காதலால் காதலுடன்..-4 (தொடர்கதை)

வாழ்வியல் கதைகளின் இனிமையான இணைப்பு. உணர்வுப்பூர்வமான கதைகளுடன் உங்கள் மனதை மயக்கும் ஒரு பயணம்

காதலால் காதலுடன்..-4 (தொடர்கதை)

காவியா ஏன் தூக்கிட்டு கொண்டாள் என்பது இன்று வரை கதிரிற்கு புரியாத விடையம் தான்.உலகமே அழிந்தாலும் ஒரு நாளும் கதிர் காவியாவை சந்தேகிக்க மாட்டான் இது காவியாவிற்கும் நன்றாகவே தெரியும் தெரிந்தும் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தாள் என்பது தான் கேள்வி.தற்கொலைக்கு தூண்டப்பட்டாளா இல்லை கொலை செய்யப்பட்டு தற்கொலை மாதிரி உருவக படுத்தப்பட்டாளா என்பது அவள் வாய் திறக்காமல் உலகிற்கு தெரிய போவதில்லை.

காவியா இறப்பிற்கு காரணம் என சிவராமன் கதிரின் பெற்றோரை கைக்காட்டா கதிருக்கு கூட அப்படி தான் தோன்றியது.ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு காவியாவை பிடிக்காதே.அவள் இறப்பை தாங்கி கொள்ள முடியாத கதிர் தினமும் குடிக்க ஆரம்பித்தான் தனிமையில் கதறியழுதான் பெற்றோரை முற்றாக வெறுத்தான் சதா காலமும் அவன்களல வஞ்சி கொண்டே வீட்டை ரெண்டாக்கி வைத்தான்.

தன்னைத்தானே காயப்பட்டுத்தியும் கொண்டவனை அதற்கு மேலும் தவிக்க விடாது ஆத்மாவாய் அவன் முன்பு வந்து நின்றாள் காவியா.முதலில் திடுக்கிட்டு பயந்தவன் போக போக தன்னவள் இறந்தும் தன்னையே சுற்றி வருவதை உணர்ந்து மனதை தேற்றி கொண்டு அவளுக்காய் துக்கத்திலிருந்து வெளிவந்தான்.

நினைவுகள் நிகழ் காலத்திற்கு திரும்ப கண்ணீர் கோடுகளாய் வழிந்தது வீரமான ஆண்மகன் விழிகளில். அவன் கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டாள் காவியா.

கதிர் நா ஒன்னு கேட்கவா..கோவ பட மாட்டியே பொடி வைத்து பேசினாள் காவியா.

நீ என்ன கேக்க போறன்னு எனக்கு நல்லாவே தெரியும் அம்மு இனி நா அந்த வீட்டுக்கு போறதா இல்ல கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அங்க போய்டு கதிர்னு என்னைய வற்புறுத்தாத அப்பறம் நா எப்பவும் உன் கூட பேசவே மாட்டேன்.. அவ்வளவு தான் என்பதை கதிர் கண்ணை மூடிக்கொள்ள பாவமாய் அவன் முகத்தையே பார்த்திருந்தாள் காவியா.

அவளுக்கு ஏது பசி தூக்கம் எல்லாம்.அவன் ஏதாவது திட்டினால் அழுவாள் ஆனால் கண்ணீர் வராது மாயங்கள் செய்வாள் மந்திரங்கள் போடுவாள் ஆத்ம சக்தி கொண்டு அனைத்தையும் கட்டு படுத்துவாள் இதை தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்.

காலையில் கண்விழித்த கதிர் ராதிகா சமைத்து கொடுத்த சாப்பாட்டை எடுத்து கொண்டு சிவராமனிடம் கூறிவிட்டு ஆஃபிஸ் செல்ல வாசலில் நின்று அவனை ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தாள் மேகலா.

பேர் சொல்லும் பிள்ளை மொத்தமாய் அடுத்த வீட்டில் போய் இருப்பது தாயின் உள்ளத்தை வெகுவாக பாதித்தது.இருந்தும் எதுவும் கேட்க முடியாதே கதிர் சென்ற பின் அவர்கள் வீட்டிற்கு எதும் சென்றால் கதிருக்கு மேல் சிவராமன் பேயாட்டம் ஆடி விடுவாரே என்ற பயம் வேறு.

சாலையில் கவனத்தை பதித்து சென்று கொண்டிருந்த கதிர் திடீரென்று மக்கள் ஒரு இடத்தில் கூட்டமாய் நிற்பதை கண்டு பைக்கை நிறுத்தினான்.

என்னாச்சு கதிர் ஏன் பைக்க நிறுத்திட்ட.. காரணம் தெறிந்தும் கேள்வியை கேட்டாள் காவியா..கூட்டமா இருக்கு அம்மு இரு என்னனு பார்த்துட்டு வாரேன் என கதிர் இறங்க..நமக்கு எதுக்கு அதெல்லாம் நீ நாம போவோம் வேடிக்கை பார்க்க நேரமா இருக்கு நமக்கு நேத்து வேற நீ ஆஃபிஸ் போகல என்ற காவியாவை சட்டென்று திரும்பி பார்த்தான் கதிர்.

நா ஆஃபிஸ் போகலனு உனக்கு எப்படி தெரியும் காவியா சந்தேகத்தோடு அவன் கேட்கவும் தான் வாயை விட்டது காவியாவிற்கு நினைவு வந்தது.

ஹாங் நீ ஆஃபிஸ் போகலனு நியூஸ்லயா சொல்லுவாங்க நா ஆவிடா இது கூடவா என்னால கண்டு பிடிக்க முடியாது என சமாலித்த காவியா மீது இன்னும் சந்தேகம் கூடி போனது கதிரிற்கு.

இரு நா போய் பார்த்துட்டு வாறேன் என காவியா தடுத்தும் பிடிவாதமாய் கூட்டத்தை விலக்கி கொண்டு சென்றான் கதிர்.

அங்கே சேதுவும் மதனும் இறந்து கிடக்க கதிரின் மூலையில் ஏதோ பொறி தட்டியது. அருகில் இருந்தவர்களிடம் எப்படி இறந்தார்கள் என்று கேட்க ஏதோ ஆக்சிடன்ட் என முடித்து விட்டார்கள்.

கதிர் திரும்பி பைக் அருகே வர காவிய் அங்கு இல்லை.கதிர் எதிர்பார்த்திருந்தது தான் அவன் திரும்பி வந்து எதாவது கேள்வி கேட்பான் என பயந்து கொண்டே மாயமாகி விட்டாள் காவியா.

ஆஃபிஸ் வந்த சேர்ந்தான் கதிர்.அவன் டீம் மெம்பர்களை அழைத்தவன் அனைவருக்குமான ப்ராஜெக்ட்டை பிரித்து கொடுத்து விட்டு தன் வேலையில் கவனத்தை செலுத்த.. ஹாய் கதிர் குழைவாய் கேட்ட ஒருத்தியின் குரலில் சலித்து கொண்டவன் நிமிர்ந்து அவளை நோக்கினான்.

அவள் கதிரின் சக ஊழியர்களில் ஒருத்தியான மேஹா கதிர் மேல் ஒரு தலை காதல் கொண்டவள்.கதிர் காவியா காதலிப்பது தெரிந்த வேலைகளில் கூட கதிர் பின்னால் நாயாக சுற்றியவள் காவியா இறந்த பின் விடுவாளா என்ன இப்போதும் நாயாய் தான் சுத்துகிறாள் ஆனால் அவனோ பேய் பின்னால் அல்லவா சுற்றுகிறான்.

என்ன வேணும்.. வளக்கம் போல கடுகடுவென்று முகத்தை வைத்து கொண்டே கேட்டான்.

கோவத்துல கூட நீ க்யூட் பேபி...அவனின் கன்னத்தை கிள்ளினாள் மேஹா.

இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் என் கிட்ட வச்சிக்காத வந்த விஷயத்தை சொல்லு என அவள் கையை தட்டி விட்டான்.

ஹும் ரொம் தான்.. நியூ ஜாய்னி ஒருத்தர் வந்திருக்காரு எம்டி உன்னோட டீம்ல சேர்த்துக்க சொன்னாரு அதான் சொல்ல வந்தேன்.. வாசன் கம் என வெளியே நோக்கி நேஹா குரல் கொடுக்க உள்ளே வந்தவனை கண்டு கதிர் கண்கள் சிவந்து போயின ரௌத்திரம் பொங்க கைமுட்டியை மடக்கியவன் அக்கின் விழிகளால் அவனை எரித்திருந்தான்.

வந்தவனுப் கதிரை அங்கு எதிர் பார்த்திருக்கவில்லை என்பது அதிர்ந்த போன அவன் முகமே காட்டி கொடுத்தது.

வேலை இடம் என்பதால் தன்னை சற்று நிலை படுத்தி கொண்ட கதிர் மேஹாவிடம் நீயே கூட்டிட்டு போய் என் டீம் கிட்ட இன்ட்ரோ கொடுத்துரு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என வாசன் மீதிருந்த பார்வையை அகற்றாமலேயே சொல்ல வாசனின் வயிற்றில் பய பந்து உருண்டது.

வாங்க மிஸ்டர் வாசன் என மேஹா அவனை அழைத்து கொண்டு செல்ல அவன் தலை மறையும் வரை அவனை தான் பார்த்திருந்தான் கதிர்.

அவனே தான் இது அதே முகம் எப்படி மறந்து போகும் இந்த முகத்தை.இன்று இவன் படும் வேதனைகளுக்கெல்லாம் தொடக்க புள்ளியே இந்த வாசன் தானே.அன்று தப்பித்து விட்டான் இன்று எப்படி தப்பிக்க முடியும்.வசமாக சிக்கி கொண்டான் கதிரிடம்.

எப்போதடா மாலை வரும் என கண்ணியில் நூலை கட்டி பிரித்து விட்டார் போல கடிகாரத்தையே வெறித்து கொண்டிருந்தான் கதிர்.வாசனை தனிமையில் சந்திக்க முயற்சித்தாலும் அவன் எப்போதும் கூட்டம் நிறைந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.சாப்பாட்டு வேலையில் காணலாம் என்றால் அங்கேயும் மறைந்து கொண்டு தண்ணீர் காட்டி கதிரின் பொறுமையை ரொம்பவும் சோதித்தான்.

இருந்த கோபத்தோடு அவன் இன்று கதிரை நிராகரிப்பது வேறு இன்னும் கோபத்தை துண்டி விட்டது காவியாவின் காதலனுக்கு.

இதோ அதோவென நேரம் மாலை ஆறு முப்பதை தொட அனைவரும் தங்கள் வேலையை முடித்து கொண்டு கிளம்பினார்கள். கதிரிடம் இருந்த தப்ப முதல் ஆளாய் ஓடிய வாசனை வாசலிலேயே மடக்கி பிடித்தார் செக்யூரிட்டி.

சார் எங்க இவ்வளவு சீக்கிரமா ஓட பாக்குறிங்க நியூ ஜாய்னிக்கெல்லாம் சின்ன மீட்டிங் இருக்கு தெரியாதா உள்ளே போங்க என செக்யூரிட்டி வாசனை உள்ளே தள்ள அவனோ திருதிருவென விழித்தான்.

என்ன மீட்டிங் எனக்கு எதுவும் இன்ஃபோம் பண்ணலையே என்றவன் ஒரு நிமிடம் சுற்றி முற்றி பார்த்து விட்டு செக்யூரிட்டியிடம் கதிர் சார் போய்ட்டாரா இல்ல அவரு தான் இந்த மீட்டிங்க செய்ய போறாரா என்றான்.

கதிர் சார் அப்போவே போய்ட்டாரு சார் அவரு ஏன் மீட்டிங் வைக்க போறாரு நீங்க உள்ள போங்க என வாசனை உள்ளே அனுப்பினான் செக்யூரிட்டி.

கதிர் போய் விட்டான் என்றதும் மகிழ்ச்சியாக உள்ளே வந்த வாசனின் முகம் கறுத்து போனது அங்கே வேட்டையாட காத்திருக்கும் சிங்கமாய் சினம் கொண்டு அமர்ந்திருந்த கதிரை கண்டு.

சா...சார்..நீ ..ங்க..போய்...ட்டதா...ஆஆஆ வாசன் இழுத்து கொண்டிருக்கும் போதே வாசனின் கையை பிடித்து முறுக்கினான் கதிர்.

உண்மைய சொல்லு அன்னைக்கு நீ தானே என் அம்மு ரூம்ல இருந்து போதைல ஓடுன..உன்ன யார் அப்படி செய்ய சொன்னது சொல்லுடா பிடித்திருந்த கையை இன்னும் முறுக்க வலியில் கதறினான் வாசன்.

சார் நீங்க எத பத்தி பேசுறிங்க எனக்கு ஒன்னும் புரியல சார் நீங்க வேறை யாரையோ நான்னு தப்பா நினைச்சு பேசிட்டு இருக்கிங்க என வலியோடு வாசன் கதற அவன் கையை விட்ட கதிர் அவன் வயிற்றில் ஓங்கி குத்த சுருண்டு போய் விழுந்தான் வாசன்.

அப்போ உனக்கு எதுவும் தெரியாது..நா யார்னு உனக்கு தெரியல அப்படி தானே அப்போ எதுக்குடா காலைல இருந்து என்ன கண்டு ஒளிஞ்சிட்டு திரிஞ்ச எதுக்கு செக்யூரிட்டி கிட்ட நா போய்ட்டேனானு கேட்ட..கீழே விழுந்து கிடந்தவன் வயிற்றில் சப்பாத்து கால்களால் கதிர் உதைக்க மூச்சடைத்து போனான் வாசன்.

நல்ல வேவை அலுவலக ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டார்கள் செக்யூரிட்டியை தவிர இங்கு வெறு யாரும் இல்லை இவர்கள் இருந்ததும் அலுவலகத்தில் கேமரா இல்லாத பகுதி என்பதால் கதிருக்கு பிரச்சினை இல்லாது போனது.

சொல்லுடா நாயே உன்னை யார் அப்படி செய்ய சொன்னாங்க..வெறி கொண்டவன் போல கதிர் அவனை அடித்து துவைக்க கா..காவியா... தான் வர சொ..சொன்..னா எனக்கும் அ..வ..ளுக்கும் முன்னாடியிருந்தே பழக்கம்ம்ம்..சொல்லி முடிக்கும் முன் அவன் மூஞ்சை பேத்திருந்தான் கதிர்.

பொறுக்கி ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என் காவியாவையே தப்பானவனு சொல்லுவ...உன்னால தான்டா அன்னைக்கும் என் அம்மு கலக்கப்பட்டு நின்னா..நீ மட்டும் வராம இருந்திருந்தா இன்னேரம் அவ உயிரோட இருந்திருப்பா வீண் பழி போட்டு என் அம்முவ சாகடிச்சிட்டிங்களேடா முகத்தை மூடி கதிர் வேதனை பட்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அங்கிருந்து ஒட்டம் எடுத்தான் வாசன்.

டேய் நில்லுடா மறுபடியும் தப்பிச்சு போக பார்க்காத உன்ன கொன்னு போட்ருவேன்..கதிர் அவனை துரத்தி கொண்டு ஓட இருவரும் மெய்ன் ரோட்டிற்கு வந்து விட்டார்கள்.

பின்னால் துரத்தி வரும் கதிரையே திரும்பி திரும்பி பார்த்த படி வந்த வாசனை கதிர் நெருங்கும் வேலையில் வேகமாக வந்த கனரக வாகனம் மோதி விட்டு சென்றது.

சம்பவ இடத்திலேயே வாசனின் உயிர் பிரிந்து போய்விட.. இருந்த ஒரு துருப்பு சீட்டும் போய் விட்ட நிலையில் துவண்டு போய் வந்தான் கதிர்.கதிர் சென்றதும் அங்கிருந்து வெளிப்பட்டாள் காவியா.

இறந்தவள் கண்களுக்கு வாசனின் ஆத்மா உடலை விட்டு வந்து வெளியே நிற்பது நன்றாகவே தெரிந்தது.

இந்த நிமிஷம் வரைக்கும் உன்ன கொல்லனும்னு நா நினைக்கவே இல்ல ஆனா நீ எப்போ கதிர் கிட்ட உண்மைய சொல்ல துணிஞ்சியோ அப்போவே இந்த பூமில இருக்குற தகுதிய நீ இழந்துட்ட வாசன் பண்ணுன பாவத்துக்கு தண்டனைய நரகத்துக்கு போய் அனுபவி என்ற காவியா வீட்டிற்கு செல்ல வாசனின் ஆத்மா செய்த தவறை காலம் கடந்த பின் உணர்ந்து கதறியழுது கொண்டிருந்த வேளையில் எம தூதர்கள் வந்து அதனை பிடித்து சென்றார்கள்.

கவீட்டு வாசலில் வந்து பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல எத்தனித்த வாசலில் ஏகப்பட்ட செருப்புகள் கிடந்ததை கண்டு புருவம் சுருக்கினான்.

வாசற் படியிலேயே கன்னத்தை தாங்கிய படி அவன் வருகைக்கா காவியா வேறு காத்திருக்க.. என்னடி வாசல்ல இவ்வளவு செருப்பு கிடக்கு விருந்தாளிங்க எதும் வந்திருக்காங்கலா என்றான்.

ஆ..ஆமா கதிர் சொந்த காரங்க தான் வந்திருக்காங்க...ப்ளீஸ் நீ உள்ளே போய் எதுவும் சத்தம் கித்தம் போட்டுறாதடா ப்ளீஸ் எனக்காக என கெஞ்சும் தொனியில் காவியா கேட்கவே அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தான் கதிர்.

என்னடா பாக்குற ப்ரோமிஸ் பண்ணு அப்போ தான் உன்ன உள்ளே விடுவேன் இல்லனா விட மாட்டேன்.. அவனை வைத்து வம்பு வளர்த்து கொண்டு இருந்தாள் ஆவி பெண்ணவள்.

அந்த வீட்டுல இருந்தும் எதும் வந்திருக்காங்கலா முகம் சிவந்து கதிர் கேட்க இல்லையென வேகமாய் தலையாட்டினாள் காவியா.

அப்பறம் எதுக்கு லூசு இப்படி பண்ணிட்டு இருக்க வழி விடு நானே செம்ம டயர்டா இருக்கேன் வாசல்லையே மறைச்சு நின்னுகிட்டு தள்ளு என்றவன் உள்ளே சென்று பார்க்க அங்கே இருந்தவர்களை கண்டு முழு ருத்ரனாகவே மாறி போனான்.

தொடரும்...