தாய்ப்பாலின் மகத்துவம் என்ன?....

பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்.

Mar 30, 2023 - 22:18
 0  45
தாய்ப்பாலின் மகத்துவம் என்ன?....
பெண்களுக்கு எப்போது பால் சுரக்கும்?

தாய்ப்பால் என்பது உலகில் சிறந்த மருத்துவப் பொருளாகும். ஒரு தாய் கருத்தரிக்கும் போது அவளுடைய மார்பகங்கள் பெரிதாகி இரத்த ஓட்டம் அதிகரித்து ஏழு - எட்டு மாதங்களில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும். தாயின் உடல் பருமனும் அதிகரித்து விடும். ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் வழங்கப்படுவது தாய்ப்பாலாகும். இது " கடும்பு பால் " என்று கூறப்படுகின்றது. இது மனிதருக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கு முதன் முதல் வழங்கப்படுவது பாலாகும். தாயின் இரத்தத்தில் இருந்து தாய்ப்பால் சுரக்கின்றது.

மார்பக அளவை பொறுத்து தாய்பால் அளவு வேறுபடுமா?

தாயின் கருவறையில் பத்து மாதங்கள் இருக்கிறோம். " மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை". உலகில் சிறந்தவள் தாய் என்பதால் " அன்னையர் தினம் " கொண்டாடப்படுகின்றது. பத்து திங்கள் சுமந்து, மசக்கைகள் கொண்டு எமக்கு மறுபிறவி கொடுப்பவள் தாய். " தாயிற் சிறந்த கோயிலுமில்லை " என்ற பழமொழி உண்டு. குழந்தை பிறந்ததும் முதலில் கொடுக்கப்படும் "சீம்பால் " மஞ்சள் நிறத் திரவமாகும். இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கின்றது. தாய்ப்பால் சுரப்பத்தற்கு மார்பங்களின் அளவு முக்கியம் இல்லை. மார்பங்கள் பெரிதாக இருப்பதால் அதிகளவு தாய்ப்பால் சுரப்பதில்லை. மார்பகங்கள் சிறிதாக இருந்தாலும் தாய்ப்பால் சுரக்கும்.

ஒரு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கும். ஒரு பெண்ணின் உடலில் அதிசயமான உறுப்பு மார்பகங்கள். இது கொழுப்புத் திசுக்களால் ஆனது. இதில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்தே மார்பகங்களின் அளவு காணப்படும். வயது முதிர்ந்த பின் தோல்கள் சுருங்கும் போது மார்பங்களும் சுருங்கி விடும். ஆண்கள் பெண்களின் மார்பகங்களை கவர்ச்சி பொருளாகவே பார்க்கின்றனர். ஆண்களும் தனது தாயின் மார்பகத்திலே பால் குடித்து வளர்ந்தவர்கள் என்பதை அறியாமலே உள்ளனர்.

தாய்ப்பால் நன்மைகள்?

தாய்ப்பாலால் உண்டாகும் நன்மைகள் பற்றி நோக்குவோமாயின் தாயின் உடல் அழகு கூடுகின்றது, குழந்தைக்கு பல்வரிசை சீராகின்றது, குழந்தை ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கின்றது. அதாவது குழந்தை பிறந்தது முதல் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு நோயெதிர்ப்பு சக்தி உடைய குழந்தையாக மாறுகின்றது. விளையாட்டில் நல்ல ஆர்வம் உள்ள குழந்தையாகவும், தேக ஆரோக்கியம் உள்ள குழந்தையாகவும் காணப்படுகின்றது. கல்வியிலும் தேர்ச்சி பெற்ற குழந்தையாக காணப்படுகின்றது. சுகதேகியான குழந்தையாகவும் காணப்படுகின்றது. தாய்க்கு அடுத்த குழந்தைகளுக்கான கர்ப்பம் பின்னடைவதற்கு காரணமாகும். தாய்க்கும், பிள்ளைகளுக்குமான பாசத் தொடர்பு பிண்ணிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.

தாய்ப்பால் கூடுதலாக சுரந்தால் "தாய்ப்பால் தானம் " செய்யலாம். தனது குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி தாய்ப்பாலை தானம் செய்யலாம். இதன் மூலம் தாய் இறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அநாதை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைத்து குழந்தை நிம்மதியாக நித்திரை கொள்கின்றது. குழந்தையின் நினைவாற்றல் அதிகரித்து மூளையின் செயற்பாடு சீராக இடம்பெறுவதற்கு வழிவகுக்கின்றது. குழந்தைக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து தடுக்கலாம்.

தாய்ப்பால் வழங்கும் தாய்மார்கள்  மார்பங்களில் ஏற்படும் கட்டிகள் தடுக்கப்பட்டு மார்பகப் புற்றுநோயில் இருந்து காப்பாற்றப்படுகின்றார்கள் . " மார்பகப் புற்றுநோய் " தினமும் கொண்டாடப்படுகின்றது. தாய் எப்போதும் இளமையாக இருப்பதற்கும் உதவுகின்றது. தாய் கருத்தடை சாதனங்களை பாவிக்க வேண்டிய தேவையற்றுப் போகின்றது. மார்பகப் புற்றுநோயில் இருந்து தடுப்பதற்கு முப்பது வயதிற்கு மேல் வைத்தியரை அனுகி மார்பகங்களை பரிசோதிக்க வேண்டும். மார்பகங்களில் பருக்கள், பருக்கள் உடைந்து சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியரை நாட வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் மார்பகங்களை சீராகப் பேண முடியும்.

குழந்தை அங்கவீனம் அடைவதில் இருந்து தடுக்கலாம். அதாவது கண்பார்வைக் குறைபாடு, செவிட்டுத்தன்மை குறைபாட்டில் இருந்து பாதுகாக்கலாம். குழந்தையின் பேச்சாற்றல் அதிகரிக்கின்றது. அதாவது ஒரு வயதை பூர்த்தி செய்தவுடனே கதைக்க ஆரம்பிக்கின்றது. குழந்தை முடமாவத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. வளர்ந்து வரும் போது குழந்தைக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. உடற்சோர்வு, மந்தபோசணைத் தன்மையில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. " குவாசியக்கோர்" போன்ற குறைந்த போசனை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. இதனால் புத்திசாலித்தனம், படைப்பாற்றல் மிக்க குழந்தைகளை உலகிற்கு கொடுக்கலாம்.

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வாறு வழங்க வேண்டும்.?

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாயின் சுகாதாரம் முக்கியமானது. தாய் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். இலேசான மேலாடை அணிந்திருக்க வேண்டும். தாயின் மார்பகத்தை ஈரத்துணியால் துடைத்த பின் பால் கொடுக்க வேண்டும். குழந்தையை மடியில் படுத்தி மூச்சுத்திணறாமல் ஒரு மார்பகத்தின் ஊடாக குழந்தையை நிமிர்த்தி பால் கொடுக்க வேண்டும். பால் குடுத்து முடித்ததும் குழந்தையின் முதுகை தடவி படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் வாயைத் துடைத்து விட வேண்டும். குழந்தையின் சுத்தமும் அவசியம். குளிக்க வைத்து பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வேறு யாரிடமும் கதைத்துக் கொண்டோ?, அல்லது அலைபேசியில் பேசிக் கொண்டோ?, தாய்ப்பால் கொடுக்க கூடாது. தனி அறையில் குழந்தையிடம் கதைத்து கொண்டு கொடுக்கும் போது தாய்க்கும், பிள்ளைக்குமான பாசப் பிணைப்பு அதிகமாகும். தாயின் கவனம் வேறு இடத்தில் இருந்தால் குழந்தைக்கு பால் புரையேரி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். பொது இடங்களிற்கு சென்றால் "தாய்ப்பால் ஊட்டும் அறை " காணப்படும். அதில் சென்று தாய்ப்பால் வழங்கலாம். வைத்தியசாலைக்குச் சென்றால் காணப்படுகின்றது  பிரதேச செயலகத்திலும் காணப்படுகின்றது.

பிறந்த சில குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதற்கு மறுத்து விடும். இதற்காக ஊசியினுள் தாய்ப்பாலினை விட்டு அதன் ஊடாக தாய்ப்பால் தாதியர் வழங்கலாம். " சிசேரியன் " மூலம் குழந்தை பெற்ற தாய்மாருக்கு தாய்ப்பால் வழங்க சிரமமாக இருக்கும். இவ்வாறு தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு பசியேற்படும் போது பால் கொடுக்கலாம். குழந்தை பிறந்து இரண்டு வயது வரை பால் கொடுக்கலாம். அதன் பிறகு ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாடு வழங்கலாம். போக்குவரத்தின் தாய்ப்பால் வழங்குவதற்கு அதற்கான ஆடைகள் விற்பனைக்கு இருக்கின்றது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அலுவலகத்தில் அரை நேர விடுமுறைக்கு பதிவு செய்து வீட்டிற்கு வந்து தாய்ப்பால் வழங்கலாம். ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அரை நேர விடுமுறை சம்பளத்துடன் விடப்படுகின்றது. வங்கிகளில் அரைநேர விடுமுறை வழங்கப்படுவதில்லை. இந்த தாய்மார்கள் பாலினை குழந்தைக்கு பால் கொடுக்கும் போத்தலில் சேமித்து வைத்துக் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதற்கு தெரியாத தாய்மார்கள் மூதாட்டிகளிடம் அனுபவப் பகிர்வை பெற்று அதன் மூலம் தாய்ப்பாலினை கொடுக்கலாம். தாய்ப்பால் சீராக கொடுப்பதற்கு இவர்களது அறிவுரை வழிவகுக்கும்.

குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்று எவ்வாறு அறியலாம்?

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைக்கு வயிறு நிறையவில்லை. குழந்தை அழுது கொண்டிருந்தால் தாய்ப்பால் போதவில்லை என்பதை அறியலாம். மார்பகங்களில் தாய்ப்பால் ஊறாமல் இருந்தால் தாய்ப்பாலின் அளவு குறைவடைந்திருக்கும் என்பதை அறிய முடியும். மார்பகங்களின் அளவு கர்ப்ப காலத்திற்கு முன்னிருந்த மாதிரி காணப்பட்டால் தாய்ப்பால் போதவில்லை என்பதை அறியலாம். தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகங்களில் வலி ஏற்படும் போது தாய்ப்பால் போதவில்லை என்பதை அறியலாம்.

தாயின் மார்பகங்களை பிசிக்கும் போது தாய்ப்பால் வரவில்லை என்றால் தாய்ப்பால் போதவில்லை. தாய்ப்பால் சுரப்பதற்கு தேவையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஈரப்பலா போன்ற மரக்கறி உணவுகளை எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரக்கும். கல்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கடல் மீன்களில் காணப்படும். அதாவது சிறிய மீன்களில் காணப்படும். பால்சுறா போன்ற மீன்களில் காணப்படும். காரல் மீன்களை சொதி வைத்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரக்கும். வைத்தியசாலையில் கொடுக்கப்படும் மீன் எண்ணய் குளிசையும் குடிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தாய் உண்ண வேண்டும். உடுத்தம் புட்டு, உழுத்தங்களி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, நல்லெண்ணய் போன்ற உணவுகளையும் எடுக்க வேண்டும். கீரை வகைகளையும் அதிகம் எடுக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட அறிவுரைகளை மாதாந்தம் கிளினிக் செல்லும்போது மருத்துவமாதுக்களிடம் அறிவுரை கேட்கலாம். உணவில் தானியங்களை அதிகம் எடுத்து கொள்ளலாம். கடலை, பயறு, கௌப்பி போன்ற தானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். தானியங்கள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து மாவாக்கி சாப்பிடலாம்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதோடு சேர்த்து சிறு உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.அதாவது ஐந்து மாதங்களில் சோறு ஊட்டுதல். "அன்னப் பிரசாதம் " சடங்கு இடம்பெறுகிறது. இதில் சோறு ஊட்டப் பழக்கலாம். காபோவைதரேற்று நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட பழக்கலாம். அதாவது உருளைக்கிழங்கு அவித்து மசித்து சோறுடன் ஊட்டி விடலாம். உருளைக்கிழங்கை பால்கறி வைத்து சோறுடன் பிசைந்து உண்ணக் கொடுக்கலாம். தானியங்கள் வழங்கலாம். " சர்லக் " போன்ற உணவுகளை கரைத்து வழங்கலாம். சிறு மீன்கள் காரல், நெத்தலி போன்ற உணவுகளை பால்கறி வைத்து சோறுடன் பிசைந்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு எந்த வயது வரை தாய்ப்பால்  வழங்க வேண்டும்?

தாய்ப்பால் கொடுப்பதற்கு சிறந்த வயதாக பிறந்ததில் இருந்து இரண்டு வயது வரை கொடுக்கலாம். அதற்கு பிறகும் கொடுப்பது தாயின் விருப்பம். இரண்டு வயதுக்கு பிறகு சிறு உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம். அதாவது நூடில்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம். முட்டை அவித்து சோற்றுடன் கொடுக்கலாம். முட்டையில் புரதம் அடங்கி இருக்கிறது. குழந்தைக்கு பழவகைகள் சாப்பிடக் கொடுக்கலாம். வாழைப்பழம், பப்பாப்பழம் போன்ற உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம். பழவகைகளை மென்று சாப்பிடுவது சிரமாக இருந்தால் மிக்சியில் அரைத்து பழச்சாறாக கொடுக்கலாம்.

குழந்தைகளை தாமாக உண்ணப் பழக்கலாம். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " என்பதற்கு இணங்க எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து சாப்பிடும் போது அவர்களுக்கு சிறு கிண்ணியில் சாப்பாடு போட்டுக் கொடுக்கலாம். அவர்கள் தானாகவே சாப்பிடும் பழக்கத்தை வளர்க்கலாம். கீரை, பருப்பு போன்ற புரத வகை நிறைந்த உணவுகளை கொடுக்கலாம். ஓட்ஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம். பழவகைகளை ஒரு நேர உணவாக எடுத்துக் கொள்ள வழிவகுக்கலாம். கொய்யாப்பழம் போன்ற உணவுகளை ஒரு நேர உணவாக எடுத்து கொள்ளலாம்.

குழந்தைகளை பகிர்ந்து உண்னுவதற்கு பழக்கலாம். "எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகிர்ந்து உண்ண வேண்டும்." என்பதற்கு இணங்க குழந்தைகளை பகிர்ந்து உண்ணப் பழக வேண்டும். குழந்தைகளுக்கு பிஸ்கட் போன்ற உணவுகளை மெதுவாக கடிப்பதற்கு பழக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த பச்சைக் கஞ்சி வகைகளை உண்ணக் கொடுக்கலாம். வல்லாரை, கறிவேப்பிலை, பொன்னாங்கானி போன்ற கீரை வகைகளை பச்சையரிசி, பயறு போன்ற உணவுகளுடன் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி உணவாக எடுத்துக் கொள்ளலாம். திரிபோசா, சமபோஷா போன்ற சத்து மாக்களை உண்ணக் கொடுக்க வேண்டும்.

மாதாந்தம் வைத்தியசாலை கிளினிக்கில் ஒரு வயதிற்கு உட்பட்ட தாய்மாருக்கு வழங்கப்படும். ஊட்டச்சத்து நிறைந்த சமபோஷா, திரிபோஷா போன்ற மாப்பொருட்கள் நிறைந்த உணவை உண்ணக் கொடுக்க வேண்டும். ரக்ஸ் போன்ற பிஸ்கட்டை தேநீருடன் கொடுக்கலாம். பசுப்பாலை காய்ச்சி கொடுக்கலாம். சோறு வடித்த கஞ்சியை கொடுக்கலாம். குழையல் சோறு சமைத்துக் கொடுக்கலாம். மரக்கறி, இலைவகை, கீரைவகை சேர்ந்த உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம். வல்லாரை ஜூஸ் அடித்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கடையில் விற்கப்படும் சத்துமாவை உண்ணக் கொடுக்கலாம்.

நன்றி

கஜீனா. நீ

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow