செவ்வானம் நானே நீ அவந்திகையே..!-3
காதல் தொடர்கதை
கட்டிலின் மேல் அமர்ந்து ஒய்யாரமாக காலாட்டி கொண்டிருந்தவளை காண உச்சி முடி நட்டுக்கொண்டது செந்தமிழ் வேந்தனுக்கு இதில் அவனது சட்டையையும் தூக்கி போட்டு கொண்டதில் கோபம் இந்திய எல்லையை தாண்டி கொண்டிருந்தது.
இப்போ நீ எதுக்கு என்னோட சட்டைய எடுத்து போட்ருக்க கலட்டி கொடுடி முதல்ல என் சட்டைய..
ஐயே உன் சட்டைய போட்டுக்க எனக்கு என்ன வேண்டுதலா..நா என்னவோ உன் மேல விருப்ப பட்டு உன் சட்டைய எடுத்து போட்டுக்கிட்ட மாதிரி பேசுற.. என் டிரெஸ்ஸெல்லாம் எங்க வீட்டுல இருக்கு நீ முன்னாடியே தாலி கட்ட போறத சொல்லிருந்தா நா மண்டபத்துக்கு எல்லாத்தையும் ரெடியா எடுத்துட்டு வந்துருப்பேன் நீ சொல்லாம தாலி கட்டிட்டியா அதான் நா டிரஸ் எடுத்துட்டு வரல மாமா குட்டி என வேந்தனை பார்த்து டொய்ங் என்று கண்ணடித்தாள் அவந்திகா.
ஒரு கேள்வி கேட்டா ஓராயிரம் பதில் சொல்றா சரியான திமிர் பிடிச்ச கழுதை..இத எப்படி தான் இவங்கப்பனும் அண்ணங்காரனும் இத்தன வருசமா வளர்த்து விட்டானுங்களோ தலையில் அடித்து கொண்டே குளியலறைக்குள் புகுந்தவன் குளித்து முடித்து விட்டு வெளியே வர அவந்திகாவோ நன்றாய் தூங்கியிருந்தாள் பாவம் ஊரான் காதலை ஊட்டி வளர்ந்ததில் தூக்கத்தை தொலைத்தவள் இப்பொழுது தான் சற்று கண்ணயர்கிறாள்.
தூங்கு தூங்கு நல்லா தூங்கு இது தான் நீ இந்த வீட்டுல தூங்குற கடைசி தூக்கம் இதுக்கு அப்பறம் நீ எப்படி தூங்கறேன்னு பாக்குறேன்டி என மனதிற்குள் கருவிய புருஷன்காரன் வெளியே சென்று விட்டான்.
இரவு உணவு வேலைக்காரி கவிதாவால் தயாராகி கொண்டிருக்க அவரவர் அறைக்குள் அனைவரும் முடங்கி கொண்டார்கள்.அத்தனையும் அவந்திகா மீதுள்ள பயம் என்று கூட சொல்லலாம்.
வெளியே சென்ற வேந்தன் இரவு தான் வீடு திரும்பினான் உணவு அனைத்தும் மேடையில் தயாராய் இருக்க மொத்த குடும்பமும் தட்டு பாத்திரத்தை தவிர்த்து மற்றவற்றை வயிற்றில் அடக்கம் செய்து கொண்டிருந்தது.
வேந்தா வா வந்து நீயும் சாப்பிடு என வேந்தனையும் அழைத்து உண்ண வைத்தான் குமரன்.வீட்டில் உள்ள யாருக்கும் அங்கே அவந்திகா எனும் ஒரு ஜீவன் இருப்தே தெரியவில்லை வேந்தனின் அப்பா கோபியை தவிர.
அம்மா ராசாத்தி போய் அந்த புள்ளையவும் கூட்டிட்டு வரலாம்ல பாவம் அதுக்கும் பசிக்கும் தானே என்ற கோபியிடம்..நா எதுக்கு மாமா போகனும் அவ கிட்ட மனுஷன் பேச முடியுமா சரியான அராத்து உங்களுக்கு அவ மேல அக்கறை இருந்தா நீங்க போய் கூப்பிடுங்க மாமனார் என்ற மரியாதை கூட இல்லாது முகத்திலடித்தாற் போல அவள் பேச முகம் சுருங்கி போனார் கோபி.
ராசாத்தி அந்த வீட்டில் இன்னொரு சாரதா என்று கூட சொல்லலாம்.கோபிக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்பதாலோ அல்லது இவர்களை போல பணப்பேயாக இல்லாது நல்ல மனிதராக இருப்தினாலோ மரியாதை குறைவு தான்.
சார் சார்...என கூப்பிட்ட படி வாசலில் ஒருவன் வந்து கத்தி கொண்டிருக்க மாடியில் இருந்து இறங்கி வந்தாள் அவந்திகா.. வேந்தனின் சட்டையை அவள் போட்டிருப்பதை பார்த்து அனைவரும் முகம் சுழிக்க அவளோ எதையும் கண்டு கொள்ளாது வாசலுக்கு செல்ல எல்லோரினது தலையும் வாசல் புறம் திரும்பியது.
வாசலில் நின்றிருந்தது ஆன்லைன் ஃபுட் சர்விஸ் டெலிவரி பாய்..அவந்திகா அவளுக்காக ஆர்டர் செய்த பிரியாணியை வாங்கி வந்து வேந்தன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
பிரியாணி வேணுமா மாமா குட்டி என அவனை சீண்ட வழக்கம் போல ஒரு முறைப்பை பரிசாக அளித்தாவன் தட்டில் தலையை நுழைத்த கொண்டான்.
அங்கிள் நீங்க பிரியாணி சாப்பிடுறிங்களா கோபியை பார்த்து கேட்க அவரோ சாரதாவை பார்த்து எச்சில் விழுங்கினார்.ஓ நீங்க தண்ணி குடிக்க கூட அங்கே பர்மிஷன் கேட்டுல்ல குடிப்பிங்க நா மறந்துட்டேன் பாருங்க என சாரதாவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அவந்திகா ஒரு தட்டை எடுத்து
அதில் பிரியாணியை போட்டு கோபிக்கு கொடுத்தாள்.
பயப்படாதிங்கோ அங்கிள் இதுல ஒரு மருந்தையும் நா கலக்கல நீங்க சாப்பிடலாம் என்று தான் உண்ண ஆரம்பித்து விட கோபியோ திருதிருவென விழித்து கொண்டிருந்தார்.
சாரதா கண்களாலேயே அந்த உணவை குப்பையில் போட சொல்ல.. அப்பா யார் கொடுத்தா என்ன ஒழுங்கா அத சாப்பிட்டு முடிங்க சாப்பாட வேஸ்ட் பண்ணா எனக்கு பிடிக்காதுனு உங்களுக்கு தெரியும்ல.. வேந்தன் கட்டளையாய் சொல்ல கோபியும் அமைதியாக உண்டார்.
அவந்திகாவோ உதடை சுழித்து சாரதாவை பழிப்பு காட்டினாள்..பாதி சாப்பாட்டோடு சாரதா எழுந்து சென்றுவிட அவளின் அல்லக்கைகளும் எழுந்து சென்று விட்டன.
உணவை முடித்துக் கொண்டு அவந்திகா அறைக்கு வர அங்கே சில பொதிகள் வைக்க பட்டிருந்தை கண்டு ஒன்றும் கூறாமல் சென்று விட வேந்தனுக்கு எரிச்சலாய் போனது.
ஏய் ராங்கி விரல் சொடுக்கி மனைவியை அழைக்க..என்னடா அவளும் தெனாவெட்டாய் கேட்டு நின்றாள் .
இந்த டிரெஸ்லாம் உனக்கு தான் இத போட்டுக்கிட்டு என் சர்ட்ட கலட்டி குடு என்றான் எங்கோ பார்த்த படி.
மெதுவாக அந்த ஆடைகளை எட்டி பார்த்தா அவந்திகா உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பிக்க வேந்தனோ இப்போ எதுக்கு சிரிக்குறா.. பைத்தியம் முத்திடுச்சோ எனும் வகையில் அவளை பார்த்து வைத்தான்.
என்ன மேன் பாக்குற பைத்தியம் மாதிரி சிரிக்கிறேன்னா ஹாஹா...ஹையோ ஹையோ எனக்கு போய் புடவையும் சுடிதாரும் வாங்கிட்டு வந்திருக்க இதெல்லாம் எப்படி டிரஸ் பண்ணனும்னு கூட எனக்கு தெரியாதே முருகேசா..என்ற அதியின் சிரிப்பு மட்டும் நின்ற பாடில்லை.
அவ்வளவு ஏன் இத்துனூண்டு வயசுல இருந்து என்ன பார்த்துட்டு தானே இருக்க நா இந்த மாதிரி டிரஸ் பண்ணி எப்பவாச்சும் பார்த்திருக்கியா என்ன..அவந்திகா கேட்க..இதோ பாரு இதுக்கு முன்னாடி நீ எப்படி வேணா இருந்திருக்கலாம் ஆனா இனி நா சொல்ற மாதிரி தான் நீ இருக்கனும்.
இந்த டிரஸ்ஸ தான் நீ போட்டுக்கனும் இல்ல நானே மாத்தி விட வேண்டி வரும்.
எங்கே தைரியாமான ஆம்பிளையா இருந்தா மாத்தி விடு பார்ப்போம்.. எகத்தாளமாய் கேள்வியை கேட்டவளும் அறிவாள் எதிரில் நின்றவனும் அறிவான் அது நடவாத காரியம் என்று.
என்னமாவது பண்ணி தொல நா தூங்கனும் வழிய விடு வேந்தன் கட்டிலில் படுத்து கொள்ள அவந்திகாவும் அவன் அருகில் வந்தாள்.
ஏய் நீ எங்கடி இங்க வார போய் தரைல படு இல்லனா வெளியே படு பெட்ல உனக்கு இடம் இல்ல..
நா ஏன் வெளியே போய் படுக்கனும் நீ வேணும்னா வெளிய போய் படு நா இங்கே தான் படுப்பேன்..
உனக்கெல்லாம் வாயால சொன்னா புரியாது இருடி வாரேன் என்ற வேந்தன் அதியை செந்தூக்காக தூக்கி கொண்டு போய் பால்கனியில் விட்டான்.
நா..நா உள்ள தரையிலயே படுத்துக்குறேன் மாமா குட்டி இங்கே வேணாமே இருட்டுனா எனக்கு பயம்.. உதட்டை பிதுக்கினாள் அராத்து குட்டி.
மகாராணிக்கு இருட்டுனா பயமோ அப்போ விடிய விடிய இச்கேயே பயந்து சாவுடி.. அப்போ தான் கொழுப்பு குறையும் என அவளை வெளியே விட்டு கதவையும் சாத்தி விட்டு வந்து படுத்தவன் கண்ணாடி கதவின் வழியே அவள் கதவை திறக்க சொல்லி கத்துவதை வஞ்சம் பொங்க பார்த்திருந்தான்.
ஏன் ஜானுமா என்ன விட்டு போன... உனக்கு இந்த மாமா வேண்டாமா...உன்ன எவ்வளவு காதலிச்சேன் கடைசில இவ கூட என் வாழ்க்கை அமைச்சு போய்டுச்சே என மானசீகமாய் அவன் கலங்கி கொண்டிருந்தான்.
கரிய இருளோடு சேர்ந்து கருகிய நினைவுகளும் பேயாய் வந்து பயம் காட்டின பாவையவளை..அவளை சுற்றிலும் ஏகப்பட்ட கைகள் அவளை பிடிக்க வருவதை போல ஒரு மாயை...இருளை கண்டு அஞ்சி இமைக்குடைகளை இறுக்கி கொள்கிறாள் இருந்தும் வித்தியாசமான சத்தங்கள் செவியை எட்ட உடல் நடுக்கம் கொள்கிறது.
எதையோ தேடி அவள் மனம் தடுமாறுகிறது..எதையோ விலக்க முனைகிறாள் இருளை கிழித்து கொண்டு ஒரு வெளிச்சம் வரும் என அவள் காத்திருக்க இருளையே விழுங்கும் அசுரன் ஒருவன் அவளை நெருங்க அம்மாஆஆஆ..... அவளின் கதறல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தான் வேந்தன்.
நேரமோ நள்ளிரவு ஒரு மணி..வேந்தா கதவை திற திற எனக்கு பயமா இருக்கு.. கண்ணாடி கதவு அவள் தட்டியதில் பாதி கண்ணாணி உடைந்து போனது..குருதி வழியும் கரங்களையும் கண்டு கொள்ளாது கதவை திறப்பதிலேயே முனைப்பாய் இருந்தாள் அவந்திகா.
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் வேந்தன் அவன் வந்தது தான் தாமதம் அவன் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவள் எதிர் புறமாக கையை மட்டும் காட்டினாள்.
அங்க யாரோ இருக்காங்க என்ன என்ன.. அதற்கு மேல் வார்த்தை வரவில்லை அவளுக்கு மூச்சு விடுவதே சிரமமாய் போனது அவளுக்கு.
அவள் காட்டிய திசையில் ஒன்றும் இல்லாது போகவே தூக்கத்தை கெடுத்த கோபத்தில் அவளை அறைந்து விட்டான் வேந்தன்.
என்னடி நாடகமாடுறியா...என் நிம்மதிய கெடுக்கவே வந்து தொலைஞ்சிருக்க.. என் ஜானுவ என் கிட்ட இருந்து பிரிச்ச இல்ல.. உனக்கு இது தான் தண்டனை விடிய விடிய நீ வெளிய தான் கிடக்கனும் என்றவன் உதிரம் சொட்டும் அவள் கைகளை கூட கவனியாது கதவை தாழ் போட்டு திரைச்சீலையால் மூடியும் விட்டு இரக்கமற்ற கணவனாய் சென்று உறங்கிட அவந்திகாவின் இதழ்கள் தன்னால் முனுமுனுத்தன "எல்லாருமே சுயநலவாதிகள்.." என்று.
காலை கதிரவன் தன் பணியை ஆரம்பிக்க.. சாரதாவின் கட்டளை படி வேந்தனுக்கு காஃபி கொண்டுவந்தாள் கவிதா.
கவிதா பால்கனியில அவ இருப்பா அவள எழுப்பி ரூம க்ளீன் பண்ண சொல்லு நீ க்ளீன் பண்ண வேண்டா ஓக்கே..
சரிங்க சார் என்றவள் பால்கனி கதவை திறந்து அதிர்ந்து கத்தி விட்டாள்.
என்னாச்சு அதுக்கு இப்படி கத்துறு அந்த குட்டி சாத்தான் என்ன பண்ணி வச்சிருக்கா கட்டிலில் இருந்த படியே வேந்தன் கேட்க கவிதாவோ பேயறைந்ததை போல நின்றாள்.
காலைலயே மூட் அவுட் பண்ண பாக்குறாலா அவ வச்சிக்கிறேன் என்றவன் எழுந்து வந்து அவந்திகாவை பார்க்க ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.
அங்கே காயம் பட்ட அவள் கைகளில் இரத்தம் உறைந்து போய் இருக்க மூக்கில் ரத்தம் வடிய மயங்கி கிடந்தாள் அவந்திகா.உடலிலும் முகத்திலும் அவள் நகத்தை கொண்டு கீறி தன்னை தானே காயப்படுத்தியிருந்தாள்.
தொடரும்...
<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>



