மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - பாடல் வரிகள்
கண்ணதாசன் பாடல்கள்
படம்:மன்மத லீலை
பாடல்ஆசிரியர்: கண்ணதாசன்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
ஆண் : இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
ஆண் : பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
ஆண் : கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
ஆண் : மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்