காதலால் காதலுடன்..-2 தொடர்கதை
வாழ்வியல் கதைகளின் இனிமையான இணைப்பு. உணர்வுப்பூர்வமான கதைகளுடன் உங்கள் மனதை மயக்கும் ஒரு பயணம்
புதிதான அதிகாலையோ..
புகை சூடும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு…
மழை வீழும் இள மாலையோ…
இசையில்லா இடைவேளையோ…
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு…
உன்னோடு மட்டும்தான்…
என் நேரம் எனது…
உன்னோடு மட்டும்தான்…
மெய் பேசும் மனது…
காலை தென்றல் முகத்தில் மோத பைக் ஓட்டிய படியே பாடிக் கொண்டு வந்தான் கதிர்.அவன் முதுகில் சாய்ந்து முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு வந்தாள் காவியா.எல்லாம் நேத்து அவள் செய்த அலப்பறையால் தான்.
அவன் பசி என்றதும் அடுக்கலைக்குள் சென்று காவியா சமைக்க அந்த பக்கமாக வந்த வேலைக்காரனோ பாத்திரங்கள் மட்டும் அந்தரத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.
இதனை கவனிக்காத காவியாவோ சமைத்து முடித்து கதிருக்கு எடுத்துக்கொண்டு செல்ல வாசலில் மயங்கி கிடந்தான் சமையல் காரன்.
ஐயோ இத கவனிக்காம விட்டுட்டியே காவியா என தன்னை தானே நொந்து கொண்டவள்..ஆர்வ கோளாறில் வேலைக்காரனை தண்ணீர் ஊற்றி எழுப்ப அவனோ மயக்கம் தெளிந்து எழுந்து தன் முன்னே தண்ணீர் குவளை மட்டும் இருப்பதை கண்டு தலை தெறிக்க ஓடி விட்டான்.
அதன் பின் அறைக்கு வந்த காவியா நடந்ததை சொல்ல கதிருக்கு ஐயோ என்றானது. அவ்வபோது இப்படி தான் காதல் மிகுதியில் காதலகயானவள் ஆவியென்றே மறந்து விடுகின்றான்.
காலையில் கதிர் கண் விழிக்கும் முன்னரே அவன் அடித்து துவம்சம் செய்த அனைத்தையும் சுத்தம் செய்து வைத்திருக்க மேகலாவும் ராஜாவும் விழி விரித்து பார்த்து கொண்டிருந்தார்கள் இருந்தும் கதிரிடம் இதை நீயா சுத்தம் பண்ணுன என கேட்க பயம் வேலைக்கு போகிற நேரம் மீண்டும் ஒரு தாண்டவத்தை ஆடி விட்டு செல்வானே.
கதிர் கோப பார்வை காவியா மீது படிய அவளோ நைசாக நலுவி தன் வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.கதிர் ஆஃபிஸிற்கு பைக்கில் சென்று கொண்டிருக்க பாதி வழியில் வந்து தொற்றி கொண்டாள் ஆவி பெண்ணவள்.
இதோ பாரு அம்மு இனி இந்த மாதிரி வீடு க்ளீன் பண்ற வேலைலாம் வச்சிக்காத அப்பறம் எல்லாரும் கண்டு புடிச்சி உன்ன பேய்னு சொல்லி புளிய மரத்துல ஆணி வச்சி அடிச்சிடுவாங்க பார்த்துக்கோ அப்பறம் நீ கண்ணு முழியெல்லாம் வெளிய வந்து, தலையெல்லாம் கலைஞ்சு போய், பல்லெல்லாம் கறையாகி,கால் இல்லாம கொடூரமான பேயா தான் சுத்தனும் உன்ன கண்டு நானே பயந்து ஓடுவேன் என ஆவியையே பேய் கதை சொல்லி அவன் பயம் காட்ட அப்போது முக்தை தூக்க வைத்த மகராசி தான் இப்போது வரை கனியவே இல்லை.
காதலனும் பாட்டு பாடி சமாதானம் செய்ய பார்க்கிறான் காதலி மலையிறங்கிய பாடில்லை.
ஏன் அம்மு மூஞ்ச தூக்கி வச்சிருக்க புளிய மர பேயாகிட்டா மேக்கப் போட முடியாதுனு ஃபீல் பண்றியா.. அவனும் விடுவதாய் தெரியவில்லை.
சும்மா சும்மா என்ன பேய்னு சொல்லாத அப்பறம் நா கடிச்சு வச்சிருவேன் தீவரமாய் மிரட்டியவளை புன்னகையுடன் பார்த்தவன் சிக்னல் விழுகவும் பைக்கை நிறுத்தி விட்டான்.
பொது இடங்களில் காவியா பேசுவதில்லை அப்படி ஒரு நாள் பேச போக பதில் சொன்ன கதிரை வருவோர் போவோர் எல்லாம் பைத்தியகாரனை பார்ப்பதை போல பார்த்து செல்ல அன்றிலிருந்து பொது இடங்களில் பேச்சை குறைத்து கொண்டாள் காவியா.
கதிர் பைக்கை நிறுத்தி சிக்னலுக்கா காத்திருக்க எதேச்சையாக பக்க வாட்டில் திரும்பிய காவியாவின் விழிகள் அதிர்ந்து போயின.அவர்களுக்கு எதிரே ஒரு பைக்கில் இரண்டு ஆண்டுகள் நின்றிருக்க அவர்களை கண்டு தான் அவள் அதிர்ந்து போனாள்.அவள் முகத்தில் ஒரு தடுமாற்றம் அதனை மறைக்க அவள் முயல பைக் கண்ணாடியில் அவள் முக மாற்றத்தை குறித்து கொண்டான் கதிர்.
எதிரே இருந்த இரண்டு ஆண்களும் கதிரையே பார்த்து கொண்டிருக்க காவியாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.கதிரும் அந்த ஆண்களை பார்க்க சினேகமாக புன்னகைத்தார்கள் அவர்கள்.கதிரும் பதிலுக்கு சிரித்து வைத்து விட்டு பச்சை சிக்னல் விழுந்ததும் பறந்து விட காவியாவோ அவர்கள் பின்னால் வருகிறார்களா என திரும்பி பார்த்த வண்ணமே வந்தாள்.
எங்கே யாரடி சைட் அடிச்சிட்டே வார காதலன் நா இங்க இருக்கும் போது பாய் ஃபிரண்ட் மாதிரி பேர் பேய் ஃபிரண்ட் எதும் பிடிசிட்டியா என்ன கலாய்த்து தள்ளியவன் முதுகில் நான்கு மொத்து மொத்தினாள் காவியா.
வர வர என்ன ரொம்ப கிண்டல் பண்றே கதிர்..உனக்கு என் மேல பாசமே இல்ல என்று உதட்டை பிதுக்க அவளை பாவமாக பார்த்தான் கதிர்.என்ன செய்ய கண்ணிறைந்த காதலியை அருகில் வைத்து கொண்டு அள்ளி கொஞ்ச முடியாத சாபம் அவனது காதலுக்கு.
இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவளை கூடவே வைத்து கொண்டு சுற்ற முடியும்.அவளுக்கு சாந்தி கொடுத்தாக வேண்டும் அவளின் இறுதி ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே அவளுக்கு சாந்தியும் கிட்டும்.அவளின் இறுதி ஆசை எதுவென்று கேட்டால் 'நீ கல்யாணம் பண்ணு கதிர் உன் கல்யாணத்த பாத்துட்டு தான் நா இந்த பூமிய விட்டு போவேன்.."என்பவளிடம் என்ன பேச முடியும் அவனால்.
அவளின் இடத்தில் இன்னொருத்தியை வைத்து பார்க்கும் சக்தி இருந்திருந்தால் ஏன் அவன் அதை செய்யாமல் இருக்க போகிறான் அவனின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அவளல்லவா உயிரோடு உயிராக உணர்வோடு உணர்வாக கலந்திருப்பவளை எங்கனம் மறந்து போவான்.
என்ன கதிர் அமைதியா வார நா எதும் தப்பா பேசிட்டேனா அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்.
அம்மு நா சொன்னாலும் கேட்ப இல்ல..
அதில்லன்னடா சந்தேகம் நீ சொல்லி நா என்ன கேட்காம இருக்க போறேன்..கேளு என்று அனுமதி வழங்கிட.
உண்மைய சொல்லு அம்மு உன்னோட சாவுக்கு என்னோட குடும்பம் தானே காரணம்.. இப்பொழுதாவது உண்மையை சொல்வாளா என்ற எதிர்பார்ப்போடு பதிலுக்காய் காத்திருந்தான். வழமை போலவே இன்றும் மௌனத்தை மட்டுமே பதிலாய் தந்தாள் அவள் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்டாலும் அவளிடமிருந்து பதில் வராது.
நீண்ட நேரம் அவளிடமிருந்து பதில் வராது போகவே பின்னால் திரும்பி பார்த்தான் கதிர் அவள் அங்கு இல்லை. அநேகமாக அவள் தன் வீட்டிற்கு தான் சென்றிருக்க கூடும்.கதிர் அவள் மரணத்தை பற்றி கேட்டகும் பொழுதெல்லாம் இப்படி தான் செய்வாள் எங்காவது பறந்தோடி போவாள் அந்த நாள் முழுவதும் அவன் கண்ணில் படவே மாட்டாள் இன்றும் அதே நிலை தான் அவனுக்கும் அது தானே வேண்டும்.
காவியா சென்றதை உறுதி படுத்தி கொண்டவன் பைக்கை வந்த வழியே திருப்பினான்.திருப்பியவன் சிக்னல் லைட் விழுந்த இடத்திற்கு வந்து அங்கிருந்த டிராஃபிக் கான்ஸ்டபிளிடம் சில பல தகவல்களை சேகரித்து கொண்டு வேறு பாதையில் வண்டியை விட்டான்.
சில தூரம் சென்றதும் அவன் தேடி வந்தது கிடைத்தது.அங்கே ஒரு பாழடைந்த கட்டிடத்தின் முன்னால் காவியா கண்டு கலக்கமுற்ற இருவரின் பைக் நின்று கொண்டிருந்தது.
மெதுவாக உள்ளே எட்டி பார்த்தான் கதிர் அவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தார்கள்.
ஏன்டா மதன் நீ அந்த பையன கவனிச்சியா..
எந்த பையன மச்சான் கேக்குற குலறலாய் வெளிவந்தன மதனின் வார்த்தைகள்.அதான்டா சிக்னல் போட்ட இடத்துல நின்னானே அவனா தான்..
இல்லடா சேது நா அவன சரியா கவனிக்கல ஏன்டா கேக்குற.. என்றவன் காலடி சத்தம் கேட்டு நிமிர அங்கே கதிர் வந்து நின்றான் இருவரும் எச்சில் விழுங்கிய படி எழுந்து நிற்க..கதிரோ அவர்கள் முன்னால் வந்து பேச ஆரம்பித்தான்.
சார் யார் சார் நீங்க இங்க என்ன பண்றிங்க மதன் பதட்டமாய் கேட்க..ஒருத்தர கொலை பண்ணனும் என்றான் கதிர் கண்களில் பொறி பறக்க..
என்ன சார் சொல்றிங்க என அவர்கள் இருவரும் பின்னால் நகர..ஹேய் ஏன் பயப்படுறிங்க சில் நா நிறைய பணம் தாறேன் நா சொல்ற ஆள நீங்க கொன்னா போதும் என கதிர் சொல்ல மதனும் சேதுவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
அது வந்து சார்...பேராசை பிடித்த மதன் காதை சொறிய அமோன்ட் எல்லாம் சொன்னதுக்கு மேலேயே தருவேன் நீங்க காரியத்தை சரியா முடிச்சு கொடுத்தா கதிர் சொல்ல.
சரி சார் ஆள் யார்னு சொல்லுங்க சிறப்பா செஞ்சிடுவோம் இருவரிடமும் தன் போனை எடுத்து அதிலிருந்த காவியாவின் புகை படத்தை காட்ட இருவரும் அதிர்ந்து போனார்கள்.
இந்த பொண்ண தான் கொல்லனும்..காவியாவின் படத்தை கண்டு சேது பின்னால் நகர போதையில் தள்ளாடிய மதனோ..ஐயய்ய ஒரு பொண்ண கொல்ல எத்தனை பேரு தான் டீல் பேசுவிங்க நீ இம்புட்டு நாளாக கோமாவுல இருந்தியா சாரே இந்த பொண்ண தான் ஏற்கனவே கொன்னுட்டோமே மறுக்கா எப்படி கொல்றது என உளறி கொட்டிய மதனை பார்த்து இதழ் வளைத்து சிரித்த கதிர் அடுத்த நொடி அவன் மேல் பாய்ந்திருந்தான்.
ஏன்டா என் அம்முவ கொன்னிங்க ஏன் கொன்ன..யார் சொல்லி இப்படி செஞ்சிங்க சொல்லுடா...அவன் மூக்கில் ரத்தம் வடிய குத்தி கொண்டிருந்தான் கதிர். பின்னால் இருந்த சேதுவோ ஒரு கட்டையை தூக்கி கொண்டு வந்தான் கதிரை குறிவைத்து.
சட்டென்று திரும்பிய கதிரோ அவன் வயிற்றில் ஒரு எத்து விட தூர போய் விழுந்தான் சேது.சொல்லுடா யார்டா இப்படி செய்ய சொன்னது மாறி மாறி இருவரையும் அடித்து துவைத்தான் கதிர்.மகா காலனை போல ருத்ர அவதாரம் எடுத்து நின்றவனை சமாளிக்க அவர்கள் இருவரும் தடுமாறி தான் போயினர்.
ஒரு கட்டத்திற்கு மேல் மதன் உண்மையை கூற முனைய கட்டையை எடுத்து கதிர் தலையில் அடித்து விட்டு மதனை இழுத்து கொண்டு ஓடினான் சேது.
தலையை உலுக்கி கொண்டு கதிர் எழுந்து வர இருவரும் பைக்கில் ஏறி சென்று கொண்டிருந்தார்கள்.கதிர் தன் பைக்கில் ஏறி அவர்களை பின் தொடர முனைய வீசிய புலுதி காற்று கண்ணை மறைக்கவே பாதை தெரியாமல் போனது.
காற்று நின்றதும் கதிர் அவர்களை தேட கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை.
சிட்... ஆத்திரத்தில் பைக்கை ஓங்கி உதைத்தவன் வீட்டிற்கு செல்ல அவன் சென்றதும் நிம்மதி பெருமூச்சுடன் வெளியே வந்த காவியா சேதுவையும் மதனையும் தொடர்ந்து சென்றாள்.
தொடரும்..