காதல்- கவிதை
கவிதை போட்டி இல :- 070

காதல்
**********காதலின் சுடரொளியே
கற்கண்டுச் சுவையமுதே
தித்திக்கும் தேன்சுவையே
தெவிட்டாத மொழியழகேமதுரச மாதங்கியே
மனதிற்குள் நிறைந்தவளே
விழியாலே காதல்செய்யும்
விண்ணக வெண்ணிலவேகாதோரம் கதைபேசி
களவாடினாயே உள்ளத்தை
தேடிய நிமிடங்கள்
தென்றலாய் வந்தாயேமூடிய விழிகளுக்குள்
மூன்றாம் பிறையானாய்
மூச்சுக்குள் கலந்துநீயும்
முழுநிலவாய்த் திகழ்கிறாய்மொய்க்கும் வண்டினங்கள்
மௌனராகம் பாடிடவே
எனக்குள் வந்தாயே
ஏழிசை கானமாகிகடலோடு முத்தமிட்டு
அலையவள் தவழ்வதுபோல்
மெல்லிடை மேனியிலே
மிதந்திடும் என்மனமேதுள்ளிவரும் உன்னழகில்
தூண்டிலது பாய்கிறதே
என்விழி வீச்சினிலே
எட்டியே தொட்டிடுவேன்பட்டுமேனிக் கதகதப்பு
பரவசம் பொங்கிடவே
தொட்டணைக்க நீயும்
தொடுவானம் ஆனாயே
நன்றி:- தயாளனி சிவநாதன்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>