வாழ்க்கை - கவிதை
கவிதை போட்டி இல :- 046

வாழ்க்கை
**************
"வாழ்க்கை எமக்குக்
கிடைத்த வரமே
நிறைவோடு வாழ்வது
நம்மோட திறனேகோடி ஆசைகள்
நெஞ்சிலே சுமந்து
அதைப் பெற்றிடப்
பலவழி புகுந்துஅயராது உழைத்து
துயர்களைத் துடைத்து
இடர்ப்படும் போதிலும்
பொறுத்தே நடந்துதளராது நாளும்
துணிவோடு வாழ்ந்து
காலத்தைக் களித்து
கரைந்து போகிறோம்வாழ்க்கை என்கிறோம்
வாழத் துடிக்கிறோம்
இறக்கும் வரையிலும்
இசைந்து கொடுக்கிறோம்"
நன்றி:- நதீரா வசூக்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>