அமிர்தத்தின் சாகரமே - இறுதி பகுதி
காதல் தொடர்கதை

பிரமாண்டமான அந்த திருமண மண்டபத்தில் விஐபிகள் உட்பட அனைத்து சொந்தங்களும் வந்து கொண்டிருக்க அவர்கள் அனைவரையும் மிகுந்த சிரத்தையோடும் அன்போடும் வரவேற்று கொண்டிருந்தான் சித்தார்த்.
நாழியாறது பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ அதே ஐயர் அதே மணவறை அதே மணப்பெண் மாப்பிள்ளையும் வசனமும் மட்டும் வேறு.
ஐயர் சொன்ன மந்திரங்களை தப்பு தப்பாக கூறி கொண்டிருந்தான் அமிர்த சாகரன்.ஐயோ சார்வால் மந்திரத்தை கொஞ்சம் சரியா சொல்றேலா எதுக்கு தப்பு தப்பா சொல்றேல்..ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத ஐயர் பொங்கி விட்டார் மாப்பிள்ளை பையனிடம்.
அவனுக்கோ அதெல்லாம் காதில் விழவில்லை..தன்னவளை தேடியே விழிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவன் நினைவு திரும்பிய நாளில் இருந்து அவன் கண்ணில் பட்டும் படாமலும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறாள் இரண்டு நாட்களாய்.தனிமையில் கன்னம் சிவந்து சிரிக்கிறாள் நாயகன் அருகில் சென்றால் மட்டும் பொய் கோபம் காட்டி இடை வெட்டி நடக்கின்றாள் நாயகியானவள்.ஏனென்று புரியாமல் ஹீரோ பையன் மண்டை காய்ந்து போகின்றான்.
மச்சினியிடம் சொல்லியனுப்பினால் அவள் அக்கா காரியை விட ஒருபடி மேலே சென்று கலாய்ப்பதில் உச்சி முடியும் நட்டுக் கொள்கிறது.
மனசோ இப்போ தந்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்
மத்தல டம் டம் மத்தல டம் டம்
திடீரென்று கேட்ட பாட்டு சத்தத்தில் கூட்டத்தில் ஒரு சல சலப்பு தன்னவள் நினைப்பில் இருந்த சாகரன் கூட நிமிர்ந்து பார்க்க அங்கே முதலில் ஆடிக்கொண்டு வந்தாள் மச்சினி பிரவளி.
அடுத்தடுத்து பெண்கள் ஆடிக்கொண்டு வர மயில் வண்ண பட்டுடுத்தி அன்னமென நடந்து வர வேண்டியவள் ஆனந்த களிப்பில் ஆடிக்கொண்டு வந்தாள்.
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆசபொண்ணுக்கு அட்சத டம் டம்
அட்சத டம் டம் அட்சத டம் டம்
ஆடிக் கொண்டே வந்த பிரவளி திடீரென்று மேடையேறி மாமன் காரனையும் இழுத்து வந்த ஆட வைத்திட திருமணத்திற்கு வந்த மொத்த கூட்டமும் வாயில் கை வைத்து அந்த கூத்தை கண்டது.
புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது
மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்...
சாகரன் அமிர்தா கையை பிடித்து ஆடிட வெக்கத்தில் கன்னம் சிவந்து போனாள் பாவை.
இவர்கள் முடிப்பதாய் தெரியவில்லை கடுப்பான ஐயரே மேடையில் இருந்து இறங்கி வந்து விட்டார்.
சார்வால் முதல்ல வந்து தாலிய கட்டுங்கோ கட்டி முடிச்சிண்ட அப்பறமா உம்ம பொம்மனாட்டி கூட சேர்ந்து பரதநாட்டியம்,குச்சுபுடி, கதகளி எல்லாம் ஆடலாம் முகூர்த்த நேரம் தவரிட்ட உங்க ஜாதக பலனுக்கு அடுத்த வருஷம் தான் கல்யாணம் நடக்கும்..என ஐயர் வாய்க்கு வந்ததை அடித்து விட இனி மேலும் சாகரன் அங்கே நிற்பானா என்ன..?
ஐயருக்கு முன்பாக அவன் பேபியை தூக்கி கொண்டு சென்றவன் மணமேடையில் அமர்ந்திருந்தான்.
கெட்டி மேளம் கெட்டி மேளம் என ஐயர் சொல்ல குணசேகரன் தாலியெடுத்து கொடுக்க..முழுகாதலுடன் பெண்ணவள் கழுத்தினில் பொற்தாலி கொடியை பூட்டினான் அமிர்த சாகரன் "அமிர்தாவின் சாகரன்".
மூன்று முறை அக்கினியை வளம் வர சொல்ல பொன் பாதங்கள் நோக கூடாது என எண்ணிய பேராண்மையோ பூங்கொடியை கையில் ஏந்தி கொண்டு அக்கினியை சுற்றி வந்தது.
அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற அனைத்திலும் இருவரும் உள்ளம் நிறைந்த காதலுடன் கலந்து கொண்டார்கள்.விருந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பொழுது சிறப்பாய் முடிய அமிர்தாவின் குடும்பத்தையும் தன் குடும்பமாய் எண்ண தன் மாளிகைக்கு அழைத்து வந்து விட்டான் சாகரன்.
மாலை மங்கிய நேரத்தில் தாய்க்கேயுறிய சில பல அறிவுரைகளை வாரி வழங்கி அமிர்தா கையில் பால் கிளாஸை கொடுத்து அனுப்பினாள் பார்வதி.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் மன்னவன் சாய்ந்திருக்க பால் கிளாஸை கொண்டு வந்து மேசை மீது தடார் என வைத்தவள் அவனை முறைத்துப் பார்த்து விட்டு கண்ணாடியின் முன் சென்று அமர்ந்து நகைகள் ஒவ்வொன்றையும் கலட்டி கொண்டிருக்க அங்கு ஒருவனுக்கோ மூக்கில் புகை வராத குறை தான்.
இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா திடீர்னு இவளுக்கு என்ன தான் வந்துச்சு.. மீண்டும் மண்டை குழம்பி போனான் சாகரன்.
அவன் பொறுமையோ கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்து கொண்டிருக்க கட்டிலில் இருந்து எழுந்தவன் வேகமாய் அவள் கையை பிடித்து இழுக்க பளார்ர்ர்.... மீண்டும் அவன் கன்னத்தில் அன்று போலவே இன்றும் பளார் வைத்திட ஐயோ என்றானது சாகரனுக்கு.
ஏன் பேபி சும்மா சும்மா அடிக்கிற.. கன்னத்தை தேய்த்து கொண்டே பாவமாய் கேட்டு வைத்தவனை முறைத்து பார்த்தவள்.
ஏன் நா அடிச்சது சாருக்கு ரொம்ப வலிக்கிதோ என்றாள் நக்கல் தொனியில்.
ஆமா ரொம்ப வலிக்கிது இதோ இங்கே என தன் இதயத்தை சுட்டி காட்டியவன்..நீ அடிக்கிறது கூட ஓக்கே இப்படி முகத்தை திருப்பிட்டு போனா நா என்ன பண்றது..கஷ்டமா இருக்கு என்று கட்டிலில் அமர.
அவன் வேதனை முகம் கண்டு மகராசி மனமிறங்கி வந்தாள்.
அவன் அருகில் அமர்ந்தவள் அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி கேட்டாள்.
ஆமா எப்போத்துல இருந்து என்ன லவ் பண்றிங்க சரண் என்றிட..அதுவா பேபி அன்னைக்கு நீ ஸ்கூட்டில வந்து மோதின பாரு அப்போத்துல இருந்து...ஸ்ஸ்ஆஆஆ
சொல்லி முடிக்கும் முன்னரே நறுக்கென்று அவன் கையில் கிள்ளி வைத்து விட்டாள்.
பொய் கார உண்மைய சொல்லுடா எப்போத்துல இருந்து லவ் பண்ற...மனைவியவளுக்கு கணவன் ஒருமையில் மாறி விட்டான்.
அவனோ திருட்டு முழி முழிக்க அவன் முன்னால் ஒரு டயரியை தூக்கி போட்டாள் அமிர்தா.
அந்த டயரியை பாய்ந்து எடுத்து நெஞ்சுக்குள் பதுக்கி கொண்டான் சாகரன்.அவனின் இனிமையான நினைவுகளை சுமந்த டயரி அது எந்த பக்கம் திருப்பினாலும் அவனின் பேபிடால் மட்டுமே நிறைந்திருப்பாள்.
அவனின் புன்னகை அவளுக்கும் தொற்றிக்கொள்ள பொய் கோபம் பறந்தோடி போக அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.மடியில் அமர்ந்தவளை ஒரு கையால் அணைத்தபடி மறு கையால் டயரியை புரட்டினான் சாகரன்.
முதல் பக்கத்திலேயே அழகியவளின் புகை படம் . பள்ளி சீருடையில் இரட்டை ஜடை ரோஜாவாய் மிளிர்ந்து கொண்டிருந்தாள் அமிர்த வர்ஷினி.
பேபி டால்.. மென்மையாய் உச்சரித்தன அவன் உதடுகள்.உன்ன முதல் முதலா இந்த ஸ்கூல்ல தான் பார்த்தேன் பேபி..அப்போ நீ டென்த் படிச்சிட்டு இருந்த..நா காலேஜ் போய் கிட்டு இருந்தேன்..உங்க ஸ்கூலுக்கு டொனேஷன் கொடுக்கிறதுக்காக நா வந்தேன்..அப்போ தான் உன்ன முதல் தடவையா பார்த்தேன்.
உன் ஸ்கூல்ல க்ளீனிங் வர்க் பாக்குற சாதரண ஒரு சர்வன்ட்..பசில மயங்கி விழுந்துட்டாங்க எல்லாரும் அவச்கள தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுட்டு கடந்து போய்ட்டாங்க அப்போ நா அவங்களுக்காக கேண்டின்ல சாப்பாடு வாங்கிட்டு வந்தேன் ஆனா அதுக்குள்ளே நீயே உன்னோட லன்ச்ச அவங்களுக்கு ஊட்டி விட்ட பாரு அந்த நேரம் இனம் புரியாத ஏதோ ஒன்னு என் மனசுல புகுந்துருச்சு என்றவன் அவள் முகத்தை பார்க்க.
அது ஏதோ அப்போ ஒரு மனிதாபிமானத்துல அப்படி செஞ்சேன் இதுக்காகெல்லாம் யாருக்காவது காதல் வருமா என்ன.. வேண்டும் என்றே அவனை சீண்டி பார்த்தாள் அமிர்தா.
வரும் அந்த மனிதாபிமானத்தை கண்டு தான் உன் மேல காதல வந்துச்சு பேபி.. அதுக்கு அப்புறம் உன்ன ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன் ராத்திரில உன் வீட்டு சுவரேறி குதிச்சு வந்து கூட தூங்குற உன்ன ரசிச்ச நாட்கள் ஏராளம்..அந்த நாள் நினைவுகளின் சிலாகித்து கூறியவனை அடப்பாவி என்று வாயில் கைவைத்து பார்த்தாள் மனைவியானவள்.
என்னடி வாய்ல கை வைக்கிற அப்போ நீ டயரிய முழுசா படிக்கலையா என்றான் சாகரன்.
நீ கோமால இருக்கும் போது இந்த டயரி கிடைச்சது புருஷா ஆனா எனக்கு படிக்க மனசே வரல..முதல் பக்கம் என் போட்டோ இருக்கத பார்த்தே தெரிஞ்சு போச்சு ரொம்ப நாளா நீ என்ன லவ் பண்ணிருக்கனு அதான் உன் வாயால கேட்கலாம்னு படிக்காம விட்டுட்டேன் என அசடு வழிய சிரித்து வைத்தாள்.
அப்பறம் எதுக்குடி அடிச்சிக்கிட்டே இருந்த..அதுவா நா அடிச்சா நீ என்ன பண்ற நா கோவமா இருந்தா நீ என்ன பண்றனு பார்க்க சும்மா ஒரு லுலாய்க்கு..என்றவளை முறைக்க முயன்று தோற்று போனான் முரட்டு பையன்.
சரி மேல சொல்லு அப்பறம் என்னாச்சு..
அப்பறம் என்னாச்சு அஞ்சாறு வருஷமா உனக்கே தெரியாம உன்ன ஃபாலோ பண்ணுவேன் சுவரேறி குதிப்பேன் அப்பப்பா திருட்டு தனமா உன்ன போட்டோ எடுத்து வச்சிப்பேன்.
அப்போவே என் லவ்வ உன் கிட்ட சொல்லாம்னு யோசிப்பேன் படிக்கிற பொண்ணு மனச கெடுக்க வேணாம்னு அமைதியாகிடுவேன்.அப்பறம் பிஸ்னஸ் விஷயமா நா ஃபாரின் போன டைம் தான் உனக்கு கல்யாணம் நிச்சயமாச்சுது..திரும்பி வந்ததுமே கவின போட்டு தள்ள கோபமா நா வந்திட்டு இருக்கும் போது தான் கார் பஞ்சர் ஆகி நீ வந்து என மோதி நீ தான்னு தெரியாம நா உன்ன பளார்னு அறைஞ்சு... நமக்குள்ள சம்திங் சம்திங் ஆகி போச்சு..
ஆனா அந்த கவின் நல்லவன் இல்லனு எனக்கு முன்னாடியே தெரியும்..அதனால தான் நா அவன வெளிய விடும் போது கூட வார்ன் பண்ணி வேற எந்த கம்பனிஸ்லயும் வேல செய்ய முடியாத படி கொஞ்ச நாளைக்கு அவன் சர்டிபிகேட்ல ப்ளாக் மார்க் பண்ணுனேன்.பட் அவன் நம்மல கொல பண்ற அளவுக்கு போவான்னு நா நினைக்கல என்றான் சாகரன் முகம் இறுகி போய்.
ஆமா பேபி எப்படி கண்டு பிடிச்ச நேஹனும் கவினும் தான் என ஆக்சிடன்ட் பண்ணுங்கன்னு என்றான் சாகரன் கேள்வியாய்.
நம்ம கார லாறி மோத வரும் போது நீங்க என்ன கீழ தள்ளி விட்டிங்கல்ல அப்போ தான் பார்த்தேன் சரன்... ஆக்சிடன் ஆனா இடத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு மரத்துக்கு பின்னாடி நேஹனும் கவினும் மறைஞ்சிருந்தத நா பார்த்தேன் ஆனா அப்போ எனக்கு புரியல சித்தார்த் நேஹன பத்தி சொல்லும் போதுதான் எல்லாம் புரிஞ்சது அதன் கவின நம்ம கம்பனிலயே சேர்த்து என் கண் பார்வைலயே வச்சிருந்தேன்.
ஆக்சிடன் ஆனத இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது என்றவளின் உடல் உண்மையில் நடுங்கி தான் போனது.
இதற்கு மேலும் பேச்சை வளர்க்க விரும்பாத காதல் ஜோடிகள் இனிதே தங்கள் இல்லற வாழ்வை ஆரம்பித்தன.
அமிர்தத்தை போல திகட்டாத காதலை இருவரது இதயமும் சாகரமாய் மாறி அளவில்லாது சேமித்து வைத்து கொள்ள அமிர்தத்தின் சாகரமாய் இருவரது வாழ்வும் இனிமை பெற்றது.
இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.
சுபம் ❤️
இக் கதையின் அனைத்து பாகங்களையும் பார்வையிட---
<<<<இவற்றையும் படியுங்கள் >>>>>