முன் பிள்ளை பருவத்தின் வளர்ச்சி
பிள்ளை வளர்ப்பு கட்டுரை

இரண்டு வயது தொடக்கம் 5 வயது வரை உள்ள பருவமே முன் பிள்ளை பருவம் என அழைக்கப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களில் ஏற்படும் அதிவேக வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது முன் பிள்ளை பருவத்தில் உடல் வளர்ச்சி வேகம் குறைவாகும். உடலின் சமநிலையற்ற தோற்றம் ஓரளவுக்கு குறைகின்றது பிள்ளை மிகவும் துடிப்புள்ளதாய் இருத்தல். நடத்தல்,ஓடுதல், பாய்தல் போன்ற இயக்கத்திறன் அதிகரிக்கும்.
தமது உடலை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடிய அவர்கள் இப்பொழுது சுற்றுச் சூழலை ஆய்வு செய்வதற்காக ஆயத்தமாவார்கள். தன்னை சுற்றியுள்ள சூழல் எத்தகையது ,அங்கு நடைபெறுவனை என்ன, அட்சய பாடுகள் எவ்வாறு ஏற்படுவது, தான் அதில் ஒரு பகுதியாக எப்படி, என்பன போன்ற அதிகமான வினாக்களுக்கு விடை தேடும் அவர்கள் உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் ஆராய்வதில் ஈடுபடுவார்கள். உடல் உலர் திறன்களில் முன்னேற்றத்தை காட்டுவர்.
உடல் வளர்ச்சி முதல் இரு வருடங்களையும் விட குறைவான வேகத்தில் இருக்கும். உயரம் கூடுதல் முறையாக நடைபெறுகின்றது முன் பிள்ளை பருவம் முடியும் போது சாதாரண பிறப்பு நிறை ஏழு மடங்கு அதிகரிக்கும். இப்பருவத்தில் பிழையான உணவுப் பழக்கத்தினால் கலோரி பெருமானம் அதிகரித்து உடல்நிலை தேவையற்று அதிகரிக்கலாம். உடல் வளர்ச்சி விசேட தன்மை கொண்டது. குழந்தை தோற்றம் நீங்கி, உடல் பகுதிகள் விகிதாசாரத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடையும். தலை வளர்ச்சி வேகம் உடம்பின் ஏனைய உறுப்புகளை விட குறைவானது. மிகவும் மென்மையான தலைமையில் சிறிது தடித்தும் கருமை அடையும். மூக்கு சிறியதாகவும் தட்டையாகவும் காணப்படும். சிறிய வாயில் பாற்பற்கள் காணப்படும் தாடையின் வளர்ச்சியால் நாடி பகுதி தெளிவாக காணப்படும்.
உடல் வட்ட அமைப்பான மார்பு பகுதியில் முன் தள்ளி வயிற்றுப் பகுதியில் காணப்படும். இப்பருவம் முடியும் போது தோல் பகுதியும் தெளிவான இடை அமைப்பையும் தட்டையான வயிற்றுப் பகுதியையும் ஏற்படுகின்றது. உடல் உறுப்புக்கள் பெரிதாகும். கை கால்கள் நீளமாகும். சிறப்பான பாத அமைப்பு ஏற்படும். முன் பிள்ளை பருவம் ஆரம்பமாகவும் காலத்திலேயே பாற்ப்பற்கள் 20 தோன்றுகின்றன. முன் பிள்ளை பருவம் முடியும் போது பார்ப்பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளர்ச்சி அடைய தொடங்கும். என்புகளின் சீரான இயக்கத்தினால் அவை உறுதியடைகின்றன. உடல் வளர்ச்சியில் போசனை, சுகாதார நிலை, உடற்பயிற்சி, பரம்பரை போன்றவை செல்வாக்கு செலுத்துகின்றன. உடல் வளர்ச்சியுடன் அதிக அளவில் தொடர்பை காட்டுவது இந்த இயற்கை வளர்ச்சியாகும். முன் பிள்ளை பருவத்துப் பிள்ளைகளின் ஓடும் பாயும் முறை, உணவு உண்ணும் முறை, பந்தயம் பிடிக்கும் முறை, சிறு பொருள்களை பொறக்கும் முறை போன்ற செயற்பாடுகள் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஆரம்பத்தில் இச்செயர்கள் செய்யும் போது, அவர்களின் அசைவில் பழக்கமின்மை, பொருத்தமின்மை, முறையற்ற தன்மை, இருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். முதிர்ச்சி அடையும் பிள்ளையில் ஏற்படும் மாற்றம் இயக்க வளர்ச்சி பிரதான செல்வாக்கு செலுத்துகின்றது. முன் பிள்ளை பருவம் பல்வேறு திறன்களை பெற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாகும் பருவமாகும். பிள்ளை சந்தர்ப்பங்கள், ஆலோசனை, பயிற்சி என்பவற்றையும் வழங்குவதன் மூலம் செயற்பாடுகளில் தேர்ச்சியையும் மிக விரைவாகவும் வினைத்திருடனும் பெற்றுக் கொடுக்கலாம்.
எந்த ஒரு செயற்பாட்டையும் நன்கு செய்வதற்குரிய முயற்சியும் மீண்டும் மீண்டும் ஒரு செயற்பாட்டை செய்வதனால் பெரும் பயிற்சியும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும். ஓடுதல், பாய்தல், போன்ற செயற்பாடுகளில் மீண்டும் மீண்டும் ஈடுபட அவர்கள் முன் வருவார்கள். மெல்லிய தசை இழையங்களின் வளர்ச்சி ஏற்படுவது பெரிய தசை இழையங்களின் வளர்ச்சியின் பின் ஆகும். விரல் நுனியில் பிடிக்கும் திறன் தாமதிப்பதும் இதனாலேயே ஆகும். அவர்களின் திறன்கள் நோக்குவமானால் முதலாவது தனது நாளாந்த செயற்பாட்டில் ஈடுபடல் இரண்டாவது சப்பாத்து நூலை கட்டுதல் மூன்றாவது பந்து பிடித்தல் வீசுதல் ஓடுதல் பாய்தல் கெந்தி பாய்தல் முச்சக்கர வண்டி மிதித்தல் நான்காவது செயற்கை களிமண் உபயோகித்து ஆக்கம் உருவாக்குதல் ஐந்தாவது கத்திரிக்கோலால் வெட்டுதல் ஆறாவது சித்திரம் வரைதல் நிறம் தீட்டுதல் ஏழாவது அடிப்படை எழுத்துத் திறன் எட்டாவது சந்தத்திற்கு ஏற்ப நடனமாடுதல் போன்ற செயற்பாடுகளை கவனிக்கலாம். பிள்ளையின் இயக்க வளர்ச்சிக்கு உதவக்கூடிய காரணிகள் பல உள்ளன அதில் வயதுக்கு பொருத்தமான அனுபவத்தை பெற்று கொடுத்தல், சிறந்த பயிற்சி வழங்குதல், பாதுகாப்பு இடம் உபகரணம் விளையாட்டு பொருட்கள், பொருத்தமான விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்துதல், பிள்ளை முயற்சி எடுத்து செய்தல், பிள்ளைகளின் திறன்களை வளர்ப்பதற்கு ஊக்கமளித்தல், தனியாள் வேறுபாட்டை இனம் காணுதல் சம வயதயின் செயற்பாடுகளில் ஈடுபடும் திறன் வேறுபட்டது. மேற்குறிப்பிட்ட கருத்துக்களில் கவனத்தை செலுத்தினார் இயக்க வளர்ச்சியின் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்
மனதுக்குள் எழும் உணர்வுகளின் போராட்டமே மனவளர்ச்சி என இனங்கானப்படுகின்றது இவற்றில் விரும்பத்தக்க மனவழுச்சிகளான மகிழ்ச்சி ,அன்பு ,கருணை, விருப்பு விரும்பத்தகாத மனவழுச்சிகளாக பயம் கோபம் பொறாமை பிடிவாதம். முன் பிள்ளை பருவத்தை பிள்ளையுடன் விரும்பத்தக்கவும். விரும்பத்தகாததும் மனவளர்ச்சிகள் காணப்படுகின்றன. அவர்கள் காட்டும் மனவளர்ச்சிகள் கீழே காணப்படும் பண்புகளின் மூலம் வெளிப்படுகின்றன அவற்றை நோக்குவோம் ஆனால், உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்தல், வேகம், இயல்பு நிலை அடிக்கடி மாறுபடுதல், தீவிரமும் உக்கிராவும், கட்டுப்பாடின்மை போன்றவாகும். உன் பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு முதன் முதலில் சென்ற தினத்தை நினைத்துப் பாருங்கள். தாயையும் குடும்ப சூழலையும் விட்டு பிரிவதனால் கடுமையான மன வளர்ச்சிக்கு உட்பட்டு இருப்பதை இது காட்டுகிறது. பிள்ளைக்கு பெற்றுக் கொடுக்கும் அனுபவம், வாழும் சூழல், குடும்பத்தினர் வழங்கும் கணிப்பு என்பவற்றுக்கேற்ப வழி காட்டப்படும் மனவலிச்சியும் அதன் தன்மை வேறுபட்டிருக்கும் அதே போன்று தனியாள் வேறுபாடு மன வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியது.
முகம் முழுவதும் பிரகாசமாய் இருத்தலும் கை கொட்டி வாய்விட்டு சிரித்தலும் பிள்ளைகளுடைய பிரதிபலிக்கும் மகிழ்ச்சி என்னும் விரும்பத்தக்க ஒரு மனவெழுச்சி ஆகும். முன்பள்ளி பருவத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது மிக இலகுவானதாகும். விருப்பமான பொருட்களை பெற்றுக் கொடுத்தல், அன்பு, கருணை காட்டுதல், மனம் கவர் கூடியவற்றை காட்டுதல், நடிப்பு, வேடிக்கை, வினோதமான ஒலி எழுப்புதல், புள்ளைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயங்கள் ஆகும்.
எந்த ஒரு செயற்பாட்டையும் நிறைவு செய்வதும் பிள்ளையின் மகிழ்ச்சிக்கு காரணமாகிறது. அன்பு, கருணை, விருப்பு என்பன பிள்ளையிடம் பிரதிபலிக்கும் ஏனைய விரும்பத்தக்க மனவளர்ச்சிகள் ஆகும். உயிருள்ள உயிர அல்லாத என கவனியாது அன்பு காட்டுதல். அதேபோல் தமக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருபவற்றில் அன்பும் ஆதரவும் காட்டுதல் என்பன முன் பிள்ளை பருவத்தினுடைய பண்பாகும் மேலும் தமக்கு அதிக அன்பையும் ஆதரவையும் காட்டுவரிடம் அதிக அன்பு காட்டப்படும்.
மிக விரும்பத் தகாத மனவெழுச்சி கோபம். முன் புள்ளி பருவத்தில் பிள்ளை கோபத்தை காட்டும் சந்தர்ப்பங்கள் அனேகமாக உள்ளன மகிழ்ச்சியுள்ள எந்த சந்தர்ப்பத்திலும் கோவத்தினை வழிகாட்டுவார். உணவு உட்கொள்ளல், ஆடை அணிதல், விளையாடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும்போது மகிழ்ச்சியற்ற நிலை காணப்படுமாயின் அது பிள்ளைகள் கோபத்தை உள்ளார்கள் என்பதற்கு அர்த்தம். கோபம் ஆனது சில சந்தர்ப்பங்களில் அவதானத்தை பெற்றுக்கொள்ள பிள்ளைகள் கையாளும் ஒரு உபாயமாகும். மூன்று வயது தாண்டும்போது ஆண் பிள்ளைகளை விட கோபத்தை கட்டுப்படுத்தும் திறன் பெண் பிள்ளையிடம் காணப்படும்.
முன் புள்ளி பருவத்தில் பிள்ளையிடம் பயம் ஏற்படும் காரணிகள் பல உள்ளன. ஒன்று பாவனை செய்தல் அதாவது விலங்கொன்று போல அல்லது பயங்கரமான சத்தம் எழுப்பி பாவனை செய்தல் ஆகும். இரண்டாவது ஏதாவது பயங்கரமான ஒரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக் கொண்டு வருதல் இருட்டின் போது விழுந்து காயமறுதல் போன்றனவாகும். மூன்றாவது விருப்பம் இல்லாத அனுபவங்களினால் ஏற்படும் தாக்கம் திடுக்கிடும் கவனம் கனவு போன்ற போன்ற செயற்பாடுகள் மூலம் பயம் ஏற்படுகின்றது. பொறாமை தமது குடும்பத்திற்கு புதிய ஒரு அங்கத்தவர் வரும்போது குழந்தை பிறத்தல் முன் பிள்ளை பருவப் பிள்ளை அதிகம் கோபத்தை வெளிப்படுத்தும் இயல்பு பொறாமை என இனம் காணப்படுகின்றது. தமக்கு செய்வதற்கு செய்வதில்லை பிறரின் அவதானம் குறைதல் தமது தேவைகளை பிறர் நிறைவேற்றாமை. தம்மை விட ஏனையவர்களுக்கு பிறர் நன்மை செய்தல். போன்ற பிள்ளைகளுக்கு பொறாமை ஏற்படும் சந்தர்ப்பங்கள் ஆகும். பொறாமை ஏற்படும் சந்தர்ப்பத்தை தடுத்துக் கொள்வதே மிக முக்கியமானதாகும். குடும்பத்தில் சேர்ந்த புதிய அங்கத்தவர்கள் தமது குடும்பத்தவர் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் செயல்பாட்டின் போது பிள்ளைக்கு ஒத்துழைத்தல் விசேடமான தாயின் அன்பு ஆதரவு என்பவற்றை குறையாமல் பெற்றுக் கொடுத்தல் என்பன பொறாமையை அறி கூடிய கவனம் சிறுவர்கள் மீது தேவை.
முன் பிள்ளைப் பருவத்தினரின் பழக்கவழக்கங்கள் அனைத்திலும் நுண்ணறிவு வளர்ச்சி செல்வாக்கு செலுத்துகின்றனர். தமது உடல் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு ஒருவரின் நுண்ணறிவு உதவுகின்றது. நுண்ணறிவு வளர்ச்சியில் பரம்பரை அளவுகளில் செல்வாக்கினால் நுண்ணறிவு பண்புகள் முன்னேற்றம் அடையும்போது சூழலுக்கு அதனால் கிடைக்கும் அனுபவம் அதில் செல்வாக்கு செலுத்தும். முன் பள்ளி பருவத்தில் பிள்ளைகளின் நுண்ணறிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியுமா? உயிருள்ளவற்றையும் உயிர் இல்லாத வெற்றியும் வேறுபடுத்து இனங்காழ்வார். நான்கு கால் விளங்கொன்று ஏனைய விலங்கிலிருந்து வேறுபடுத்தி இடம் காண்பதுடன் தம்முடன் நெருங்கும் அன்புக்கேற்ற அவ்விலங்குகளை வகைப்படுத்துவார். நல்லது கெட்டது என்ற எண்ணக் கரு ஏற்படுவது பொருள்கள் உயிர்கள் போன்றவற்றை இனம் கண்ட பின்னரே ஆகும். காலம் தூரம் அளவு எண்ணிக்கை நிறை போன்ற எண்ணக் கருக்கலை விளங்கிக் கொள்வது கடினமானது. அவதாரத்துக்கு உட்பட்டு ஒலிக்கும் இருளுக்கும் ஏற்ப காலை மாலை இரவு என்பவற்றை விளங்கிக் கொள்வார். அவதாரத்திற்கு உட்படும் ஒலிக்கும் இருளுக்கும் ஏற்ப அவர்கள் நடந்து கொள்வார். மனதால் கற்பனை காண்பதற்கு உண்மையான முன் வைப்பார். ஞாபகசக்தி மிக முன்னேற்ற மழையும் எழுத்துக்கள் தெரியாவிடும் புத்தகங்களின் பக்கங்களை புரட்டிப் பார்த்து கதைகள் போன்றவற்றை கூறுவார். ஆக்கத்திறனை வழிகாட்டுவார் பாட்டு கதை என்பவற்றை புனைவதில் திறமை உள்ளவர்கள் ஏனையவர்களை போன்று பாவனை செய்து அனுபவத்தை பெறுவார். விளையாட்டு வீட்டில் காட்டும் விளையாட்டுப் பொருட்களுடன் குடும்ப அங்கத்தவர்களையும் இணைத்துக் கொண்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளுடன் தான் அங்கு வாழ்வதற்கு ஒத்துப் போகக்கூடிய திறனும் நுண்ணறிவு வளர்ச்சியில் ஏற்படும். கற்கும் திறனும் ஆக்கத் திறனும் சிந்தனை திறனும் நுண்ணறிவும் வளர்ச்சி அடையும் திறமையும் இங்கு காணப்படுகிறது.
பிள்ளைகளில் ஏற்படும் ஆராய்ந்து அறியும் ஆர்வம் நுண்ணறிவு வளர்ச்சி துணையாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் வினாக்களுக்கு உண்மையான விடையை பெற்றுக் கொடுத்தலும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அனுபவங்களை பெற்றுக் கொடுத்ததும் மிக முக்கியமானதாகும். வீட்டின் உள்ளேயே வீட்டுத் தோட்டங்களிலோ பிள்ளைகளுக்கு பாதுகாப்பான முறையில் பொருள்கள் தாவரங்கள் விலங்குகள் போன்றவற்றை அவதானிக்கவும் அவற்றை பரீட்சிக்க பார்க்கக் கூடியதான அனுபவத்தையும் பெற்றுக் கொடுப்பது முக்கியமானது.
சொற்கள் சிலவற்றை சமைந்திகளாக முன்வைத்து தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பிள்ளைகளின் மொழி வளர்ச்சியில் வேகமான வளர்ச்சி ஒன்றை முன் பிள்ளை பருவத்தில் காணலாம். சுமாராக 100 சொற்களை கலைக்க பிள்ளைகள் 2000 அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை கதைக்கும் திறனை பெறுவார். இப்படிப்பட்ட வளர்ச்சிகள் முன்பு பிள்ளை பருவத்தில் சிறுவர்களிடம் காணப்படுகின்றது.
Whats Your Reaction?






