ராட்சசியின் ரட்சகனே..! | தொடர்கதை

தொடர்கதை

Feb 4, 2025 - 20:54
Feb 8, 2025 - 05:38
 0  7
ராட்சசியின் ரட்சகனே..!    |  தொடர்கதை
  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 01

    ந்தைகளும் ஓநாயும் ஓலமிட்டு கொண்டிருந்த அந்த காட்டில் நள்ளிரவென்றும் பாராது இரண்டு ஜீவன்கள் காலடி எடுத்து வைத்தன.

    விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்திருந்த மரங்கள் பகல் நேரத்தில் கண்டாளே ஒரு வித பயத்தை உண்டு பண்ண ராத்திரியில் சொல்லவும் வேண்டுமா.நீண்டு வளர்ந்திருந்த மரங்களில் தலைகீழாக தொங்கி கொண்டிருந்த வௌவால்களின் கண்கள் சிவப்பு வண்ணத்தில் தகிக்க அதை கண்ட ஆணவன் உள்ளமோ நடுங்கி போனது.

    மெதுவாக தன் அருகில் இருந்த தன் தோழியை அஸ்கி வாய்ஸில் அழைத்தான் அவன்.

    ஹிரா.. அடியேய் ஹிரா உனக்கு வேற நேரமே கிடைக்கலையாடி காட்டுக்கு வர..நடு சாமத்துல ஒருத்தன இழுத்துட்டு வந்து இப்படி வௌவால் கிட்ட மாட்டி விடுறியே..

    வாய மூடிட்டு வாடா இல்லனா இங்கேயே விட்டுட்டு போய்டுவேன் வளர்ந்திருந்த செடிகளை விலக்கி கொண்டே முன்னால் சென்றாள் நண்பர்களால் ஹிரா என்றழைக்கப்படும் ஹிரண்யா.

    இவ கூட துணைக்கு வந்ததுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் தலையிலடித்துக் கொண்டே அவள் பின்னால் நடந்தான் அவளது தோழன் தீபக்.

    ஆமா காட்டுக்கு எதுக்கு வந்தோம்னாவது சொல்லேன்டி ராட்சசி..காரணமே சொல்லாம பேய் வாக்கிங் போற நேரத்துல நாம வாக்கிங் போய்க்கிட்டு இருக்கோம்..யப்பா மந்திர ராஜ குமாரா இந்த ராட்சசிக்கிட்ட இருந்து என்ன காப்பாத்தி விட்ரு உனக்கு கோடி புண்ணியமா போகும்..தலைக்கு மேல் கையை உயர்த்தி தீபக் பெரிய கும்பிடு போட்டு வைக்க..

    நடையை நிறுத்தி அவனை புருவம் சுருக்கி பார்த்தாள் ஹிரண்யா..

    என்னடி அப்படி பாக்குற மனசு மாறிடுச்சா  வா வீட்டுக்கு போவோம் என ஆர்வமாய் அவள் கையை பிடித்து இழுத்தான் தீபக்.

    ப்ச் அதெல்லாம் இல்ல.. இப்போ என்ன சொன்ன..

    வா வீட்டுக்கு போவோம்னு சொன்னேன்..

    அது இல்லடா அதுக்கு முன்னாடி என்ன சொன்னே...

    என்ன சொன்னேன்..மந்திர ராஜ குமாரா இந்த ராட்சசிக்கிட்ட இருந்து என்ன காப்பாத்தி விட்ருனு சொன்னேன் என்றான் தீபக் தோளை குழுக்கி...

    அந்த மந்திர ராஜ குமாரன தேடி தான் நாம இப்போ போறோம் என்றுவிட்டு ஹிரண்யா நடக்க தொடங்க கீழை உருண்டு பிரண்டு விழுந்தடித்து சிரித்து கொண்டிருந்தான் தீபக்.

    ஹாஹா...லூசா நீ மந்திர ராஜ குமாரன்னா சாதாரண மனுஷன்னு நினைச்சியா..அவரு யார் தெரியுமா மாயாஜாலம் பண்றவரு பல வருஷத்துக்கு முன்னாடி மாயாஜால உலகுக்கே ராஜா குமாரனா இருந்தவரு பாவம் அவர் சாவுதான் ரொம்ப கொடூரமா இருந்துச்சாம் எங்க பாட்டி கதை கதையா சொல்லும் இந்த காட்ட பத்தியும் அந்த ராஜ குமாரன பத்தியும்.

    இந்த காட்டுல தான் அந்த ராஜ குமாரனோட ஆத்மா சுத்திட்டு இருக்கதாகவும் அவரோட சமாதி கூட இங்கே இருக்கதாகவும் நிறைய பேர் சொல்லி கேள்வி பட்ருக்கேன் என்றவன் சற்று பேச்சை நிறுத்தி ஹிரண்யாவை பார்த்து கேட்டான்.

    நீ..நீ அந்த சமாதிய தேடி எதுவும் வரலையே ஹிரா...

    சத்தியமா சமாதிய தேடி தான் வந்திருக்கேன் தீபக்..நீ அந்த ராஜ குமாரன பத்தி சொல்லு..கதை கேட்க ஆர்வமாய் தரையில் அமர்ந்து விட்டாள் அவள்.

    என்னடி சொல்ற நீ ஏதோ ரிசர்ச் பண்றனு நா நினைச்சிருந்தா பேய் பிசாச பத்தியா ரிசர்ச் பண்ற.. தலையில் கையை வைத்து விட்டான் பையன்.

    ஆராய்ச்சி செய்கின்றேன் என்று பட்டினத்தில் இருந்து கிராமத்திற்கு வந்து தேரை இழுத்து தெருவில் அல்லவா விடுகின்றாள் சாதாரண விஷயமா அவள் செய்வது.ஊரில் ஆறு மணி தொட்டால் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை குறிப்பாக குமரி பெண்கள்.மந்திர குமாரனின் ஆத்மா பெண்களை பிடித்து கொண்டு சென்று விடும் என்று அத்தனை பயம் மக்களுக்கு.

    இவள் என்னடா என்றால் அவன் சமாதியையே தேடுகிறேன் என்கிறாள்.நிச்சையமாய் தீபக்கின் பேச்சை ஹிரண்யா கேக்க மாட்டாள் என்பதை தீபக்கே அறிவான்.நினைத்ததை அடம்பிடித்து  சாதிக்காமல் விட மாட்டாள்.

    இது ரொம்ப விபரீதம் ஹிரா வேண்டா..விட்ரு வா திரும்பி போவோம் சொல்லி புரிய வைக்க முயன்றான் நண்பனவன்.

    அசையாது அமர்ந்திருந்தாள் ஹிரண்யா.. ஆழ்ந்த மூச்செடுத்து விட்ட தீபக் கூறலானான் மந்திர ராஜ குமாரனை பற்றி.

    நூறு வருஷத்துக்கு முன்னாடி இந்த கிராமத்துல பவளாகினினு ஒரு பொண்ணு இருந்திருக்கா அவள சின்ன வயசுலயே ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க ஆனா துரதிர்ஷ்டவசமா கல்யாணத்தப்போவே அந்த கிழவன் இறந்து போய்ட்டான்.

    ஒன்னும் தெரியாத அந்த பொண்ண ஊர் மக்கள் விதவையாக்கி தனிமை படுத்தி வச்சிருக்காங்க.நாட்கள் போக போக ஊர்ல உள்ள குழந்தைகள்லாம் மர்மான முறைல இறந்து போய்ருக்காங்க.மக்கள் எல்லாரும் ஆராஞ்சி பார்த்தா பவளாகினி தான் சின்ன வயசுலயே தன் வாழ்க்கை அழிஞ்ச சோகத்துல ஊருக்கு சாபம் சாபம் விட்டுட்டானு கண்டு பிடிச்சு அவளுக்கு மொட்டை அடிச்சு கரும்புலி செம்புலி குத்தி இந்த காட்டுக்கு துரத்தி விட்டுட்டாங்களாம்.

    அதுக்கு அப்புறம் கோவமான பவளாகினி மந்திரங்கள பழகி ஒரு சூனியக்காரியாகி பேய் பிசாசுகள ஏவி விட்டு ஊர பழிவாங்கிருக்கா.

    அவள அடக்கவே மந்திர ராஜ குமாரன ஊர் மக்கள் வர வச்சிருக்காங்க..

    அப்பறம் என்னாச்சு ராஜா குமாரன் அவள அடக்குனாரா ஆர்வமாய் கேட்டாள் ஹிரண்யா..

    அதான் இல்ல அவரு அவ கிட்ட அடங்கி போய்ட்டாரு.. எல்லாருக்கும் வார காதல் நோய் அவருக்கும் வந்திடுச்சு.

    பவளாகினிக்கும் ராஜா குமாரன் மேல காதல் வந்திருக்கு..ஆனா அது ஒரு வெளி வேஷம் ராஜ குமாரனோட மந்திர சக்திகள அடைய அவ நாடகமாடியிருக்கா.

    ராஜ குமாரன ரகசியமா கல்யாணம் பண்ணி அவர மயக்கி சக்திகள அடைஞ்ச பிறகு அவர் தலைய துண்டாக்கி கொண்ணுட்டாளாம்..ராஜ குமாரன் அவள உண்மைய நேச்சிதாலா செத்தும் கூட அவள ஒன்னும் செய்யலையாம்.

    அப்போ அந்த சூனியக்காரி என்ன ஆனா.ராஜ குமரன் ஏன் அந்தியான பொண்ணுங்கள தூக்கிட்டு போகனும் அதி முக்கிய சந்தேகத்தை கேட்டு வைத்தாள் ஹிரண்யா.

     அந்த சூனியக்காரி என்ன ஆனானு யாருக்கும் இதுவரைக்கும் தெரியல..ராஜ குமாரனோட ஆத்மாவுக்கு பயந்து ஏதோ குகைக்குள்ள மறைஞ்சு வாழுறா..அப்பறம் மலைத்தொடர்கள் வழியா ஊர் ஊரா ரகசியமா போறானு சொல்றாங்க உண்மை என்னனு யாருக்கும் தெரியல..

    மந்திர ராஜ குமாரன இந்த ஊர் மக்கள் காதல் தெய்வமா பார்க்குறாங்க.. அவங்கவங்க காதல் வெற்றி பெறனும்னு மனசார ராஜ குமாரன வேண்டிக்கிட்டா நிச்சயமா அவங்க காதல் ஜெயிக்கும்னு ஐதீகம்.ஆனா அந்தியான குமரி பொண்ணுங்க யாரும் வீட்ட விட்டு வெளியே வர மாட்டாங்க ஏன்னா ராஜ குமாரனோட ஆத்மா தன்னோட காதலி பவளாகினினு நினைச்சு பொண்ணுங்கள தூக்கிட்டு போய்டும்னு பயம். 

    நீண்ட விளக்கவுரையை முடித்திருந்தான் தீபக்..ஹிரண்யாவின் முகத்திலோ எண்ணற்ற யோசனை முடிச்சுகள்..அவன் கூறிய கதைகளை அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

    யோசனையுடனேயே எழுந்தவள் மீண்டும் தன் தேடலை தொடராலானாள். பௌர்ணமி நிலவின் வெளிச்சம் காட்டின் இருளை குறைத்திருக்க ராஜ குமாரனின் சமாதியை தேடி பயணத்தை தொடர்ந்தாள் ஹிரண்யா.தீபக்கிற்கு இதில் விருப்பம் இல்லா விட்டாலும் தோழியவளை அத்துவான காட்டில் தனியே விட்டுச் செல்ல மனது ஒப்பவில்லை தூங்கி வழிந்து கொண்டே அவள் பின்னால் சென்றான்.

    எங்கோ நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் கொட்டும் சத்தம் மெல்லமாய் ஹிரண்யாவின் செவிகளை எட்டியது தன் நடையை நீர்வீழ்ச்சி பக்கமாக திருப்பி நடந்தாள் அவள் அதனை கவனிக்காது தூக்க கலக்கத்தில் தீபக் வேறு பாதையில் நடக்க தொடங்கி விட்டான்.

    மலை உச்சியில் இருந்து விழும் அருவி நீர் உடலில் குளிர்ச்சியை ஊண்டாக்க மெல்லிய தென்றல் காற்று இதமாய் வருடிச் சென்றது பூவுடலை நதியை சுற்றிலும் வளர்ந்திருந்த வண்ண மலர்செடிகள் பௌர்ணமி நிலவொளியில் ஜொலிக்க பூக்களின் நறுமணம் அவள் மனதை மயக்கின.

    இரம்மியமான இரவு, நிலவொளி,அழகிய நீர்வீழ்ச்சி,வண்ண வண்ண மலர்கள் ஏகாந்தத்தின் இனிமையை கூட்ட எங்கோ மாயலோகத்தில் நிற்பதை போன்ற உணர்வு அவளுல்.

    வந்த வேலையை மறந்து விட்டு இயற்கையின் எழில் சொக்கி நின்றவளை தேடி ஆபத்து படையெடுத்து வந்தது.

    செஞ்சாந்து பூசிய கண்களுடன் வெறிப்பிடித்த ஓநாய் ஒன்று ஹிரண்யாவை தாக்க வந்து கொண்டிருந்தது தன் பின்னால் ஏதோ காய்ந்த சருகுகளின் சலசலப்பில் அவள் திரும்பி பார்க்க அவளை நோக்கி ஓநாய் வந்து கொண்டிருந்தது.

    ஐயோ...தீபக்... இப்பொழுது தான் நண்பனின் நினைவு வந்தது போலும் கத்த கூட முடியவில்லை அவளால் அத்தனை பெரிய ஓநாயை கண்டதில் பயத்தில் தொண்டை வரண்டு அடைத்து கொண்டது.

    வேகமாய் ஓடிவந்த ஓநாய் அவள் மேல் பாயப்போக திடீரென்று அசுரக்காற்று ஓநாயை தூக்கி வீசியது..கண்காணா தூரத்தில் போய் விழுந்தது ஓநாய்.

    ஹாங்...இங்க என்ன நடந்தது சுற்றி முற்றி பார்த்தபடி திருதிருவென விழித்து கொண்டிருந்த ஹிரண்யாவை வேகமாய் ஓடி வந்து ஒரு உருவம் கீழே தள்ளி விட்டு ஓடிச்சென்று நதியில் குதித்தது.

    ஐயோ.. அம்மா கீழே விழுந்தவள் எழுந்து கைக்காலை உதறித் கொண்டு நதியை நோக்கி ஓடினாள்..ஒரு வேலை அது தீபக்காக இருக்குமோ என்ற பயத்தில்.

    அவள் வந்து பார்த்த நேரம் எந்த சலனமுமின்றி நதி நீர் அமைதியாகவே ஓடிக்கொண்டிருந்தது.

    என்னாச்சு ஹிரா உனக்கு...தீபக் சொன்ன கதைல புத்து பேதலிச்சு போய்ட்டியா என்ன... இங்கே யாரும் குதிக்கல எல்லாம் உன் மன பிரம்ம முதல்ல இங்கே இருந்து போ..என் அவள் மனசாட்சி காரி துப்ப..இல்லயே அப்போ நா எப்படி கீழே விழுந்தேன் யாரோ என்னை தள்ளிவிட்டு போனாங்களே என மனசாட்சியோடு அவள் வாதம் செய்து கொண்டிருக்க..

    நதி நீரை கிழித்து கொண்டு ஆறடி உயரம் செதுக்கி வைத்த உடல் அங்கம்.. சந்தன நிறத்தில் உச்சியில் இருந்து நீர் சொட்ட சொட்ட ஒருவன் எழுந்து வந்தான்.

    கூர்மையான விழிகள் கொண்டு பெண்ணவளை அவன் நோக்க அதிர்ந்து போய் அவனை பார்த்து கொண்டிருந்த ஹிரண்யா கால் இடரி நீரில் விழப்போக இரும்பு கரம் கொண்டு இடையோடு அவளை இறுக்கி பிடித்தான் அவன்.

    படபடத்த இமைக்குடைகள் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை போல விரிந்து மூட மீன் விழிகளில் அபிநயங்கள் பொங்க தன்னை பார்த்திருந்தவளை நேராய் நிற்க வைத்தவன் அமைதியாய் நடந்த செல்ல அவன் பின்னால் ஓடினாள் ஹிரண்யா..

    ஹலோ ஒரு நிமிஷம் நில்லுங்க... மூச்சு வாங்க ஓடியவள் அவன் முன்னால் வந்து நிற்க ஏற இறங்க அவளை பார்த்தான் அவன்..

    என் கூட வந்தவன் வழிமாறி தொலைஞ்சு போய்ட்டான் கண்டுபிடிக்க உதவி பண்றிங்கலா ப்ளீஸ் அவன் முன் அப்பாவியாய் அவள் கேட்டு நிற்க..

    ம்ம்..என்று ஒற்றை வார்த்தை சொன்னவன் நடக்க அவனுடன் இணைந்து கொண்டாள் ஹிரண்யா..

    அவன் நடை சற்று வேகமாக இருக்க அவளுக்கு ஈடு கொடுத்து நடக்க கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது ஓடி ஓடியே வந்தாள் அவனுடன்..

    கொஞ்சம் மெதுவா நடந்தா குறைஞ்சா போய்டுவான்.. மனதிற்குள் கருவிக்கொண்டே வந்தவளை கண்கள் சுருக்கி அவன் பார்க்க அசடு வழிய சிரித்து வைத்தாள் வெளியே..

    உதட்டுக்குள் மறைந்த புன்னகையுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான் அவன்.

    ஆமா உங்க பேர் என்ன... அமைதியாய் வர என்னவோ போல் இருக்க பேச்சை தொடர்ந்தாள் ஹிரண்யா.

    சட்டென்று சொன்னான் அவன்.. மந்திர ராஜ குமாரன் என்று...

    ஹாங் என்ன...பேயறைந்ததை போல அதே இடத்தில் நின்று விட்டாள் ஹிரண்யா..

    ஹாஹா...மெல்லமாய் சிரித்தவன் சும்மா சொன்னேன் வா...என்னோட பேர் அற்புதன்..

    அற்புதன்..என்னவொரு அற்புதமான பேர்..அழகாய் சொல்லியவள் தீபக்கை கண்டு விட்டு அவனிடம் ஓடினாள்..

    தீபக்.... எங்கேடா பரதேசி...போய் தொலைஞ்சே... உன்ன கூட்டிட்டு வந்தேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கனும்..நல்ல வேலை அவரு ஹெல்ப் பண்ணாரு இல்லனா விடிய விடிய உன்ன தேடியே என் உசுரு போயிருக்கும்..

    அவரு ஹெல்ப் பண்ணாரா..?எவரு அந்த அவரு என வித்தியாசமாய் பார்த்தான் தீபக் ஹிரண்யாவை..

    தோ அவரு தான் என பின்னால் திரும்பி ஹிரண்யா பார்க்க அங்கே அற்புதன் இல்லை.இங்கே தானே இருந்தாரு எங்கோ காணோம் போய்ட்டாரோ...

    என்னடி இருக்கு அங்க மரத்தை தவர ஒன்னும் அங்க இல்ல..

    இல்லடா என்ன ஒருத்தர் தான் உன் கிட்ட கூட்டிட்டு வந்தாரு அவர் பேர் கூட அற்புதன் என்றிட..

    ஓ..அற்புதனா...என்ற தீபக் பின் திடீரென எதே...அற்புதனா.. என்றபடியே மயங்கி சரிந்தான்.

    தொடரும்....

     

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 02

    ன்னாச்சி மயங்கி விழுந்த தீபக்கை பார்த்து ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்தாள் ஹிரண்யா.. அற்புதன் நின்றிருந்தான் கையில் தண்ணீரோடு..

    மயங்கி விழுந்துட்டான் பயந்தாங்கொள்ளி பய எரிச்சலாய் சொன்னவள் தண்ணீரை வாங்கி அவன் முகத்தில் தெளிக்க மெல்ல கண் விழித்தவன் அங்கிருந்த அற்புதனை கண்டு கண்கள் சுருக்கி பார்த்தான்.

    டேய் தடிமாடு எழும்பு தொட்டதுக்கெல்லாம் மயக்கடிச்சி விழுந்து கிட்டு பொண்ணு நானே தைரியமா இருக்கேன் நீ பயந்து சாவுற என அவன் முதுகில் நாலு மொத்து மொத்தி எழுப்பிவிட அவன் பார்வையோ அற்புதன் மீதே பதிந்திருந்தது.

    அவர ஏன்டா முழுங்குற மாதிரி பாக்குற இவர் தான் நா சொன்ன அற்புதன் என ஹிரண்யா சொன்ன மறு நொடி அற்புதன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் தீபக்.

    தெய்வமே நீங்களா இந்த அப்பாவிய தேடி வந்திருக்கிங்க..உங்கள காண என்ன பாக்கியம் செய்தேனோ தேவா தன்யனானேன் சுவாமி தன்யனானேன் என தீபக் அற்புதன் காலில் விழுந்த படி பினாத்தி கொண்டிருக்க ஹிரண்யாவிற்கு தலை கிறுகிறுவென்று வந்தது அவன் செய்யும் கிறுக்கு தனத்தில்.

    புத்திசுவாதீனமானவங்கள ஏன் நடு சாமத்துல காட்டுக்கு கூட்டி வார ஹிரண்யாவை பார்த்து அற்புதன் கேட்க அவன் காலை பிடித்திருந்த தீபக்கோ சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் அவனை.

    மந்திர ராஜ குமாரா நீங்களே என்ன பைத்தியம்னு சொல்லலாமா நீங்க யாரு காதல் கடவுள் அதுக்காக அந்த அப்பாவிய பைத்தியம்னு சொல்றது நியாமா.

    மந்திர ராஜ குமாரனா ஹாஹா நானா உனக்கு நிஜமா புத்தி பேதலிச்சு தான் போய்டுச்சு.. மந்திர ராஜ குமாரனுக்கு வேற வேலை இல்லையா உன்ன மாதிரி கிறுக்க பயல ராத்திரில தேடி வர சத்தமாகவே சிரித்து விட்டான் அற்புதன்.

    நீ மந்திர ராஜ குமாரன் இல்லனா எதுக்குடா அற்புதன்னு பேர் வச்சிருக்க மந்திர ராஜ குமாரனோட உண்மையான பேர் அற்புதன் தானே என காலில் இருந்து எழுந்த தீபக் அற்புதனை முறைத்து கொண்டே கேட்க..ஏன் ராஜ குமாரனுக்கு மட்டும் தான் அற்புதன்னு பேர் வைக்கணுமா என்ன எங்களுக்கெல்லாம் வைக்க கூடாது எதிர் கேள்வி கேட்டு வைத்தாள் அவன்.

    ஏற்கனவே ராஜ குமாரன் என்று நினைத்து தெரியாத ஒருவன் காலில் விழுந்த கடுப்பில் ஹிரண்யாவை இழுத்து கொண்டு ஊர் பக்கமாய் சென்றான் தீபக்.

    அற்புதனோ தீபக்கோடு  செல்லும் ஹிரண்யாவையே விழியகாலாது பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

    வீட்டின் பின்புறம் வந்து நின்றார்கள் ஹிராவும் தீபக்கும்.ஹிரண்யா யாருக்கோ போன் செய்ய மாடியில் ஒரு அறையின் ஜன்னல் திறக்கப்பட்டு அதன் வழியே நூல் ஏணி ஒன்றும் கீழே போடப்பட்டது.

    முதலில் ஹிராவை அதில் ஏற்றி விட்ட தீபக் பின் தானும் அதில் ஏறி அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தான்.

    அடுத்த அறை நொடியில் வட்ட மேஜை மாநாடு ஆரம்பமாகியது.ஹிரா போன விஷயம் என்னாச்சு என்றான் ஹிராவின் தோழி தாரிஹா..

    ஏய் கண்டு பிடிச்சிட்டியா என்றான் நண்பர்களில் ஒருவனான கரன்.

    எதாவது சொல்லி தொலையேன்டி ஹிராவை பிடித்து உலுக்கினான் தீரண்.

    ஹிரண்யா கல்லூரியில் தொல்லியல் துறை இறுதியாண்டு பயிலும் மாணவி அவளின் நண்பர்கள் தான் தாரிஹா,தீபக்,தீரண்,கரன் கூட்டணி.

    தீபக் கிராமத்தை சேர்ந்தவன் மற்ற ஜீவராசிகள் நகரத்தை சேர்ந்தவர்கள்.ஒரு நாள் பேச்சு வாக்கில் தீபக் தங்கள் மந்திர ராஜ குமாரன் பற்றி கூறி விட அன்றிலிருந்தே அதனை கண்டறிய ஹிரண்யாவின் உள்ளம் பேராவல் கொண்டது.

    காலேஜில் ப்ராஜெக்ட் வர்க் கொடுக்க நண்பர்கள் பட்டாளம் தீபக்கிற்கும் தெரியாமல் வந்து விட்டது அவனின் கிராமத்திற்கு.

    அவனை வழுக்கட்டாயமாக காட்டுக்கு அழைத்து சென்ற ஹிரா அங்கு சென்று தான் மந்திர ராஜ குமாரனை தேடி வந்ததை பற்றியே கூறினாள்.

    ஏன்டா டேய் காலேஜ் லீவ்ல எல்லாரும் இங்கே வந்திருக்கிங்கனு நா நினைச்சா எல்லாரும் ராஜ குமாரன தேடி வந்திருக்கிங்க பிசாசுங்களா இது மட்டும் ஊர் காரங்களுக்கு தெரிஞ்சது உங்க எல்லாரையும் அடிச்சே துரத்திடுவாங்க..ஒழுங்க ஊர சுத்தி பாத்துட்டு கிளம்புற வழிய பாருங்க தீபக் எச்சரிக்கை செய்ய..

    மற்ற நால்வரும் ஹிரண்யாவின் முகத்தை பார்த்தனர். அவளோ தீபக்கை முறைத்துப் பார்த்தாள்.

    அதானே இவளை எல்லாம் ஒரு தண்ணில வேக வைக்க முடியாது. நா புடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிக்கிற ஆள் இவ. உடம்பு பூரா பிடிவாதம் கொட்டி கெடக்கு. சரியான ஆழுத்தக்காரி..என்னமாவது பண்ணி தொலைங்கடா என்று தீபக் தன் அறைக்கு சென்று விட.

    மற்றவர்களும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்கள் ஹிரா மட்டும் தனியே அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள்.

    நேரம் விடிய காலை இரண்டு மணி என காட்ட தூக்கம் தான் எட்டாக்கனியாகிப் போனது பாவையவளுக்கு.

    கண்ணை மூடினாலே அற்புதனே முன்னால் வந்து நின்றான் அப்பப்பா என்ன பார்வை அது..உயிர் வரை தாக்கு கின்றதே கண்களாலேயே பெண்ணவள் இதயத்தை கைது செய்கிறானே.. இத்தனை வருடங்களாக மூன்று ஆண் நண்பர்களோட இருந்திருக்கிறாள் ஒருவரின் பார்வை கூட அவளை இப்படி இம்சிக்கவில்லையே.

    விழப்போனவளை தாங்கி பிடித்தானே..ஏன் அவன் பிடியில் இருந்து விட பட மனம் விரும்பவில்லை மற்ற ஆண்களை போல அற்புதன் இல்லையே ஏதோ ஒரு இடத்தில் அவன் மற்றவரிடமிருந்து மாறுபட்டு நிற்கிறான் அது என்ன என்று தான் கண்டு பிடிக்க முடியவில்லை ஹிராவால்.

    விடை தெரியா விடியலை நோக்கி காத்திருந்தவள் உறக்கம் வராது மஞ்சத்தில் புரண்டபடி கிடக்க அவள் அறை ஜன்னலை யாரோ தட்டும் ஓசை கேட்டது.

    எழுந்து மணியை பார்த்தாள் அது மூன்றரை என காட்டிட..இந்த நேரத்துல யாரு ஜன்னல தட்டுறது..தனக்கு தானே பேசிக்கொண்டவள் ஜன்னலை திறக்க சட்டென்று உள்ளே வந்து குதித்தான் அற்புதன்.

    அவன் தீடீரென்று குதித்ததில் பயத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது.

    ஐயோ அம்மா...நீங்களா நா பயந்தே போய்ட்டேன் ஆழ்ந்த மூச்செடுத்தவள் புருவம் சுருக்கி அவனை பார்க்க..

    உனக்கு சொந்தமான ஒன்ன காட்டுலயே தனியா விட்டுட்டு வந்துட்ட என்றான் அற்புதன்.

    வாட்..அவன் சொன்னது புரியாமல் அதிர்ச்சியாய் அவனை பார்க்க புன்னகைத்தவன் உன்னோட இந்த கொலுச காட்டுலயே விட்டுட்டு வந்துட்டனு சொன்னேன்.

    அவன் உதட்டில் இருப்பது புன்னகையா இல்லை புதை குழியா சிறுபெண்ணின் இதயத்தை தூண்டில் போட்டு இழுக்கின்றதே.புதை குழியில் மாட்டினால் கூட மீண்டு விடலாம் இவன் புன்னகையில் வீழ்ந்தால் மீள்வது கடினம் என அவளது மனம் அவன் அருகாமையில் எக்கச்சக்க கனவுகளை கண்டு கொண்டிருக்க அவனோ அவளை கட்டிலில் அமர வைத்து கால் கொலுசை பதமாய் பாதத்தில் போட்டு விட்டான்.

    உடல் சிலிர்த்து அடங்கியது ஹிரண்யாவிற்கு ஏற்கனவே அவன் விரல்கள் தன் பாதத்தை தீண்டியதை போன்றதொரு உணர்வு.எத்தனையோ நாட்கள் அவன் ஸ்பரிஸத்தில் பாதுகாப்பைய் வாழ்ந்ததை போல ஒரு மாயை மனதில் மின்னலை போல வெட்டிச்செல்ல தன் பாத்திரத்தில் கொலுசு அணிவித்து கொண்டிருந்தவன் மீது பார்வை பதித்தாள்.

    அவனும் நிமிர்ந்து அவளை பார்க்க இருவிழிகளும் ஒரே நேர்கோட்டில் மோதிக்கொண்டன ஒருவர் மீதிருந்த பார்வையை மற்றவரால் அகற்றவே முடியாத ஏகாந்த நிலை.

    எதையோ எதிர்பார்த்து பார்த்து அவன் விழிகள் எதையோ சொல்ல முடியாத வேதனையில் அவள் விழிகள்.இரண்டு விழிகளிலும் நிரம்பி வழிகின்ற காதல் இவர்களை பார்த்து கைக்கொட்டி சிரிக்கும் விதி. 

    குனிந்தவன் அவள் பொற்பாதத்தில் இதழை பதிக்க போன சமயம் வெளியே அசுர காற்று சுழற்றி அடிக்க தொடங்கியது ஜன்னல் கதவுகள் பட படவென அடித்து கொள்ள வீதியெங்கும் தூசி மண்டலமாய் தோன்றியது கோழி கூவும் நேரம் நாய்களின் ஓலம் காதை கிழித்தது மரண ஓலம் என்பார்களே அதனை போல. 

    நா கிளம்புறேன் நேரமாச்சு என்று சட்டென்று எழுந்த அற்புதனின் கரத்தை பிடித்து கொண்டாள் ஹீரா.

    வெளியே இவ்வளவு காத்தா இருக்கு எப்படி போவிங்க பேசாம இங்கேயே கொஞ்ச நேரம் இருங்க காத்து குறைஞ்சதும் போகலாம் என அவன் கைப்பிடித்து அவள் தடுத்து நிறுத்த...

    இங்கே இருக்கதால தானே காத்தே அடிக்குது உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் விரக்தியாக புன்னகைத்து விட்டு தன்னை பிடித்திருந்த அவள் கரத்தை விலக்கிவிட்டு ஜன்னலின் வழியே வெளியேறினான்.

    காரணமேயின்றி அவன் விலகல் உள்ளுக்குள் சிறு வலியை கொடுத்தாலும் அமைதியாய் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் ஹிரண்யா.

    அற்புதன் வெளியேறியதும் கண்களில் தீப்பொறி பறக்க மறைந்திருந்து அவர்களை பார்த்து கொண்டிருந்த உருவமும் நகர்ந்து சென்றது.

    பச்சை பசேலென இயற்கை அன்னை கொடுத்த கொடையாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வயல் வெளிகள் கண்ணை குளிர்வித்தது சோலையூர் எனும் அந்த கிராமத்தை.

    சல சலவென ஓடும் நீரோடைகளும் நடைபாதையின் இருமருங்கிலும் பழ மரங்களும் அதனில் இளைப்பாறிச்செல்லும் பறவைக்கூட்டங்களும் இயற்கையின் எழிலை கூட்டி அந்த கிராமத்தை இன்னும் மெருகேற்றியது.

    நண்பர்கள் பட்டாளம் அனைத்தையும் ரசித்தபடி காலை வேலையில் வயல் வரப்புகளில் அரட்டை அடித்த படி நடந்து செல்ல.ஹரிண்யாவோ தீவிர யோசனையில் நடந்து வந்தாள் அவர்கள் அரட்டையில் இணைந்து கொள்ளாமல்.

    யோசனை இல்லாமல் எப்படி இருக்க முடியும் வைகறை பொழுதில் புயல் காற்று அடித்தது என்று கூறினால் ஈ எறும்பு கூட அவளை நம்பாது.எப்படி இது சாத்தியம் விடியலில் புயல் காற்று சுழற்றி அடித்ததை அவளும் தானே கண்டாள் ஆனால் காலையில் எழுந்து வந்து தெருவை பார்த்தால் எல்லாம் கூட்டி துடைத்து வைத்தது போல அத்தனை சுத்தமாய் இருக்கிறதே ஒரு துரும்பு கூட வீதியில் அசைந்ததற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாமல் போகவே எந்த சுவற்றில் தலையை முட்டிக் கொள்ளலாம் என்றிருந்தது அவளுக்கு.

    இதில் அற்புதன் எப்படி போயிருப்பான் எங்கே போயிருப்பான் என்ற கவலை வேறு அவளை பைத்தியகாரி போல ஆக்கி விட்டது.தன் நண்பர்களிடம் சொன்னால் அவளை கலாய்த்து தள்ளி விடுவார்கள் அவர்கள். பங்குனி வெயில் பல்லைக்காட்டும் போது எங்கிருந்து புயல் காத்து வரும் என்று அவள் காலை வாறும் கேள்விகளை கேட்டு காமெடி செய்யும் நண்பர் கூட்டத்திடம் எதையும் கூற முடியவில்லை அவளால்.

    நீ என்னடி அமைதியாவே வாறே.. அந்த அற்புதன் நினைவோ.. தோழியின் தோளில் கைப்போட்டு அவள் மனதை படித்த நண்பன் தீபக் கேட்க..

    நா யாரையும் நினைக்கல சட்டென்று பதில் வந்தது அவளிடமிருந்து.

    அப்போ நீ அவன நினைக்கல அவன் முன்னால வந்தா கூட ஏறெடுத்தும் பார்க்க மாட்ட அப்படி தானே..

    ஆமா அப்படியே தான் என்றவளின் முகத்தை பிடித்து ஒரு பக்கமாய் திருப்ப அவன் காட்டிய திசையில் மரத்தடியில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே பார்த்த படி நின்றிருந்தான் அற்புதன்.

                                                                                                                                                                                                                                                                                                                                 தொடரும்....

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 03

    தீபக் காட்டிய திசையில் திரும்பி பார்த்த ஹிரண்யாவின் கண்கள் ஆனந்த அதிர்ச்சி கொண்டது அங்கே மரத்தினடியில் கையை மார்புக்கு குறுக்கே  கட்டிக்கொண்டு  அவளையே பார்த்த படி இருந்த அற்புதனை கண்டு.

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ அவன நினைக்கல பார்க்க மாட்டேன்னு சொன்னாங்க யார்னு தெரியுமா தீப்க விளையாட்டாக சீண்டியதெல்லாம் கேட்க அவள் அங்கே நின்றிருந்தாள் தானே அவள் அற்புதனை கண்டதுமே அவனை நோக்கி சென்று விட்டாள்.

    யார் கிட்ட மச்சான் தனியா பேசிட்டு இருக்க தோளில் கைப்போட்டான் கரன்.

    சொல்லாம கூட போய்ட்டா ராட்சசி என்று தலையிலடித்துக் கொண்ட தீபக் நட்பு வட்டாரத்தை இழுத்துக்கொண்டு சென்றான் வீட்டிற்கு.

    உங்களுக்கு ஒன்னும் ஆகலையே நல்லா தானே இருக்கிங்க காலையில் புயலில் நடந்து சென்றானே என்ற பதட்டத்துடன் அவள் கேட்டு நிற்க..நா நல்லா தான் இருக்கேன் உன் கண்ணாலயே பாக்குற தானே என்றன் இரண்டு கைகளையும் விரித்தபடி.

    அப்பறம் எப்போ ஊருக்கு போறதா எண்ணம் புருவம் தூக்கி வினாவினான் அற்புதன்.

    கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சிட்டு கிளிம்பிடுவோம் என்றாள் ஹிரா.

    எது சமாதிய கண்டுபிடிக்கிற வேலைய தானே என்ற அற்புதனின் கூற்றில் அதிர்ந்து போனாள் ஹிரா.

    உ.. உங்க..ளுக்கு எப்படி தெரியும் அதிர்ச்சியாய் அவள் கேட்க..வேண்டாத வேலையெல்லாம் பார்க்காத ஒழுங்கா ஊர் போய் சேரு விபரீதமான செயல்கள் எப்பவும் ஆபத்தை தான் தரும்..அவன் பேச்சு கோபத்தை தூண்டியது சிங்க பெண்ணிற்கு.

    நா எதுக்கு ஊருக்கு போகனும் என்ன போக சொல்ல நீ யாரு மேன் நா இங்கே தான் இருப்பேன் நீ உன் வேலைய பார்த்துட்டு போடா என்றாள் எக்கச்சக்கமான கோபத்தில்.மரியாதையெல்லாம் மலையேறி போய் விட்டது போல.

    மூச்சை பிடித்து கொண்டு பேசியவளை நக்கலாக பார்த்தவன் உன்னால எப்பவும் ராஜ குமாரனோட சமாதிய கண்டு பிடிக்கவே முடியாது என்க..

    முடியும் கண்டிப்பா முடியும் அதுக்காக எவ்வளவு ரிஸ்க் வேணுனாலும் நா எடுக்க தயார் என அவள் திடமாய் கூற..

    ஹாஹா...செத்தவன் சமாதிய கண்டு பிடிக்கலாம் ஓக்கே உயிரோட இருக்கவன் சமாதிய எங்கே போய் தேடுவ..

    வாட் எனக்கு ஒன்னும் புரியல மந்திர ராஜ குமாரன் உயிரோட... எப்படி நூறு வருஷமா இருக்க முடியும் ஹவ் திஸ் பாசிபிள் என விழி விரித்து நின்றவளிடம் பதிலை அற்புதன் கூறும் முன்னமே அவர்களின் வானர கூட்டம் வந்து சேர்ந்து விட்டது.

    ஏய் ஹிரா யார் இவர் உனக்கு தெரிஞ்சவரா என்றான் தீரண் அற்புதனை ஒரு மாதிரியாக பார்த்தபடி..

    ஆமா மச்சான் சார் ஹிராவுக்கு ரொம்ப வேண்ட பட்டவரு என்று நக்கலடித்த தீபக்கின் முதுகில் ஒரு போடு போட்டாள் ஹிரா.

    இவரு அற்புதன் நேத்து இந்த தடிமாடு மயங்கி விழுந்ததும் இவர் தான் வந்து ஹெல்ப் பண்ணாரு.

    இவங்க எல்லாம் என்னோட ஃபிரண்ட்ஸ் இவன் கரன் இவன் தீரண் இவ தாரிஹா என அவர்களை அற்புதனுக்கு அவள் அறிமுகம் செய்து வைக்க அனைவரையும் பார்த்து சினேகமாக புன்னகைத்தவன் தாரிஹாவை மட்டும் கண்டு கொள்ளவில்லை.

    சரி வாங்க எல்லாரும் வீட்டுக்கு போவோம் என நண்பர்ளை அழைத்து நடந்த தீபக் எதையோ கண்டு ஹிராஆஆ...என கத்தியபடி அவள் அருகில் ஓடிவர அதற்கு முன்பாக அவள் இடையை பிடித்து சுழற்றி தூக்கியிருந்தான் அற்புதன்.

    ஹிரண்யாவை கொத்த கருநாகமொன்று சீறிக்கொண்டு வர தீப்க அதை கவனித்து ஓடி வர அதற்கு முன்பாக அற்புதன் அவளை காப்பாற்றி விட்டான்.

    இருந்தும் அந்த நாகம் அசைவதாய் தெரியவில்லை ஹிராவை படமெடுத்த படி சீறிக்கொண்டே இருந்தது.

    இதற்கு மேலும் பொறுமையில்லாத அற்புதனோ நாகத்தை கையில் பிடித்து விட்டான்.

    அனைவரும் பதறி போய் விட்டார்கள்.

    என்ன பண்றிங்க அற்புதன் அத முதல்ல தூக்கி போடுங்க என தீபக்கும் ஹிராவும் கத்த கத்த அதனை தூக்கி கொண்டு காட்டு பக்கம் சென்று விட்டான் அற்புதன்.

    மொட்டை மாடியில் நின்று காட்டை வெறித்தபடி நின்றாள் ஹிரா.எனக்கு என்னவோ அற்புதன பார்க்க சாதரணமா தெரியல ஹிரா உனக்கு அவருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் போல தீபக் சொல்ல..

    என்ன சொல்ல வாறே தீபக் தெளிவா சொல்லு..

    இன்னைக்கு காலைல நானும் அந்த புயல பார்த்தேன் ஹிரா..நீயே யோசிச்சு பாரு இங்கே வந்ததுல இருந்து உனக்கு ஏதாவது ஆபத்து வந்துட்டே இருக்கு..

    அதுவும் நீயும் அற்புதனும் மீட் பண்ணும் போதுதான் வருது. ஆனா அந்த ஆபத்துல இருந்து உன்ன காப்பாத்துறதும் அற்புதன்  தான்..ஒரு விஷயத்தை கவனிச்சியா நேத்து நா மயங்கி விழுந்த உடனே அற்புதன் தண்ணியோட வந்து நின்னாரு அப்போ நா மயங்க போறேன்னு அவருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குனு தானே அர்த்தம்.. தெளிவாக விலக்க முயன்றான் தீபக் தோழியவளுக்கு. 

    எனக்கு ஒன்னுமே புரியல தீபக் அற்புதன பார்க்கும்போது என் மனசுல என்னவோ பண்ணுது அவரு பக்கத்துலயே இருக்கனும் போல மனசு கெடுந்து தவிக்கிது தீபக் என்றவள் நண்பன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    இன்னுமா உனக்கு புரியல இதுக்கு பேர் தான் காதல் ஹிரா நீ அற்புதன காதலிக்கிற..என்றவன் ஒரு நிமிடம் அமைதி காத்து பின் ஹிராவை பார்த்து அற்புதன் விஷயம் இனி யாருக்கும் தெரிய வேண்டா ஹிரா நம்ம ரெண்டு பேருக்குள்ளேயே இருக்கட்டும் நம்ம ஃபிரண்ட்ஸ் கிட்ட கூட சொல்லாத என்றிட அவனை புதிராக பார்த்தாள் ஹிரா.

    அவங்க கிட்ட எதுக்கு சொல்ல கூடாதுனு சொல்றே..தீபக் அவங்க நம்ம ஃபிரண்ட்ஸ் நண்பர்களுக்குள்ள ஒளிவு மறைவு எதுக்கு...

    நண்பர்களுக்குள்ள ஒளிவு மறைவு இருக்க கூடாது ஓக்கே..ஆனா துரோகிகளுக்குள்ள..இருந்து தானே ஆகனும்..நீ நினைக்கிற எதுவும் உண்மை கிடையாது ஹிரா.. சில விஷயங்களை உனக்கு வெளிப்படையா சொல்லி என்னால புரிய வைக்க முடியாது..

    எனக்கு தெரியும் உன் மனசுல ஏகப்பட்ட கேள்விகள் இருக்குனு அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அற்புதன் கிட்ட தான் இருக்கு என தீபக் சொல்லி கொண்டிருக்கும் போதே அவனை போதும் என்பதை போல கைக்காட்டி அவன் பேச்சை தடுத்தவள்.

    நா காட்டுக்கு போகனும் என்றாள் நிலைத்த பார்வையுடன்.

    தனியா போகாதே..நானும் கூட வாறேன் என தீபக் அவளை கூட்டிக்கொண்டு வாசலுக்கு வர ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டிங்க என அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள் தாரிஹாவும் தீரணும்.

    ஒன்னும் இல்லடா மச்சா ஹிராவ பாம்பு கொத்த வந்திச்சில்ல அதான் கோவில்ல சொல்லி கயிறு மந்திரிச்சு வாங்கி கட்டிடு வாரோம் என்றவன் விறுவிறுவென்று கோயில் பக்கமே நடந்து சென்றான்.

    டேய் நாம காட்டுக்கு போகனும் எதுக்கு கோயில் பக்கமா போறே... என்று ஹிரா புரியாமல் கேட்டாள்.

    வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரை பெயர் சொல்லி அழைத்தான் தீபக்..

    அண்ணே எங்களுக்கு கொஞ்சம் பின்னாடி எங்க கூட்டாலிங்க ரெண்டு பேர் வாராங்கலானு பார்த்து சொல்றிங்கலா என்க அவர்கள் பின்னால் மெதுவாய் எட்டி பார்த்த அந்த நபர்..ஆமாப்பா ஒரு புள்ளையும் பையனும் வாராங்க தம்பி என்றிட.. சரிங்கண்ணே ரொம்ப நன்றி என்றவன்..

    ஹிராவிடம் கண்ணை காட்டி விட்டு கோவிலுக்குள் சென்றுவிட.

    அவர்கள் கோவிலுக்கு சென்றதை உறுதி செய்த தாரிஹாவும் தீரணும் மீண்டும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

    அவங்க எதுக்குடா நம்மல ஃபாலோ பண்றாங்க..

    தெரியால கொஞ்ச நாளாவே அவங்க ரெண்டு பேர் நடவடிக்கையும் வித்தியாசமா தான் இருக்கு நீ வா என்றவன் கோவிலின் பின்பக்கம் வழியாக காட்டிற்கு அவனை அழைத்து சென்றான்.

    விழிகளில் உக்கிரம் பொங்க அந்த நாகத்தை பார்த்து கொண்டிருந்தான் அற்புதன்.

    கோபம் கொண்ட நாகமோ அவனை கையில் கொத்தி விட்டு காட்டில் ஓடி மறைந்திட. பாம்பு கொத்திய தன் கரத்தை வெறித்து பார்த்தான் அற்புதன் சிறிது நேரத்தில் நீல நிற விஷம் வெளியேறி பாம்பு கடித்த தடம் மறைந்து போனது அவன் கரத்தில்.

    நா தான் நெத்தே சொன்னேனே ஹிரா இவரு மந்திர ராஜ குமாரன் தான்னு இப்போ நம்புறியா என்றான் தீபக் அற்புதனின் பின்னால் இருந்து.

    தீபக் கையை விட்டவள் அற்புதனிடம் வந்து அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை வைக்க கன்னத்தை தடவி கொண்டே அவளை கண்டான் மந்திர ராஜ குமாரானானவன்.

    எதுக்குடா என்ன ஏமாத்தினே நா உன்னடோ சமாதிய தான் தெடி வந்தேன்னு தெரியும்ல அப்பறம் ஏன் டா பொய் சொன்னே...அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் ஹிரா..

    உண்மையை மறைத்து விட்டானே என்ற கோபம் அவளுக்கு உண்மை தெரிந்தால் தாங்க மாட்டாளே என்ற வேதனை அவனது.

    ஒரு விஷயம் எனக்கு புரியல நீ எப்படி நூறு வருஷம் ஆகியும் சாகம இளமையோட இருக்க மந்திர ராஜ குமாரன் இறந்துட்டதா இவன் சொன்னான் ஓஓ எல்லாம் பொய்யா.. எங்க அந்த சூனியக்காரி பவளாகினி அவளும் உன்ன மாதிரி பொய்க்காரி தானோ என ஹிரண்யா கேட்டுக் கொண்டிருக்கும் போதே சுழன்று போய் மண்ணில் விழுந்தாள்.

    அவள் முன்பு ருத்ர மூர்த்தியாக அற்புதன் நின்றிருக்க அவனிடம் அடி வாங்கிய கன்னம் காந்தியது.

    யார பார்த்து சூனியக்காரி சொல்றே...அவ என்னடோ தேவதைடி சதி கார கூட்டத்துல மாட்டி எனக்காகவே அவ உயிர தியாகம் செஞ்ச தேவதை என்னோட பவளாகினி..இன்னொரு வாட்டி இந்த மாதிரி பேசின..அப்பறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது..

    என்ன கேட்ட நூறு வருஷம் ஆகியும் சாகம இளமையோட எப்படி இருக்கேன்னு தானே கேட்ட...நூறு வருஷம் ஆனா இளமையோட இருக்க முடியாது மறு பிறவி எடுத்து வந்தா இளமையோட இருக்கலாம்ல என்று கொந்தளித்து கொண்டிருந்தவன் தோளில் அழுத்தம் கொடுத்தான் தீபக்.

    அடி வாங்கிய கன்னத்தை பிடித்து கொண்டு மிரண்டு போய் அழுது கொண்டிருந்தாள் ஹிரண்யா.

    அவளை பார்க்கவே தீபக்கிற்கு பாவமாய் இருந்தது எதற்கும் கலங்காதவள் தேம்பி தேம்பி அழுவதை பார்க்க நண்பன் உள்ளம் தாளவில்லை.

    பாவம் தெரியாம பேசிட்டா மன்னிச்சிடுங்களே ப்ளீஸ் என கோபத்தில் இருந்த அற்புதனை தீபக் சமாதானம் செய்ய தலையை அழுத்தமாக கோதி கொண்டவன் ஹிரண்யாவின் அருகில் முட்டிப் போட்டு அமர்ந்தான்.

    அவர்களுக்கு தனிமை தந்து தீபக் நகர்ந்து சென்றிட ஹிரண்யாவின் முகத்தை கையில் ஏந்தியவன் சாரி..மா கோவத்துல அடிச்சிட்டேன் என்றான் உடைந்த குரலில்.

    அவளோ கோபத்தில் முகத்தை திருப்பி கொள்ள சட்டென்று பெண்ணவள் இதழை சிறைப்பிடித்து கொண்டான் கள்வன்.

    தொடரும்...

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 04

    ஹிராவின் இதழ்கள் மன்னவன் பிடியில் இருக்க அவளோ அவனை மார்பில் கைவைத்து தள்ளி விட்டாள்.

    மிட்டாயை பிடுங்கிய குழந்தை போல அவன் ஹிராவை பாவமாய் பார்த்து வைக்க அவளோ அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

    அடித்து சிவந்திருந்த கன்னத்தில் மென்மையாக முத்தமொன்றை ஆணவன் வைக்க கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது ஹிரண்யாவிற்கு.

    நீங்க என்ன காதலிக்கிறிங்கலா அற்புதனை பார்த்து ஏக்கம் ததும்பிய விழிகளோடு அவள் கேட்க.. சட்டென்று பதில் சொன்னான் அவன்.

    இல்லவே இல்ல என்னோட இதயத்துல எப்பவும் என்னோட பவளாகினி மட்டும் தான் இருப்பா அவள தவின நா யாரையும் காதலிக்க மாட்டேன் என்றிட... மறுபடியும் அவனை அறைந்து விட்டாள் ஹிரா.. அந்த அறைக்கூட பூங்காற்று கன்னத்தை வருடிச் சென்றதை போல தான் இருந்தது அற்புதனுக்கு.

    என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல வேற ஒருத்திய காதலிச்சிட்டு எனக்கு முத்தம் கொடுக்கிறே...என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..ஹாங்... பைத்தியம் மாதிரி தெரியுதா என்று கொந்தளித்து போனவள் சுற்றும் முற்றும் தேடி ஒரு கட்டையை எடுத்தாள் அவனை அடிக்க..

    என்ன அடிக்க போறியா ஹாஹா கொஞ்சம் உன் கைய பாருமா என்று சிரித்தான் அற்புதன்.ஹிரண்யா கட்டையை வைததிருந்த தன் கையை பார்க்க கட்டையோ அழகிய பூ மாலையாகியது அற்புதன் செய்த அற்புதத்தில்.

    உன் மாயாஜாலத்தை என் கிட்ட காட்டாதே...உன்ன சும்ம விட மாட்டேன் இருடா வாறேன் என சேலையை தூக்கிக் இடுப்பில் சொருக்கிக் கொண்டு அவன் அருகில் வர அவனோ ஓட்டம் எடுத்தான்.

    ஓடாத நில்லுடா உன்ன இன்னைக்கு கொள்ளாம விட பொறுக்கி ராஸ்கல்...பொய்க்காரா நில்லு என கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் ஹிரா.

    முடிஞ்சா என்ன பிடிச்சி பாரு என்று ஓடிக் கொண்டிருந்தான் அற்புதன்.என்டா அடிச்சிக்கிட்டு கிடந்துட்டு ஓடிப்பிடிச்சு விளையாடுறிங்க சின்ன பசங்க மாதிரி என ஹிராவின் பின்னால் கத்திக்கொண்டே தீபக்கும் ஓடினான்.

    ஓடிக்கொண்டிருந்த ஹிரா எதையோ கண்டு விட்டு அப்படியே நின்று விட்டாள் தீபக்கும் அற்புதனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு ஹிரா அருகில் வர அவளோ அவள் பார்த்த அந்த குகையை நோக்கி சென்றாள்.

    வேண்டா ஹிரா நீ அங்க போக வேண்டா வீட்டுக்கு போ... கடுமையாக வந்தன அற்புதனின் வார்த்தைகள்.

    ஏன் போக கூடாது நா போவேன் நீ தள்ளு அந்த பக்கம் என்று விட்டு அவள் செல்ல போக..ஹிரா அவரு தான் சொல்றாருல்ல நீ அடம்பிடிக்காம வா வீட்டுக்கு போவோம் என தீபக் அவளை அழைக்க அவன் கையை தட்டி விட்டாள் ஹிரண்யா.

    விடு தீபக்... நீங்க ரெண்டு பேரும் என் கிட்ட எதையோ மறைக்க பாக்குறிங்க அது என்னன்னு நா கண்டு பிடிச்சாகனும் என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைச்சாகனும் தீபக் என்ன தடுக்காத..

    கேள்விகள் நீ கேட்டா பதிலும் உன் கிட்ட தான் இருக்கு ஹிரா உன் ஆழ்மனசுக்குள்ளே போய் யோசி உனக்கே எல்லாம் புரியும் இப்போ வீட்டுக்கு போ தீபக் அவள கூட்டிட்டு போ என இறுகிய முகத்துடன் கூறினான் அற்புதன்.

    முடியாது நா அந்த குகைக்கு போயே தீருவேன்..என்றவள் குகைக்குள் ஓடி விட்டாள்.

    கற்களால் ஆன குகை அது அங்கங்கே பழங்காலத்தை எடுத்துரைக்கும் விதமாக இயற்கை பொருட்களை கொண்டு புனையப்பட்ட ஓவியங்கள் தூசி படிந்து காணப்பட்டன.

    குகைக்குள் காலை வைத்ததுமே ஹிராவின் மனதில் சொல்ல முடியாத வலி.. கண்முன் சில காட்சிகள் வந்து வந்து சென்றன காலகள் நகர மறுத்து தள்ளாடின..உடல நடுங்கியது வெளியே இருந்த தைரியம் இப்போது இல்லை...

    ஏதோ ஒரு பெண் விசும்பும் ஓசை காதை எட்டியது அந்த விசும்பல் மெல்ல மெல்ல அழுகையாகா மாறி பின் மரண ஓலமாய் கதறிடுவதை போல கேட்க காதை இறுக பொத்தி கொண்டாள்.

    பவளாகினி...என்ற வேதனை தாங்கிய குரல் ஒன்று இதயத்தை கூறு போட்டது..தேவா...தேவா..என அந்த பெண்ணின் கதறல் காற்றோடு கலந்து அவளை வதைத்தது....

    காரணமேயின்றி ஹிராவின் கண்கள் கண்ணீரை சிந்தின.. தீபக்கும் அற்புதனும் அவள் பின்னால் தான் வந்து கொண்டிருந்தார்கள்..அவள் எதை காண கூடாது என்று அற்புதன் நினைத்தானோ அதனை கண்டு விட்டாள் ஹிரண்யா.

    குகையின் ஒரு மூளையில் இரண்டு எலும்பு கூடுகள் அமர்ந்த நிலையில் ஒரு கூடும் அதன் மடியில் தலை துண்டாய் கிடந்த ஒரு கூடும்..கிடக்க தேவாஆஆ...என கத்திக்கொண்டு அதன் அருகில் ஓடினாள் ஹிரண்யா.

    தேவா ஐயோஓஓ...தேவா உங்களுக்கா இந்த நிலமை வரனும்... நீங்க மட்டும் என்ன காதலிக்காம இருந்திருந்தா உங்களுக்கு இந்த கொடூர மரணம் வந்திருக்காதே...ஏன் தேவா உங்களுக்கு என் மேல இவ்வளவு காதல் எனக்காக உங்க உயிரையும் விட்டுட்டிங்களே தேவா... நீங்க இல்லாம நா எப்படி வாழப்போறேன் என தலையில்லாத அந்த எலும்பு கூட்டை மடியில் போட்டு கூறிக்க கொண்டிருந்தவளை தீபக் ஹிரா...ஹிரா என உலுக்க அவள் கருத்தில் அதெல்லாம் பதியவில்லை. அவள் வேறு உலகில் அல்லவா இருந்தாள்.

    பவளாஆஆ... வலி தாங்கிய காந்த குரலொன்று கேட்டிட தலை நிமிர்ந்து பார்த்தாள் ஹிரண்யா எனும் பவளாகினி.

    வா என்பதை போல இருகைகளையும் விரித்து விழிகளால் பெண்ணவளை அழைத்தான் அற்புதன் எனும் அற்புத தேவன்.

    தாயை கண்ட சேயாய் ஓடிச்சென்று அவன் பரந்த மார்புக்குள் பதுங்கி கொண்டாள் காரிகை.ஜென்ம ஜென்மத்தின் காதல் தேடல் இது தான் போல இருவர் விழிகளிலும் கண்ணீர்.காதல் தந்த வலி பிரிவின் ஏக்கம் துரோகத்தால் விளைந்த மரணம் என அனைத்தும் அவர்கள் கண்முன் வந்து போனது பூர்வ ஜென்ம ஞாபகமாய்.

    ஒன்னும் இல்லமா நா உன் கூட தான் இருக்கேன்..அமைதியா இரு ஒன்னும் இல்ல என ஹிராவின் முதுகை அற்புதன்  தடவிக் கொடுக்க கொஞ்சம் ஆசுவாசமடைந்தவள் கண்ணீரை துடைத்து கொண்டு நிமர்ந்தவள் கண்முன்னால் தீபக் வந்து நின்றான்.

    அண்ணாஆஆ...என தீபக்கையும் கட்டி பிடித்து கதறி விட்டாள் ஹிரண்யா.. அவள் வெடித்து அழுக ஆரம்பிக்க இரண்டு ஆண்களுக்கும் அவளை தேற்றும் வழி தெரியவில்லை.அழதழுதே மயங்கி போனாள் ஹிரா.

    மயங்கிட்டா வீட்டுக்கு தூக்கிட்டு போறேன் என்று தீபக் சொல்ல வெண்டா தீபக் நீ மட்டும் வீட்டுக்கு போ..இப்போ இவள கூட்டிட்டு போனா தேவையில்லாத கேள்விகள் கேட்பாங்க...

    நா மட்டும் போனாலும் எங்கனு ஹிரா எங்கனு கேட்பாங்களே என்றான் தீபக் ஒரு வித கலக்கத்துடன்.சற்று யோசித்த அன்புதன் கருடா...என அழைக்க பெரிய கழுகு ஒன்று வந்து அவன் முன்பு சிறகடித்து கொண்டிருந்தது..

    ஏதேதோ மந்திரங்களை சொல்லி அற்புதன் கருடனை பாரக்க திடீரென்று கருடன் ஹிராவை போல பெண்ணாய் மாறியது..

    நீ தீபக் கூட வீட்டுக்கு போ நா சொல்ற வரைக்கும் ஹிரண்யாவ போல அங்கேயே இரு..யார் கிட்டையும் அதிகம் பேசாத என கட்டளையிட்டு கருடனை தீபக்கோடு அனுப்பி வைத்தவன் ஹிராவை தூக்கியபடி மந்திரத்தை சொல்ல இருவரும் மாயமாய் மறைந்து போனார்கள்.

    ********

    என்னவோ தப்பா இருக்கு  தீரண் கோவிலுக்கு போனவங்க இன்னும் வீட்டுக்கு திரும்பி வரல என்றாள் தாரிஹா தீரணிடம்.

    எனக்கும் அப்படித்தான் தோனுது தாரி..ஒரு வேலை நமக்கிட்ட பொய் சொல்லிட்டு ரெண்டு பேரும் காட்டுக்கு போய்ட்டாங்கலோ...விட கூடாது தாரி அவங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர விடவே கூடாது. அந்த அற்புதன பார்க்க தான் ஹிரா போய்ருப்பானு நினைக்கிறேன்..என்று தீரண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்படியென்ன ரகசியம் பேசிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும் என்றபடி வந்தான் தீபக்..

    அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான் சும்மா தான் பேசிட்டு இருந்தோம்..அது சரி நீங்க ரெண்டு பேரும் வர ஏன் இவ்வளவு நேரம் என்றான் தீரண் ஹிராவாய் இருந்த கருடனை பார்த்த படியே

    கோவிலுக்கு போனோம் மச்சான் பூசாரி வர லேட்டு அதான் கொஞ்சம் வெய்ட் பண்ணி கயிறு மந்திரிச்சு வாங்கிட்டு வந்தோம்..நீ வா ஹிரா  வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடு என அனைவரின் பேச்சுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்த தீபக் கருடனை கூட்டிப் போய் ஹிராவின் அறையில் விட்ட விட்டான்.

    ஏய் கழுகே அவசர பட்டு பறந்து கிறந்து போய்டாத உனக்கு சாப்பாடெல்லாம் ரூம்க்கே கொண்டு வந்து தாறேன் சாப்பிட்டு இங்கேயே இரு என்று தீபக் சொல்ல அவனை முறைத்து பார்த்தாள் கழுகு ஹிரா..

    சிறிது நேரத்தில் கழுகு ஹகராவிற்க்கு உணவு எடுத்துக் கொண்டு வந்த தீபக் அதிர்ந்து போனான் அங்கு கண்ட காட்சியில்.பெண்ணாய் இருந்தவள் கழுகாய் மாறி அங்கு வந்திருந்த குட்டி பறவையை துறத்தி கொண்டிருந்தாள்.

    ஐயய்யோ ஏய் கழுகே என்ன பண்றே...முதல்ல ஹிராவா மாறு என குட்டி பறவையை துறத்தி கொண்டிருந்த கழுகின் இறகை பிடித்து இழுத்தான் தீபக்..அதுவோ அவன் பேச்சை கேட்காது பறவையை தரத்துவதில் குறியாய் இருக்க இப்போ நீ உருவம் மாறல உன்ன ராஜ குமாரன் கிட்ட போட்டு குடுத்திடுவேன் மரியாதையா மாறிடு உணவு தட்டை கையில் வைத்துக் கொண்டே அவன் மிரட்டியதில் அது மீண்டும் ஹிராவாய் மாறி விட்டது.

    உன்கிட்ட சொல்லிட்டு தானே போனேன் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்... சரியான லூசு கழுகு என தலையில் அடித்து கொண்டவன் இந்தா சாப்பிடு என தட்டை அவளிடம் நீட்ட அவளோ அவனை முடிந்த மட்டும் முறைத்து வைத்தாள்.

    என்ன லுக்கு எங்க வீட்டுல எப்பவும் நெய் தோசை தான் ஸ்பெஷல் சட்னியும் இருக்கு சாப்பிடு...

    நா இதெல்லாம் சாப்பிட மாட்டேன் பாம்பு,பறவைங்க இருந்தா கொண்டா அது தான் எனக்கு புடிக்கும்.

    எதே பாம்பு பறவையா..என்னடி இப்படி சொல்ற இப்போ நீ மனுஷியா இருக்க அதுவும் ஹிரண்யாவா இருக்க அவ எத விரும்பி சாப்பிடுவாளோ அத தான் நீயும் சாப்பிடனும்.. உனக்கு இங்கே இருந்து போற வரைக்கும் நெய் தோசை தான் ஒழுங்கு மரியாதையா சாப்பிடு இல்லனா பட்டினி கிட நா ராஜ குமாரன் கிட்ட டீல் பண்ணிக்கிறேன் என்று உணவு தட்டை அவள் கையில் வைத்து விட்டு வாசல் வரை சென்றவன் திரும்பி பார்க்க..

    தட்டையே பாவமாய் பார்த்த கழுகு ஹிரா தோசையை பிய்க்க தெரியாது பிராண்டி கொண்டிருந்தாள் நகங்களால்.

    அவளை பார்க்க தீபக்கிற்கும் பாவமாக இருக்கவே திரும்பி வந்தவன் அவள் கையில் உள்ள தட்டை வாங்கி தோசையை அழகாக பிய்த்து சட்னியில் தோய்த்து ஊட்டியும் விட்டான்.

    அந்த பக்கமாக வந்த தீரண் தாரிஹா இருவரின் கண்களிலும் இந்த காட்சி பதியவே இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

    தொடரும்....

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 05

    வன் எதுக்கு தாரி ஹிராவுக்கு சாப்பாடு ஊட்டி விடுறான் அவ நல்லா தானே இருக்கா ஒரு வேல இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சம்திங் சம்திங் இருக்குமோ சந்தேகமாய் கேட்ட தீரணிடம்..அது என்னன்னு அவங்க கிட்டேயே கேட்டு தெரிஞ்சிக்குவோம் வா என அவர்கள் அறைக்குள் நடந்து சென்றாள் தாரிஹா.

    என்னாச்சு தீபக் ஹிரா நல்லா தானே இருக்கா நீ எதுக்காக அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுறே...தீரண் கேட்க பதில் சொல்ல தெரியாது தீபக் விழித்து கொண்டிருந்த வேலையில்..என் கைல அடி பட்டு இருக்கு அதான் தீபக் ஊட்டி விடுறான் என்றாள் கழுகு ஹிரா.

    அடி பட்டிருக்கா ஏன் எங்க கிட்ட சொல்லல எங்கே காட்டு பார்ப்போம் என தாரிஹா அவள் கையை பிடித்து இழுக்க..ஆஆ மெதுவா..என்ற படியே கையை காட்டினாள் ஹிரா..

    அவள் கையில் காயம் இருந்திடவே தீபக்கிற்கும் அதிர்ச்சி தான் நல்லா தானே இருந்தா காயம் எப்படி பட்டுச்சு என அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே காயம் எப்போ பட்டுச்சு ஹிரா காலைல உன் கைல காயம் இல்லையே என்றான் தீரண்.

    உங்க ரெண்டு பேருக்கும் இப்போ என்ன தான் பிரச்சினை எதுக்கு சீஐடி மாதிரி விசாரணை பண்ணிட்டு இருக்கிங்க ஒரு முள்ளு குத்துன்னா கூட உங்க கிட்ட பர்மிஷன் வாங்கி தான் குத்தியிருக்க முள்ள வெளியே எடுக்கனுமா என்ன..சும்மா வந்து கடுப்ப கிளப்பிக்கிட்டு வெளியே போங்க முதல்ல..காட்டமாய் கத்தி விட்டது கழுகு..

    சொல்ல போனாள் ஹிரண்யாவின் குணமும் இது தான் யாராவது அவளை தொல்லை செய்தால் நண்பர்களாக இருந்தாலும் கத்தி வைத்து விடுவாள்.. இதனாலேயே நண்பர்கள் பட்டாளம் அவளை அதிக கேள்விகள் கேட்பதில்லை அவள் போக்கிலேயே விட்டு விடுவார்கள்.

    கழுகு ஹிரா கத்தியதில் கரனும் ஓடி வந்து விட்டான் அறைக்கு.என்ன சத்தம் என்ன சத்தம் ஹேய் லேடிஸ் எதுக்குப்பா கத்துறிங்க ஒரு மனுஷன நிம்மதியா துங்க விடுறிங்களா சம்பந்தமே இல்லாமல் இடையில் வந்து காமெடி பீஸாக நின்ற கரன் முதுகில் பட்டென்று அடித்து விட்டாள் ஹிரா..

    பட்ட பகல்ல என்னடா உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு போய் வேலைய செய்யி போ என்று ஹிரா கத்த அடி வாங்கிய முதுகை தேய்த்து கொண்டே கரன்  ஓடி விட்டன்.

    அவள் கோபமாக இருக்கிறாள் என்றெண்ணி தாரிஹா,தீரண் இருவரும் கூட ஓடி விட்டார்கள்.

    ஸ்ஸ்ஸப்பா மிடில பிசாசுங்க எவ்வளவு கேள்வி கேக்குதுங்க இதுங்கள சமாளிக்கிறதுக்காகவே நா பத்து பாம்ப திண்ணனும் போலயே பெரு மூச்சு விட்டு கட்டிலில் அமர்ந்தவளிடம் பரவாயில்ல நல்லா தான் நடிக்கிற.. என்றான் தீபக்.

    அப்படி சொல்லி மலுப்பாம ஊட்டி விடு என குருவிக்குஞ்சை போல வாயை திறந்தது கழுகு பெண்.

    ஊட்டி விடனுமா மூனு தோசை சாப்பிட்டியே பத்தலையா...

    நீ மனுஷன் உனக்கு மூனு தோசை போதும் எனக்கு எப்படி மூனு பத்தும் போயி இன்னும் நிறைய தோசைய அள்ளிக்கிட்டு வா செம்ம பசில இருக்கேன்..நீ வர லேட் ஆனா நா பறந்து போய் எதையாவது புடிச்சி திண்றுவேன் என்க அதற்கு பிறகும் தீபக் அங்கே நிற்பானா என்ன சிட்டாய் பறந்தவன் சில நொடிகளில் ஐந்து தோசையோடு அவள் முன்னால் நின்றான்.

    ஆமா உன் கைல எப்படி காயம் பட்டுச்சு தோசையை ஊட்டிக் கொண்டே கேட்க அது அந்த குருவிய துரத்தும் போது பட்ருக்கும் என தோளை குலுக்கியவள் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்.

    ********

    கண்ணை கவரும் நத்தவனத்தின் நடுவை அமைப்பெற்ற அழகிய குடிசை வீடு அது.

    குளுகுளு தென்றல் காற்று.. பறவைகளின் கீச்கீச் ஒலி அருகினில் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் ஓசை என ரம்மியமான பொழுதிலே மன்னவன் மார்பில் இருந்து மயக்கம் தெளிந்து எழுந்தாள் ஹிரண்யா.

    எங்கே இருக்கோம் தேவா...அண்ணா எங்க என்றாள் கண்களால் தீபக்கை தேடிய படி.

    அவன் வீட்டுக்கு போய்ட்டான்..

    என்னது வீட்டுக்கு போய்ட்டானா நா இல்லாம எப்படி போனான் எல்லாரும் அவன கேள்வி கேட்டே சாவடிப்பாங்களே..

    அதெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க ஏன்னா நா தான் உன்னோட ஒருவத்துல அங்கே ஒருத்தர அனுப்பியிருக்கேனே என்றான் கண்களை சிமிட்டி.

    என்னோட உருவத்துலயா யார அனுப்பியிருக்கிங்க தேவா என்றவள் ஒரு நொடி யோசித்து பின் தேவா நீங்க ஒன்னும் தீக்ஷாவ..தீக்ஷாவ அனுப்பலையே என்றாள் குழப்பமாக..

    ஹாஹா..தீக்ஷாவையே தான் அனுப்பியிருக்கேன் ஆனா தீபக்கு அவ கழுகா இருக்கவும் கண்டு பிடிக்க முடியல.

    இன்னேரம் என் அண்ணன என்ன பாடு படுத்திட்டு இருக்காளோ ஆண்டவா என் அண்ணாவ காப்பாத்து இறைவனிடம் அவசர வேண்டுதலை வைத்தாள் ஹிரண்யா அண்ணனுக்காக.

    இறைவனிடம் வேண்டுதல் வைத்து கொண்டிருந்தவளை பவளா என்றழைத்தான்  அற்புதன் மென்மையாக.அந்த அழைப்பு உயிர்வரை சென்று தாக்க மீண்டும் அவன் மார்புக்குள் பதுங்கி கொண்டாள் துளிர்த்த கண்ணீரை மறைத்து கொள்வதற்காக.

    கல்யாணம் பண்ணிக்கலாமா பவளா என மார்பில் புதைந்து கிடந்தவளை கேட்க சட்டென்று தலை நிமிர்ந்து மாயவன் முகத்தை பார்த்தாள் அற்புதனின் பவளாகினி.

    இப்போவே பண்ணிக்கலாம் தேவா என விழி மூடி அவள் சம்மதமளிக்க அவளை அணைத்தபடி விரல் சுண்டி சொடுக்கிட்டான் அற்புதன்.அடுத்த நொடி அருவிக்கு நடுவே உள்ள பாறையில் மணமேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருக்க அதனின் முன்பாக அக்கினி ஜுவாலை எரிந்து கொண்டிருக்க மந்திரம் போட்டவன் மெல்லிடையாளை அழகிய தேவ மங்கையை போல மாற்றினான்.

    தானும் ராஜ குமாரனாக மாறியவன் அங்கதியவளை கையில் ஏந்தி கொண்டு நதி நீரில் கால் வைக்க இரண்டாய் பிரிந்த நதிநீரானது வழிவிட்டு நிற்க நடுபகுதி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாலை போலானது..

    நடுவே மலர்பாதை இருமருங்கிலும் நீரோடையென காணக்கிடைக்கா காட்சியில் மகிழ்ச்சி கொண்ட மீன்கள் மன்னவனை வரவேற்கும் விதமாக ஒரு புறமிருந்து மறு புறம் துள்ளி குதித்து விளையாடின.

    கெட்டி மேளம் இன்றி ஐயர் இன்றி மந்திரங்கள் இன்று தன்னவள் சங்கு கழுத்தில் மங்கள நாணேற்றி தன் உரிமையை நிலை நாடிட்டி கொண்டான் மாயங்களின் ராஜ குமாரனவன்.

    பூர்வ ஜென்மத்தில் விட்ட குறையை புணர் ஜென்மத்தில் தொடர்ந்து விட செல்வியாய் இருந்தவள் திருமதி அற்புதனாய் பதவி உயர்வு பெற்றாள்.

    சபாஷ்... நாங்க நினைச்சது சரியா தான் இருக்கு மறுபடியும் மந்திர ராஜ குமாரன் ஒரு கீழ் ஜாதி காரிய ரகசிய திருமணம் செஞ்சிட்டாரு போலையே எள்ளலாக கேட்டபடியே வந்து நின்றான் தீரண் அவன் அருகில் வாயில் ரத்தம் வடிய நின்றிருந்தான் தீபக்.

    கண்களில் மின்னிய குரூரத்துடன் நின்றாள் தாரிஹா..அவளின் முகம் சிவந்து போய் கண்கள் பச்சை வர்ணத்தில்..உடையோ தரையை கூட்டும் படியாக கருப்பு நிற அங்கி..அழகாய் பின்னப்பட்டிருக்கும் அவளது கார் கூந்தல் இப்பொழுது  கட்டவிழ்ந்து கிடந்தது.. நீண்டு வளரந்திருந்த நகங்களில் கரு நிற நகப்பூச்சு.. கண்களில் அடர்ந்த கரு மை என மொத்ததில் ஒரு சூனியக்காரியாகவே நின்றிருந்தாள் தாரிஹா.

    யார பார்த்து கீழ் ஜாதி காரினு சொன்னே..சொன்ன நாக்க இழுத்து வச்சி அறுத்திடுவேன் ஜாக்கிரதை..என்று கொந்தளித்தாள் ஹிரா...

    ஹோ.. என் கிட்டேய குரல உயர்த்தி பேறசுற  அளவுக்கு இந்த ராஜ குமாரன் தைரியம் கொடுத்து வச்சிருக்கானா..

    பின்னே வேற என்ன நினைச்ச தாரிஹா உன்னோட உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் பயந்து நடுங்கி உயிர விட நா என்ன பழைய பவளாகினினு நினைச்சியா..ஹிரண்யாடி.. எதுக்கும் பயப்பட மாட்டேன்.

    ஹாஹா நீ வேணும்னா ஹிரண்யாவா இருந்துட்டு போ ஆனா நா எப்பவும் அதே மோகினி தான்.. அப்ப மாதிரியே இப்போவும் உன்ன சாகடிக்க வந்த அதே மோகினி தான்.

    அண்ணா இன்னும் என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க அவ அண்ணன் கதைய முடிச்சிரு இவ பலம் தன்னால குறைஞ்சு போகும் என தன் அண்ணன் தீரணுக்கு கட்டளையிட்டாள் தாரிஹா எனும் மோகினி.

    தீபக்கை பார்த்து கத்தியை தீரண் ஓங்கிய நேரம் பறந்து வந்த கழுகு தீரணின் கையில் கொத்தி வைக்க.. வலியில் அலறியவன் கத்தியை தவர விட்டான்.

    அந்த கத்தியை மோகினி எடுக்க போக அது மாயமாய் மறைந்து போனது ராஜ குமாரன் போட்ட மந்திரத்தால்.

    தேவாஆஆ..ஆத்திரத்தில் மோகினி அற்புதனின் கழுத்தை பிடிக்க அற்புதனும் மோகினியின் கழுத்தை பிடித்தான்.

    காட்சிகள் மாறி அனைவரும் பூர்வ ஜென்மத்துக்குள் பயணப்பட்டார்கள்.

    நூறு வருடங்களுக்கு முன்.

    சோலையூர் கிராமத்தில் ஆதி காலம் தொட்டே பால்ய விவாகம் செய்து வைக்கும் முறைமைகள் தொடர்ந்து வந்தது.

    சிறு வயதிலேயே பெண்கள் வயது வித்தியாசமின்றி ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.ஜாதி பேதமும் அதிகாமா காணப்பட்ட காலமது..

    ஒரு அடிமை வம்சத்தில் பிறந்தவள் தான் பவளாகினி.. பன்னிரண்டே வயதான பேரழகி அவள் பிறந்தவுடனேயே தாய் இறந்து விட்டாள் தந்தையோ குடிகாரன்.அவளுக்கு இருக்கும் ஒரே உறவு அவள் அண்ணன் தீபேந்திரன் மட்டுமே.

    சிறுமியாக இருந்தாலும் பேரழகியாய் ஊரை வளம் வந்த பவளாகினி மீது அந்த ஊரின் ஆண்கள் ஏகப்பட்ட பேருக்கு இச்சையுண்டு அத்தனை பேரிடமிருந்தும் தங்கையை காப்பதே தீபேந்திரனுக்கு பெரிய சோதனை தான்.

    இப்படியிருக்க அவர்களின் குடிகார தகப்பன் ஒரு நாள் தங்கள் குடிச்சைக்கு குடிபோதையில் தள்ளாடி கொண்டே கை நிறைய பொண்ணும் பொருளும் கொண்டு வந்தான்.

    யப்போ ஏதுப்போ உனக்கு இம்புட்டு தங்க நக காசு எல்லாம்..எங்கனாச்சும் கொள்ளையடிச்சியா என்ன விவரம் தெரிந்த வயது என்பதால் தீபேந்திரன் தந்தையை கேள்வி கேட்க.

    வாய மூடுடா கிறுக்கு பய மவனே நா ஏன் களவாட போறேன்..இது நம்ம ஜமீன்தார் ஐயா குடுத்தாக..உன் தங்ச்சிய அவர்களுக்கு கட்டி குடுக்க சொல்லி இந்த பொருளெல்லாம் குடுத்தாக..

    எது தங்கச்சிய கட்டி வைக்கணுமா..உனக்கு பைத்தியமா தங்கச்சி சின்ன புள்ளை ஜமீன்தாரரு கிழவரு சாக போற வயசுல அவருக்கு சின்ன புள்ள கேக்குதோ..இங்க பாரு நீ மட்டும் பவளாவ ஜமீனுக்கு கட்டி குடுத்தனு வையி அப்பேன்னு கூட பார்க்க மாட்டேன் தலைய சீவி புடுவேன் பாத்துக்க அருவாளை தூக்கி தங்கையை காக்க ஐயனார் போல நின்றிருந்த தீபேந்திரனை காண அவன் தந்தைக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாது நின்றவன்.

    ஐயோ சாமி புத்தி கெட்டு போய் அப்படி செஞ்சுபுட்டேன் நீ எதுக்கு இவ்வளவு கோவ படுறவ அருவாள எறக்கு உன் தங்கச்சிக்கு நீயே நல்லவனா பார்த்து கட்டி வையி என உள்ளுக்குள் வேறு ஒரு திட்டத்தோடு அங்கிருந்து நகர்ந்து சென்றான் பவளாகினியின் தந்தை.

    தொடரும்..

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 06

    டேய் இந்திரா..மவனே இந்திரா கொஞ்சம் இங்கன வாலே என விறகு வெட்டி கொண்டிருந்த தீபேந்திரனை அழைத்தான் அவனின் தந்தை.

    என்னப்பா விறகு வெட்டி கொண்டிருந்த கோடாரியை தோளில் வைத்து ஒரு தினுசாக நின்றவனை பார்க்கவே அப்பன் காரனுக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

    ராசா வூட்டுல சோறு பொங்க அரசி இன்னைக்கு மட்டும் தான் இருக்கு பக்கத்து ஊர்ல போய் வாங்கியாறியா..

    ஏன் நம்ம ஊர்ல அரசிக்கு பஞ்சமா இல்ல நெல்லுக்கு தான் பஞ்சமா..அசலூர்ல போய் வாங்கியாற சொல்ற..

    நம்மூரு அரிசில தான் கல்லு கிடக்குனு நேத்து தானல சத்தம் போட்ட பொறவு அதையே இன்னைக்கு எப்படி பொங்குறதாம் போவ விருப்பம் இல்லாட்டி இங்கேயே கெட உந்தங்கச்சி தான் சிரம பட போறா எனக்கென்ன வந்துச்சு மகனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அப்பன் சொல்ல..

    தங்கை என்ற சொன்ன பின்னும் அங்கு தீபேந்திரன் நிற்பான என்ன ஒரு சாக்கு பையை எடுத்து கொண்டு பக்கத்து ஊருக்கு அவன் பயணப்பட இங்கே அப்பனோ வேலை செய்து கொண்டிருந்த பவளாகினியை அழைத்தான்.

    ஏத்தா பவளா இங்க கொஞ்சம் வாமா..

    என்னப்பா குடிக்க மோர் தண்ணி கொண்டாரட்டுமா என அவன் முன்னால் வந்து நின்ற பவளாவிடம் இந்தா இந்த புது துணிய போட்டுக்கிட்டு எங்கூட கிளம்பி வா நாம ஒரு எடத்துக்கு போவோம்.

    ஹாங் நீ எது குடுத்தாலும் வாங்க வேணா எங்க கூப்புட்டாலும் அண்ணே போவேணானு சொல்லிருக்கே என்றாள் உதட்டை பிதுக்கி.

    அடி கழுத அண்ணே சொல்றது கேப்ப அப்பன் சொல்றத கேக்க மாட்டியா..நீ எங்கூட வந்தா உனக்கு இது மாதிரி புது துணி நெறைய குடுப்பாக.. வேளாவேளைக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு குடுப்பாக நீ நம்மூட்டுல மாதிரி வேல செய்ய வேணா உனக்கு எல்லா வேலையும் செய்ய வேல காரங்க இருப்பாங்க என பிஞ்சு நெஞ்சில் ஆசையை விதைக்க ஒன்றும் அறியா வயதில் அப்பன் சொன்னதை எண்ணி மகிழ்ந்தவள் அவன் கொடுத்த பட்டாடையையும் நகைகளையும் போட்டு கொண்டு அவனுடன் சென்றாள்.

    அங்கே ஜமீன் மாளிகையில் ஜமீன்தார் எனப்படும் கிழமொன்று பொக்கை வாயை பிளந்து புன்னகைத்த படி மணவறையில் அமர்ந்திருக்க அந்த கிழ நரியின் அருகில் பித்தா பித்தாவென விழித்த படி அமர்ந்திருந்தாள் அப்பாவி பவளாகினி.

    ஜமீன்தாரின் கடைசி தம்பி மற்றும் தங்கையான தீரணும் மோகினியும் கூட முப்பத்திரண்டு பற்கள் தெரிய சிறித்த படி வந்தவர்களை வரவேற்ற படி நின்றிருந்தார்கள்.ஜமீன்தாரின் எத்தனையாவதோ மனைவிக்கு பிறந்த பவளா வயதேயான தீக்ஷா பவளா அருகிலேயே நின்றிருந்தாள்.

    ஏனோ அவளுக்கு தன்னை போலவே இருந்த பவளாவை அவ்வளவு பிடித்திருந்தது.

    வேகாத வெயிலில் அரிசியை சுமந்து கொண்டு ஊர் திரும்பி கொண்டிருந்தான் தீபேந்திரன்.அவன் ஊருக்குள் வந்ததும்  "ஏலேய் இந்திரா நீயென்னவே மூட்டைய தூக்கிட்டு வாரவ ஜமீன் பங்களாவுல உந்தங்கச்சிக்கு கண்டாலம் நடக்குது நீயென்டானா அரிசிய சொமந்துட்டு வார தங்கச்சி கண்ணாலத்த காண ஆச இல்லயாக்கும் உனக்கு..என ஊர் காரன் ஒருவன் தகவலை சொல்லிச் செல்ல  கோபத்தில் முகம் சிவந்தான் இந்திரன்.

    திட்டம் போட்டு என்ன அசலூருக்கு அனுப்பி வச்சிபுட்டு எ ராசாத்திக்கு கண்ணாலமா பண்ணி வக்கிற உன்ன சும்மா விட மாட்டேல உன்ன மாதிரி ஒரு அப்பன் இனி பூமில இருக்க கூடாது என்று பற்களை கடித்தவன் அருவாளை தூக்கி கொண்டு மாளிகை நோக்கி நடந்தான்.

    ஐயர் தாலி எடுத்து கொடுக்க இளித்து கொண்டே ஜமீன்தார் பவளா கழுத்தில் தாலி கட்ட அவளோ அது என்ன என்று கூட தெரியாது விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள்.

    சின்ன புள்ளைக்கு தாலி கட்டுறான் இவனெல்லாம் எங்க நல்லா இருக்க போறான் நாசமா தான் போவான்.பாடைல போற வயசுல மணமேடை கேக்குது இவனுக்கு இவங்க அக்கிரமத்துக்கு ஒரு அளவே இல்ல..பச்ச மண்ணுக்கு தாலி கட்றானே இவன் கட்டைல போவ..பவளாவை போல வாழ்க்கையை தொலைத்த பாவையர்கள் அனைவரும் மனதிற்குள் கருவிக்கொண்டே தூவிய அட்சதை அனைத்தும் அட்சதையாக அல்லாமல் ஜமீன்தார் வாயில் வாய்க்கரிசியாக தான் விழுந்தன.

    கோபத்தோடு சீறி வரும் இளஞ்சிங்கமாய் அவந்த இந்திரன் அரண்மனைக்குள் நுழையவும் நெஞ்சை பிடித்து கொண்டே ஜமீன்தார் கீழே விழுகவும் சரியாய் இருந்தது.அனைவரும் பதறி போய் பார்க்க ஜமீன்தாரின் உயிர் பிரிந்து விட்டது.

    ஐயோ ஐயோஓஓ இப்படி தாலி கட்டுன அடுத்த நிமிஷமே எங்கண்ண உயிர பரிச்சிட்டாளே பாதகத்தி நீ நல்லா இருப்பியா..மாரில் அடித்து கொண்டு அழுதாள் மோகினி.. வாசலில் அருவாளோடு நின்றிருந்த இந்திரனின் கையில் இருந்த அருவாள் நழுவி கீழே விழுந்தது இந்த காட்சியை கண்ட அதிர்ச்சியில்.

    கிழவனிடமிருந்து தங்கை தப்பித்தாள் என மகிழ்வதா இல்லை தாலி கழுத்தில் ஏறிய மறு நொடியே விதவையானவளை எண்ணி கவலை கொள்வதா என்றே புரியவில்லை அண்ணன் காரனுக்கு.

    ஊரார்களுக்கும் ஒரு புறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் ஒரு புறம் வேதனையாய் இருந்தது பவளாவை எண்ணி.இனி அவள் சாகும் வரையிலும் விதவை கோலத்தில் இந்த அரண்மனையில் தான் இருந்தாக வேண்டும்.இந்த அரண்மனை வாசலை அவள் தாண்ட வேண்டுமென்றால் பிணமாக தான் தாண்ட முடியும். பூக்கும் முன்னமே கருகி போன மொட்டாய் ஆனாள் பவளாகினி.

    பாடையில் கிடத்த பட்டான் ஜமீன்தார்.ஒன்றும் விளங்காமல் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்த பவளாவை அழைத்து வந்த மற்ற விதவை பெண்கள் தலையில் சூடிய பூவை பறித்தார்கள், நெற்றியில் வைத்த திலகத்தை அழித்தார்கள்,கைநிறைந்திருந்த கண்ணாடி வளையல்களை உடைத்தார்கள்,பட்டுச்சேலைக்கு பதில் வெள்ளைச்சேலை கொடுக்க பட்டது

    இவற்றையெல்லாம் கண்ணீரோடு செய்து கொண்டிருந்த பவளாவை உயிர் கருக பார்த்திருந்தான் தீபேந்திரன்.

    உண்மையில் இவையெல்லாம் எதற்காக செய்ய வேண்டும்.பூவும் பொட்டும் பெண்களுக்கு பிறந்ததுமே தாய் தந்த சௌந்தர்யம் அல்லவா.அதை ஏன் கணவன் இறந்து விட்டான் என்றதும் பறிக்க வேண்டும்.ஏனென்றால் திலகமிட்டால் உணர்ச்சிகள் தூண்டப்படுமாம்...புத்தி கெட்ட சமுதாயம் மனைவி இறந்து விட்டால் ஆண்களுக்கு இந்து மாதிரியான சடங்குகள் நடக்கின்றனவா..??

    மனைவி இறந்த பின்னர் ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம்.. பெண்கள் செய்து கொள்ள கூடாது... அப்படி செய்தால் குடும்ப மானம் போய் விடுமாம்.ஆண்களுக்கு மட்டும் உணர்ச்சிகள் உண்டு பெண்களுக்கு இல்லையா..?? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா..?

    "பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்பிள்ளை.."என்றொரு கூற்றுண்டு இதே புருஷன் செத்தா பொண்டாட்டி...?? ஒன்றுமில்லை சாதாரண விதவை அதுவும் மக்கள் வார்த்தையில் அமங்கலி.

    பூவைக்க தடை, பொட்டு வைக்க தடை,நகை அணிய தடை,பட்டுடத்த தடை,மற்ற ஆண்களுடன் பேச தடை, தொலைகாட்சியில் காதல் காட்சிகள் பார்க்க தடை,தலை நிமிர்ந்து நடக்க கூட தடை தான். ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தனை தடைச்சட்டங்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    சிறுவயது முதலே பூவையும் பொட்டையும் விரும்பும் பவளாகினி இன்று கதறி துட்டித்தாள் இனி அவளுக்காய் வகுக்கப்பட்ட சட்டங்களை கேட்டு.

    தங்கையவள் கண்ணீரை காண சகியாத அண்ணன் அப்பன் காரனை இழுத்து கொண்டு சென்றான் தன் குடிசையை நோக்கி.

    ஏலேய் கிறுக்கு பயலே எதுக்குடே இப்படி இழுத்துக்கிட்டு போற..நடந்தது நடந்து போச்சு அமங்கலியானாலும் நம்ம புள்ள அரண்மனையில ராணியா இருக்கானு சந்தோஷ படுவே.. அவள கூட்டியார முயற்சி பண்ணாத இனி அவ கட்ட தான் அங்கருந்து வெளிய வரும்..என்ற தந்தை வேகமாக குடிசைக்குள் தள்ளி விட நிலைதடுமாறி கீழே விழுந்தான் அவன் தந்தை.

    என்ன சொன்ன கட்ட தான் வெளிய வருமா இன்னைக்கு நல்லா கேட்டுக்க என் தங்கச்சி அந்த அரண்மனைய விட்டு வெளிய வந்த மறு நிமிஷம் அப்பேன்னு கூட பார்க்க மாட்டேன் உன் உசுர எடுத்துருவேன் உன்னோட ரெத்தம் தால என் தங்கச்சிக்கு நா கொடுக்குற வண்ண சேல உன் பொணத்த எரிக்கிகிற நெருப்ப சுத்து ஒரு ராச குமாரனோ என் தங்கச்சி கண்ணாலம் நடக்கும்ல இது செத்து போன ஆத்தா மேல சத்தியம்..இடி முழக்கம் போல கூறியவன் சட்டென்று வெளியே போய்விட மகள் வாழ்வு சீரழிந்த கவலை கூட இல்லாது ஒளித்து வைத்திருந்த கள்ளை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் அப்பனானவன்.

    நாட்கள் இப்படியே நகர தனிமையில் தன் விதியை நொந்த படி கிடந்த பவளாகினிக்கு தீக்ஷா மட்டுமே துணையாய் இருந்தாள். பவளாவிற்கு வழங்கப்படும் உணவில் கூட உப்பு காரம் இருப்பதில்லை காரணம் உணர்வுகளை அடக்க வேண்டுமாம்.இருந்தும் தனது உணவை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்து பவளாவிற்கு கொடுப்பாள் தீக்ஷா.

    அவ்வபோது தங்கையை காண சுவரேறி குதிக்கும் இந்திரனுக்கும் யாரும் அறியாதவாறு உதவியும் செய்வாள்.

    இப்படியிருக்க ஊரில் உள்ள குழந்தைகள் சிலர் மர்மமான முறையில் இறந்து போனார்கள்.. நன்றாக விளையாடி கொண்டிருக்கும் பிள்ளைகள் திடீரென மயங்கி விழுந்து உயிர் நீத்து போவார்கள்.

    அந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சி இறந்த பிள்ளையை பரிசோதித்து விட்டு என்ன நோய் என்றே கண்டறிய முடியவில்லை என்று கையை விரித்து விட மக்கள் கலங்கி போனார்கள்.நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் மர்ம காய்ச்சலை தடுக்க வழியறியாது துடித்தார்கள்.

    ஒரு நாள் அரண்மனையில் தீக்ஷாவோடு பவளா உறங்கி கொண்டிருக்க வித்தியாசமான சத்தங்கள் அவள் காதை வந்தடைந்தன மெதுவாக கண்விழித்தவள் சத்தம் வந்த திசையை நோக்கி பூனை நடைபோட்டு சென்றாள்.

    அங்கே ஒரு அறையில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது என தன் கண்டு கொண்டவள் அந்த அறை முன்பாக நிற்க அந்த அறை உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

    சாவித்துவாரத்தின் வழியே பவளா உள்ளே எட்டி பார்க்க அங்கே ஒரு கல்மேடையில் அரண்மனை வேலைக்காரனின் மகன் படுக்க வைக்க பட்டிருந்தான் மோகினி ஏதேதோ மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருக்க தீரணோ ஒரு சிறிய ஊசியால் அந்த சிறுவனின் கையில் குத்தி வழிந்த குருதியை ஒரு குப்பியில் பத்திர படுத்தி கொண்டான் பின் திடீரென்று எழுந்த சிறுவன் கதவருகே வர பவளா ஒளிந்து கொண்டாள்.

    கதவை திறந்து கொண்டு வந்த சிறுவன் அமைதியாய் சென்று தன் பெற்றோர் அருகில் படுத்து கொள்ள இதனை திரைச்சீலை மறைவில் இருந்த பவளா பார்த்து கொண்டிருந்தாள்.அறையில் இருந்து வெளியே வந்த மோகினி ஒரு நிமிடம் நடையை நிறுத்த அவளை ஏன் என்பதை போல பார்த்தான் தீரண்.

    திரைச்சீலையின் பின்னால் இருந்த பவளாவை அவள் கண்ணை காட்ட அதனை கண்ட தீரண் மோகினியை பார்த்து மர்மமாக சிரித்து கொண்டான்.

    தொடரும்....

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 07

    இந்திரனே நில்லுங்கள் கால் வலிக்கின்றது ஒரு சிறு பெண்ணை இப்படியா தங்கள் பின்னால் ஓடி வர வைப்பீர்கள் தங்களுக்கு இறக்கம் என்பதே இல்லையா என செந்தமிழில் செல்லம் கொஞ்சியவளை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தான் தீபேந்திரன்.

    இப்போ என்ன தான் சொல்ல வாரிங்க ராணியம்மா கடுப்புடன் வினாவியவனிடம்..வேற என்ன சொல்ல போறேன் என் காதல ஏத்துக்க சொல்ல தான் போறேன் என்றாள் ஜமீனின் இளைய ராணியான தீக்ஷா.

    ஹாஹா...காதல பணத்தாசை புடிச்ச ஜமீன் வம்சத்தில உள்ளவங்களுக்கு காதலிக்க கூட வருமா என்ன.ஏற்கனவே உங்க விருப்பத்துக்கு ஆட்டம் போட்டு என் தங்கச்சி வாழ்க்கைய நாசம் பண்ணிட்டிங்க இப்போ என்னோட வாழ்க்கையவும் நாசம் பண்ண பாக்குறியா என தீக்ஷாவின் இதயத்தை கத்தியின்றி காயம் செய்து விட்டு இந்திரன் செல்ல தீக்ஷாவோ காதல் தோல்வியால் கலங்கி போய் நின்றாள்.

    தீக்ஷா அரண்மனையின் ஒரே வாரிசு..தீக்ஷாவிற்கு சகோதரர்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை அத்தை மோகினி சித்தப்பா தீரணை தவிர அந்த அரண்மனையில் அவளுக்கென்று ஒரு உறவும் இல்லை தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள் தந்தை இறந்த சமாச்சாரம் நாம் அறிந்த ஒன்றே.

    ராஜா வீட்டு கண்ணு குட்டியாய் வளர்ந்தவள் கட்டளையிட்டால் ஜமீன் சாம்ராஜ்யமே அவள் காலடியில் கிடக்கும் ஆனால் அவள் கட்டளையிட்டால் தானே..ராணியாக வளரந்தாலும் அவள் எளிமை விரும்பி ஆண்டான் அடிமை வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் பழக கூடியவள்.அனைத்தும் இருந்து என்ன பயன் அவள் தேடும் அன்பும் அரவணைப்பும் யாரிடமும் கிடைக்கவில்லையே.

    இந்திரன் பவளாவின் மீது கொண்டுள்ள பாசத்தை கண்டு தனககும் இது போல் அன்பு செலுத்த யாரும் இல்லையே என ஏங்கிப்போனவள் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் செடி துளிர்க்க ஆரம்பித்தது.அதை அந்த முரட்டு பயலிடம் சொன்னால் பாவி மகன் உதாசீனம் செய்து விட்டு செல்கிறான்.

    வீதியில் நின்று கொண்டிருந்த தீக்ஷா கண்ணை துடைத்து கொண்டே அரண்மனைக்கு வந்தாள்.இப்போது அவளுக்கு இருக்கும் உண்மையான உறவு பவளா மட்டுமே..ஆகவே அவளை தேடி அவள் அறைக்கு ஓட பவளாவோ திறந்திருந்த சாரளத்தின் வழியே தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த வேலைக்காரனின் மகனையே பார்த்து கொண்டிருந்தாள்.

    அவள் அந்த சிறுவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்தை அவனின் பெற்றோரும் கவனித்து கொண்டு தான் இருந்தார்கள்.

    பவளாஆஆ... பாவாடை தாவணியை இடுப்பில் சொருகி கொண்டு ஓட்டமாய் ஓடிவந்து தோழியிடம் குற்ற பத்திரிகை வாசித்தாள் தீபேந்திரனை பற்றி.

    உங்க அண்ணன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காரு..கொஞ்சமாச்சும் என் காதல் அந்த மறமண்டைக்கு புரியவே இல்ல.. நீயாச்சும் கொஞ்சம் எடுத்து சொல்லேன் என்க..சரி தீக்ஷா அண்ணா கிட்ட பேசி பாக்குறேன் என கூறிய பவளா பார்வையை மட்டும் அந்த சிறுவன் மீது தான் பதித்திருந்தாள்.

    அந்த பையன எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்க பவளா என தீக்ஷாவும் அவனை பார்க்க.. உனக்கு எதாவது வித்தியாசமா தெரியுதா தீக்ஷா என்றாள் பவளாகினி.

    இல்லையே எனக்கு ஒன்னும் தெரியலையே ஏன் அப்படி கேக்குற...

    இல்ல நல்லா பாரு அந்த பையன் எப்பவும் போல இல்ல இன்னைக்கு ரொம்ம சோர்வா இருக்க மாதிரி எனக்கு தெரியுது..அவன் கண்ணுல துடிப்பு இல்ல என பவளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த சிறுவன் மயங்கி விழுந்தான்.

    ஐயோ அந்த பையன் மயங்கிட்டான் போல வா போய் என்னனு பார்ப்போம் என பவளா விரைய அவளை தடுத்தாள் தீக்ஷா..

    நீ வெளிய வந்தா எல்லாரும் திட்டுவாங்க பவளா நீ இங்கேயே இரு நா போய் என்னனு பார்த்துட்டு வாறேன் என்று தீக்ஷா ஓடினாள் கீழே...

    சிறிது நேரத்தின் பின்னர் ஊர் பெண்கள் சிலர் அதிரடியாக பவளாவின் அறைக்குள் நுழைந்து அவள் கூந்தலை பிடித்து இழுத்து வந்தார்கள் அரண்மனை வாயிலுக்கு.

    பவளாவ விடுங்க அவள எதுக்கு இப்படி இழுத்துட்டு வாறிங்க என தீக்ஷா ஓடி வர அவளையும் சிலர் பிடித்து கொண்டனர்.

    அத்தே...பவளாவ விட சொல்லுங்க சித்தப்பா நீங்களாவது சொல்லுங்க என தீக்ஷா கெஞ்ச..அமைதியா இரு தீக்ஷா குட்டி உனக்கு ஒன்னும் தெரியாது இவளால தான் இந்த பையன் இறந்து போய்ட்டான் பாரு என சொல்ல அதிர்ந்து போய் பார்த்தாள் பவளா இங்கே அந்த சிறுவன் பாடையில் கிடத்த பட்டிருக்க அவனின் பெற்றோர் கதறி துடித்து கொண்டிருந்தார்கள்.

    இல்ல..எனக்கு எதுவும் தெரியாது நா அந்த பையன எதுவும் பண்ணல நேத்து ராத்திரி இவங்....எனும் போது ஏய்....என்ன நடிக்கிறியா ஜமீன்தார் செத்ததுமே உன்னையும் உடன் கட்டை ஏத்தியிருக்கனும் அப்படி செய்யாததால தான் இன்னைக்கு நீ சாபம் விட்டு ஊரையே சுடுகாடா மாத்திட்டு இருக்க என அவளை பேச விடாது இடை புகுந்து குதித்து கொண்டிருந்தாள் மோகினி.

    சா..சா..ப..மா? நா..எ..என்ன...சாபம் வி..ட்டே..ன் பயத்தில் தொண்டை வரண்டு பேச்சு கூட வர மறுத்தது பவளாவிற்கு.

    நீதான் உன் வாழ்க்கை நாசமா போன வேதனைல இந்த ஊர் நல்லா இருக்க கூடாது..இங்க உள்ள ஜனங்க நல்லா இருக்க கூடாதுனு சாபம் விட்டுட்ட அதான் ஊர்ல உள்ள பிள்ளைங்க எல்லாம் மர்மமா செத்து போவுதுங்க என தன் தவறை மறைக்க பழியை பவளாகினி மீது போட்டாள் மோகினி.

    இல்ல நா அப்படியெல்லாம் செய்யல நா எப்பவும் இந்த ஊர் நல்லா இருக்கனும்னு தான் நினைப்பேன் நா எந்த சாபமும் குடுக்கல என பவளா ஊரார் முன் கதறி துடிக்க.. விஷயம் அறிந்து தீபேந்திரனும் ஓடி வந்தான்.

    டேய் எவன்டா அவன் எந்தங்கச்சி மேல கை வச்சவன் என் முன்னால வாங்கல தல தனியா முண்டம் தனியா ஆக்குறேன் வீச்சருவாளை ஏந்தி சீறிக்கொண்டு வந்து வீரு கொண்ட சிங்கமொன்று.

    அந்த நாய இழுத்து கட்டி போடுங்கடா என தீரண் கட்டளையிட அரும்பாடு பட்டு தீபேந்திரனை கட்டி போட்டனர் சில ஆண்டுகள்.

    ஏலே ராசு இங்கன வாலே வந்து என்ன நடந்துச்சுனு ஊர் காரங்க கிட்ட சொல்லு..என மோகினி இறந்த பிள்ளையின் தந்தைய அழைக்க அவனோ வாயை பொத்தி அழுத படி ஊரார் முன்னிலையில் வந்து நின்றான்.

    ஐயு காத்தால இருந்து இந்த ஜமீனம்மா மேல உள்ள சன்னல் வழியா எம்மவனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கிட்டு கிடந்தாக..நானும் எம்பொஞ்சாதியும் கண்டு காணாம இருந்துபுட்டோம் கொஞ்ச நேரத்துல எம்மவன் மயங்கி கீழ விழுந்துபுட்டான் என்னனு நாங்க பதறியடிச்சு போய் பார்த்தா புள்ள செத்து போய் கிடக்கான் சாமி...ஒத்த புள்ளைய இப்படி அள்ளி குடுத்துட்டு நிற்கோம்...

    இல்ல நம்பாதிங்க அந்த பையன் சோர்ந்து போய் இருக்கான்னு சொன்னதே பவளா தான் அவன் சாவுக்கும் பவளாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என போராடிக் கொண்டிருந்த தீக்ஷாவின் வாதம் யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல அன்னைத்தும் வீனாய் தான் போனது.

    சூனியக்காரியின் சூழ்ச்சியை ஊர் நம்பியது சிறுவர்களுக்கு வரும் மர்ம காய்ச்சலுக்கு காரணம் பவளா விட்ட சாபமே என ஒன்று கூடி முடிவெடுத்த ஊரார்கள் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை தெய்வத்திடமே விட்டு விட்டனர்.

    ஊர் கோடாங்கி வரவழைக்கப்பட்டு குறி கேட்டு ஊர் மக்கள் நிற்க ஏற்கனவே பணம் கொடுத்து தயார் படுத்தி வைக்கப்பட்டிருந்த கோடாங்கியோ போலியாக சாமியாடினான்.

    ஊருக்கு கெட்ட காலம் பொறந்துருக்கு மக்கா....கேடு வர போவுது ஒரு கன்னி விட்ட சாபம் ஊர ஆட்டி படைக்கிது...புள்ளை குட்டியெல்லாம் நோய் வந்து சாவுது... இதுக்கு தீர்வு வேணும்னா..அந்த கன்னிய மொட்டையடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர விட்டே ஒதுக்கி வைங்கடா இல்லன்னா உயிர் சேதம் அதிகமாகும்..என்று கோடங்கி தனக்கு கூறப்பட்டதை அச்சு பிசகாமல் ஒப்புவிக்க ஊரார்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

    சிறியவளாக இருந்தாலும் அழகியாக இருந்த பவளாகினி மீது எப்போதும் மோகினிக்கு பொறாமை உண்டு.அவள் அழகின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவள் அந்த அழகை சிதைக்கவே இப்படியொரு திட்டம் வகுத்து விட்டாள்.அதற்காக தானே இத்தனை பலி கொடுக்கிறாள் என்றும் மாற இளமையுடனும் அழகுடனும் இருக்க வேண்டும் என்று ஆசை கொண்ட மோகினி மந்திரங்களை கற்று சிறுவர்களின் ஆத்மாவை துஷ்ட்ட சக்திகளுக்கு காணிக்கியாக்கி தவம் செய்கின்றாள் இதற்கு அவள் அண்ணன் தீரணும் உடந்தை வேறு.

    முன்பு பூ தான் பறிக்க பட்டது இப்பொழுது அழகிய கூந்தலும் சிரைக்க படுகின்றது அந்த அபலை பெண்ணுக்கு.கண் முன் தங்கைக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க முடியா அண்ணனாய் துடித்து கொண்டிருந்தா இந்திரன்.உயரற்ற ஜடமாய் மற்றவர்கள் இழுப்புக்கு இசைந்து கொடுத்தபடி இருந்தாள் பவளா.

    இதோ மொட்டையடித்தாயிற்று அப்பழுக்கற்ற பூவதனத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியாகி விட்டது..கழுதை மேல் ஏற்றப்பட்ட காட்டு பக்கம் துரத்தியடிக்கப்பட்டாள் சிறு பெண்.தீக்ஷா இந்திரன் இருவரின் கத்தலும் கதறலும் காற்றோடு காற்றாய் கரைந்து போனது.

    ஊரார் முன் ஊர்வலமாய் கழுதையில் அவள் போய் கொண்டிருக்க மூன்று முறை அவள் காரி உமிழ்ந்த ஊர்க்காரர்கள் அவள் பின்னாலேயே சாணத்தை கரைத்து தெளித்து கொண்டு காடுவரை சென்று பவளாவை விட்டுவிட்டு இல்லையில்லை துரத்தி விட்டு வந்தார்கள்.

    மூடநம்பிக்கையில் ஊறிப்போன முட்டாள் சமூகம் சூனியக்காரியை ஊரில் வைத்து கொண்டு அப்பாவி பெண்ணை காட்டுக்கு துறத்துகிறது.மகளுக்கு நடந்த அக்கிரமத்தை தட்டி கேட்க வேண்டிய தகப்பனவனோ மூக்கு முட்ட கள்ளை குடித்து விட்டு மூலையில் மல்லாக்க கிடந்தான்.

    பவளா சென்ற பின் இந்திரனும் தீக்ஷாவும் விடுவிக்க பட்டார்கள் பவளாகினியுடன் பேச்சு வார்த்தை வைத்து கொள்ளும் யாராய் இருந்தாலும் அவர்களுக்கும் பவளாவிற்கு வழங்கப்பட்ட அதே தண்டனை வழங்கி காட்டுக்கு துரத்த படுவார்கள் என்று சட்டம் போட அவளை எண்ணி துடித்து போனது இரண்டு ஜீவன்கள் தான்.

    இனி நீ அவள பார்க்கவே கூடாது வா தீக்ஷா என தீக்ஷாவை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் மோகினி.

    காட்டுக்குள் பவளாவை சுமந்து சென்ற கழுதை ஒரு குகையின் முன்னால் நின்றது.விதியை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டே அந்த குக்கைக்குள் அவள் காலடி எடுத்து வைக்க வெளியே துவண்டு போய் நின்ற அந்த கழுதையை பார்க்கவே அவளுக்கு பாவமாய் இருந்தது.

    அதையும் தன்னோடு கூட்டிக்கொண்டு சென்றவள் இலை குழைகளை உடைத்து வந்து குகையை கூட்டி சுத்தம் செய்தவள் அந்த கழுதையை அங்கே கட்டி வைத்து விட்டு காட்டில் அலைந்து திரிந்து சில பழங்களை பறித்து வந்தாள் கழுதைக்கும் சிலதை கொடுத்தவள் தானும் கொஞ்சம் உண்டு விட்டு கல்லில் தலை சாய்த்து கண்ணயர்ந்தாள்.

    தொடரும்.....

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 08

    பவளா காட்டிற்கு சென்ற ஒரு வாரத்திலேயே மோகினியின் ஆட்டம் ஆரம்பமானது.ஊரில் உள்ள சிறுவர்கள் மீண்டும் இறந்து போனார்கள்.மக்கள் பதறி துடிக்க பவளா சூனியக்காரி ஆகிவிட்டாள் என ஊருக்குள் ஒரு புரளியை பரப்பி விட்டான் தீரண்.

    மக்கள் நம்பிக்கைக்காக சில குறலி பேய்களை இரவு நேரத்தில் ஊருக்குள் மோகினி ஏவி விட பயந்து போன ஜனங்கள் ஆறு மணிபட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கொண்டார்கள்.

    தீக்ஷாவால் முன்பை போல வெளியே செல்ல முடியாது ஏகப்பட்ட கட்டுபாடுகள் தங்க கூண்டில் வளரும் கிளியாகி போனாள் தீக்ஷா.தீபேந்திரனோ தங்கையின் வாழ்வை காக்க ஏதேனும் வழி கிட்டுமா என ஊர் ஊராக அழைந்து திரிந்தான்.

    அந்த சமயம் அவன் அறிந்த ஒரு தகவல் தான் மந்திர ராஜ குமாரன் பற்றி.மாயாஜால உலகின் ராஜ குமாரன் அவன் சொல்ல போனால் பூமிக்கு வந்த ஆண் தேவதா அவன் அற்புத தேவன்.

    பக்கத்து ஊர் கோவிலில் சோகமே உருவாய் இந்திரன் அமர்ந்திருக்க அங்கே வந்த ஒரு சிவனடியார் அவனை கண்ணுற்றார்.

    தம்பி ஏன்ப்பா இவ்வளவு சோகமா இருக்க உன்னோட கவலைக்கான காரணத்தை சொல்லு என்னால முடிஞ்ச உதவிய உனக்கு செய்றேன் என அந்த சிவனடியார் இந்திரனின் அருகில் அமர்ந்து கேட்க..

    தங்கை வாழ்வில் நடந்த அத்தனை அக்கிரமங்களையும் அவன் கூறிட அந்த அடியாருக்கும் வருத்தமாய் போனது பவளாவின் கதையை கேட்டு.

    சரிப்பா உனக்கு உதவி செய்றதுக்காக நா ஒருத்தர சொல்றேன் அவர போய் பாரு உன் தங்கச்சி நிச்சயமா ஒரு நீதி கிடைக்கும் என்றிட தீபேந்திரன் கண்ணில் ஒரு நம்பிக்கை பிறந்தது.

    இந்த ஊருக்கு வடக்கு பக்கமா ஒரு சமஸ்தானம் இருக்கு அதோட ராஜ குமாரன் பேர் அற்புத தேவன் மாய மந்திரத்துல கைத் தேர்ந்தவர் அவர போய் பாரு நல்லதே நடக்கும் என்று அந்த சிவனடியார் சென்று விட அற்புத தேவனை தேடி பயணப்பட்டான் இந்திரன்.

    அற்புதனின் அரண்மனை முன்பாக சிலர் பாமர மக்கள் கூடி நின்றார்கள் அவன் வருக்கைக்காக.

    கண்களில் குறும்பும் இதழில் புன்னகையுமாய் வந்தவர்களை இன்முகமாய் வரவேற்றான் இருபது வயது அழகன் ஒருவன்.தேவ மங்கையரும் கூட சொக்கி போகும் ஆணழகனவனிடம்  தங்கள் குறையை கொட்டி தீர்த்தார்கள் சோலையூர் மக்கள்.

    வணக்கமுங்க ராசா என்று பணிவுடன் ஒரு பெரியவர் அற்புதன் முன்னால் வந்து நின்ற.. நானும் உங்களில் ஒருத்தன் தான் அதிக படியான மரியாதை வேண்டாம் உங்க வீட்டு பிள்ளை போல எண்ணி உங்க பிரச்சினைய சொல்லுங்க என்றவனை பெருமை பொங்க பார்த்தார்கள் ஊரார்கள்.

    ஒன்றுமில்லைங்க தம்பி என்ற பெரியவர் பவளாகினியை பற்றி கூற சிறிது யோச்சித்தவன் சரி நீங்க எல்லாரும் கிளம்புங்க இன்னைக்கே உங்க ஊருக்கு நா வாரேன் என வாக்கு கொடுக்க அவர்களும் நம்பிக்கையோடு கலைந்து சென்றார்கள்.

    என்னோட தங்கச்சி ஒன்னும் சூனியக்காரி இல்ல அவங்க எல்லாரும் பொய் சொல்றாங்க...அரண்மனைக்குள் நுழைய போனவன் திரும்பி பார்க்க அவன் பின்னால் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தான் இந்திரன்.

    நீங்க..?கேள்வியாய் அற்புதன் புருவம் சுருக்கி பார்த்த படியே தண்ணீர் கொடுத்தான் இந்திரனுக்கு.அதனை வாங்கி குடித்த இந்திரனோ " நான் தான் பவளாகினியோட அண்ணன் தீபேந்திரன் என் தங்கச்சி ரொம்ப அப்பாவி அவ வாழ்க்கைய இந்த ஊரே சேர்ந்து தான் நாசமாக்கிடுச்சு என அவனும் தன் பக்க நியாயத்தை எடுத்து கூற.. சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தான் அற்புதன் அவன் மனக்கண்ணில் கள்ளம் கபடமற்ற பவளாவின் முகம் வந்து போனது..பின் மோகினியின் முகமும் வந்து போக உண்மை நிலவரம் உணர்ந்தான் மந்திர ராஜ குமாரன்.

    இப்போவே உங்க ஊருக்கு கிளம்பலாம் என்றவன் இந்திரனின் கைப்பிடித்தவாறு மந்திரம் போட அடுத்த நொடி இருவரும் சோலையூரில் இருந்தார்கள்.

    தீபேந்திரனை அவன் வீட்டிற்கு அனுப்பி வைத்த ராஜ குமாரனோ ஜமீன் அரண்மனைக்கு முதலில் சென்றான்.

    அண்மனையை அவன் சுற்றும் முற்றும் நோட்டமிடும் போதே ஏதோ சாத்தான் வாடை வீசுவதை போல இருந்தது அவனுக்கு.

    மாடியில் இருந்து சர்வ அலங்காரங்களுடன் இறங்கி வந்தாள் மோகினி..அவளை சுற்றி கரும்புகை கூட்டம் நன்றாகவே ராஜ குமாரன் கண்களுக்கு தெரிந்தது.மோகினி இப்பொழுது தான் சூனியங்களை பழகி கொண்டு வருகின்றாள் அவளுக்கு மந்திர ராஜ குமாரன் அளவிற்கு சக்திகள் இல்லையென்றாலும் அவளை சூழ எப்பொழுதும் துஷ்ட்ட சக்திகளின் வாசம் இருக்கும்.

    மந்திர ராஜ குமாரனை அடைந்து அவனது சக்திகளையும் பெறுவதற்கே இந்த சதி திட்டம்.பவளாவை சூனியக்காரி என்றால் ஊர் மக்கள் பயப்படுவார்கள் எப்படியும் மந்திர ராஜ குமாரனை இங்கு வர வைத்து விடலாம் என்று கணக்கு போட்டு அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியே பெற்றன.

    இந்த அப்பாவி பெண்ணின் அரண்மனையில் மந்திர ராஜ குமாரனா.. நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ தங்களின் பாதம் எங்கள் மாளிகையில் படுவதற்கு..அங்க நளினங்களுடன் அவள் பேசிக்கொண்டிருக்க ஏனோ முதல் சந்திப்பிலேயே அவளை அருவருத்தான் அற்புதன்.

    சரி தான் தேவி புண்ணியமா இல்லை பாவமா என்று பொறுத்திருந்து காணலாம்..என நக்கலாக உரைத்தவன் அரண்மனையில் இருந்து வெளியேற போன சமயம் தீரண் வந்தான்.

    வேகாத வெயில்ல வந்திருக்கிங்க அரண்மனையில தங்கி ஓய்வெடுத்துக்கோங்களே என்றிட..

    இல்ல நா காட்டுக்கு போகனும் என்றாள் அற்புதன்.

    காட்டுக்கா..?காட்டுக்கு யாரும் போக கூடாதுனு ஊர் உத்தரவு இருக்கு.. மோகினி முன்னால் வந்து அவனை தடுக்க பார்க்க..

    உத்தரவு போட்ட ஊர் ஜனங்கள் தானே என்ன இங்கே வர வச்சாங்க.. காட்டுக்கு போகாம சூனியக்காரிய எப்படி நா அழிக்க முடியும் என்றவன் நொடியும் தாமதிக்காது மந்திரத்தை போட்டு மறைந்து விட்டான்.

    மந்திர ராஜ குமாரன் கண்டு பிடிச்சிட்டா என்ன பண்றது மோகினி.. தீரண் யோசனையாய் கேட்க... கண்டிப்பா கண்டு பிடிக்க மாட்டாரு அதுக்கு ஏற்கனவே நா ஒரு ஏற்பாடு பண்ணி வச்சிட்டேன் என அகோரமாய் சிரித்தாள் மோகினி.

    இங்கே மந்திர ராஜ குமாரன் காட்டில் காலடி எடுத்து வைக்க எங்கிருந்தோ வந்த கருப்பு நிற ஓநாய் அவன் மேல் பாய்ந்தது.

    மிருகங்களையும் நேசிக்கும் அந்த நல்லவனால் வெறி கொண்டு தன்னை தாக்கும் ஓநாயை எதிர் கொள்ள முடியாதபடி அவன் விழித்து கொண்டிருந்த நேரம் அவன் கழுத்தை கடிப்பதற்காக வந்து ஓநாய் எதையோ கேட்டு திடுக்கிட்டு வந்த வழியே ஓடியது.

    அற்புதன் பக்க வாட்டில் திரும்பி பார்க்க முகத்தை மறைத்து முக்காடிட்ட படி எங்கேயோ கிடந்த ஒரு தகற துண்டில் கம்பி ஒன்றை வைத்து தட்டிக்கொண்டிருந்தாள் பவளாகினி.

    அந்த சத்தத்தில் அதிர்ந்து ஓநாய் ஓடி விட உடலில் சிறு சிறு காயங்களுடன் எழுந்து நின்ற அற்புதன் முன்பு வந்து நின்றாள் பவளா.

    அவள் ஏதாவது பேசுவாளா என்று அவன் காத்திருக்க பேசினால் பிரச்சினை வந்து விடுமோ என்று அவள் பயந்திருக்க இருவருக்கும் மேலே மரத்தில் தொங்கி கொண்டிருந்த சேட்டை பிடித்த குரங்கொன்று மரத்தில் இருந்து தொப்பென்று கீழே குதித்தது.

    அது குதித்த வேகத்தில் ஐயோ அம்மா என்று கத்திகொண்டே பவளா நிலை தடுமாறி பூக்குவியலாய் அற்புதன் மீது விழுந்தாள்.

    விழியோடு விழி மோதிக்கொள்ள சிதைந்து போய் கிடந்த சிறு பெண்ணவள் கூட பேரழகியாக தான் தெரிந்தாள் மாயவன் கண்களுக்கு.

    அது வந்து மன்னிச்சிடுங்க தெரியாம தடுமாறி விழுந்துட்டேன் என அவன் மீதிருந்து அவசரமாய் எழுந்தவள் விலகியிருந்த தன் முக்காடை போட்டு கொள்ள அதுவோ காற்றில் பறந்து அவளை பாடாய் படுத்தியது.

    காற்று மட்டுமா காரணம்  அவள் முகத்தை காண ஒருவன் போட்ட மந்திரம் கூட காரணமாய் இருக்கலாம். 

    இதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாதவள் குகையை நோக்கி ஓட போக அவள் கையை பிடித்தான் அற்புதன்.இதுவரை நிகழாத வேதியல் மாற்றங்கள் எல்லாம் பவளாவின் உடலில் நிகழ்ந்திட புதிதாய் ஒரு ஆடவன் தன் கரத்தை பற்றியிருப்பதே அவளுக்கு சங்கடமாய் இருந்தது.

    எங்கே ஓட பாக்குற நீ தானே அந்த சூனியக்காரி பவளாகினி...குழந்தைங்க உயிரையெல்லாம் எடுக்கிறியாமே பேய் பிசாசெல்லாம் ஏவி விடுறியாம் பொய் கோபத்துடன் அற்புதன் அவளை மிரட்ட அவளோ விரக்தியாக புன்னகைத்தாள்.

    ஓ இப்போ ஊருக்குள்ள சூனியகாரினு வேற எனக்கு பட்டம் குடுத்துட்டாங்கலா..என்றவளின் முகத்தில் இருந்த வருத்தம் ஆணவன் உள்ளத்தில் வலியை ஏற்படுத்தியது.

    ஆமா..ஆனா நா எதையும் நம்பவே இல்ல என்றான் அவள் கரத்தை பிடித்த படியே..

    நீங்க என்ன நம்புறிங்கலா வாடிய முகத்தில் இப்பொழுது நம்பிக்கையின் கீற்று..

    ம்ம் என்று தலையசத்தவன் அப்பொழுது தான் தன் கரத்தை பார்த்தான் ஓநாயின் நகம் பட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

    ஐயோ ரத்தம் வருது இருங்க நா பச்சிலை மருந்து போட்டு விடுறேன் என பவளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அற்புதன் மந்திரத்தால் காயத்தை சரி செய்து விட்டான்.

    இதனை கண்ட பவளாவிற்கு சற்று உதறல் எடுத்தது. இவன் மோகினியின் ஆளாய் இருப்பானோ பின்னோக்கி நகர அவளின் எண்ணத்தை புரிந்தவன்.பயப்படாத நா ஒன்னும் மோகினியோட ஆள் இல்ல உன்னோட அண்ணன் சொல்லி தான் இங்க வந்தேன் உன்ன காப்பாத்த..என்றான்.

    காப்பாத்தவா என்னையா.. இன்னும் என் கிட்ட இருக்கு என்ன காப்பாத்த எதுவுமே இல்லையே..நானே ஒரு கருகி போன பூ என்ன காப்பாத்தி உங்களுக்கு என்ன பயன் இருக்க போகுது.. பேசிக்கொண்டே குகைக்கு அவள் வர...அங்கே அவளுக்காய் துணையிருந்த கழுதையை ஓநாய் கொன்று தின்று ஏப்பம் விட்டு சென்றிருந்தது.

    கழுதையின் எழும்பு கூட்டை மட்டும் பார்த்த பவளா அழுது துடித்தாள்.அவளுக்கென்று இருந்த ஒரு உயிரும் போய் விட்டது.அவள் அழுகை அற்புதனின் இதயத்தை பிசைய அழுது கொண்டிருந்தவளை கட்டியனைத்து தேற்ற முயன்றான்.ஆணவனின் பரந்த மார்பில் கோழி குஞ்சாய் ஒடுங்கி விம்மி கொண்டிருந்தாள் பவளாகினி.

    இதற்கு மேலும் அவள் கண்ணீரை காண பொறுக்காதவன் சட்டென்று கேட்டு விட்டான் தன் மனதில் உள்ளதை.

    என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா பவளா..என்க அவளுக்கோ இது தான் உலகின் உச்ச கட்ட அதிர்ச்சியாய் இருந்தது.

    நா..நா எ..ப்..படி உங்..கள நா நானே ஒரு விதவை என்ன போய் நீங்க கல்யாணம் பண்ணிக்க கேற்குறிங்கலே என அழுகை கூடியதே தவிர அவன் அணைப்பு குறையவில்லை.

    தொடரும்...

  • ராட்சசியின் ரட்சகனே..! பாகம் 09

    அற்புதன் கையணைப்புக்குள் அழுதழுதே அடங்கி போனாள் பவளா ஏனா தனிமையில் கிடந்தவளுக்கு அந்த அன்பும் அரவணைப்பும் வெகுவாக தேவைப்பட்டது போல அவன் மார்பு கூட்டுக்குள் இருந்து வெளியே வர மனது ஒப்பவில்லை அவளுக்கு.

    பேசி பேசியே அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான் அற்புதன்.ஏன் என்று காரணமெல்லாம் அவனுக்கு தெரியவில்லை இது வரை எந்த பெண்ணிலும் தோன்றாது உரிமையும்,நேசமும் இவளிடம் மட்டும் தான் தோன்றுகின்றுது.

    கந்தல் துணியுடுத்தி,மொட்டை தலையாய் இருந்தவளின் அகத்தின் அழகு மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது.காதல் பூக்கள் அரும்பி மொட்டவிழ்ந்து விருட்சமாகி நிற்கின்றது அவன் முன்னால்.

    அவன் வந்ததிலிருந்து மோகினி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாள் ஊராரிடையே ஏனென்றால் மோகினியை விட அற்புதன் சக்தி வாய்ந்தவன் எப்படியும் மோகினியை பற்றி கண்டறிந்து விடுவான் என்ற பயத்தினால்.

    ஒரு வாரமாகியும் காட்டுக்கு சென்ற அற்புதன் திரும்பவில்லை என்பதே ஊரார்களுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணிட ஒன்று கூடி பேசியவர்களில் ஒருவருக்கு கூட காட்டிற்குள் செல்ல தைரியம் இல்லை.எனவே பவளாவின் தந்தையையே அனுப்பி வைத்தார்கள் காட்டிற்கு சென்று செய்தி அறிந்து வருமாறு.

    இப்போதெல்லாம் மங்கையவள் விழிகளுக்கு குகை கூட மாளிகையாய் தெரிகிறது மாயவன் வந்த பிறகு. அவன் அன்பினில் தினம் தினம் புதிதாய் பிறக்கிறாள்.நில்லாமல் அடித்து செல்லும் காட்டாறு போல காதல் கரைபுரண்டு ஓடுகிறது விதியும் அவர்களை துரத்தியல்லவா வந்து கொண்டிருக்கின்றது .

    நிதியியல் நீர் அள்ளி கொண்டு இருந்த அல்லிக்கொடியாளை பின்னால் இருந்து தூக்கி அணைத்தது வன்கரம்..

    ஐயோ தேவா...என பிடித்திருந்த குடத்தை பதறி நீரிலேயே போட்டாள் பவளா.

    எவ்வளவு நேரம் தான் பவளா நதிக்குள்ளேயே இருப்ப காய்ச்சல் வந்து உடம்பு ஜன்னி கண்டுறாதா.. அக்கறையாக கடிந்து கொண்டான் காதலியவளை.

    காய்ச்சல் வந்தா சரி பண்ண தான் என் தேவா இருக்காறே.. மெல்லமாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பவளாகினி.

    ஓஹோ இதான் விஷயமா.. சூனியக்காரிய அடக்க வந்த ராச குமாரன் சூனியக்காரி கிட்டயே அடங்கி போய்ட்டாரு போல.. அவரையும் வசியம் பண்ண மயக்கிப்புட்டாளா இந்த சூனியக்காரி பின்னால் கேட்ட குரலில் இருவரும் பதறி விலகிட அங்கே நின்றதுவோ பவளாவின் குடிகார தகப்பன்.

    பெரியவரே என்ன பேசுறிங்க யார பார்த்து சூனியக்காரினு சொல்றிங்க என்னோட பவளா ஒன்னும் அப்படி பட்டவ இல்ல..

    நீங்க கூட என்ன சூனியக்காரினு நம்புறிங்கலா அப்பா என்று கண்ணீரோடு கேட்ட மகளை பார்த்து அந்த தகப்பனுக்கு எந்த கவலையும் தோன்றவில்லை என்பதே உண்மை.அவள் வாழ்வு நாசமாக காரனமே தான் தான்னென்ற குற்ற உணர்ச்சி கூட அவனுக்கு இல்லை.

    இங்கேரு நீ என்னயா இங்கன பண்ற முதல்ல வீட்டுக்கு போ அதே வீச்சருவாளோடு வந்து நின்றான் தீபேந்திரன்.

    இந்த கழுதைக்கும் நீயும் தொண போறியாலே..இரு இப்போவே போய் ஊருககுள்ளாற இங்கன நடக்கிற கூத்த சொல்லி உங்க அம்புட்டு பேரையும் அழிக்கிறேன்.

    உனக்கு கடசி வாய்ப்பு தாறேன்..உசுரோட ஓடி போய்ரு திரும்பையும் எந்தங்கச்சி வாழ்க்கைய கெடுக்க பார்த்த சொன்ன மாதிரியே வெட்ட பொலி போட்ருவேன் அப்பன்னு பார்க்க மாட்டேன்..இறுதியாய் உறுதியாய் அப்பனை எச்சரித்து நின்றான் இந்திரன்.

    நீ என்ன கொண்ணு போட்டாலும் பரவாயில்லடா நா ஊருக்குள்ள போய் ஜமீன் அம்மா கிட்டையும் ஜமீன்தாரய்யா கிட்டையும் சொல்றேன் என எத்தனித்தவன் உடலில் ஒரு வெட்டு 

    அப்பனவன் உடலில் வெட்டியதில் தெறித்த குருதி பவளாவின் வெளளை சேலையில் பட்டு வண்ண சேலையாக மாறியது..

    அண்ணா பாவம் அப்பன விட்ரு.. தமையனிடம் கையெடுத்து மன்றாடினாள் பவளா..

    நீ சும்மா இரு இப்படி தான் கொடுமை பண்ணி பண்ணியே நம்ம அம்மைய இவன் சாவடிச்சான் இப்போ உன்ன சாவடிக்க பாக்குறான்..நீ தள்ளி போ என தங்கையை தள்ளி விட்டவன் நா அன்னைக்கே சொன்னேன் உன் ரத்தம் தான் என் தங்கச்சி நா கொடுக்குற வண்ண சேல உன் பொணத்த எறிக்கிற நெருப்புல ஒரு ராச குமாரனோட என் தங்கச்சி கண்ணாலம் நடக்கும்னு இன்னைக்கு நடக்க போவுது...ஒரேடியா செத்து போடா.. என அகோரமாய் சிரித்தவன் தந்தை உயிரை எடுத்தான்.

    அவன் கூறியதை போலவே பிணத்தை சுற்றி எறிந்து கொண்டிருந்த அக்கினி ஜுவாலையை முன்பு நடந்தேறியது பவளாகினி அற்புதனின் திருமணம்.

    தங்கையின் வாழ்வை காத்த மகிழ்ச்சியில் தீபேந்திரன் காட்டை விட்டு வெளியேறினான்.

    குகைக்குள் பவளா ஏதேதோ கதையளந்தபடி அமர்ந்திருக்க அவள் அருகில் கதை கேட்ட படி அற்புதன் அமர்ந்திருந்தான்.

    குகைக்குள் யாரோ வரும் ஓசை கேட்கவே பவளா சட்டென்று நிமிர்ந்து பார்க்க நொடிப்பொழுதில் நடந்தேறியது அந்த அகோர சம்பவம்.

    ஆம் குகைக்குள் வந்த மோகினியும் தீரணும் நொடி பொழுதில் அற்புதனின் சிரசை வாள் கொண்டு சாய்த்து விட்டார்கள்.துண்டிக்கப்பட்ட தலையானது பவளாவின் மடியில் சென்று விழுக... துடித்து போனாள் பாவை.தாலி கழுத்தில் ஏறும் வேலையிலேயே கணவன் உயிரை பறி கொடுப்பதே அவள் பெற்று வந்த சாபம் தான் போல...அன்பை செலுத்திய அவள் ராஜ குமாரன் இறந்து விட்டான் என்பதை நம்ப மறுத்தது அவள் மனம்.

    திக்பிரம்மை பிடித்தவள் போல அவள் அற்புதன் உடலையே வெறித்து கொண்டிருக்க..கீழ் ஜாதி நாயே உனக்கு ராஜ குமாரன் கேட்குதா.. எனக்கு கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்க கூடாது..என பவளாவை ஒரு பார்வை பார்த்து விட்டு தீரணோடு வெளியே சென்றாள் மோகினி.

    ஊருக்குள் வந்தவள் பவளா மந்திர ராஜ குமாரனை மயக்கி திருமணம் செய்து கொண்டாள் எனவும் பின் ராஜ குமாரனை கொன்று விட்டு குகையில் வசிக்கிறாள் எனவும்..புரளியை பரப்பி விட காட்டு பக்கம் திரும்பி பார்க்க கூட அனைவரும் ஐயம் கொண்டார்கள்.

    விஷயமறிந்த தீபேந்திரனோ வீரு கொண்ட சிங்கமாய் மாளிகைக்கு வந்தான் மோகினியை கொல்ல.. ஆனால் பரிதாபம் தீரணின் வாளுக்கு இந்திரனும் பலியாகி போனான்.

    அதன் பின் இருவரும் சேர்ந்து ஊரார்களை இன்னும் பயம் காட்டி வைத்தார்கள் அந்தி சாயும் பொழுது ராஜ குமாரனின் ஆவி கன்னி பெண்களை கடத்தி செல்வதாகவும் காட்டில் ராஜ குமாரனின் சமாதி இருப்பதாகவும் மககளை அச்சுறுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொண்டார்கள்.

    ஒரு நாள் இவை அத்தனையும் தீக்ஷாவிற்கு தெரிய வர இந்த குடும்பத்தில் பிறந்ததற்காய் தன்னையே அருவருத்தாள் .ஆசை காதலனும் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு துடித்து போனவளுக்கு அவர்களை முன்னின்று எதிர்க்கும் தைரியம் இல்லாது போகவே வஞ்சகமாக உணவில் விஷம் வைத்து மோகினியையும் தீரணையும் கொன்றவள் தானும் தற்கொலை செய்து மாண்டு போனாள்.

    குகையில் இறந்தவன் உடலை மடியில் கிடத்தியே அன்ன ஆகாரம் இன்றி சித்தம் கலங்கியே பவளாவும் இறந்து போனாள்.

    கால சக்கரத்தின் வழியே அனைவரது நினைவுகளும் நிகழ் காலத்திற்கு திரும்பியது.

    கடந்த ஜென்மத்தின் பகையை இந்த ஜென்மத்தில் தீர்த்து கொள்ள வாளேந்திய சிங்கமாய் நிற்கின்றான் அற்புதன்.

    ஒரு கை வாள் ஏந்திய படி இருக்க மறு கையோ தாரிஹாவின் கழுத்தை நெறித்திருந்தது..அத்தனை இறுக்கம் அற்புதனின் பிடியில் அத்தனை சீற்றம் அந்த கண்களில்.

    குரல்வளை நெறிப்பட்டு கிடக்க மந்திரம் சொல்லி அற்புதனை தாக்குவதும் சிரமமாய் போனது தாரிஹாவிற்கு.மூச்சுக்கு அவள் ஏங்க உதவி செய்ய வந்த தீரணை வளைத்து பிடித்தான் தீபக்..இவய்களை தொடருந்து வந்த கரன் ஒன்றும் புரியாமல் விழித்த படி நிற்க..கரன் என்ன பாக்குற தீபக்கு உதவி பண்ணு தீரணும் தாரிஹாவும் மந்திர வாதிங்க என ஹிரா கத்த எல்லா பக்கமும் தலையாட்டி வைத்த கரன் ஒரு கட்டையை தூக்கி ஒரே போடாய் தீரண் மண்டையில் போட்டான்.

    அற்புதன் கையில் இருந்த வாளை வாங்கிய ஹிரண்யா தாரிஹாவை எள்ளலாக ஒரு பார்வை பார்க்க சர்வமும் நடுங்கி போனது தாரிஹா கண்களுக்கு..

    நமக்கு உயிரானவங்க நம்ம கண்ணு முன்னாடியே சாகுர வேதனை மரணத்தை விட கொடுமை தாரி..அத தான் நா இப்போ உனக்கு கொடுக்க போறேன்..இந்த ஜென்மத்திலயும் நீ திருந்தவே இல்ல தோழினு சொல்லி கூடவே இருந்து குழி பறிச்சிருக்க துரோகி நீ ..நானும் தேவாவும் சேர கூடாதுனு ஓநாய்ல இருந்து பாம்பு வரைக்கும் எத்தனை தடைகள நீ உருவாக்கின இப்போ பாரு உன்ன எப்படி அலற விடுறேன் என்ற ஹிரா தீரணின் தலையை துண்டாக்கினாள்.

    அண்ணனை மடியில் போட்டு கதறினாள் தாரிஹா..இப்படி தானே அன்னைக்கு எனக்கும் இருந்திருக்கும்.. இரக்கம் காட்டுனியா இல்லையே உன் அண்ணனுக்கு துணையா நீயும் போய் சேரு என தாரிஹாவின் உயிரையும் எடுத்தாள் ஹிரண்யா.

    ஜென்ம ஜென்மத்தின் பகை தீர்ந்து போய்விட நிம்மதியின் சாரல் அனைவரது முகத்திலும்.ஹிரண்யா கைப்பிடித்து அழைத்து புது வாழ்வை நோக்கி பயணித்தான் அற்புதன்.

    சரிடா மச்சான் நானும் ஊருக்கு கிளம்புறேன் என விடைபெற்று கரனும் கிளம்பி விட்டான் ஹிரண்யா அற்புதன் இருவரது குடும்பத்திற்கும் தங்கள் திருமணத்தை பற்றி அறிவித்து விட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகினார்கள்.

    தீபக்கிற்கு மட்டும் எதையோ இழந்த உணர்வு இத்தனை நாள் இல்லாத தனிமையை புதிதாக உணர்கிறான் அந்த கழுகை வேறு காணது போக பாவம் பையன் ரொம்பவும் சோர்ந்து விட்டான்.

    என்ன எதையோ பரிகொடுத்த மாதிரி இருக்க காரணம் தெரிந்தும் கேள்வியை கேட்டான் அற்புதன்.

    அதெல்லாம் ஒன்னும் இல்ல..சும்மா தான் ஆமா எனக்கு ஒரு சந்தேகம் என பேச்சை மாற்றினான் தீபக்.

    ம்ம் கேளு..அது எப்படி உங்களுக்கு மட்டும் மறு பிறவியிலயும் உங்க மந்திர சக்திகள் அப்படியே இருக்கு..

    எனக்கு ஆரம்பத்துல என் சக்திகள் பத்தி தெரியல ஆனா போக போக கடந்த ஜென்ம நினைவுகள் கொஞ்சம் கொஞ்மா உணர ஆரம்பிச்சேன்.. அதுக்கு அப்புறம் தான் உங்க எல்லாரையும் தேடி வந்தேன் என்றான் அற்புதன்.

    ஆமா தீபக் உனக்கு எப்போ கடந்த கால ஞாபகம் வந்துச்சு என் கிட்ட சொல்லவே இல்லையே என்றாள் ஹிரா.

    அன்னைக்கு காலைல புயல் காத்து வந்ததே அப்போவே எனக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு தாரிஹாவும் தீரணும் நம்மலயே வாட்ச் பண்ணிட்டு இருக்கவும் தான் நா உன்கிட்ட எதுவும் சொல்ல..

    சரி ஹிரா நேரமாச்சு வா நாம கிளம்புவோம் அப்போ நாங்க வாரோம் தீபக் என்று அற்புதன் விடைபெற சோகத்தை மறைத்து சிறு புன்னகையுடன் அவர்களை வழியனுப்பி வைத்தான் தீபக்.

    வாசல் வரை சென்ற அற்புதனோ தீபக்கை திரும்பி பார்த்து என் தங்கச்சிய கவணமா பார்த்துக்கோ என்று விட்டு போக..பேந்த பேந்த விழித்தான் தீபக்.

    என்ன சொல்லிட்டு போறாரு நாயமா இந்த வார்த்தைய நான் தானே சொல்லனும் என்று சலிப்புடன் வந்து கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.

    கிச்சனில் ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்க எலி தான் புகுந்து விட்டதென்று ஓடிய தீபக் திடுக்கிட்டு நின்றான் வாசலிலேயே.."என் தங்கச்சிய கவணமா பார்த்துக்கோ.."என்று அற்புதன் கூறியதற்கான காரணம் இப்போது புரிந்தது அவனுக்கு.

    கழுகு ஹிரா இப்போது தீபக்கின் தீக்ஷாவாய் கிட்சனில் சமைத்து கொண்டிருந்தாள்.ஆனந்த அதிர்ச்சி கொண்டவன் அடியே என் ராசாளி என்று அவளை வாரி அணைத்து கொண்டான்.

    முற்றும் ❤️