காதலால் காதலுடன்..-3 தொடர்கதை
வாழ்வியல் கதைகளின் இனிமையான இணைப்பு. உணர்வுப்பூர்வமான கதைகளுடன் உங்கள் மனதை மயக்கும் ஒரு பயணம்
தடக் தடக் என காற்றில் அடித்து கொண்டிருந்த ஜன்னலை சாத்த வந்தான் அவன் ..இரவு மங்கலான வெளிச்சத்தில் தூரத்தில் யாரோ நிற்பது போல தெரிய கண்களை தேய்த்து கொண்டே பார்த்தான் சேது ஒருவேளை கதிர் தான் கண்டு பிடித்து வந்து விட்டானோ என்ற பயத்தில் பார்வையை கூர்மையாக்கி பார்த்த பின்னரே தெறிந்தது அது ஒரு பெண் என்று.
தூரத்தில் நின்றதால் அவள் முகம் சரியாக புலப்படவில்லை அருகே சென்று பார்க்கலாம் என கதவை திறந்து கொண்டு வெளியே வந்த சேதுவின் பின்னால் மதனும் வந்தான்.
ஏம்மா யாருமா இந்த நேரத்துல ரோட்ல நிக்குற யார் நீ கேட்டு கொண்டே சேது வர அவளிடம் மெல்ல விசும்ப ஒன்று தோன்றியது.
இந்தாமா பொண்ணு ஏன் அழுவுற என்னாச்சு என அவளை பார்த்து கேட்க அவர்களுக்கு முதுகு காட்டி நின்றவளின் விசும்பல் மாறி அழுகையாகா வெடித்தது.
என்னோட இந்த பொண்ணு இப்படி அழுவுது என்ற மதனோ மெதுவாக அவள் தோள் தொட்டு தங்கள் பக்கமாய் திருப்ப அதிர்ந்து போனார்கள் இருவரும்.
கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரு குழிகளும் சிதைந்த முகமுமாய் அங்கே காவியா நின்றிருந்தாள்.
பயத்தில் தொண்டை வரண்டு பேச்சற்று போக இருவரும் ஓட முயன்றும் கால்கள் நகர மறுத்தன..
சேதுவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள் காவியா.. அவள் கண்களில் இருந்து இரத்தம் கண்ணீராய் வழிந்து கொண்டிருக்க கூரிய நீண்ட நகங்களை கொண்டு இருவரின் கழுத்தையும் பிடித்து அந்தரத்தில் தூக்கினாள் கதிரின் காதலியானவள்.
ஏன்டா கதிர அடிச்ச..ஹாங் ஏன் அடிச்ச... அவனுக்கு எந்த உண்மையும் தெரிய கூடாதுனு நா மறைச்சாட்சியாக வச்சா நீ ரெண்டு பேரும் உண்மை சொல்ல பாக்குறியா...இத்தனை நாள் இரக்கம் காட்டி உங்கள உயிரோட வச்சிருந்தது ரொம்ப தப்பா போச்சு.
மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணிட்டே இருக்கிங்க உயிரோட இருந்தா தானே உண்மைய சொல்லுவிங்க ரெண்டும் பேரும் செத்து போங்கடா என ஆக்ரோஷமாக அவர்களிடம் குரல்வளையை காவியா நெறிக்க கழுத்து நரம்புகள் அறுபட்டு துடித்து இறந்து போனார்கள் சேதுவும் மதனும்.
சினம் தணிந்த காவியாவோ வீடு நோக்கி புறப்பட்டாள் கதிரை காண.
நீ எதுக்குப்பா இங்கே வந்த அவரு பார்த்தா சத்தம் போடுவாரு தயவு செஞ்சு போய்டு வாசலில் வந்து நின்ற கதிரை அனுப்புவதிலேயே குறியாய் இருந்தாள் காவியாவின் அன்னை ராதிகா.
நீங்க கூட என்ன நம்பலையா அத்த உடைந்து வந்தது கதிரின் குரல் நா உன்ன நம்புறேன்பா ஆனா உங்க மாமா நம்ப மாட்டாரு காவியா சாவுக்கு நீயும் காரணம்னு நினைச்சிட்டு இருக்காரு.மனுஷன் வெளியே வந்தா உன்ன அடிச்சாலும் அடிச்சிருவாரு போய்ருப்பா கையெடுத்து கும்பிடாத குறையாக ராதிகா கெஞ்சி கொண்டிருக்கும்போதே கதிரின் கன்னத்தில் பளாரென்று ஒரு அடி விழுந்தது.
ராதிகா நடுங்கி போய் நிற்க மீசையை முறுக்கிய படி ஐயனாரை போல வந்து நின்றார் காவியாவின் தந்தை சிவராமன்.
என்னடா எம்புள்ளைக்கு மண்ணு தள்ளுனது பத்தாதுனு எங்களையும் சாச்சிட்டு வர சொல்லி உன் அப்பனும் ஆத்தாலும் அனுப்புனாங்களா..
காவியா சாவுக்கு நா காரணம் இல்ல மாமா சொன்னா நம்புங்க நானே என் அம்முவ சாகடிப்பேனா..அவ இல்லாத ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமா இருக்கு மாமா.. அந்த வீட்டுல இருக்கவே எனக்கு பிடிக்கல மருமகனா இல்லனாலும் ஒரு மகன என்ன உங்க கூட சேர்த்துக்கோங்க மாமா என சிவராமின் காலில் விழுந்து கதறிய கதிரை பார்க்க ராதிகாவிற்கே கவலையாய் போனது.
யாருக்கு யாருடா மாமா அதெல்லாம் என் பொண்ணு போனதுமே முடிஞ்சு போச்சு என அவர் கதிரை எட்டி உதைக்க போக அங்கே அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூச்சட்டி ஒவ்வொன்றும் தன்னிச்சையாக கீழே விழுந்து உடைந்தன.
மற்றவர்கள் பார்வைக்கு பூச்சட்டிகள் விழுந்து உடைகின்றன ஆனால் கதிரின் பார்வைக்கோ அங்கே தந்தை மேல் கோபம் கொண்ட காவியாதான் எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைத்து கொண்டிருந்தாள்.
நீங்க என்ன அடிக்கிறத என் அம்மு விரும்பல மாமா..வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்து கொண்டே கதிர் சொல்ல.என்னடா காவியா பேர சொல்லி தப்பிக்க பாக்குறியா என கதிரை அடிக்க சிவராமன் மீண்டும் கையை ஓங்க எதுவோ அவர் கரத்தை தடுத்தது.
இத்தனை நாள் உணராத ஒன்றை இன்று உணர்ந்தார்..தான் பெற்ற மகளை முதல் முதலில் கையில் ஏந்தும் உடல் சிலிர்த்து போன தருணத்தை போல இன்றும் அவளது பிஞ்சு ஸ்பரிசத்தை உணர முடிந்தது தந்தையால்.
என்ன பண்ற அம்மு அப்பாவோட கையை எதுக்கு பிடிக்கிறே..அவர விட தடுக்காத கோபம் குறையுற வரைக்கும் என்ன அடிக்கட்டும்..உடைந்த குரலில் கூறிய கதிரை பார்த்து பிடித்திருந்த தந்தையின் கரத்தை விட்டுவிட்டு கதிரின் அருகில் ஓடினாள் காவியா.
இங்கே இருந்து போய்டு கதிர் அப்பா உன்ன அசிங்க படுத்துறத என்னால பார்க்க முடியல போய்டு என அவள் கத்தி கொண்டிருக்க ராதிகா நம்ம பையன உள்ளே கூட்டிட்டு வா என்ற சிவராமனின் குரல் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இனி நீ எங்கள அப்பா அம்மானே கூப்பிடலாம் உள்ள வாபா என சிவராமனே கதிரை உள்ளே அழைத்து கொண்டு செல்ல உள்ளம் பொங்கிய மகிழ்ச்சியோடு உள்ளே சென்றார்கள் காவியாவும் கதிரும்.
உள்ளே புகைப்படமாய் தொங்கும் காவியாவை கண்ட காதலனவன் உள்ளம் வெகுவாய் காய்ப்பட்டு போனது.
அப்பா இனி நா உங்க கூடவே இருக்கலாம் தானே ஒரு வித தயக்கத்தோடு கதிர் கேட்க..அதுக்கென்னபா இங்கேயே இரு இது உன்னோட வீடு...நா ஏதோ ஆத்தரத்துல அடிச்சிட்டேன் அதெல்லாம் மனசுல வச்சிக்காதப்பா.
அப்பாவுக்கு மகன அடிக்க எல்லா உரிமையும் இருக்கு நா ஒன்னும் தப்பா எடுத்தக்கல என மெல்லமாய் புன்னகைத்தவன் எதிர இருந்த காவியாவோ அப்போ நா போய் உன்னோட டிரஸெல்லாம் எடுத்துட்டு வரவா என்க.
அப்பா நா எங்க போய் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடுரேன் என வெளியே வந்த கதிர் அவன் பின்னாலேயே வால் பிடித்து வந்த காவியாவை கடிந்து கொண்டான்.
லூசாடி நீ அம்மா அப்பா முன்னாடியே என் கிட்ட பேசுற நா ஏதாவது தப்பி தவரி பேசிட்டா அவங்க மனசு கஷ்டப்படாதா நீ என் கண்ணுக்கு மட்டும் தெரியுற அவங்க கண்ணுக்கு தெரியலனு வருத்த பட மாட்டாங்களா..?இனி அவங்க முன்னாடி வாய குறைச்சிக்கோ சரியா என்றிட அப்பாவியை போல மூஞ்சை வைத்து கொண்டவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
தன் உடமைகளை பொருக்கி பேகில் போட்டு கொண்டு வந்த மகனை வழி மறித்து நின்றார் ராஜா.என்னபா கதிர் இந்த மிட் நைட்ல எங்க கிளம்பிட்ட ஆஃபிஸ் விஷயமா வெளியூர் எதும் போறியா என்ன உங்க அம்மா கிட்ட சொல்லிருந்தா அவளே எல்லாம் பேக் பண்ணி வச்சிருப்பாளே என்ற ராஜாவின் மண்டை அடி வாங்கியது கதிர் கையில் வைத்திருந்த பூச்சாடியால்.
ஐயோ என்னங்க என கணவனை காக்க வந்த மேகலாவும் கதிரின் தீ விழிப்பார்வையில் மூலையில் ஒடுங்கி கொண்டாள்.
ரெண்டு பேத்துக்கும் மறுபடியும் மறுபடியும் சொல்லிட்டே இருக்க மாட்டேன். என்னைய கேள்வி கேக்குற தகுதிய எப்போவோ இழந்துட்டிங்க நீங்க ரெண்டு பேரும்.இனி இந்த வீட்டுக்கு நா வர போறது இல்ல காவியா வீடு தான் என் வீடு இனி அவளோட அப்பா அம்மா தான் எனக்கு அப்பா அம்மா.நீங்க ரெண்டு பேரும் என்ன பொருத்த வரைக்கும் யாரோ ரோட்ல போற மூனாவது மனுஷங்க தான் புரிஞ்சதா.இதுக்கு அப்பறம் என் வழில குறுக்க வந்தா கொலை பண்ணவும் தயங்க மாட்டேன் புரிஞ்சதா..விரல் நீட்டி எச்சரித்தவன் பெற்றோரை மொத்தமாய் தலைமுழுகி விட்டு மருமகனாய் அடியேன் வைக்க வேண்டிய வீட்டிற்கு மகனாய் சென்றான்.
இத்தனை நாள் மகளை இழந்து தனிமையில் வாடியவர்களுக்கு கதிரின் வருகை கொஞ்சம் இதத்தை கொடுத்தது.தினமும் கதிர் வீட்டில் இரவு நடக்கும் சண்டைகளை ராதிகா கேட்டு கொண்டு தான் இருப்பாள்.அதிலிருந்தே கதிரின் மனது அவளுக்கு புரிந்து விட்டது.
காவியாவிற்கு நீதி கேட்டு தான் இந்த சண்டையென. எத்தனையோ நாட்கள் அவன் குடித்து விட்டு வருவதையும் கூட ஜன்னல் மறைவில் கண்டிருக்கிறாள் இருந்தும் சிவராமனை மீறி அவனிடம் பேச பயம்.இன்று சிவராமனே அவனை வீட்டிற்கு அழைத்ததில் முழு மகிழ்ச்சி ராதிகாவிற்கு வாய்க்கு ருசியாக கதிரிற்கு பிடித்ததையெல்லாம் சமைத்து பரிமாற அவனோ கடமைக்கேன கொஞ்சம் கொறித்து விட்டு காவியாவின் அறைக்குள் தஞ்சம் புகுந்தான்.
எத்தனை நாட்கள் திருட்டு தனமாய் அவளை சந்திக்க இந்த அறைக்கு வந்திருப்பான் அப்போதெல்லாம் இருந்த இனிமை இப்போது இல்லை.விரக்தியான சிரிப்பு மட்டுமே அவனின் இதழ்களில்.
கண்மூடி கட்டிலில் சாய்ந்திருந்தவனின் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்ட காவியா அவனின் முகத்தை பார்த்திருக்க அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.
இருவரின் நினைவுகளும் நான்கு மாதங்கள் முன்பு நகர்ந்து சென்றன.
கதிர் காவியா காதல் விவகாரத்தை அவர்கள் வீட்டினர் அறிந்திருக்கவில்லை.இருவரும் ஒரு கம்பெனியில் வேலை செய்வதினால் நண்பர்களாக பழகுகிறார்கள் என்றே இரு வீட்டினரும் எண்ணியிருக்க கதிரும் காவியாவும் பீச்சில் அமர்ந்து காதல் செய்து கொண்டிருந்த காட்சி ஏதோ உயர் மனம் படைத்த ஒரு ஜீவனால் இரண்டு வீடுகளுக்கும் தெரியப்படுத்த பட்டது.
அடுத்து என்ன இரண்டு வீட்டிலும் பூகம்பம் வெடித்தது காவியா வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது கதிர் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேகலா காவியாவை வாறி தூற்றினாள் பணத்திற்காக கதிரை மயக்கி திருமணம் செய்து கொள்ள பார்க்கிறாள் என்று.கதிரை விட்டு விலகி விடும் படி காவியாவை எச்சரித்தும் பார்த்தார்கள் யார் சொல்லையும் காதில் போட்டுக் கொள்ளாது கதிரும் காவியாவும் தங்கள் காதலில் உறுதியாய் நிற்கவே முதலில் முரண்டு பிடித்த கதிரின் பெற்றோர்கள் பின் சம்மதம் தெரிவித்தார்கள் திருமணத்திற்கான நாளும் குறிக்கபட்டது.
திருமணத்திற்கு முதல் நாள் மாலை யாரும் எதிர் பார்ததிராத சம்பவமாய் காவியாவின் அறையில் இருந்து ஒருவன் போதையில் தள்ளாடிக் கொண்டு வந்தான் காவியாவோ மயங்கிய நிலையில் கிடந்தாள்.
இதனை கண்ட சொந்த பந்தங்கள் காவியாவை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர்.கதிர் முன்பாகவே அவளை தரக்குறைவாக பேசிட யாரின் பேச்சையும் கேட்டு கொள்ளாத கதிரோ காவியாவின் மீது முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது என்று அனைவரின் வாயையும் மூடி விட்டான்.
என்ன நடந்தது என்று அறியாமல் கூனி குறுகி நின்ற காவியாவை தேற்றிய கதிர் காலையில் திருமணம் நிச்சயம் நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு சென்றான்.
மறு நாள் காலையில் ஆயிரம் கனவுகளோடு எழுந்த கதிர் கண்டது ஆலமரத்தில் தூக்கிட்டு தொங்கி கொண்டிருந்த அன்பு காதலியவளை தான்.
தொடரும்...