அமிர்தத்தின் சாகரமே -4
காதல்

நிலைக்குத்திய பார்வையை எதிரே இருந்த சுவற்றில் பதித்த படி அந்த ஹாஸ்பிடல் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அமிர்தா.அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே டாக்டர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்களே ஒழிய ஒருவரும் முன்னே உயிற்ற ஜடமாய் அமர்ந்திருந்தவளிடம் ஒரு தகவலையும் கூறவில்லை.
லாறியில் மோதிய கார் தூக்கியடிக்கப்பட்டு பெரிய மரத்தில் மோதியது மோதிய வேகத்தில் உள்ளேயிருந்த சாகரன் வெளியே வீழுந்து கல்லில் தலை பலமாக மோதியது. நொடிப்பொழுதில் நடந்தேறிய இந்த விபத்தில் ஸ்தம்பித்து போனாள் அமிர்தா.
அடுத்த என்ன செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு .அவன் அவளை தள்ளிவிட்டிருந்த இடம் கூட புல் தரை என்பதால் அவளுக்கு சிறு கீறல் கூட விழவில்லை.சரன்...என கத்திக் கொண்டு அவன் அருகில் ஓட..குறை உயிராய் கிடந்தான் சாகரன்.
ஒன்னும் இல்வ சரன் உங்களுக்கு ஒன்னும் அகாது நா இருக்கேன் சரன்..என கண்ணீர் வடித்தவள் அவனின் போனை எடுத்து ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தாள்.
டோன்ட்..க்ரை பே..பி ..இ..னி நீ அழ..வே கூடாது என திக்கி திணறி பேசியவன் அப்படியே மயங்கி போனான் அவள் கரத்தை அழுத்தமாக பிடித்தபடி.
ஆம்புலன்ஸ் வரும் முன்னரே அந்த வழியாக வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி சாகரனை ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்த்தவள் தன் வீட்டிற்கும் தகவலை கூறியவள் உடைந்து போய் அமர்ந்து விட்டாள்.
அமிர்தாவின் குடும்பம் பதறிக்கொண்டு ஓடி வந்தது ஹாஸ்பிட்டலுக்கு.காலையில் நன்றாக பேசி சிரித்து போனவன் இப்படி அடிப்பட்டு கிடப்பதில் பெருங்கவலை கொண்டனர் அனைவரும்.
குருதி படிந்த புடவையுடன் சித்தம் கலங்கியவள் போல் அமர்ந்திருந்தவளை பார்க்கவே பெற்றோருக்கு பயமாக இருந்தது.
நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் டாக்டர் வெளியே வர அனைவரும் அவர் முகத்தையே பார்த்திருந்தார்கள் கூற போகும் பதிலுக்காய்.
டாக்டர் இப்போ எப்படி இருக்கு எங்க பையனுக்கு குணசேகரன் முன்னால் வந்து கேட்க..சாரி சார் எங்களால முடிஞ்ச பெஸ்ட்ட நாங்க கொடுத்தோம் பட் பேஷன்ட் உயிர மட்டும் தான் எங்களால காப்பாத்த முடிஞ்சது அவரு கோமாவுக்கு போய்ட்டாரு என்று பெரிய இடியாய் இறக்கினார் டாக்டர் அவர்கள் தலையில்.
சார் நா அவர பார்க்கலாமா உடைந்த குரலில் அமிர்தா அனுமதி கேட்க நீங்க மட்டும் போய் பாருங்க என்று டாக்டர் குணசேகரனை அழைத்து கொண்டு சென்றார் மேலும் சில தகவல்கள் வழங்க.
உள்ளே ஐசியூவில் அசைவற்று கிடந்தான் சாகரன்.ஏகப்பட்ட வயர்கள் உடலில் பொருத்தப்படிருந்து.எப்பொழுதும் அவள் காதலுக்காய் ஏங்கி தவித்த இதயத்தின் துடிப்பு இன்று திரைப்போட்டு அவள் முன்னால் காட்சியாகி கொண்டிருந்தது.
பேபி பேபி..என மூச்சுக்கு மூச்சு பேசிய இதழ்கள் திறவாது கிடந்தது.அவள் காதலை யாசித்து நின்ற பார்வை,அவளை சீண்டி விட்டு குறும்பு மின்ன பார்க்கும் பார்வை, பொய்யாய் கோபம் கொண்டு பார்த்த பார்வை,அவள் காயப்படுத்திய வேளைகளில் பார்த்த வலி நிறைந்த பார்வை எல்லாம் எங்கே போனதோ.. இமைக்குடைகள் விரிய மறுத்து இறுகியிருந்தது.
எங்கே போனான் அந்த கம்பீரமான சாகரன்..ஒற்றை விழி வீச்சில் அனைவரையும் அடக்கியாளும் வீரமான ஆண்மகன் விழிமூடி கிடப்பதேனோ.அமர்த சாகரனவன் அமிர்தாவின் சாகரனான போன சமயம் விதி அவனை முடக்கி போட்டதோ..இல்லவே இல்லை இது விதியால் நேர்ந்த விபத்தல்ல சதியால் நேர்ந்த விபத்து..பழியால் நடந்த விபத்து.
இனி நீ அழவே கூடாது பேபி என்றவனின் இறுதி வார்த்தைகள் அமிர்தாவின் செவியில் விழுந்து கொண்டேயிருக்க வெளிவந்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் மென்மையாய் தன் இதழை ஒற்றி எடுத்தாள் கட்டு போட்டிருந்த அவன் நெற்றியில்.
சீக்கிரமா திரும்பி வந்திடுங்க சரன் உங்களுக்காக நா காத்திருப்பேன்.. எனக்கு என்னடோ பழைய சரன் வேணும் சீக்கிரமா திரும்பி வந்திடுங்க என்றவள் டாக்ரை காண சென்றாள்.
குணசேகரனும் அங்கிருக்க அமிர்தாவை கண்ட டாக்டர் அவளிடமே அனைத்தையும் கூற துவங்கினார்.
அவருக்கு எப்போ டாக்டர் நினைவு திரும்பும்.. குணப்படுத்தலாம் தானே குணசேகரன் கலக்கமாய் கேட்க..
அது உறுதியா சொல்ல முடியாது சார் எப்போ வேணும்னாலும் நினைவு திரும்பலாம் இன்னைக்கு இல்லனா நாளைக்கு ஒரு வருஷம் ஏன் பல வருஷங்கள் கூட ஆகலாம் நினைவு திரும்பாம கூட போகலாம்..
நோஓஓஓ.. அப்படி சொல்லாதிங்ங டாக்டர் அவரோட நினைவு முழுக்க நிறைஞ்சு போய் இருக்கிறது நா மட்டும் தான் அவரால என்ன விட்டு போக முடியாது கன்டிப்பா அவருக்கு நினைவு திரும்பும் நீங்க அவருக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி டிஸ்சார்ஜ் பண்ணுங்க நா அவர பார்த்துக்குவேன் என ஆவேசமாய் கத்திய அமிர்தா குணசேகரனுக்கு புதிது.
அவருக்கு தெரிந்ததெல்லாம் தன் அமைதியான மகள் அமிர்த வர்ஷினி மட்டுமே.
ஓக்கே மிஸ் அமிர்த வர்ஷினி நா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் இனி உங்க விருப்பம் நீங்க மெடிக்கல் ஃபார்மாலிட்டிஸ முடிச்சிட்டு அவர கூட்டிட்டு போகலாம் என்று டாக்டர் சொல்லிவிட அடுத்த ஒரு மணி நேரத்தில் சாகரன் தகுந்த மருத்துவ உதவியுடன் தன் மாளிகைக்கு அழைத்து வரப்பட்டான்.
இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது சாகரன் அழைத்து வரப்பட்டு அவ்வப்போது அமிர்தாவின் பெற்றோரும் சாகரனின் பீஏ சித்தார்த்தும் வந்து பார்த்து விட்டு செல்வார்கள் அவனை..
கண்ணை விட்டு நீங்கா இமை போல காதலை விட்டு நீங்காத காதலியாகி போனாள் அமிர்தா.
ஹாஸ்பிடலில் மூடியிருந்த அவன் விழிகள் வீடு வந்ததும் திறந்து கொண்டது ஆனால் வேறு எந்த முன்னேற்றமும் நிகழவில்லை.தாயாய் மாறி அவனை தாங்கினாள் அமிர்தா.. அவனுக்கு உடை மாற்றுவது உடலைச் சுத்தம் செய்வது என கொஞ்சமும் முகம் சுழிக்காது அவனுக்கான அனைத்து வேலைகளையும் அவளே செய்வாள்.
மணி கணக்கில் அவனோடு அமர்ந்து பேசுவாள் இருந்தும் ஒரு பயனும் இல்லை திறந்த விழிகளில் ஒரு அசைவு கூட இருக்காது ஆனாலும் மனம் தளராமல் இருப்பாள் அமிர்தா.
அன்றும் அப்படித்தான் கட்டிலில் கிடந்த சாகரனுடன் அவள் சின்ன வயது சாகசங்களை சொல்லிக் கொண்டிருக்க கதவு தட்டும் ஓசை கேட்டது.
எழுந்து சென்று அவள் திறந்து பார்க்க சித்தார்த் நின்றிருந்தான்.
என்னாச்சு சித்தார்த் இந்த நேரத்துல வந்திருக்கிங்க என்ன விஷயம் எதும் ப்ராப்ளமா..
யெஸ் மேடம் ப்ராப்ளம் தான்..கம்பனில நிறைய வர்க் பென்டிங் இருக்கு அக்கவுண்ட் ஃபைல்ஸ் எல்லாம் செக் பண்ணி சைன் பண்ணாம வர்க்கரஸ்க்கு மன்த்லி சாலரி கொடுக்க முடியாது சார் இல்லாததால நீங்க தான் இப்போ கம்பனி எம்டி நீங்க தான் எல்லா ஃபைல்லயும் சைன் பண்ணியாகனும் மேடம் என தான் வந்த விடயத்தை பட படவென்று கூறி முடித்து விட்டு பதிலுக்காக காத்திருந்தான் சித்தார்த்.
அவள் மறுத்தாலும் அவள் தான் பொறுப்பை கையில் எடுத்து கொள்ள வேண்டும் சாகரனின் நிலையை கருதி அவனை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் வயிற்றில் அடிக்க முடியாதே...அடி மட்டத்தில் இருந்து அவளுக்கு வேலையை சொல்லி கொடுத்திருக்கிறான் சாகரன்.எதற்கு பயப்பட வேண்டும் இப்படியே விட்டால் கம்பனி நஷ்டத்தில் அல்லவா போய் விடும்.
சரி ஃபைல்ஸ் எல்லாம் அனுப்பி வைங்க நா நைட்டே எல்லாம் செக் பண்ணிடுறேன் அப்பறம் மார்னிங் சாகரனும் ஆஃபிஸ் வர ஏற்பாடு பண்ணுங்க என்று பேச்சை முடித்து விட்டாள்.இப்போதெல்லாம் அவள் சாகரனை தவிர யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை அவளின் குடும்பத்தாருடன் கூட பேச்சு வார்த்தை குறைந்து விட்டது.
பட் மேடம் சார் எப்படி ஆஃபிஸ்க்கு வர முடியும் அவருக்கு ஹெல்த் ப்ராப்ளம் வந்தா என்ன பண்றது.நா டாக்டர் கிட்ட பேசுறேன் நீங்க ஏற்பாடு பண்ணுங்க..
ஓக்கே மேடம் நா கிளம்புறேன் இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபைல்ஸ் எல்லாம் உங்க கைல இருக்கும் என்றவன் சிறு புன்னகையுடன் விடைபெற..ஒரு நிமிஷம் சித்தார்த்..என அவனை தடுத்து நிறுத்தினாள் அமிர்தா.
நம்ம கம்பனிக்கு ஆபசிட் கம்பனிஸ் எது கூடவாச்சும் சாகரனுக்கு ப்ராப்ளம் இருந்திருக்கா மத்த எம்டிஸ் அன்ட் டீலர்ஸ், பார்ட்னர்ஸ் கூட எதாவது சண்டை இந்த மாதிரி..என கேட்க யாஹ் மேடம் நம்ம N.A Pvt. ltd எம்டி மிஸ்டர் நேஹனுக்கும் சாகரன் சாருக்கும் எப்பவும் ஆகாது பாக்குற நேரமெல்லாம் சண்டை போட்டுப்பாங்க என்றான் சித்தார்த்.
எதனால சண்டை போட்டுப்பாங்க..
நம்ம கம்பனி ஸ்டாஃப் மூலமா போஜரி பண்ணி நேஹன் சார் நம்ம கம்பனி ஷேர் ஒன்ன வாங்கிட்டாரு இத தெரிஞ்ச சாகரன் சார் நேஹன் கம்பனியோட மொத்த ஷேரையும் வாங்கிட்டாரு இதனால ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும் மேடம்..
ஓக்கே அந்த நேஹன் பத்தின டீட்டைல்ஸ் எல்லாம் எனக்கு வந்தாகனும் இப்போ நீங்க போங்க என்று சித்தார்த்தை அனுப்பி விட்டு சாகரன் அருகில் வந்து படுத்து கொண்டாள்.
சிறுது நேரத்தில் ஃபைல்கள் அவள் கைக்கு கிடைத்துவிட இரவு முழுவதும் உறங்காது அனைத்தையும் சரி பார்த்தவள் விடியலில் தான் கண்ணயர்ந்தாள்.
சாகரனை சுத்தப்படுத்தி அவனுக்கான உடையையும் அணிவித்து அவனை நெட்டி முறித்தாள் அமிர்தா.
என்னோட அழகு குட்டி..பாரு பாப்பா மாதிரி எவ்வளவு க்யூட்டா இருக்க சரன் என்றவள் அவனை கண்ணாடி முன் காட்டினாள் ஒரு வாரம் சவரம் செய்யாத முகத்தில் குட்டியாய் வளர்ந்திருந்த தாடி கூட அவனுக்கு அழகை தான் கொடுத்தது.தெய்வ நம்பிக்கையே இல்லாதவன் நெற்றியில் சிறிய கீற்றாய் விபூதியை வைத்து விட்டவள் அவனை வில் சாரில் வைத்து தள்ளி கொண்டு வெளியே வர அவனுக்கான பிரத்தியேக வாகனமொன்றை தயார் படுத்தியிருந்தான் சித்தார்த்.
கார் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த பாதையில் இடையில் வந்து விழுப்தான் கவின்.டிரைவ் ப்ரெக் போட்டு காரை நிறுத்த என்னாச்சு என்றாள் அமிர்தா சாகரனை அணைத்த படி.. தெரியல மேடம் யாரோ வேணும்னே குறுக்க வந்து விழுந்துட்டாங்க என்று டிரைவர் சொல்ல சரி நீங்க சார பார்த்துக்கோங்க நா என்னனு பாக்குறேன் என்றவள் கீழேயிறங்கி பார்க்க.
அங்கே கவின் விழுந்து கிடந்தான்..
ஹே கவின் என்னாச்சு எதுக்கு வண்டில வந்து விழுந்த கோபமாய் கேட்டவள் அவனை தூக்கி நிறுத்தினாள்.
வேற எதுக்கு விழுவாங்க சாக தான்.. எல்லாம் அந்த சாகரன் பண்ண வேலை என்ன எந்த கம்பனிலையும் வேலைக்கு எடுக்க மாட்டிங்குறாங்க அதான் தற்கொலை பண்ணிக்கலாம்னு முயற்சி பண்ணேன் என கடுப்பாய் சொன்னவனை விழிகளில் சுருக்கி பார்த்தவள் சரி என் கூட வா உனக்கு வேலை தாரேன் என்க..வாட் நீ எனக்கு வேலை தர போறியா அந்த அளவுக்கு மேடம் உசந்து போய்ட்டிங்கலோ என்றான் நக்கலாய்.
சாகரனுக்கு ஆக்சிடன் ஆகிடுச்சு அவர் கம்பெனிக்கு இப்போதைக்கு நா தான் எம்டி.. உனக்கு வேலை தாரேன் வா என அழைக்க கவினும் அவர்களோடு பயணமானான்.
அமிர்தா சாகரனை அணைத்த படி பின் சீட்டில் அமர்ந்து வர டிரைவருடன் முன் சீட்டில் வந்த கவின் "ப்ளான் சக்ஸஸ்.." என்று யாருக்கோ மெசேஜ் அனுப்பி விட்டு மர்மமாய் சிரித்து கொண்டான் அமிர்தாவை ஏமாற்றி விட்டதாய் நினைத்து.இவள் பழைய அப்பாவி அமிர்த வர்ஷினி அல்ல அமிர்தனின் வர்ஷினி என்பதை பாவம் கவின் அறிந்திருக்கவில்லை.
தொடரும்...