விச்சு மாமா செலெக்ட் பண்ற டிரஸ் எப்பவும் நமக்கு நல்லா தான் இருக்கும்..மாமனை மெச்சியவளை பின்னிருந்து அணைத்த அவள் மாமன்காரனோ கன்னத்தோடு கன்னம் இழைந்துபடியே அழகிடி நீ..மேனகையே தோத்து போய்டுவா என்னோட மேனகா கிட்ட..

    குடிச்சிருங்கிங்களா மாமா..பேச்சிலேயே கணித்து விட்டாள் அவன் குடித்திருக்கிறான் என்பதை.

    லைட்டா குடிச்சிருக்கேன் மலர் அதுக்கு ஏன்டி இப்படி தள்ளி போற கிட்ட வா ஐ வான்ட் டூ ஹக் யூ என கிறக்கமாய் அவள் அருகில் வர..தள்ளி போங்க மாமா குடிக்க வேணானு எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்குறதே இல்ல..அவனை முறைத்து வைத்தாள் காரிகை.

    இன்னைக்கு மை டார்லிங் பர்த் டே எப்படி குடிக்காம இருக்க முடியும் அதான் கொஞ்சமா குடிச்சேன் நீ ஒன்னும் கவலை படாத பேபி மாமா ஸ்ட்டடியா தான் இருக்கேன் கிட்ட வாடி என அவளை அருகில் இழுத்து அவளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகளை போட்டு விட ஆரம்பித்தான்.

    தொடரும்....

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 5

    இப்போ தான்டி சக்கரை கட்டி தேவதை மாதிரி அழகா இருக்க..நறுக்கென்று அவள் மாதுளை கன்னத்தில் கடித்து வைத்தது காதல் கொண்ட அணிலொன்று.

    சார் எல்லாரும் வெய்ட் பண்றாங்க ஷியாம் கதவை தட்டி சொல்லி விட்டு போக சிவப்பு நிற சின்ட்ரெல்லா பொம்மையுடன் கைக்கோர்த்து நடந்து வந்தா ஆறடி அரக்கன் கண்ணாடி படிகளின் வழியே .

    பல பேரின் கண்கள் அந்த ஜோடியின் மீது பொறாமையாக படிந்தது அதிலும் குறிப்பாக மேனகாவின் மீது .அத்தனை பிஸ்னஸ் மேன்களின் மகள்கள் வரிசையில் நிற்கிறார்கள் அந்த அழகனுக்காக அவனுக்கோ இந்த பேரழகி மீதல்லவா காதல் வந்துள்ளது சாதரண வாட்ச்மென் மகளுக்கு வந்த வாழ்வை பாரு என பல பெண்களுக்கு மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது அதனை கொஞ்சம் சத்தமாக சொல்லி விட்டாலும் அந்த பாம்பு காதனுக்கு மூக்கு வேர்த்து விடுமே.

    இதய வடிவ கேக் கொண்டு வர பட மேனகா அதனை கட் செய்து முதலில் விஷ்வாவிற்கு ஊட்டி விட்டாள் பின்னர் மாணிக்கத்திற்கு ஊட்டி விட்டவள் தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்..நூறு வருஷம் நீ ஆசைப்பட்ட வாழ்க்கையோடு சந்தோஷமா இருமா என ஆசிர்வதித்தார் தந்தையானவர்.

    விஷ்வா எத்தனை முறை சொல்லியும் மாணிக்கம் செக்யூரிட்டி வேலையை மட்டும் விடவில்லை மருமகன் வீடாகவே இருந்தாலும் உழைத்து சம்பளம் வாங்குவேன் என அவர் பிடிவாதமாய் இருந்து விட விஷ்வாவும் அப்படியே விட்டு விட்டான் அவரை.

    பார்ட்டி வீட்டு தோட்டத்தில் இரவு நேரம் நடந்து கொண்டிருந்ததால் நிறைய ஆண்களும் மது அருந்தி கொண்டிருந்தனர்.மேனகாவின் முறைப்பை பரிசாய் பெற்றுக்கொண்டு அவளின் விச்சு மாமாவும் மது அருந்தி கொண்டிருந்தான்.

    இவர திருத்தவே முடியாது நண்பர்களோடு உரையாடி கொண்டிருந்தவள் முனகி கொண்டே வீட்டுக்குள் செல்ல அவளை பின் தொடர்ந்து இரு சோடி கால்களும் சென்றன.

    கிச்சனுக்கு சென்ற மேனகா விஷ்வாவிற்காய் லெமன் ஜூஸ் போட்டு கொண்டிருக்க அங்கு போதையில் வந்து நின்றார்கள் இரண்டு ஆண்கள்.

    ஹே யார் நீங்க...இங்க என்ன பண்றிங்க பார்ட்டி வெளியே தானே நடக்குது உள்ள எதுக்கு வந்திங்க.. அவர்களை முறைத்து கொண்டே கேட்டவளை வக்கிரமாக பார்த்து வைத்தார்கள் அந்த இரண்டு ஆண்களும்.

    அவர்கள் பார்வையில் உடல் அருவருத்து போனவள் வேகமாக கிச்சனில் இருந்து வெளியேற போக இருவரும் வழி மறித்து நின்றார்கள்.

    எங்கமா போறே போய் அந்த பணக்காரன கூப்பிட போறியா நாங்களும் பணக்காரங்க தான் அந்த விஷ்வமித்ரேஷ்வரனுக்கு மாதிரி எங்களுக்கும் கம்பனி கொடு நீ ராணி மாதிரி வாழலாம்.

    பொறுக்கி நாய்ங்கலா யார்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறிங்க இது மட்டும் என் மாமாவுக்கு தெரிஞ்சது உங்கள வெட்டி போட்ருவாரு போங்கடா முதல்ல வெளிய..சீற்றமாய் கொந்தளித்தவளை ஏளனமாக பார்த்தார்கள் அவர்கள்.

    என்னமோ இந்த வீட்டுக்கு எஜமானி மாதி துள்ளுற வாட்ச்மென் பொண்ணு தானடி நீ ..சமையலறையில இருக்க வேண்டியவளுக்கு முதலாளியோட படுக்கையறை கேக்குதோ வாடி..என மேனகாவின் கைப்பிடித்து ஒருவன் இழுக்க அவன் கரம் துண்டாய் போனது.

    ஆஆஆ...அவன் கீழே விழுந்து துடித்து கொண்டிருந்தான்.

    அந்த காட்சியை கண்டு உறைந்து போய் சிலையாகி நின்றாள் மேனகா மலர்விழி..அவள் முகத்தில் தெறித்த குருதியில் இதயத்துடிப்பே நின்று போனது அவளுக்கு...அவள் முன்னால் ஆழிக்கும் கடவுள் போல உருத்திரனாக அவதாரம் எடுத்து நின்றான் ஈஷ்வரனின் பெயரை கொண்டவன்.

    இத்தனை வருடத்தில் மேனகா காணத முகம் ஈ எறும்பை கூட கொள்ளாதவள் முன்பாக ஒருவனின் கரத்தை துண்டாக்கி விட்ட காவலுக்கு செல்லும் ஐயனார் கணக்காய் வாள் பிடித்து நிற்கிறான்.

    எவ்வளவு தைரியம் இருந்தா என் கோட்டைக்குள்ளேயே வந்து ரெண்டு பேரும் என் பொண்டாட்டி கையை பிடிச்சு இழுப்ப ஹாங்.. தப்பு ரொம்ப தப்பு..பொண்ணுங்கள மதிக்க கத்துக்கணும் வாட்ச்மென் பொண்ணு கோட்டைக்கு ராணியாக கூடாதா அது என்னடா அவ்வளவு கேவலமா பேசுற என் செல்லத்த பத்தி..மீதம் இருந்தவன் தலையையே துண்டாக்கினான் விஷ்வா...

    நெஞ்சம் அடைத்தது மேனகாவிற்கு அந்த கோர காட்சியை கண்டு கண்ணை இருட்டி கொண்டு வந்தது அவளுக்கு.. அப்படியே மயங்கி விஷ்வா மீதே சரிந்தாள்.மயங்கி சரிந்த மலர் குவியலை கையில் ஏந்தியவன் தன் அறைக்கு சென்று அவளை மெத்தையில் கிடத்தி இரத்தம் தெறித்த அவள் முகத்தை துடைத்து விட்டான்.

    மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தவள் அவனை கண்டு மிரள மிரள விழித்தாள்..மாமாவ கண்டு ப..ய..ப.டுறியா குட்டி..மாமா எது செஞ்சாலும் அதுல ஒரு.. நியாயம் இருக்கும்..நீ பயபடாதம தூங்கு..என போர்வையை போர்த்தி விட்டு அவன் நகர... அவனின் கைப்பிடித்து தடுத்தாள் மேனகா..

    இங்கேயே இருங்க மாமா எனக்கு பயமா இருக்கு..சரிடா தூங்க நா பக்கதுத்து ரூம்ல தான் இருப்பேன் வெளியே வேணும்னா காவலுக்கு ஆள் வைக்கிறேன்..ம்ம் தூங்கு..

    இல்ல மாமா இங்கேயே இருங்க காவலுக்கு ஆள் யாரும் வேணாம்..குழந்தை போல அவள் அடம்பிடிக்க..

    சொன்னா புரிஞ்சிக்கோ பட்டு நா நிதானமா இல்ல நா என் கன்ட்ரோல்லயே இல்ல நீ பேசாம தூங்கு..போதையின் பிடியில் அவளிடம் எதுவும் அத்து மீறிட கூடாது என்று அவன் விலகி செல்ல முயல அடுத்த நொடி அவனை இழுத்து இதழோடு இதழ் சேர்த்திருந்தாள் பெண்மான்.

    உணர்வுகள் வெடித்து கிளம்ப தாக்கு பிடிக்க முடியாத ஆணவனோ பெண்ணவளை ஆட்கொண்டான்.கால நேரம்,காதல்,காதல் தந்த போதை என அனைத்தும் சதி செய்து காதலர்களை இணைத்து வைக்க அவன் ஆதிக்கத்தில் கண்ணீரோடு அடங்கி போனாள் மேனகையானவள்.

    விடியலில் கண்விழித்தவள் மாமன் பிடியில் இருந்து விலகி ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு காணமல் போய்விட்டாள் பார்ட்டி நடந்ததினால் காவலர்கள் யாரும் வீட்டில் இருக்காதது இன்னும் வசதியாய் போனது அவளுக்கு.

    காலையில் நேரம் கழித்து எழுந்த விஷ்வா தன் உயிரானவளை தேட அவனுக்கு கிடைத்ததோ அவள் எழுதி வைத்து விட்டு சென்ற கடதாசி தான்.

    என்ன மன்னிச்சிருங்க விஷ்வா உங்கள மாதிரி ஒரு அரக்கன் கூட என்னால வாழ முடியாது எல்லாரும் சொல்ற மாதிரி நீங்க ஒரு அரக்கன் தான்.என்னை தேடி வர முயற்சி பண்ணாதிங்க அப்படியே தேடி வந்தாலும் நா உங்களுக்கு கிடைக்க மாட்டேன்..அந்த கடிதத்தை படித்ததுமே காதல் கொண்ட மனம் சில்லு சில்லாய் உடைந்து போனது.

    மற்றவர்கள் அவனை அரக்கன்.. ராட்சசன் என்று சொல்லும் போது கூட அவன் பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை ஆனால் தன்னவளே தன்னை அப்படி கூறினால் எந்த காதலனால் தாங்க கொள்ள முடியும்.

    அவள் கூறியதை போல விஷ்வா அவளை தேட முனையவில்லை அதன் பின் தான் முழு அரக்கனாகவே மாறி போனான் மாது தந்த பிரிவின் வலியை மதுவில் போக்கி கொண்டான்.அவனது இந்த நிலைக்கு காரணமான மகளின் மீதே மாணிக்கத்திற்கு கோபம் வந்தது.

    அவளை மறக்க முயன்றும் தோற்று தான் போனான் உடலும் மனமும் அவனது மலரின் வாசம் வேண்டி ஏங்கி தவிக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவன் டிடெக்டிவ் ஏஜென்ட் யாதவ் அழைத்து மேனகாவை தேடி தரும் படி கட்டளையிட அவனும் பல நாள் முயற்சியின் பின்னர் அவள் ஊட்டியில் இருப்பதாய் தகவல் கொடுக்க பறந்து வந்து விட்டான் அவளை தேடி.

    விட்டுச்சென்ற பிரிவு கோபத்தை தூண்டிவிட அவளை காயப்படுத்துகிறேன் என்று ஒவ்வொரு முறையும் அவன் தான் காய்ப்பட்டு போனான்.அவன் கொஞ்சமும் எதிர் பார்க்காத ஒன்று குழந்தை பிறந்திருப்பது.

    இத்தனை காதலை அவன் மீது வைத்திருப்பவள் ஏன் பிரிந்து சென்றாள் என்பதற்கான உண்மை காரணத்தை அவளே வாயை திறந்து சொன்னால் தான் உண்டு.

    நீண்ட நேரம் இருந்த அணைப்பு இல்லாது போகவே சட்டென்று விழிப்பு தட்டியது மேனகாவிற்கு.எழுந்தவள் சுற்றும் முற்றும் தேட அங்கே இரண்டு விஷ்வாக்களையும் காணவில்லை..

    ஒரு நிமிடம் திடுக்கிட்டு போனாள் தாயானவள் எங்கே தன் மேல் உள்ள கோபத்தில் பெரிய விஷ்வா சின்ன விஷ்வாவை தூக்கி கொண்டு சென்று விட்டானோ என்று.

    இல்லை அப்படி இருக்க கூடாது என அவள் எண்ணி கொண்டிருக்கும் போதே குளியலறைக்குள் இருந்து குட்டி பையனின் அழுகுரல் கேட்க வேகமாக அங்கே ஓடினாள்.

    மீனாட்சி சொல்வதை கேட்டு தந்தையானவன் மகனை குளிப்பாட்டி கொண்டிருந்தான் காலில் போட்டு.விஷ்வா வர்தனோ தவளை குட்டியை போல பெரிய விஷ்வா காலில் குப்புற கிடக்க பார்த்து கொண்டிருந்து மேனகாவிற்கு சிரிப்பு வந்துவிட சத்தமாய் சிரித்தும் விட்டாள்.

    என்னடி சிரிக்கிற ஒரு நாளாச்சும் நீ இப்படி புள்ளைய குளிபாட்டி இருப்பியா பாரு தம்பி சொன்னதும் எப்படி குளிப்பாட்டுறாரு கற்பூர புத்தி கப்புனு புடிச்சிக்கிட்டாரு மீனாட்சி அம்மா பெரியவனுக்னு பாராட்டு பத்திரம் வாசிக்க உதட்டை சுழித்தாள் நாயகியானவள்.

    நா என்ன மாட்டேன்னா சொன்னேன் எனக்கு எப்படி குளிப்பாட்றதுனு தெரியல அதனால நா குளிப்பாட்டல அதான் தினமும் உங்க பேரன நீங்க குளிப்பாட்டுறிங்களே அப்பறம் எதுக்கு என்ன திட்டுறிங்கமா மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு அவள் சாதரணமாய் சொல்ல விஷ்வாவிற்கு தான் சங்கடமாய் போனது.

    அவள் கூறுவதும் உண்மை தானே பிள்ளையை பெற்று அதனை பார்த்து கொள்ளும் அளவு அவளுக்கு பக்குவம் இல்லையே.. எப்படி தான் இந்த ஒரு வருடமும் வாழ்ந்தாள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

    உனக்கு தான் இன்னும் உடம்பு சரியாகலயே அப்பறம் ஏன் தண்ணீல வந்து நிற்கிற போய் ரெஸ்ட் எடு உன் புள்ளைய நாங்க நல்லா தான் குளிப்பாட்டுவோம் அடிக்காத குறையாக மேனகாவை வெளியே தள்ளி குளியலறை கதவை சாத்திவிட்டு வந்தாள் மீனாட்சியம்மா.

    நீங்க செஞ்ச உதவிக்து எப்படி நன்றி சொல்றதுனே தெரியல குட்டி பையனை டவலால் துடைத்து கொண்டே விஷ்வா சொல்ல..அட எதுக்குப்பா நன்றினு பெரிய வார்த்தைலாம் சொல்ற அவளும் என் பொண்ணு மாதிரி தான் நீயும் என் மகன் மாதிரி தான் நன்றி சொல்லி என்னை பிரிச்சு பார்க்காதபா நா போய் சாம்பிராணி புகை போட்டு வைக்கிறேன் நீ இவன நல்லா துடைச்சு தூக்கிட்டு வா என மீனாட்சி வெளியே சென்று விட்டாள்.

    பையனை தூக்கி கொண்டு அறையில் இருந்து வெளியே போக போன விஷ்வாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மேனகா.

    பாக்குறத பாரு ஆள முழுங்குறத மாதிரியே உங்க அம்மா கூட சேராதடா உன்னையும் கெடுத்து விட்ருவா அவள் காது படவே சொல்லிச் சென்றான்.

    ஆமா இவரு கூட சேரு ஆஸ்கார் அவார்டு வாங்கிடலாம் சிறு ஊடல் கொண்டவளின் குரல் அவன் முதுகிற்கு பின்னால் கேட்கவே புன்முறுவலுடன் மகனை தூக்கி கொண்டு அவன் வெளியே சென்று விட மேனகாவின் மகிழ்ச்சியை கெடுக்கவே அவள் தொலைபேசி அலறியது.

    யாரென அவள் அதை எடுத்து பார்க்க திரையில் தெரிந்த நம்பரில் போனை பிடித்திருந்த அவளது கரம் தன்னால் நடுங்கியது.

    தொடரும்...

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 6

    எவ்வளவு சொன்னாலும் உனக்கு காது கேக்கவே கேக்காதா காய்ச்சல் சரியாகாம  எதுக்கு தலைக்கு தண்ணி ஊத்துன மேனகாவை கடிந்து கொண்டே அவள் தலையை துவட்டி விட்டார் மீனாட்சி அம்மா.

    ஏதேதோ யோசனைகளில் மூழ்கி போய் கிடந்தவளின் செவிகளில் அதெல்லாம் எங்கே விழுந்தது .அவளுக்கு வந்த தொலைபேசி அழைப்பிலேயே தான் அவள் மனது உழன்று கொண்டிருந்தது.

    அப்பனும் மகனும் நிலவை ரசித்து கொண்டிருந்தார்கள் மொட்டை மாடியில் நின்று.தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்ட  குட்டி விஷ்வா அவன் கைகளை விட்டு அசைவதே இல்லை பசி வந்தாள் மட்டும் தான் தாயின் நினைவு வருகிறது போலும் குட்டிக்கு.

    ஏம்மா மேனகா நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத நீ அந்த தம்பி கூட போறதுதான் நல்லது..உங்க ரெண்டு பேருக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் ரெண்டு பேரும் இப்படி பிரிஞ்சிருக்கிறது நல்லதில்ல கண்ணு புள்ளையோட எதிர் காலத்த நினைச்சு பாரு..இப்போவே ஒவ்வொருத்தன் கண்ணும் கழுகு மாதிரி உன்னையே சுத்தி சுத்தி வருது..புள்ளைய வச்சிக்கிட்டு தனியா எவ்வளவு தான் உன்னால போராட முடியும்.

    மகாராணி மாதிரியான  வாழ்க்கைய விட்டுட்டு இந்த வாடகை வீட்டுல குடியிருக்கியே பாப்பா..சரி உன்ன விடு அந்த தம்பிக்கு என்ன வேண்டுதலா இந்த வீட்டுல வந்து தங்கனும்னு எல்லாம் உனக்காக தானே..உம்மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா அந்த தம்பி இந்த வீட்டுல தங்கும்.

    நின்னா நடந்தா சேவகம் செய்ய ஆயிரம் பேர் இருக்கும் போது எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இங்கே இருக்கிறது உனக்காக மட்டும் தான்..அவரு கூட போயி சந்தோஷமா வாழு கண்ணு தாய்க்கேயுறிய கன்டிப்போடு மீனாட்சி அம்மா சொல்லி விட்டு செல்ல மேனகாவிற்கும் அது புரியத்தான் செய்தது.

    உண்மை தானே அவன் இருபத்தி ஒன்பது வருட வாழ்கையில் ஒரு நாளும் இந்த மாதிரி வீட்டில் தங்கியது இல்லை..ஏன் எட்டிக்கூட பார்த்தது இல்லை ஏசி இல்லாது உறங்கியது இல்லை.. பன்னீர் இல்லாது குளித்தது இல்லை அவ்வளவு ஏன் இந்த மாதிரி உணவுகளை கூட அவன் உண்டது இல்லை.

    இத்தனை தன் மேல் உள்ள காதலாலா நினைக்கையில் உள்ளம் குளிர்ந்து போனது பெண்ணவளுக்கே எதே சமயம் உள்ளம் துவண்டும் போனது அவன் காதலை கடைசிவரை அனுபவிக்க தனக்கு கொடுத்து வைக்கவில்லையோ என்று.

    யோசனையினூடே எழுந்து புடவையொன்றறை கட்ட போக அந்தோ பரிதாபம் அவளது புடவை அரக்கன் கரங்களில்.

    என்ன பண்றிங்க..பதறி போய் அவன் கரங்களில் உள்ள சேலையை பிடித்து இழுக்க முயல அந்த ஒற்றை கரத்தின் பலத்திற்கு தளிர் கரங்களால் ஈடு கொடுக்க முடியாது போகவே இழுத்த வேகத்தில் அவன் மார்பின் மீதே முட்டி நின்றாள் மேனகா.

    வழக்கம் போல காதல் காலை வாரி விட்டது தூரத்தில் அவனை பார்க்கையில் இருக்கின்ற தைரியம் அருகில் பார்த்தாள் அவளை அனாதையாய் விட்டு விட்டு ஓடி விடுகிறது.

    படபடக்கும் நெஞ்சோடு சிறகடிக்கும் இமைகளை விரித்து கருவிழிக்குள் அவனை இழுக்க முயன்றாளோ எனவோ கண்ணும் கண்ணும் கலந்து போனது..பெரியவர்களை பிரித்து விடுவதையே தன் கடமையாய் கொண்டு பிறப்பெடுத்திருப்பான் போல சின்னவன்.

    தந்தையின் தோளில் உறங்கி கொண்டிருந்த படியே அவனை உதைத்து கொண்டு சினுங்க மகனவன் சினுங்களில் நிகழ் உலகம் திரும்பினார்கள் அவனை பெற்றவர்கள்.

    சா..சாரிய...கொடுங்க தலையை குனிந்து கொண்டே அவள் கேட்க புடவை சுருட்டி மூலையில் தூக்கி போட்டவன் குட்டி விஷ்வாவை படுக்க வைத்து விட்டு வந்தான் காதலியவளருகில்.

    உனக்கு என்ன வயசாகிடுச்சுனு இப்போ சேலைய இழுத்து இழுத்து போத்திக்கிட்டு இருக்க எப்போ பாரு பாட்டி மாதிரி சேலை கட்டிக்கிட்டு உனக்கும் அந்த மீனாட்சி கிழவிக்கும் வித்தியாசமே தெரிய மாட்டேங்குது..அவன் கத்தி சொன்னதில்..

    வெளியே இருந்த மீனாட்சி கண்ணில் இரத்த கண்ணீரே வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இவன நல்லவன் வல்லவனு அவ கிட்ட பாராட்டு பத்திரம் வாசிச்சேன் என்னைய போய் கிழவினு சொல்லிட்டானே எனக்கு என்ன அவ்வளவா வயசாகிடுச்சு வெறும் அறுவது தானே ஆகுது அதுக்கு போய்..கடவுளே தலையில் கை வைத்து கொண்டே கிழவி அறைக்கு சென்று விட்டது.

    கோபோர்ட்டை திறந்தவன் முட்டிக்கும் கொஞ்சம் இறக்கமாய் உள்ள நீல நிற அழகிய கவுன் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்க சங்கடமாய் நெளிந்தாள் அவள்.

    அவன் கோட்டையில் இருக்கும் போது இந்த மாதிரி ஆடைகளை தான் அவளுக்கு அவன் வாங்கி தருவான் ஆனால் அப்போது நிலமை வேறு இப்போது நிலமை வேறு அல்லவா.

    என்னடி நெளிஞ்சிக்கிட்டு இருக்க ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லையா அவ்வளவு மோசமா ஒன்னும் இல்லையே நல்லா தானே இருக்கு சட்டையை முன்னும் பின்னும் திருப்பு பார்த்து ஒரு தடவை உறுதியும் செய்து கொண்டான்.

    அதுக்கில்ல குழந்தை பிறந்த அப்பறம் இந்த டிரஸ் போட்டா எல்லாரும் என்ன நினைப்பாங்க.. என்றாள் தயங்கி கொண்டே.

    யார் என்ன நினைச்சா நமக்கென்ன நாளைக்கு தான் நாம ஊருக்கு போய்டுவோமே அப்பறம் என்ன.. சட்டையை போட்டு விட்ட படியே அவன் சொல்ல சட்டென்று அவன் கையை தட்டி விட்டாள் மேனகா.

    ஊருக்கு போறதுனா நீங்க மட்டும் போங்க நா எங்கேயும் வரல.. என்றாள் விட்டேத்தியாக.

    ஏன் வரல புருவம் உயர்த்தி அவன் கேட்ட தோரனையில் அவளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே காட்டி கொள்ளாதவள் நா முன்னாடியே சொன்னது தான் ஒரு அரக்கன் கூட என்னால வாழ முடியாது நா அங்க வரவும் மாட்டேன்..

    வெல்.. நீ வர வேண்டா என் புள்ளைய கொடு நா போறேன் என்றான் வட்டி கடைக்காரன் போல கறாராக.

    அவன் இப்படி கேட்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை எங்கே தனக்கு துணையாய் இருக்கும் குழந்தையையும் பிரித்து விடுவானோ என்ற பயம் அவளை கவ்வி கொள்ள..

    எந்த உரிமைல அவன உங்க புள்ளைனு சொல்றிங்க நீங்க ஒன்னும் அவனோட அப்பா கிடையாது...மலர்ர்ர்...சொல்லி முடிக்கும் வேலையில் அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான் விஷ்வா.

    அவன் கையையும் அவனையும் நடுங்கிய கோழி குஞ்சாய் அவள் பார்த்திருக்க..அவள் மிரண்ட விழிகளை கண்டவன் ஓங்கிய கையை ஆத்திரம் தீரும் மட்டு சுவற்றில் குத்தினான் கை பிளந்து இரத்தம் கொட்ட அதனை கண்டவள் இதயத்திலும் உதிரம் சொட்டியது.

    ஐயோ விச்சு மாமா என்ன பண்றிங்க அவன் அருகில் வந்து கை பிடிக்க முனைய.. ஏய்ய்ய்..என கர்ஜித்தவன் அழுத்தமாய் தன் கேசத்தை கோதி கொண்டே ச்சே..போடி..அவளை உதறி தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

    சிறிது நேரம் மாடியில் எதையோ உருட்டும் சத்தம் கேட்டது.. அறைக்குள்ளேயே காலில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தவள் செவிகளில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு அடங்கிட இன்னும் வெடித்து அழ ஆரம்பித்தாள்.

    ஹெலிகாப்டர் சத்தமே உணர்த்தியது அவன் சென்று விட்டான் என..விடிய விடிய அழுது கரைந்தவள் வழக்கத்தை போல தூங்கம் தொலைத்தவள் அவன் நினைவிலேயே வெந்து கொண்டிருந்தாள்.

    மேனகா அம்மாடி..மேனகா கதவை திறமா எவ்வளவு பேர் தட்டுறேன் வெளியே இருந்து மீனாட்சி தட்டிக்கொண்டிருக்க பெருமூச்சு விட்டபடியே எழுந்து சென்று கதவை திறந்தாள் மேனகா.

    விடிஞ்சு இவ்வளவு நேரமாகியும் உள்ள என்ன பண்ணிட்டு இருந்த..அவளை ஒரு மாதிரியாக பார்த்து கேட்டார் மீனாட்சி..

    ஒன்னும் இல்லமா கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.. அதற்கு மேல் அவளிடம் பேச்சு இல்லை கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

    அது இருக்கட்டும் இன்னைக்கு கோவில்ல முருகன் திருக்கல்யாணம் நடக்குது வா போய் பார்த்துட்டு வருவோம்..ரொம்ப நாளா எனக்கும் பார்க்கனும்னு ஆசை இன்னைக்கு தான் அதுக்கு வாய்ப்பு அமைஞ்சிருக்கு வாடி ராசாத்தி போய்ட்டு வந்திருவோம் அவள் மறுக்க மறுக்க பேசி பேசியே அவளை சம்மதிக்க வைத்த மீனாட்சி பாட்டி அவளை தயார் செய்து கூட்டி கொண்டு வர மான்விழிகள் இரண்டும் மாடி அறையை மொய்த்தன.

    அங்க என்னத்த பாக்குற அந்த பையன் தான் ராத்திரியே ஊருக்கு போய்ட்டாரே ஏன் உன் கிட்ட சொல்லிட்டு போகலாயா என்றாள் மீனாட்சி அம்மா சந்தேகமாய்.

    எதுவும் சொல்லாத மேனகா ஆட்டோவில் ஏறி அமர மர்மமாய் சிரித்து கொண்ட மீனாட்சி அம்மா குட்டி விஷ்வாவை தூக்கி கொண்டு அவரும் ஆட்டோவில் ஏற அவர்களை ஆட்டோ ஒரு கோவிலில் இறக்கி விட்டு சென்றது.

    என்னமா கோவில்ல ஆட்களையே காணோம் என்றவள் அப்போது தான் தன்னையே தான் கவனித்தாள்.விஷ்வா நினைப்பில் இருந்தவளுக்கு மீனாட்சி செய்த அலங்காரங்கள் எதுவும் கருத்தில் பதியவில்லை.

    இப்போது பார்க்க மயில் வண்ண பட்டுடுத்தி தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு மணப்பெண் போல் அலங்கரிக்கபட்டிருக்க யோசனையாய் மீனாட்சியை பார்த்தாள் மேனகா.

    அங்க என்னத்த பாக்குற..நா தான் அப்படி பண்ண சொன்னேன் திடீரென்று கேட்ட சிம்ம குரலில் திடுக்கிட்டு மேனகா திரும்ப அடுத்த நொடி அரக்கன் கைகளில் தவழ்ந்திருந்தாள்.

    நீ வர மாட்டேன்னு சொன்னா விட்ருவேன்னு நினைச்சியா..நீ சொன்னதும் அடங்கி போக நா ஒன்னும் நல்லவன் இல்லையே சொல்லம் அரக்கன்.. எப்படி விட்டுட்டு போவேன்.

    அவளை கைகளில் ஏந்தி சென்றவன் உள்ளே இரக்கிவிட மேனகாவின் இதயம் விட்டு விட்டு துடிக்க குற்ற உணர்ச்சியில் தலையை குனிந்து கொண்டாள் அங்கே நின்ற மாணிக்கத்தை கண்டு.

    மீனாட்சி கையில் உள்ள குட்டி விஷ்வாவை வாங்கிய பெரிய விஷ்வா இவன் தான் உங்க பேரன்... இத்தனை நாளா உங்க பொண்ணு நமக்கே தெரியாம மறைச்சு வச்சிருக்கா மேனகாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து கொண்டே குட்டி பையனை மாணிக்கம் கையில் கொடுக்க ஆனந்த அதிர்ச்சியோடு பேரனை வாங்கி கொண்டார் அவர்.

    உதடுகள் துடிக்க தலையை குனிந்த படி நின்றவள் தோளின் மீது அழுத்தம் கொடுத்தான் விஷ்வா.. நிமிர்ந்து அவனை பார்க்க பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தவனை கண்டதுமே புரிந்து கொண்டாள் மேனகா அவன் தன்னை திருமணம் செய்ய போகின்றான் என்று.

    அங்கே ஷியாம், யாதவ் மாணிக்கம் மீனாட்சி அம்மா ஐயரை தவிர்த்து வேறு யாரும் இருக்கவில்லை அவர்களை தவிர்த்து அவனுக்கு வேறு யாரையும் தெரியவும் தெரியாது.

    வா..என அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றவன் மணமேடையில் அமர வைத்தான் மந்திரம் ஓதி ஐயர் தாலி எடுத்து கொடுக்க... அக்கினியை சாட்சியாய் வைத்து தன்வள் கழுத்தினில் பொற்தாலி பூட்டினான் மேனகையின் விஷ்வமித்ரேஷ்வரன்.

    தொடரும்...

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 7

    அனைத்து வழிகளும் மூடப்பட்டு விட்டன.இனி ஒன்றும் செய்ய இயலாது அவனோடு சென்று தான் ஆக வேண்டும்.

    என்ன உரிமை இருக்குனு கெட்டல்ல அதான் என் உரிமைய நிலைநாட்டுனேன் இப்போ உன் கிட்ட இருந்து என் புள்ளைய தூக்கிட்டு போக கூட என்னால முடியும் பெத்தவங்க அன்பு இல்லாம வளர்ந்த கொடுமை என்னோடயே போகட்டும் என் புள்ளைக்கு அது வேண்டா.. உனக்கு கடைசி வாய்ப்பு தாறேன் மலர் ஒழுங்கு மரியாதையா என் கூட வந்திரு இல்லனா இதுக்கு அப்பறம் நீ எங்கள பார்க்கவே முடியாது உன் அப்பாவையும் கூட்டிக்கிட்டு உன்னால கண்டே பிடிக்க முடியாத இடத்துக்கு போய்டுவேன் சொல்லியவனின் கண்களில் இறுந்த உறுதியே கூறாமல் கூறியது அவன் சொன்னதை செய்தே தீருவான் என்று.

    உனக்கு ஒரு நிமிஷம் தான் டைம் கார்ல வெய்ட் பண்றேன் வந்து சேரு..குட்டி விஷ்வாவை தூக்கி கொண்டு சென்று காரில் அமர்ந்து பார்வையை மட்டும் அவள் மீது பதித்திருந்தான் பெரிய விஷ்வா.

    கண்களை மூடி யோசித்தவள் காதில் பெத்தவங்க அன்பு இல்லாம வளர்ந்த கொடுமை என்னோட போகட்டும் என்று விஷ்வா கூறிய வார்த்தைகளே வந்து விழுந்திட தன் கழுத்தில் இருந்த பழைய தாலி தனக்கு தானே கட்டி கொண்ட அந்த தாலியை கலட்டி கோவில் உண்டியலில் போட்டு விட்டு காரில் விஷ்வா அருகில் அமர்ந்து கொண்டாள்.

    மீனாட்சியையும் கூடவே அழைத்து கொண்டான் விஷ்வா.அவரும் குட்டி பையனை விட்டு தனியே இருக்க முடியாது என்று  கூட வர சம்மதம் சொல்லி விட அவரின் வீட்டு பொறுப்பை ஏற்று கொண்டான் விஷ்வா.

    கார் சென்னையை நோக்கி செல்ல செல்ல மேனகாவின் உடலில் உதறல் ஆரம்பித்தது அருகில் இருந்தவனும் அதனை கண்டு கொண்டு தான் இருந்தான். குட்டி பையன் எந்த சேட்டையும் செய்யாமல் சமத்தாக உறங்க கொண்டிருக்க மனைவியின் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தான் இனி என்றும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்பதை போல.

    வண்ண புடவையில் தாய்மையின் பூரிப்பில் முன்பைவிட மெருகேறி போயிருந்தவளை பார்க்க பார்க்க திட்டவில்லை அவனுக்கு. இதழ் முத்திரையொன்றை அவள் பிறை நெற்றியில் பதிக்க அதன் வழியே அவன் காதலின் ஆழத்தை உணர்ந்தவள் அவன் கரத்தோடு கரத்தை பிணைத்து கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    கார்கள் கோட்டை வாசலை தாண்டி உள்ளே செல்ல மனைவியின் கைப்பிடித்து மகனை தூக்கி கொண்டு கம்பீரமாய் காரில் இருந்து இறங்கினான்  விஷ்வமித்ரேஷ்வரன்.

    சிறு நடுக்கத்தோடு அவனோடு நடந்தவள் விழிகள் தோட்டத்தை கண்டு படத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது.

    அங்கே ஒருவன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிய விஷ்வால் அடித்து தொங்க விட பட்டிருந்தான் அவன் தப்ப முடியாத வகையில் காவலர்கள் துப்பாகியை பிடித்து அவனை காவல் காத்தாலும் அவர்கள் முகம் பயத்தை அப்பட்டமாக எடுத்து காட்டியது.

    கால்கள் தள்ளாட விஷ்வாவின் கையை இறுக்க பற்றிக் கொண்டாள் மேனாக அவளின் கைப்பிடித்து அந்த ஒருவனிடம் அழைத்துச் சென்றான் விஷ்வா..

    அடி வாங்கிய அந்த ஒருவனோ மேனகாவை பார்த்து..என்ன மேனகா நா அவ்வளவு மிரட்டியும் திரும்ப வந்துட்ட போல.. அவ்வளவு காதலா இவன் மேல என்க பயத்தில் எச்சிலை விழுங்கி கொண்டே மேனகா விஷ்வாவை பார்க்க..விஷ்வா அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

    அவ உன்னோட அண்ணி அவ கிட்ட இந்த மாதிரி பேசுறத நிறுத்து இல்ல கூட பொறந்தவன்னு கூட பார்க்க மாட்டேன் வெட்டி போட்ருவேன்..கை முறுக்கி கொண்டு விஷ்வா செல்ல அவனை தடுத்து பிடித்து கொண்டாள் மேனகா.

    ஒரு வேலைக்காரிய நீ வேணும்னா பொண்டாட்டியா ஏத்துக்க..என்னாலயெல்லாம் அண்ணியா ஏத்துக்க முடியாது..அவன் பேச்சில் ஆத்திரம் பொங்க மீண்டும் விஷ்வா சீறிக்கொண்டு வர அவனோ என்னடா கை கால் கட்டியிருக்குங்கற தைரியாமா தில் இருந்தா கட்ட ரிமூவ் பண்ணிட்டு ஒத்தைக்கு ஒத்த வாடா..அண்ணனை தூண்டி விட்டான் தம்பி காரன்.

    ஆம் விஷ்வாவின் தம்பி தான் அவன்.. விக்ரம் ஆதித்யன். தாய் தந்தை பிரிந்ததில் அவன் மட்டும் தாயோடுயோடு சென்று விட்டான்.மறுமனம் செய்து கொண்ட தாயும் அவளது இரண்டாவது கணவனும் பிஞ்சிலேயே அவன் இதயத்தில் நஞ்சை விதைத்து வளர்த்தார்கள் விஷ்வாவிற்கு எதிராகவே.

    சொத்துக்கள் அத்தனையும் தாத்தா விஷ்வாவிற்கு கொடுத்து விட்டு விக்ரமிற்கு எதுவும் தராமல் துரத்தி விட்டதாய் அவன் மனதில் அண்ணனுக்கு எதிராகவே தூபம் போட்டு வைத்தார்கள்.

    அதன் பின்னர் தான் விஷ்வாவின் தந்தை ஒரு பக்கமும் தாய் ஒரு பக்கமும் வந்து விஷ்வாவிடம் சொத்து கேட்டு நிற்கு ஏற்கனவே அவர்கள் விவாகரத்து ஆகி பிரிந்த போதே தாத்தா சொத்தையும் சரிபங்காக பிரித்து கொடுத்திருந்தார் என்ற காரணத்தால் விஷ்வா மேலும் சொத்து கேட்டு வந்துவர்களை அடித்து துரத்தி விட்டான்.

    இதனையே பெரிய ஆயுதமாக கொண்ட விஷ்வாவின் அன்னை விக்கரமிடம் வந்து வத்தி வைத்தாள் விஷ்வாவிடம் உனக்காக பேச போய் என்னை அடித்து துரத்தி விட்டான் என நடக்காத ஒரு காரியத்தை சித்தரித்து கூறியதில் விக்ரமின் வன்மன் அண்ணன் மீது ஓங்க வளர்ந்தது விஷ்வாவிற்கும் விக்ரமிற்கும் இரண்டு வயது தான் வித்தியாசம்.

    தாத்தா இறந்த பின்பு படித்து கொண்டே மீதியிருந்த சொத்தை உழைத்து பண்மடங்காய்  உயர்த்தினான் விஷ்வா.அந்த நேரம் மேனகாவும் அந்த வீட்டுக்கு வர பரம்பரை சொத்தை வேலைகாரி அனுபவிக்க போகிறாள் என விக்ரமை இன்னும் தூண்டி விட்டார்கள் அவனின் தாயும் ,வளர்ப்பு தந்தையும்.

    அதன் பின் வந்த நாட்களில் விஷ்வாவின் வெற்றியை தடுப்பதையே விக்ரம் தன் முதற் குறிக்கோளாக கொண்டு விஷ்வாவின் தொழிலில் எவ்வளவு நஷ்ட்டத்தை ஏற்படுத்த முயன்றும் அதனை தூசி போல தட்டி விட்ட விஷ்வா தம்பி என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவனை இது வரை விட்டு வைத்தான்.

    ஆனால் தன் காதலையே தன்னிடம் இருந்து அவன் பிரிக்க முயன்று விட இனி தம்பி மீது இருந்த கொஞ்ச இரக்கமும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

    மாமா பிரச்சினை வேண்டாமே.. விஷ்வாவின் கைப்பிடித்து நிறுத்திய மேனகாவை கொஞ்சம் கண்டு கொள்ளாத விஷ்வா கண்ணை காட்ட காவலர்கள் இருவர் விக்ரமின் கட்டை அவிழ்த்து விட்டார்கள்.

    கட்டு அவிழ்க்கப்படதுமே விஷ்வா மீது பாய்ந்தான் விக்ரம்.இரண்டு எருமைகளும் அண்ணன் தம்பி என்பதை மறந்து எதிரிகளை போல கட்டி உருண்டு அடித்து கொண்டார்கள்.

    இருவரையும் விலக்கும் வழியறியாது மற்றவர்கள் கலங்கி போய் நிற்கு எதிரெதிராய் நின்ற இரண்டு எரிமலைகளின் இடையில் செல்லவே பயந்தார்கள் காவலர்கள் அனைவரும்.

    விஷ்வாவின் தாக்குதலை தம்பி காரனால் ரொம்ப நேரத்திற்கு தாக்கு பிடிக்க முடியவில்லை  சில நிமிடங்களில் அவன் தடுமாறி போக அந்த நேரம் அவனை புரட்டி தள்ளி அவன் நெஞ்சி மீது ஏறி அமர்ந்தான் விஷ்வா..

    நானும் தம்பியாச்சேனு உன்ன ஒவ்வொரு தடவையும் மன்னிச்சி விட்டா நீ மேனகாவையே மிரட்டி என்ன விட்டு போக வச்சிருக்க..அதுவும் நா அவள தேடி போனா என் கூட திரும்ப வர கூடாதுனு அவள மிரட்டியிருக்க..உன்னால தான்டா அவ ஒரு வருஷமா குழந்தையோட கஷ்டப்பட்ருக்கா..அப்பா அம்மா இல்லாம வளருற கஷ்ட்டம் என்னனு உனக்கு தெரியுமாடா..சொல்லு தெரியுமா..எனக்கு தெரியும்..மத்த பசங்கள அவங்க அம்மா சோறூட்டி தூங்க வைக்கும் போது..என் மனசும் அதுக்கு ஏங்கும்..

    பசங்க தப்பு பண்ணும்போது கன்டிச்சு அத அவங்க அப்பா திருத்தும் போது நானும் ஏங்கியிருக்கேன் நாம தப்பு செஞ்சாலும் நம்ப அப்பா அப்படி திருத்துவாரானு.அவ்வளவு ஏன் தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க..நீயாவது என் கூட இருந்தியாடா நா துவண்டு போகும் போது உனக்கு நான் இருக்கேன் அண்ணானு கூட இருந்தியா..அந்த பொம்பளை பேச்ச கேட்டு அது பின்னாடி தானே போன..சொத்துக்கு மட்டு உனக்கு அண்ணன் தேவை படுறானா..ஹாங் சொல்லுடா விக்ரம் முகத்தில் சமாரியாக குத்து விழுந்தது விஷ்வாவின் உபயத்தில்.

    எல்லாமுமா என் மலர் இருந்தாடா அவள போய் என் கிட்ட இருந்து பிரிக்க பார்த்தியே..உன்ன என்ன பண்ணலாம்..உயிரோட விடவே கூடாது தப்பு ரொம்ப தப்பு நீ மலர என்கிட்ட இருந்து பிரிக்க பாத்திருக்க கூடாது சாவுடா..என்ற விஷ்வா துப்பாக்கியை விக்ரம் நெத்தியில் வைக்த.. வேண்டாம் மாமா மேனகா ஓடிவரும் முன் துப்பாகியில் இருந்து புல்லட் வெளியேறியிருந்தது.

    டமால்.. என்ற சத்தம் கேட்டு பறவைக் கூட்டங்கள் பறந்து போக..ஐயோ தம்பி என்று மீனாட்சியின் சத்தம் கேட்டு திரும்பினான் விஷ்வா .அதிர்ச்சியில் மயங்கி சரிந்திருந்தாள் மேனகா.

    அவளை கைகளில் ஏந்தி கொண்டு தன் அறையில் சென்று கிடத்தியவன் ஏசியை ஆன் செய்து விட்டு மெதுவாக அவள் தலையை வருடி கொடுத்தான்.

    தண்ணீரை தொட்டு அவள் முகத்தை துடைத்து விட்ட மீனாட்சி குட்டி பையனை தூக்கி கொண்டு சென்று விட மெல்ல நேத்திரம் திறந்தவள்  விஷ்வாவை கண்டு மிரண்டு விழித்தாள்.

    அவளை ஆழ்ந்து நோக்கியவன் அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்..எங்கே தொடங்கினாலும் அவனின் தேடல் அவளில் தான் முழுமையடையும் அவளது அன்பும் அரவணைப்பும் வெகுவாகவே  தேவைப்பட்டது அந்த அரக்கனுக்கு.

    நீண்ட நாள் உறக்கம் இன்றி தவித்தவனுக்கு அவளது மடி சொர்கத்தை காட்டா கொஞ்ச நேரத்திலேயே கண்ணயர்ந்து போனான் அவன் தலையை கோதி கொடுத்த படி அமர்ந்திருந்தவள் நினைவுகள் ஒரு வருடத்திற்கு முன்னர் பார்ட்டி நடந்த நாளை நோக்கி சென்றது.

    பார்ட்டி நடந்து கொண்டிருந்த நேரம் மாமானுக்கு லெமென் ஜூஸ் போடுவதற்காக உள்ளே சென்ற மேனகாவை வழிமறித்து நின்றான் விக்ரம் ஆதித்யன்.

    ஏற்கனவே விக்ரமை மேனகாவிற்கு தெரியும் என்பதால் அவனை பார்த்து புன்னகைத்தாள் மேனகா அவனோ வீரப்பனை போல விரைப்பாய் நின்றான் அவளை முறைத்து கொண்டு..அவனை பார்த்து மேனகா நடுங்க எள்ளலாக சிரித்தவன்..

    இது தான் மேனகா நீ..நீ எப்பவும் எங்கள பார்த்து பயப்படுற இடத்துல தான் நீ இருக்கனும் அத விட்டுட்டு வேலைகாரி முதலாளியம்மாவாகி அதிகாரம் பண்ண நினைக்க கூடாது..உன்ன ஆரம்பத்துலயே அடக்கி ஒடுக்கி மூலைல வச்சிருந்த இன்னைக்கு இந்த அளவுக்கு வந்துருக்க மாட்ட..இப்பையும் ஒன்னும் கெட்டு போகல நீ என்ன பண்றனா உன்ன மாதிரி ஒரு அரக்கன் கூட என்னால வாழ முடியாதுனு ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடி போய்ரு..இல்லனா நா என்ன பண்ணுவேன் தெரியுமா கொஞ்சம் திரும்பி உன் மாமன பாரு என்க அவளும் வெளியே பேசிக்கொண்டிருந்த விஷ்வாவை எட்டி பார்த்தாள்..

    விஷ்வாவின் முதுகை குறிவைத்து ஸ்னைஃபர் துப்பாக்கி தயாராக இருந்தது.

    தொடரும்...

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 8

    அங்கே விக்ரம் காட்டிய திசையில் திரும்பி பார்த்த மேனகாவின் முகம் பயத்தில் வெளுத்து போனது துப்பாக்கி ஒன்று விஷ்வாவின் முதுகை குறிவைத்து இருப்பதை கண்டு.

    ப்ளீஸ் மாமாவ ஒன்னும் பண்ணிடாதிங்க..என் விக்ரமின் முன்னால் மேனகா கை குப்பி மன்றாடினாள்.

    நீ இந்த வீட்ட விட்டு போய்ட்டா அவன் உயருக்கு எந்த ஆபத்தும் வராது.. இன்னைக்கு ராத்திரியே வீட்டை விட்டு கிளம்புற வழிய பாரு எங்க தாத்தாவோட சொத்தை எவளோ அனுபவிக்க நா விட மாட்டேன்..என் பேச்சை மீறி இங்கே இருக்கும்னு நினைச்சா அதுக்கு அப்புறம் அஅணன்னு கூட பார்க்க மாட்டேன் அவன கொன்னு புதைச்சிடுவேன் விக்ரம் மிரட்டி விட்டு சென்ற பிறகுதான் இரண்டு பேர் வந்து அவளிடம் தப்பாக நடக்கு முயன்று விஷ்வா அவர்களை கொன்றதெல்லாம்.

    போதையில் தன்னிலை இழந்து அவளை ஆட்கொண்டான் அவளும் காதலோடு தன்னவனிடம் தன்னை தொலைத்து விட்டு விடியும் முன்னர் தனக்கு தேவையான துணிகளையும் கொஞ்சம் பணத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் உள்ளம் சுமந்த காதலுடன்.

    யாருக்கும் தெரியாமல் ஊட்டிக்கு வந்தவள்  மீனாட்சி வீட்டில் வாடகைக்கு தங்கினாள்..அங்கு உள்ள பிள்ளைகளுக்கு நாட்டியம் கற்று கொடுத்து காலத்தை தள்ளும் வேலையில் தான் கர்ப்பமாய் இருப்பதையே தெறிந்து கொண்டாள்.

    முறைப்படி கல்யாணம் ஆகவில்லை என்றாலும்.. காதலால் உண்டான கருவை கலைக்க எப்படி மனது வரும் ஊரார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டு நல் முறையில் அரக்கனின் வாரிசையும் பெற்றெடுத்தாள்.

    எல்லாம் நினைத்தவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை விஷ்வா எப்படி விக்ரமை பற்றி தெறிந்து கொண்டான் என்று.நேரம் போவதே தெரியாமல் உறங்கி கொண்டிருந்தான் விஷ்வா.. மீனாட்சி வந்து கதவை தட்டி இருவரையும் சாப்பிட அழைக்கவும்  தான் தூக்கத்தில் இருந்து எழுந்தான் விஷ்வா..

    இடுப்பு வலிக்க அமர்ந்த படியே உறங்கும் மீசை வைத்த குழந்தையை..இரசித்து கொண்டிருந்தாள் மேனகா.

    அவளை முறைத்து கொண்டே எழுந்தவனை பார்க்க வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறிடுச்சோ என்று தோன்றியது மேனகாவிற்கு.

    எ.. எதுக்கும் மாமா அப்படி பாக்குறிங்க எச்சிலை விழுங்கி கொண்டே அவனிடம் கேட்டு வைக்க விழிகளை உருட்டி அவளை பார்த்தவன்..அவன் மிரட்டுனா என்ன விட்டு போவியாடி...என்றிட மௌனமாய் தலையை குனிந்து கொண்டாள்..தலைய குனிஞ்சா என்ன அர்த்தம்..என்ன பார்த்து பதில சொல்லு அவன் கத்தலில் உடல் தூக்கி வாறி போட்டது அவளுக்கு..அது உங்கள கொன்றுவேன்னு மிரட்டுனாரு அதான் போய்ட்டேன்..

    யாரு அவன் என்ன கொல்ல போறானா நா குடிச்ச எச்சி பால குடிச்சி வளர்ந்த நாய் என்ன கொல்ல போவுதாக்கும்...இனிமே அவன் சொன்னான் இவன் சொன்னான்னு வீட்டு படிய தாண்டின கால வெட்டி போட்ருவேன்..

    ம்ஹும் போக மாட்டேன்..வேகமாக தலையாட்டி வைத்தவள் தன் அதி முக்கிய சந்தேகத்தையும் கேட்டு வைத்தாள்..

    மாமா அது எப்படி விக்ரம் தான்னு கண்டு பிடிச்சிங்க..

    அதுவா பொண்டாட்டி ஊட்டி வந்த போதே உன் போன ஹேக் பண்ணிட்டேன் உனக்கு வார கால் எல்லாம் என் போன்ல கேட்டேன் நா பையன தூக்கிட்டு வெளிய போனதும் விக்ரம் உனக்கு போன் பண்ணி..நா அவ்வளவு சொல்லியும் விஷ்வா கூட சேரந்துட்டியானு கேட்டதுமே தெரிஞ்சிடுச்சி எல்லாம் இவன் பார்த்த வேலை தான்னு அதான் ராவோட ராவா வந்து அவன தூக்கிட்டேன்ல என மீசையை முறுக்கி விட அந்த நேரத்தில் மானங்கெட்ட மனது வேட்டி சட்டையில் இருந்த மாமனை சைட் அடித்து தொலைக்க அதனையும் கண்டு கொண்டான் கள்வன்.

    சரி வா சாப்பிட போவோம்..பசிக்கிது அவளை அழைத்து கொண்டு கீழே செல்ல டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த ஒரு ஜீவனை கண்டு..இவன் இன்னும் இங்க என்ன பண்றான்..இவரு இன்னும் சாகலையா விஷ்வாவும் மேனகாவும் சம நேரத்தில் கத்தி விட அவர்களை முறைத்து பார்த்த விக்ரமோ சாப்பிடுவதில் குறியாய் இருந்தான்.

    மாமா நீங்க தான் அவர சூட் பண்ணிங்களே எப்படி உயிரோட.. விஷ்வாவின் கையை சுரண்டி மேனகா கேட்க நா எங்கடி அவன சூட் பண்ணேன் பிஸ்டல அவன் பக்கமா திருப்பிட்டு அப்பறமா மனசு மாறி தரையில தானே சுட்டேன் நீ தான் அதுக்குள்ள மயக்கடிச்சி விழுந்துட்ட என டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ள தயங்கிய படி நின்றாள் மேனகா..

    நீ ஏன் நிற்கிறே வந்து சாப்பிட..அவள் கைப்பிடித்து இழுத்து அமர வைத்த விஷ்வா அம்மா நீங்களும் சாப்பிடுங்க பரிமாறி கொண்டிருந்த மீனாட்சியையும் அமர வைத்தவன் உண்டு கொண்டிருந்த விக்ரமையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவனோ தட்டில் இருந்து தலையை நிமிர்த்தாமல் இருக்க..என்ன சொன்னாங்க உன் மம்மி டேடி..விக்ரமை பார்த்து விஷ்வா கேட்க..

    சட்டென்று பதில் வந்தது தம்பி காரனிடமிருந்து..அவங்க ஒன்னும் என்னோட மம்மி டேடி கிடையாது...

    சரி என்ன சொன்னாங்கனு சொல்லு..விஷ்வா அதே இடத்தில் வந்து நிற்க நடந்ததை கூற ஆரம்பித்தான் விக்ரம்.

    விஷ்வா தரையை சுட்ட சத்தத்தில் மயங்கி விழுந்த மேனகாவை அவன தூக்கி கொண்டு சென்று விட..அவன் தாய் தந்தை அன்புக்காக ஏங்கினேன் என்று கூறிய வார்த்தைகளே தம்பி காரன் காதில் ஒலித்து கொண்டிருந்தது.

     

    எழுந்தவன் கை காலை உதறித் கொண்டு தன் வீட்டிற்கு செல்ல நல்ல நேரம் தாயும் வளர்ப்பு தந்தையும் பேசிக்கொண்டிருந்ததை கேட்க நேரிட்டது.

    விக்ரமின் தாய் மாலினியிடம் ஏன் மாலி இன்னேரம் விஷ்வாவும் விக்ரமும் அடிச்சிக்கிட்டு செத்துருப்பாங்களா நேத்து விஷ்வா வந்து விக்ரம இழுத்துட்டு போனதா பார்த்தா எனக்கு அப்படி தான் தோனுது யாரு யார கொன்னாங்கனு தெரியலையே என்று அவன் சொல்லிட..

    யார் யார கொன்னா என்ன எவன் சாகுறானோ அவனோட சொத்த நாம எடுத்துக்க வேண்டிய தான்..அப்போவே அந்த விஷ்வா பயலையும் என் கூடவே கூட்டிட்டு வந்திருந்தா சொத்தையெல்லாம் புடுங்கிட்டு அன்னைக்கே இதுங்க ரெண்டையும் கொன்னு போட்ருக்கலாம்..விஷ்வா அந்த கெழவன் கூடவே ஒட்டிக்கிட்டதால தான் இவன மட்டும் கூட்டிக்கிட்டு வர வேண்டியதா போச்சு..நல்ல வேலை விஷ்வா அடிச்சு துரத்துனதுமே அவங்கப்பன் சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம்னு ஓடி போய்ட்டான் இல்லனா ரொம்ப கஷ்டமாகிருக்கும்.

    சின்னதுல இருந்தே விக்ரம் மனசுல விஷ்வா கெட்டவன் சொல்லி சொல்லி வளர்த்துருக்கேன்.. அவ்வளவு சீக்கிரத்தில விட்ருவேனா ரெண்டு பேரையும் கொன்னாவது சொத்தை அடைஞ்சிருவேன்..தாய் என்ற சிறு பாசமும் இல்லாமல் அவள் பேசிக்கொண்டே போக உள்ளுக்குள் கொதித்து போனான் விக்ரம்.தன் அண்ணனுக்கு எதிராக தன்னையே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றென்னும் போதே உள்ளம் துடித்தது.

    உயிரோட இருந்தா தானே ரெண்டு பேரையும் நீங்க கொல்லுவிங்க அதுக்கு முன்னாடியே ரெண்டு பேர் கதையவும் நா முடிக்கிறேன் என வந்து நின்ற விக்ரமை பார்த்து அவர்கள் அதிரும்போதே துப்பாக்கியை எடுத்து இருவரின் உயிரையும் எடுத்தான் விக்ரம்.

    நா உன்ன தப்பா நினைச்சிட்டேன் அவங்க சொன்னத நம்பி..விக்ரம் கலங்கிய விழிகளோடு கூறிய விக்ரமை ஆதரவாய் அணைத்து விடுவித்தான் விஷ்வா..நடந்த விஷயங்கள மறந்திடு இனி நாம எல்லோரும் ஒன்னா இருக்கலாம் என்று கூற அனைவருக்கும் உள்ளம் குளிர்ந்து போனது.

    குட்டி பையனோடு விளையாடி கொண்டிருந்தான் விஷ்வா தங்களது அறையில்..அப்பா மகன் அடிக்கும் லூட்டியை பொறாமை கலந்த ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்த தன் மலரானவளை இழுத்து கை வளைவில் இறுக்கி கொண்டான் முரட்டு பையன்.

    ஏன்டி மூஞ்சிய தூக்கி வச்சிருக்க மூஞ்சூறு மாதிரி.. வேண்டும் என்றே சீண்டினான் அவளை..ஏன் உங்களுக்கு தெரியாதா அவளும் எதிர் கேள்வி கேட்டு நின்றாள்..

    நல்லாவே தெரியுமே நீ போடுற மந்திரம் இந்த விஷ்வா கிட்ட எடுபடாது பொண்டாட்டி இன்னும் உனக்கு டூ மன்த்ஸ் தான் டைம்..குட்டி விஷ்வாவுக்கு சிக்ஸ் மன்த் ஆச்சுன்னா நீ ஃபீட் பண்ண வேண்டா வீட்டுல இத்தனை பேர் இருக்கோம் தானே நாங்க எல்லாரும் அவன பார்த்துக்குறோம் நீ காலேஜ் போற.. அவ்வளவு தான் டாட்.. இதுக்கு மேல எதுவும் பேச கூடாது நீ காலேஜ் போற..

    என்ன மாமா..நா எப்படி இப்போ காலேஜ்..போறது அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே அவள் கேட்க..இந்த மாதிரி கொஞ்சி கேட்டா மட்டும் விட்ருவேன்னு நினைச்சியா நீ காலேஜ் போறது போறது தான்..அவன் உறுதியாய் சொல்லி விட அதற்கு மேல் அவளும் எதுவும் கேட்கவில்லை.

    அண்ணா டேய் அண்ணா.. வேகமாய் கதவை தட்டினான் விக்ரம்.. மேனகா பதறி போய் கதவை திறக்க முப்பத்திரண்டு பற்களையும் காட்டி நின்றவன் சாரி அண்ணி என்றிட நெஞ்சில் கை வைத்து விட்டாள் மேனகா.

    என்னது அண்ணியா அதிர்ச்சி குறையாமல் பார்த்து நிற்க கொஞ்சம் வழி விடுறிங்களா அவளை விலக்கி விட்டு உள்ளே வந்தவன் சட்டென்று குட்டி பையனை தூக்கி கொண்டான். 

    டேய் என்னடா பண்ற எதுக்குடா விளையாடுறவன தூக்கிட்டு போற..போடா எனக்கு தனியா தூங்க முடியல இவன நா தூக்கிட்டு போறேன் பெரிய விஷ்வா கத்த கத்த..குட்டி விஷ்வாவை தூக்கி கொண்டு சென்றான் விக்ரம்.

    அவன் சென்றதும் குப்புற கவிழ்ந்து தலையணையை கட்டி கொண்டு படுத்திருந்த விஷ்வாவை முதுகில் தலையணை தூக்கி அடித்து விட்டு கீழே சென்று படுத்துக் கொண்டாள் மேனகா..

    சிறிது நேரத்தில் அந்தரத்தில் மிதப்பதை போல உணர்வு வர கண்ணை திறந்து பார்த்தவளை கையில் ஏந்திய படியே மயக்கும் விழிகளில் பொங்கி வழியும் தாபத்தோடு அவளது கண்ணாளன்.

    அவன் பார்வையிலேயே கண்ணம் சிவந்து போனாள் காரிகை.. சிவந்து போன கன்னங்களும் போதை ஏற்றியது அரக்கனை.

    நீண்ட நாள் பிரிவின் ஏக்கத்தை காதலோடு தீர்த்து கொண்டான் தளிர் மேனியாளிடம் அழகிய சங்கம் அரங்கேறிட அவன் ஆதிக்கத்தில் அடங்கி போனாள் ஆயந்தியானவள்.

    நல்ல உறக்கத்தில் இருந்த விக்ரமின் அறை ஜன்னலை திறந்து கொண்டு முக்காடிட்ட ஒரு உருவம் உள்ளே குதித்தது .

    அறையில் மிதமான வெளிச்சம் மட்டுமே இருக்க அடிமேல் அடி வைத்து அந்த உருவம் நடந்து செல்ல.. தூக்கத்தில் சினுங்கினான் குட்டி..அவன் சினுங்களில் விக்ரம் விழித்து கொள்ள சட்டென்று ஒளிய இடம் தேடினான் முக்காடிட்ட அந்த உருவம்..

    ஹே யாரது என்னோட ரூம்ல..பாய்ந்து போய் அந்த உருவத்தை பின்னால் இருந்து மடக்கி பிடித்தான் விக்ரம்.

    தொடரும்...

  • தீயில் விழுந்த மலரா..! பாகம் 9

    ன் அறைக்குள் நுழைந்த அந்த உருவத்தை பின்னால் இருந்து மடக்கி பிடித்தான் விக்ரம்..அந்த உருவமோ விக்ரமின் பிடியில் இருந்து திமிற ஆணவன் கரங்கள் எதையோ உணரந்து அந்த உருவத்தை விடுவித்த லைட்டை ஆன் செய்ய அறை முவதும் படர்ந்த வெளிச்சத்தில் முகத்தில் இருந்த முக்காடை விலக்கி விட்டு மூச்சு வாங்க அவனை முறைத்தபிட நின்றாள் பாவை ஒருத்தி.

    என்ன நம்ப ரூம்ல ஒரு பொண்ணு இருக்கு ஒரு வேளை மோகினியா இருக்குமோ.. விக்ரம் அந்த பெண்ணை சுற்றி வந்து ஒரு மார்க்கமாய் பார்த்தவன் கால் இருக்கிறாதா என்று பார்க்கிறேன் என சட்டென்று கீழே குனிந்த அவளது சுடிதாரை இழுக்க துள்ளி குதித்தாள் அவள்.

    யோவ் யோவ் என்ன பண்ற..ஒரு பொம்பள பிள்ளைய கண்ட மேனிக்கு கட்டி புடிச்சதும் இல்லாம சுடிதார வேற புடிச்சு இழுக்கிற..என்னைய மனுஷன் நீ..நுனி மூக்கு சிவக்க அவள் கத்தி கொண்டிருக்க..இரண்டு கரங்களையும் மார்புக்கு குறுக்கே கட்டி அவளை ஆழ்ந்து நோக்கினான் விக்ரம்.

    என்னையா அப்படி பாக்குற..தள்ளு முதல்ல..

    ஹெலோ முதல்ல நீ யார்னு சொல்றியா திருடி..நீயா என் ரூம்க்குள்ள வந்துட்டு என்னைய திட்றியா..

    ஹேய் யார திருடினு சொல்ற..நா வாசல் வழியா தான் வந்தேன்..அதான் வாசல்ல எருமை மாடு கணக்கா நாய் ஒன்ன கட்டி வச்சிருக்கிங்களே அதான் ஜன்னல் வழியா ஏறி வந்தேன்..ஆமா இது மேனகாவோட பேபி தானே தள்ளு..குட்டி விஷ்வாவின் அருகில் சென்று உறங்கும் குழந்தையை நெட்டி முறித்தாள் அவள்.

    இடியட் என்ன பண்ற தூங்குற குழந்தைய ரசிக்க கூடாது,திருஷ்டி கழிக்க கூடாது தெரியாதா உனக்கு வா இந்த பக்கம் அவள் கை பிடித்து இழுத்தவன்..சரி சொல்லு நீ யாரு..என்றான் அஸ்கி வாய்ஸில்.

    நா..நா மேனாகாவோட ஃபிரண்ட் வைஷாலி உங்க விஷ்வா சார் பீஏ ஷியாமோட சிஸ்டர்..மேனகா வந்திருக்கதா எங்க அண்ணன் சொன்னான் அதான் வந்தேன் சரி புருஷன் பொண்டாட்டி ரூம்க்குள்ள இந்த நேரம் எகிறி குதிக்கிறது தப்புனுது பக்கத்து ரூம்க்கு குதிச்சேன் இங்கே வந்து உன் கிட்ட மாட்டிக்கிட்டேன்.

    ஆமா நீ யாரு மேன் புது பீஸா இருக்க இதுக்கு முன்னாடி நா உன்ன இந்த வீட்டுல பார்த்ததே இல்லையே..யார் நீ.

    நானா விக்ரம் ஆதித்யன் விஷ்வாவோட பிரதர்..ஓஓ விஷ்வா சார் பிரதரா முதலில் சாதரணமாய் கேட்டவள் பின் அவன் கூறியது விளங்கி எதே விஷ்வா சார் பிரதரா...என அதிர்ந்து ஐயோ சாரி சார் நீங்க விஷ்வா சார் தம்பினு தெரியாம வார்த்தைக்கு வார்த்தை யா போட்டு பேசிட்டேன் சாரி என குழைந்து கொண்டே முடித்தாள்.

    முதல் சந்திப்பிலேயே விக்ரமின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் வைஷாலி..இது வரை எந்த ஒரு பெண்ணும் அவனை நெருங்கியதில்லை அவனும் எந்த ஒரு பெண்ணையும் நெருங்கியதில்லை..அனேக பெண்கள் அவன் அழகில் மயங்கி அவனை நெருங்க முயன்றாளும் அக்கினி பார்வையாலே அவர்களை தள்ளி நிருத்துபவன் இன்று திருட்டு தனமாய் வீட்டுக்குள் வந்தவளிடம் மதி மயங்கி நின்றான்.

    ஹெலோ சார் என்ன எதோ யோசனைல மூழ்கிட்டிங்க போல ஐம் ரியலி சாரி நீங்க விஷ்வா சார் பிரதர்னு..யம்மா தாயே மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத குட்டி எழுந்துட போறான்.

    அப்போ சரி நா போய் மேனகாவ பார்த்துட்டு வாறேன் என நகர்ந்தவளை மறுபடியும் இழுத்து பிடித்து நிறுத்தினான் விக்ரம்.

    லூசா நீ இந்த அன் டைம்ல ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரூம்க்குள்ள போறேன்னு சொல்ற..

    ஐயோ இப்போ இது வேரையா மேனகாவ பார்க்க வார ஆர்வத்துல டைம் கூட கண்ணுக்கு தெரியல.. இப்போ நா என்ன பண்ணுவேன் தூக்கம் வேற வருதே கொட்டாவி விட்டுக்கொண்டே அவள் புலம்ப..

    பேசாம என் கூட படுத்துக்கோயேன் விக்ரம் சட்டென்று சொல்லிவிட..ஹாங் என்ன சொன்னிங்க அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள் வைஷாலி..

    நீ பாப்பாவுக்கு அந்த பக்கம் படுத்துக்க நா இந்த பக்கம் படுத்துக்குறேன்..இந்த இருட்டுல உன்னால வீட்டுக்கும் போகவும் முடியாது.

    அவன் கூறியது சரியென்று பட்டாலும் ஒரு ஆடவன் அறையில் உறங்குவது அவளுக்கு சங்கடமாய் இருந்தது தயக்கமாய் நெளிந்து கொண்டிருக்க..

    உனக்கு நம்பிக்கை இல்லனா இந்தா என்னோட பிஸ்டல் வச்சிக்கோ நா எதாவது உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டா யோசிக்காம சூட் பண்ணிடு ஓக்கேவா என அவள் கையில் தன் பிஸ்டலை கொடுத்து விட்டு குட்டி விஷ்வாவின் ஒரு பக்கமாய் சென்று விக்ரம் படுத்து கொண்டான்.

    துப்பாக்கியையும் விக்ரமையும் மாறி மாறி பார்த்த வைஷாலி..குட்டி விஷ்வாவின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.

    காலையில் சீக்கிரமே எழுந்திட்ட மேனகா விஷ்வாவை பிடித்து நெம்பி கொண்டிருந்தாள்..

    மாமா..விச்சு மாமா..எழுப்ப எழுப்ப அவனோ புரண்டு படுத்துக்கொண்டான்.டேய் மாமா எழும்புடா..அவன் முதுகில் ஒரு அடி வைக்க சட்டென்று எழுந்து அமர்ந்தான் விஷ்வா.

    என்னது டேய் மாமா எழும்புடா மாமாவா.. அவ்வளவு தூரம் கொழுப்பு கூடி போச்சா உனக்கு..ஆமான்டா மாமா முதல்ல எழும்பி வந்து அங்க உன் தம்பி ரூம்ல நடக்குற கூத்தை பாரு நானும் எவ்வளவு நேரமா எழுப்பிட்டு இருக்கேன்.

    அங்க என்னடி கூத்து நடக்குது..வா என்னனு பாக்குறேன் என மேனகாவை கூட்டிக்கொண்டு விஷ்வா சென்று பார்க்க அங்கே குட்டி பையன் விக்ரம் கையில் தலை வைத்து படுத்திருக்க மறு பக்கம் அவன் நெஞ்சில் வைஷாலி படுத்திருந்தாள் அதுவும் அவள் காலை விக்ரம் மீது தூக்கி போட்டபடி அவள் கிடக்க விஷ்வாவிற்கும் மேனகாவிற்கும் ஒன்றுமே புரியவில்லை.

    டேய் விக்ரம்.. விக்ரம்..விஷ்வா கத்த விக்ரம் சார் உங்கள தான் யாரோ கூப்பிடுறாங்க தூக்கத்தில் அவனை இறுக்கி கொண்டே வைஷாலி சொல்ல மேனகாவிற்கு சிரிப்பு வந்துவிட சத்தமாய் சிரித்தும் விட்டாள்.

    விஷ்வா அவளை முறைத்து பார்க்க வைஷாலியும் விக்ரமும் அப்பொழுது தான் சிரிப்பு சத்தம் கேட்டு கண் விழித்தார்கள்..

    இங்கே என்ன பண்ற வைஷாலி விஷ்வா அழுத்தமாய் கேட்க..ஙேஏஏஏ.. உங்க தம்பி தான் சார் என்ன வர சொன்னாரு நானும் அவரும் ரொம்ப நாளா லவ் பண்றோம் என காலையிலேயே வாய் கூசாமல் பொய் சொல்லி அழுதவளை வித்தியாசமாய் பார்த்து வைத்தார்கள் அனைவரும்.

    எனக்கு என் தம்பிய பத்தியும் தெரியும் உன்னோட விளையாட்டு புத்தி பத்தியும் நல்லா தெரியும் மலர பார்க்க நைட் வந்திருப்ப இவன் உன்ன எங்க ரூம்க்கு போக விடாம தடுத்திருப்பான் அதனால இங்கேயே தூங்கிட்ட ரைட்..சரியாக கணித்த விஷ்வாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை விக்ரமால்.

    வைஷாலியோ சுற்றி முற்றி விட்டத்தை பார்க்க இங்கே கேமரா எதுவும் இல்ல என்றான் விஷ்வா அழுத்தமாய்.

    ஈஈஈ...முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி சிரித்தவள் மேனகாவோடு ஓடி விட தம்பி காரனை அழுத்தமாய் பார்த்து நின்றான் அண்ணங்காரன்.

    எதுக்குடா இப்படி என்னையே குறுகுறுனு பார்க்குற விக்ரம் கேட்க..நீ வைஷாலிய விரும்புறியா.. முகத்திற்கு நேரே கேட்டு விட்டான் விஷ்வா.

    விக்ரமின் மௌனமே அவன் பதிலை கூறிட சரி நா ஷியாம் கிட்டயும் வைஷாலி கிட்டேயும் பேசுறேன் நீ ஃப்ரீயா விடு..

    எனக்கு கூட சம்மதம் தான் வாசலில் இருந்து வைஷாலியின் குரல் கேட்க..நீ இன்னும் போகலையா விஷ்வா அதட்டினான் அவளை.

    இப்படியெல்லாம் மிரட்டாதிங்க பெரிய அத்தான் நா உங்க வீட்டுக்கு சின்ன மருமகளா வர போறவா பார்த்து பேசுங்க இல்லனா உங்க பொண்டாட்டிய நா கொடுமை படுத்துவேன் கண்களை உருட்டி விஷ்வாவை போலவே வைஷாலி பேசிய விதத்தில் விஷ்வாவே சிரித்து விட்டான்.

    வீட்டுக்கு போ நா வீட்ல வந்து பேசுறேன் என சிரித்து கொண்டே அவளை அனுப்பி வைக்க அவளோ போகும் போது விக்ரமை பார்த்து டிங் என கண்ணடித்து விட்டு செல்ல அவனுக்கு தான் வெட்கம் வந்து தொலைத்தது.

    இரண்டு வருடங்கள் கழித்து..

    சித்து இந்த திரஸ்ஸ போத்து விது...ஒரு சட்டையை போட்டு விட சொல்லி விக்ரம் முன்னால் வந்து நின்றான் குட்டி விஷ்வா.

    வாங்க மகனே இப்போ தான் உங்களுக்கு நேரம் கிடைச்சதா உங்களுக்கு..அவனை தூக்கி கொண்டவன் சட்டையை போட்டும் விட தம்பிபாப்பா எங்க என்றான் குட்டி விஷ்வா.

    தம்பி பாப்பா தானே அதோ பாரு சித்தி கூட வாறான் என வைஷாலி தூக்கி கொண்டு வந்த தன் ஒரு வயது மகனை வாங்கி விஷ்வா கூட விளையாட விட்டான் விக்ரம்.

    மேனகா கொடுத்திருந்த சாக்லேட்டை சரி பங்காக உடைத்து விக்ரம் வைஷாலியின் புதல்வன் ஆதிரனுக்கும் கொடுத்து அவனை அழைத்து கொண்டு மீனாட்சி பாட்டியிடம் ஓடினான் விஷ்வா வர்தன்.

    ஏய் லூசு நீ என்னடி இன்னும் ரெடியாகாம இருக்க பசங்க கூட ரெடியாகிட்டாங்க நீ என்ன இன்னும் நைட்டியோட உலாத்திட்டு இருக்க வைஷாலியை கடிந்து கொண்டான் விக்ரம்.

    ஏன் நீங்க வேணும்னா புடவை கட்டி என்ன ரெடி பண்ணுங்க..நா என்ன வெட்டியாவா இருந்தேன் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்.

    ஆமா நீ பிஸியா இருக்கும் லட்சணம் தான் எனக்கு தெரியுமே.. மீனாட்சி அம்மா கிட்ட வெட்டி கதை அளந்துட்டு இங்க வந்து பிஸினு பீட்ரு விடுற..வாய் அவளை திட்டினாலும் கரம் அவளுக்கு புடவை கட்டி விட தவரவில்லை.

    விஷ்வா மேனகா நேரமாச்சு எல்லாரும் வெய்ட் பண்றாங்க சீக்கிரமா கீழே வந்திடுங்க கதவை தட்டி மீனாட்சி சொல்லி விட்டு செல்ல மெதுவாய் அவள் கைப்பிடித்து அழைத்து வந்தான் விஷ்வா.

    வீடு விழாக்கோலம் பூண்டிருக்க ஏழு மாத தன் மேடிட்ட வயிற்றை பிடித்து கொண்டு அன்னமென நடந்து வந்தாள் மேனகா மலர்விழி.

    முதல் பிரசவத்தில் அவளுக்கு கிடைக்காத அத்தனை இன்பத்தையும் இரண்டாம் பிரசவத்திற்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த விஷ்வா சீமந்தம் நடத்த முடிவு செய்து அதை செயற் படுத்தியும் விட்டான்.

    மலர் விழியானவளை கதிரையில் அமர வைத்தவன் தானே அவளுக்கு முதல் நலுங்கு வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தான்.ஓரமாய் நின்ற மீனாட்சி அம்மா,மாணிக்கத்தையும் அழைத்து வந்து நலுங்கு வைக்க கூற அவர்களும் மகிழ்ந்து போய் மஞ்சள் சந்தனம் பூசி வளையல் போட்டு விட்டார்கள்.

    மேனகா கையில் தங்க வளையல்களை போட்டு விட்ட விக்ரமோ..அவள் முன்னால் மண்டியிட்டு..சாரி உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன் என்னால தான் வரு குட்டிக்கு இந்த மாதிரி சீமந்தம் பண்ண முடியாம போனிச்சு முழு மனதோடு அவன் மன்னிப்பு கேட்க.

    நீங்க அப்படி பண்ணதால தான் உங்க அம்மாவோட உண்மையான முகம் என்னனு தெரிஞ்சது..எது நடந்தாலும் நன்மைக்கேனு நினைக்கனும் என மேனகாவும் புன்னகைக்க இத்தனை நாளாய் விக்ரம் மனதில் இருந்த குற்றவுணர்ச்சி நீங்கியது.

    குட்டி விஷ்வா என்னேரமும் தம்பி தம்பி என்று ஆதிரனின் கைப்பிடித்து சுற்ற அவனும் அண்ணனை விட்டு ஒரு நொடியும் நகராது இருந்தான்.

    மற்றவர்களுக்கு எப்பொழுதும் போல அரக்கனாகவும் தன் குடும்பத்திற்கு நல்ல பொறுப்பான குடும்ப தலைவனாகவும் என்று விஷ்வா இருப்பான் என்ற மகிழ்ச்சியியோடு நாமும் விடைபெறுவோம் இந்த காதல் அரக்கர்களிடமிருந்து.

    நன்றிகள்.