கோடுகள் இல்லாத வரைபடம் - அறிமுகம்
உலகப்புகழ் மிகு பிரபல இந்திய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர்கள் எழுதிய கோடுகள் இல்லாத வரைபடம் எனும் நூலை அறிமுகம் செய்யும் கட்டுரை - நன்றி :- எம். எம். அஹமட் பிஸ்தாமி

உலகப்புகழ் மிகு பிரபல இந்திய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
அவர்கள் எழுதிய கோடுகள் இல்லாத வரைபடம் எனும் நூலை அறிமுகம் செய்ய உள்ளோம். வாசிப்பு மனிதனை முழுமைப்படுத்திவிடுகிறது. வாசிப்பில்லாதவன் ஆடையில்லாதவனுக்கு சமன். வாசிப்பு ஆன்மாவை வளப்படுத்தி உயிர்ப்பு மிக்க சிந்தனைகளுக்கு வழியமைக்கிறது. வாசிப்பு வாழ்வின் ஜீவனாக அமையும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாசிப்பும் ஒரு தவம். அது புதிய உலகின் பால் எங்களை அழைத்துச்சென்று உலகின் இன்னொரு பக்கத்தை நாம் இருந்த இடத்திலிருந்தே காண்பிக்கின்றது. வாசிப்பை வழமையான அன்றாட செயற்பாடாக ஆக்கி வாழ்வோருக்கு வாழ்வில் அழுத்தங்களை சமாளிப்பது இலகுவாக இருக்கும்.
வாசிப்பு போலத்தான் பயணங்களும் அமைகின்றன. அசைந்து கொண்டே உலகை வாசிக்கும் அரிய சந்தர்ப்பம் பயணிப்பதன் மூலமே கிடைக்கின்றன. ஒவ்வொரு பயணமும் வாழ்வியல் பாடங்கள் படிப்பினைகள், பக்கங்கள், அனுபவத்திரட்டுகள், அடுத்த தலைமுறைக்கான அர்தபுஷ்டியான போதனைகள். எம்மைச்சூழ உள்ள உலகத்தை மகிழ்வுடன் காண்பதற்கான ஒரு வாய்ப்பே பயணங்கள். தேச எல்லைகள் கடந்து, கடல் கடந்து, ஆகாயம் கடந்து, அண்டப் பெருவெளியில் சுற்றி வலம் வருவதெல்லாம் மிகவும் இன்பமான பயண அனுபவங்கள். எல்லோருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை. அமைவதில்லை. ஆகாயத்தில் பறந்து திரிபவனுக்கு கானகத்தில் சுற்றித்திரியும் வாய்ப்பு நழுவிவிடலாம். நகர வீதிகளில் சுற்றித்திரிபவனுக்கு கிராமத்தின் அழகும் எழிலும் ரம்யமும் இழந்து போகலாம்.
பயணங்கள் எப்போதும் மனதுக்கு இதமானவை. சிந்தனையை தூண்டி விடக்கூடியவை. சரித்திரங்களை அதன் சுவடுகளை முன்னைய மனிதர்களை அவர்களது வாழ்வியலை நினைவூட்டும் சிறப்பங்க்சங்களாகவே பயணங்களை நோக்க வேண்டும். இத்தகைய இனிய இதிகாசங்களை ஒன்றில் நேரடி பயணங்கள் எமக்கு நினைவொட்டும். அல்லது புத்தகங்கள் வாயிலாக அத்தகைய இனிய நினைவுகளை பெறமுடியும். இங்கு நூலாசிரியர் தனது பயணங்களின் வழியே பெற்ற உச்சபட்ச இன்பத்தை வாசகர்களுடன் பகிர்ந்து வாசிப்பையும் தூண்டி அதனூடாக உலகை சுற்றி வலம் வரவும் வழியமைக்கிறார். இதற்காக பெருந்தொகைப் பணத்தை வாரி இறைக்க வேண்டிய அவசியமில்லை. எமது வாழிடங்களுக்கு அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர புகழ் மிக்க இடங்களை நோக்கி சென்றாலே போது.
வரலாற்று புத்தகங்களின் இடுக்கு முடுக்கெல்லாம் நிரம்பி வழியும் சரித்திரப்பயணங்களை, சாகசப் பயணங்களை பரீட்சை நீக்கம் செய்துவிட்டு சுதந்திரமாக சுகமாக வரலாற்றுடன் ஒன்றித்து வாசிக்கின்ற போது புன்னகையுடன் கூடிய ஒரு புதுத்தெம்பு வரும். மெய்சிலிர்க்கும். வரலாற்றுணர்வு ஏற்பட்டு எம்மை அறியாமலே மெய்சிலிர்த்துவிடும். வரலாற்றின் பின்னால் உள்ள மாயங்களும் மந்திரங்களும் கல்லறைகளும் எத்தனையோ விதம் விதமான மனித உணர்வுகளை கற்றுத்தரும்.
அந்தப் புதுத் தெம்பு நூல் வாசிப்போடு முற்றுப்பெற்று விடாமல் இபாபடியான நாடுகாண் பயணங்களின் வரலாற்றுப் பக்கங்களை சுவை சொட்டச் சொட்ட தெவிட்டாமல் வாசிக்கும் போது எங்களையும் அந்தப் பயணத்தில் தேசாந்திரிகளோடு கூடவே அழைத்துச்செல்கின்றார் எஸ் ரா. கோடுகள் இல்லாத வரை படத்தினூடாக.
உண்மையில் பாதைகள் முடிவதுமில்லை. பயணங்கள் முடிவதுமில்லை. கால்னடையாகவோ பேருந்திலோ மகிழுந்திலோ கப்பலிலோ விமானத்திலோ யாரோ ஒருவர் உலகில் பயணித்துக்கொண்டே தான் உள்ளார்கள். அது ஒருவரின் இன்பப்பயனமாக அமையாலாம். அல்லது துயர் போக்கும் பானமாக அமையலாம். அல்லது உல்லாசப் பயணமாக அமையலாம். அல்லது வாழ்வே வேண்டாம் என்று அதனை ஒதுக்கி விரக்கதியுற்று வாழ்வை முடித்துக்கொள்ள செல்லும் இருதிப்பயனமாகவும் அமையலாம். ஆனால் இத்தகைய ஒவ்வொரு பயணமும் பலபோது திருப்பங்களை திருப்பு முனைகளை தந்து வாழ்வில் செழிப்பூட்டும் நினைவுகளாக அமையும். எல்லையற்ற நினைவுகளை அனுபவங்களை தரும்.
பார்த்த இடங்கள், அங்குள்ள பழக்க வழக்கங்கள் மனிதர்கள், அவர்களது பாஷைகள் உணவுப்பாரம்பரியங்கள், சமயம் சார் விடயங்கள் பொழுது போக்கு அம்சங்கள் என பன்மைத்துவ உலகையும் அதன் அழகையும் எமக்கு காட்டித்தரும். உலகென்பது நாம் மட்டுமல்ல எம்மை சூழ உள்ள அனைத்தும் அனைவரும் சேர்ந்து தான் உலகம் இன்று வரை இயங்குகிறது சுழலல்கிறது எம்மையும் சுமக்கிறது என்பதை பயணங்கள் தான் சொல்லித்தருகின்றன.
எமக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் எத்தகைய பண்பாடுகளை மரபுகளை வாழ்வியல் முறைகளை எமக்கு விட்டுசென்றுள்ளனர் என்பதையும் சரித்திரங்கள் இதிகாசங்கள் வழியாகவே காண முடியும். உண்மையில் உலகம் மனிதர்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது நாம் எந்தளவு அதனை வளப்படுத்தி பாதுகாக்கின்றோம். எந்தளவு பயன் பெறுகின்றோம் அனுபவிக்கின்றோம் பயந்தருகின்றோம் என்பதை வைத்துத்தான் எமது வாழ்வின் வாழ்நாளின் இன்பங்களை அனுமானிக்க முடியும். பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று எமது வாழ்வு அமைவது அர்த்தமற்றாதாகிவிடும்.
சரித்திரத்தின் சான்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே உலகப்புகழ் பெற்ற தேசாந்திரிகள் உலகமெங்கும் சுற்றி அலைந்து தாம் வாழ்வையே முதலிட்டு நம்பமுடியாத தகவல்களைஎல்லாம் புத்தகங்களாக தகல்வல்களாக சேர்துக்கோர்த்து கொவைப்படுத்தி கைகளில் தந்துள்ளனர்.
பாடப்புத்தகங்கள் வழியாக வரும் சரித்திரங்கள் வரண்டுபோன தகவல்கள் சார்ந்தவை பரேத்சைஐ மையப்படுத்தியவை. அங்கு சுவையில்லை, சூடில்லை, சுவாரசியமில்லை. உள்ளத்துக்கும் சிந்தனைக்கும் சுமையாக சிக்கலாக அமைபவை. ஆனால் இத்தகைய னுபவங்கள் வாயிலாக வரும் வரலாற்று நூல்கள் துடிப்பானவை. இலக்கிய ரசனை கொண்டவை. உள்ளதை இதமாக்குபவை எமக்குள்ளே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஆற்றல் பெற்றவை.
பலபோது இந்த வகையறா நூல்களை வாசிக்கையில் வாழ்வும் புதுத்தெம்படையும். உற்சாகம் பிறக்கும். இதுவரை எம்மை தோற்றி பற்றிக்கொண்டிருந்த இயலாமைகள் பலவீனங்கள் அகன்று விடும். எம்மை சுற்றியிருந்து வதைத்த அழுத்தங்கள் நீங்கி சுகம் கிடைக்கும். நூல்கள் வழியாக நாமும் காற்றில் மிதந்து பறப்பது போல ஓர் எண்ணம் தோன்றும்.. இதுதான் எழுத்தாளனின் எழுக்குள்ள வீரியம். எழுத்தின் மகிமை. எழுத்து எம்மை எழுந்திருக்க வைக்க வேண்டும். எம்மை எழுச்சியை நோக்கி நகர்த்த வேண்டும். பல எதிர்பார்ப்புக்களை தர வேண்டும். எதிர்ப்புகளை எல்லாம் எதிர்க்கும் துணிவையும் வலிமையையும் தந்து கொண்டே இருக்க வேண்டும். மகத்தான எழுத்தின் வலிமை அதுதான். அத்தகைய பாணியில் எஸ். ராமகிருஷ்ணன் தனது கோடுகள் இல்லாத வரைபடத்தை வரைந்துள்ளார். உலக சரித்திரத்தில் இடம்பெற்ற மிகப்பிரபல தேசாந்திரிகளின் வரலாற்று சாகசங்களின் சுருக்கமே இந்த நூலில் ஒவ்வொரு பக்கங்களிலும் பாடங்களாக பயன்தரும் படிப்பினைகளாக படிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு பயணத்தின் பின்னாலும் வேறுபட்ட இலக்குகள், பயண வழிமுறைகள், பயண ஏற்பாடுகள், பிரமாண்டமான பாதுகாப்பு உத்திகள். உலகம் சுற்றிய வாஸ்கோடகாமாவின் கப்பலில் இத்தனை பிரமாண்டமான இராணுவ ஏற்பாடுகள் எதற்கு? என்று சிந்திக்கும் அளவு மயிர்கூச்செறிய வைக்கும் சம்பவங்கள் நிரம்பி வழிகின்றன நூலின் பக்கங்களில்.
கோடுகள் இல்லாத வரைபடம் தேச எல்லைகளைக்கடந்து, கண்டம் விட்டுக் கண்டம் தேடி நகரும் பயண சாகசங்களை அதன் பின்னால் உள்ள வலியையும் வேதனையையும் இன்பங்களையும் இழப்புகளையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்கிறது. பதியப்பட்ட வரலாறுகள் மிகவும் சொற்பம். பதியாமலே பகிராமலே ஆழ்கடலில் பிணமாக மீன்களுக்கு இரையாகிப்போன மனிதர்கள் தான் ஏராளம்.
சூரியனையும் இராக்கால நட்சத்திரங்களையும் மட்டுமே வழிகாட்டிகளாக வைத்து காற்று வீசும் திசையில் பயணித்து கரையொதுங்குமிடத்தில் தரையிறங்கி விசித்திரங்களையும் விபரீதங்களையும் கடந்து விதியோடு விளையாடும் மர்மம் நிறைந்த கடற்பயணங்களின் தொகுப்புகள் தான் இங்கு நூலாக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே கால்நடையாக உலகை வலம் வந்து உலகை தன்பக்கம் பக்கம் மெதுவாக ஈர்த்துக்கொண்ட நாடுகாண் சஞ்சாரிகளதும் சரித்திர பக்கங்களை இடைக்கிடையே சான்றாக காட்டுகிறார்.எஸ் ராமகிருஷ்ணன்.
நாடுகாண் பயணிகளின் அபூர்வமான இலக்குகள், அவர்கள் மேற்கொண்ட இமாலய சாதனைகள், அவர்களிடம் காணப்பட்ட அபாரமான ஆற்றல்கள், திறமைகள் அனைத்துமே புருவமுயர்த்த வைக்கும் வரலாற்று சாட்சிகள்,காட்சிகள், சான்றுகள். சரித்திரங்கள்.
உலக சரித்திரம் எல்லையற்று விரிகிறது பரந்த வானம் போல ஆனால் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் அசைவுகளும் என்ன ஓட்டங்களும் சிந்தனைகளும் அனுமானங்களு கடலில் ஓயாது வீசிக்கொண்டே இருக்கும் பெருத்த ராட்சத அலைகள் போல இயங்கிக்கொண்டே இருக்கும். காற்றைப்போல எம்மை மெல்லென வருடும். சிலிர்ப்பையும் கதகதப்பையும் தந்துகொண்டே இருக்கும். கோடிக்கு குளிராகவும் உஷ்ணத்துக்கு இதமாகவும் அது அமையும். அத்தகைய மர்ம ஆற்றல் வாய்ந்தவைதான் இதிகாசத்தின் பக்கங்கள். உலகி பயணங்கள் வழியாக அனுபவித்து மகிழ்வது வித்தியாசமான அனுபவம். அப்படி அனுபவித்த உலகப்புகழ் பெற்றவர்களின் பயண அனுபவங்களே இங்கு நூலாக அமைகிறது.
நூல் உலகப்புகழ் பெற்ற தேசசாஞ்சிரி இப்னு பதூதாவில் தொடங்கி கப்பல் ஏறிய ஒட்ட்கசிவிங்கியில் முடிகிறது. ஓயாது வீசும் காற்று போலத்தான் நூலாசிரியர் எம்மையும் அசைவிக்க முயல்கிறார். அசைத்து இயங்கவிடுகிறார். உலகம் எவ்வலவு அழகானது. அதில் இன்பங்கண்டு மகிழ ஏராளமான இயற்கையும் செயற்கையுமான அம்சங்கள் நிரம்பி வழிகின்றன. சரித்திர சான்றுகள் வழியாக இதனை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்களில் ஒரு வீத ஈர்ப்பும் மையலும் ஊற்றேடுத்துக்கொண்டே இருக்கும். அந்த ஈரம் கசிந்துகொண்டே இருக்கும். வாற்றிப்போவதில்லை வரண்டு போவதில்லை. முற்றுப்பெறாத பயணங்கள் போல முடிவடையாத உலக அறித்திரம் போல அது தொய்வின்றி தேய்வின்றி நீண்டு கொண்டே இருக்கும். இதுகாலவரிக்கும் சிறார்களும் மூத்தவர்களும் வரலாற்றை பார்த்து நோக்கிய விதமும் இனி பார்த்து நோக்க வேண்டிய விதமும் வேறுபட்டது என்பதை மட்டும் நூல் வரிக்குவரி சுவை சொட்டச்சொட்ட முன்வைப்பதை வாசககர்கள் கண்டு கொள்ளலாம்
நாடுகாண் பயணங்களின் நோக்கங்களின் வேறுபட்ட தன்மைக்கேற்ப மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்பாகவும் வாசகர்களை தனது மொழி லாவண்யத்தால் சுண்டி இழுத்து ஒரே மூச்சில் வாசித்து இன்பத்தை நுகரும் நுணுக்கமான சொற்களை கையாள்வதில் எஸ் ராவுக்கு நிகர் எஸ் ரா தான்.
நிர்வாணத்துக்கும் ஆடை அணிவித்து அழகுபடுத்தி அலங்கரிக்கும் அபூர்வ எழுத்து எஸ். ராவினுடையது.
பயணங்களின் பின்னால் புதைந்துள்ள மர்மங்களையும் துலாம்பரமாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பாங்கு அலாதியானது.அற்புதமானது. தெவிட்டாத மொழியில் வாசிப்பின் வீச்சு கீழிறங்காமல் உத்வேகத்துடன் அலுப்பின்றி, சலிப்பின்றி மேற்கொள்ளும் அழகான பயணம் போலவே நகர்ந்து செல்லும் வகையில் ராவின் எழுத்து நகர்கிறது கோடுகள் இல்லாத வரைபடம் வழியாக.
சரித்திர ஏடுகளில் சாகாவரம் பெற்று சாகசம் புரிந்த பதினொரு தேசாந்திரிகளின் எல்லை கடந்த பயண அனுபவங்களின் கோர்வைதான் கோடுகள் இல்லாத வரைபடம்.
உலகப்புகழ் பெற்ற நாடுகாண் பயணிகளான மார்க்கோபோலோ, இப்னு பதூதா, அல்பெக்யூ , வாஸ்கோடகாமா, அல்பெரூனி, ரோபர்ட் பியரி, பௌத்த ஞானம் தேடி பயணித்த யுவான் சுவாங், தனியாக எவரெஸ்டில் ஏறி சிகரம் தொட்ட டென்சிங்,
கால் நடையாலே உலகை வலம் வந்து வெற்றி வாகை சூடிய சதீஸ்குமார்,
சாலை வழியே திரிந்து உலகை சுற்றிய லுடேவிக் ஹப்ளர்,
கடைசியாக இந்தியாவுக்கு கப்பல் வழியே வந்த ஒட்டகச்சிவிங்கியின் சுவாரஷ்யமான வரலாறு ..என்று விரிகிறது நூல்.
சரித்திரத்தின் சாட்சியாக இருந்து சாகசம் புரிந்து உலகை அதன் உண்மைகளை உண்மைகளின் பின்னால் உள்ள மர்மங்களை துலாம்பரமாக எடுத்துக்கூறும் தேசாந்திரிகளின் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.....
Whats Your Reaction?






