செவ்வானம் நானே நீ அவந்திகையே..!- பகுதி -2

காதல் தொடர்கதை

செவ்வானம் நானே நீ அவந்திகையே..!- பகுதி -2

வேந்தன் அவந்திகா கழுத்தில் தாலி கட்டுவான் என்று யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை அனைவருக்கும் இது உச்ச கட்ட அதிர்ச்சி என்றால் சாரதாவின் சொல்லவும் வேண்டுமா..

தம்பி மகள் மருமகளாய் வந்ததில் அவளுக்கு எங்கே சொத்து கைவிட்டு போய்விடுமோ என்ற பேரதிர்ச்சியே அவள் பிபியை எகிற வைத்தது.

உயர் ரத்த அழுத்தத்தில் மயங்கியது விழுந்து விட்டாள் மாமியார் காரி.அவளை எல்லாரும் சேர்ந்து ஹாஸ்பிடல் தூக்கி கொண்டு போய்விட வேந்தனோ உக்கிரமாய் முறைத்து கொண்டிருந்தான்  லைவ் சென்று கொண்டிருந்த அவந்திகாவை.

இத்தனைக்கும் அவளின் உடன் பிறப்பு மித்ரனும் தந்தை ராமும் கூட அந்த லைவ்வை வீட்டில் இருந்த படி பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

ஹையா எனக்கு கல்யாணம்,எனக்கு கல்யாணம் என டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த அவந்திகாவை அமைதி படுத்தியது ஜனனி தான்.

அதி என்ன கோமாளி தனம் பண்ணிட்டு இருக்க கொஞ்சம் அமைதியா இரு என அவளை அடக்கியவள் வேந்தனின் அக்கினி பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.

இனி மேல் தான்டி உனக்கு இருக்கு... இந்த வேந்தன் யார்னு காட்டுறேன் உன்ன என் கால்ல விழுந்து கெஞ்ச வைக்கிறேன் என்ற படி அவந்திகா அருகில் வந்த வேந்தன் அவள் போனையும் தூக்கி போட்டு உடைத்து விட ..நுனி மூக்கு சிவந்து போன அவந்திகாவோ சற்றும் யோசிக்காமல் வேந்தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஐ பேனை எடுத்து சிதறு தேங்காய் ஆக்கிவிட்டள்.

ஆத்தாடி இவ ஒரு முடிவோட தான் இருக்க நீ வந்துரு ஜனனி நாம ஓடிருவோம் இல்லனா இந்த டாம் அண்ட் ஜெர்ரி பசங்க நம்மல உருட்டி விளையாடுவானுங்க..என ஜனனியை பிரபு நைசாக கூட்டிச்சென்று விட்டான்.

ஹவ் டேர் யூ..என்ற வேந்தனோ அவந்திகாவை அடிக்க அவளோ அடித்த அவன் கையை கடிக்க மொத்தத்தில் கல்யாண மண்டபம் கலவர மண்டபம் ஆனாது.

சரியான ராட்சசி என் கையவா கடிக்கிறே  வீட்டுக்கு வாடி கடிச்ச எலி பல்லு ரெண்டையும் கலட்டி எடுக்குறேன் என அவன் உறும.. நீயும் வீட்டுக்கு வாடா என்ன அடிச்ச கைல சூடு போடுறேன் என்று அவள் மல்லுக்கு நிற்க.. காற்றில் கலந்து உணவின் வாசனை சரியாக அவந்திகாவின் நாசியை அடைந்தது.

நேற்று இரவு பிரபு வாங்கி கொடுத்த பிரியாணியை உண்டது அதற்கு பின் பச்சை கண்ணீர் கூட பல்லில் படவில்லை அந்த அளவுக்கு பிரபுவையும் ஜனனியையும் அனுப்பி வைக்க அயராத முயற்சி எடுத்திருக்கிறாள் பாவம்..உணவின் நெடி வந்ததுமே வயிறு கூப்பாடு போட சண்டையை இப்போதைக்கு ஓரம் கட்டிவிட்டு பந்தியை கவனிக்க சென்றாள்.

ஏம்மா பொண்ணு புருஷன் கூட சேர்ந்து சாப்பிடு என்ன தான் இருந்தாலும் உன் அத்த மவன் தானே குடும்ப சண்டைய ஓரம் வச்சிட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க ஒரு வயதான பெண்மணி இலவச அறிவுரையை வழங்கிவிட்டு போக..சந்தோஷமா தானே இருந்துட்டா போச்சு.. ஒற்றை புருவத்தை வளைத்து அவந்திகாவை பார்த்த வேந்தன் வேட்டியை மடித்து கட்டி கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

அவன் வந்து அமர்ந்ததுமே சட்டென்று தன் இலையை இந்த பக்கமாக இழுத்து வைத்து கொண்டாள் அவந்திகா.

உன் இலைல உள்ளத தூக்கி திண்ண நா என்ன எச்சி நாயா.. காதுக்குள் கூறியவன் தன் இலையில் கைவைக்க போக..நீ நாயா இல்ல பேயானு எனக்கு எப்படி தெரியும்..தூக்கி திண்றது புடுங்கி திண்றதெல்லாம் உன் குடும்பத்துக்கு கை வந்த கலை தானே..அட நா சோத்த சொன்னேபா சொத்தை இல்ல.. அவந்திகாவின் பேச்சில் கட்டுக்கடங்காத கோபம் வந்து பொது இடம் கருதி அமைதி காத்தான் வேந்தன் .

இருந்தும் அவளை எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியவன் தன் இலையில் உள்ள மிளகாயை எடுத்து அவள் அறியாதவாறு அவள் இலையில் போட்டு விட்டான்.

சார் உங்க வைஃப்க்கு ஊட்டி விடுங்க சார் போட்டோ எடுத்துக்குறேன் இடையில் வந்து வாங்கிய காசுக்கு வேலை பார்த்தான் போட்டோ கிராஃபர்.

நானே ஊட்டி விடுறேன் தம்பி நீ போட்டோ எடு போஸ் அழகா இருக்கனும் என்ன..சொல்லிய அவந்திகா சோற்றை பிசைந்து வேந்தனுக்கு ஊட்டி வடி காரம் அவன் கண்ணை கலங்க வைத்தது.

மிளகாய போட்டா என்ன பழி வாங்க பாக்குற மவனே மவனே நீ வில்லாதி வில்லன்னா நா அந்த வில்லனுக்கே வில்லிடா ஹாஹா சிரித்து வைத்தாள் அவந்திகா.

இலைக்குள் தலைமை நுழைத்திருந்தவளின் முன்பாக ஏதோ நிழலாடுவதை போல் இருக்க கொஞ்சமாய் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே அவளின் பாச மலரும் அவளை பெற்ற தியாக செம்மலும் நின்று கொண்டிருந்ததார்கள்.

ஹாய் டேடி நீ இங்கே என்ன பண்ற..சரி சரி உன் பொண்ணுங்க கல்யாணம் ஆயிடுச்சு ஒழுங்கா பொறுப்பான அப்பனா சோத்த போட்டுக்கிட்டு வந்து பக்கத்துல உட்காரு என்ற அவந்திகாவின் தலையில் தங்கென்று குட்டு வைத்தான் மித்ரன்.

என்ன பண்ணி வச்சிருக்க அதி..அவன் தாலி கட்டுனா உனக்கு எங்க போச்சு புத்தி தாலிய கலட்டி வீச வேண்டிய தானே.. இந்த குடும்பத்துல போயா நீ வாழனும் என அண்ணங்காரன் நொடிந்து கொண்டான் தங்கையை..

நீயா ..பேசியது என் அண்ணே...நீயா பேசியது...தங்கச்சிய பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட..தாலிய கலட்டி வீசணுமா..ஐயோ நா என்ன செய்வேன் இதெல்லாம் கேட்டுட்டு நா இன்னும் உயிரோட இருக்கனுமா கோபால் உயிரோட இருக்கனுமா.. சொல்லுங்க கோபால் சொல்லுங்க உண்டு கொண்டிருந்த வேந்தனை போட்டு உலுக்கி எடுக்க அவனுக்கு புரையேறியது.

சின்ன வயசுல இருந்து ஒரு பொண்ண லவ் பண்ணி கல்யாணத்தை நிறுத்திட்டு அவ ஓடி போனா அவரு மனசு என்ன பாடு படும்னு எனக்கு தெரியாதா.. அதான் பாவம் பார்த்து இவனுக்கு வாழ்க்கை கொடுத்தேன் நீ தாலிய வீச சொல்றியே அண்ணா..ஒரு செடில ஒரு ஃபிளவர் யூ நோ என்று அண்ணனை பார்த்து டயலாக் அடித்து கொண்டிருந்த அவந்திகாவின் கண்ணத்தில் பளாரென்று அறைந்தார் அவள் தந்தை ராம்.

வேந்தனுக்கோ ஏகபோக மகிழ்ச்சி அவள் வாங்கிய அடியில்.அவன் அடித்தால் பதிலடி கொடுப்பாள் அப்பனை அடிக்க முடியுமா..டேய் தகப்பா நீயுமா அதிர்ச்சியாய் கண்ணத்தை பிடித்து கொண்டு தகப்பனை பார்க்க..

மித்ரனோ தங்கை அடி வாங்கியதில் உருண்டு புரண்டு சிரித்தான்.டேய் சும்மா இருடா மகனை அடக்கிய தந்தை மகளை முறைத்தபடி கல்யாணம் நடக்க போவுதுனு சொல்லிருந்தா நாங்க முன்னாடியே வந்து ஆசீர்வாதம் பண்ணிருப்போம்ல பாப்பா இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டு சாப்பிட கூப்ட்டா சாப்பாடு உடம்புல எப்படி ஒட்டும்..ராம் வருத்தமாக சொல்ல ஞேஏ..என அனைவரையும் பார்த்து வைத்தான்.

ஆக மொத்தம் இவ குடும்பமே லூசு குடும்பம் போலையே என்பதை போலிருந்தது அவனது பார்வை.

யோவ் தகப்பா எனக்கு கல்யாணம் நடக்கும்னு எனக்கே தெரியாது என் கிட்ட ஒரு வார்த்தை கேட்காம கூட இவன் தாலி கட்டிட்டான்..மூக்கை உறிஞ்சி கொண்டே அவள் சொல்ல கையை கழுவி விட்டு அவன் சென்று விட்டான்.

டேய் தாலி கட்டிட்டு விட்டுட்டு போற நில்லுடா நானும் வாறேன் என அவனை வால் பிடித்து ஓடியது சுண்டெலி.. வேற எதற்காக இருக்கும் அடுத்து அவன் பிபியை ஏற்றி விடத்தான்.

வீட்டில் கதிரையில் சாய்ந்து அமர்ப்திருந்த சாரதாவிற்க்கு ராசாத்தி கால் அமுக்கி கொண்டு இருக்க மாதவன் காத்து விசிறி கொண்டிருந்தார். மற்றவர்கள் ஒரு ஓரமாய் நின்றிருந்தார்கள்.அன்னேரம் வீட்டிற்குள் வேந்தனும் அவந்திகாவும் வர..

அங்கேயே நில்லு வேந்தா..வீட்டுக்குள்ள வாரதா இருந்தா அவள வாசல்லையே அத்து விட்டு நீ மட்டும் உள்ள வா.. என சாரதா கத்த..வேந்தனோ அவந்திகா கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வந்தான்.

நா சொல்ல சொல்ல இவள எதுக்குடா இழுத்துட்டு வார..

ஸ்ஸ் கத்தாதிங்கம்மா இனி இவ தான் இந்த வீட்டுக்கு வேலைகாரி..நாம பண்ற கொடுமைல இவளே தாலிய கலட்டி வீசிட்டு போவா என்ற வேந்தனின் கண்களில் அவந்திகா மீதான வன்மம் மேலோங்கி நின்றது.

ஏனோ சிறு வயது முதலே அவனுக்கு அதியை பிடிப்பது இல்லை..சின்ன வயதில் இருந்து ஆண்கள் சட்டையை போட்டுக் கொண்டு அனைவரிடமும் எறிந்து விழும் அவந்திகாவை இவனுக்கு கண்டாலே ஆகாது.

சாரத,ராம், மாதவன் மூவரின் வீடும் பக்கம் என்பதால் அதி  ஐந்து வயது பிள்ளையாக இருந்த வேலையில் முதல் முதலாக அவளை கண்டான் வேந்தன்.அவளிடம் ஏதோ பேச போக கீழே கிடந்த கல்லை தூக்கி வேந்தன் தலையில் அடித்து விட்டு ஓடி விட்டாள் அதி.. அன்றிலிருந்து ஆரம்பித்தது இந்த டாம் அண்ட் ஜெர்ரி போராட்டம்.

காணும் நேரமெல்லாம் இரண்டும் முட்டி மோதி மண்டையை உடைத்து கொள்ளும்..

எதே வேலைக்காரிய..கேக்க நல்லா தான் இருக்கு ஆனா பாறேன் மாமா குட்டி எனக்கு தான் ஒரு வேலையும் செய்ய வராது..வராது என்ன தெரியாது .. உதட்டை பிதுக்கினாள் அவந்திகா..

தெரியுதோ இல்லையோ நீ தான் பண்ணியாகனும்.. போய் எல்லாருக்கும் காஃபி போட்டு கொண்டு வா.. அதிகாரமாய் கட்டளையிட்டாள் சாரதா...

இல்லனா என்ன பண்ணுவே தாய்கெழவி..கெத்தை விடாமல் நின்றாள் சேட்டைகாரி.

இல்லனா என்ன தூங்கும் போது உன்ன கிணத்துல தூக்கி போட்டுட்டு கால் தவறி கீழே விழுந்த செத்து போய்ட்டனு சொல்லுவோம்.. சாரதா சொல்ல..காஃபி தானே அத்தே இதோ கொண்டு வாறேன்..ஆமா கிச்சன் எந்த பக்கம் இருக்கு என பவ்வியமாக சென்ற அவந்திகா சில வினாடிகளில் காஃபியோடு வந்து நின்றாள்.

ம்ம் குடு நல்லா இருக்கானு  பார்ப்போம் என சாரதாவும் மாதவனும் முதலில் வாங்கி ஒரு மிடறு அருந்த அருகில் நின்ற வேந்தனை சுரண்டினாள் அவந்திகா..

என்ன முறைத்து கொண்டே கேட்டவனிடம் அது ஒன்னும் இல்ல மாமா குட்டி எலி மருந்து சாப்பிட்டா எவ்வளவு நேரத்துல உயிர் போகும்..அத ஏன் நீ கேக்குற சாப்பிட போறியா என்ன..

எலி மருந்து இருந்தா தானே சாப்பிட அதான் இருந்த எல்லா மருந்தையும் காஃபில போட்டுட்டேனே அசால்ட்டாக அவந்திகா தோலை குழுக்க கண்ணை வாயில் வைத்திருந்த காஃபியை வெளியே துப்பினார்கள் சாரதாவும் மாதவனும்.

என்ன அத்தே காஃபி நல்லா இல்லையா வேணும்னா நா வேற போட்டு கொண்டுவரவா..இந்த மூட்டை பூச்சி மருந்த எங்கேயோ கண்டேனே நாடியில் கைவைத்து யோசனையாய் அவள் வீடு முழுவதும் தேட வேந்தனை தவிர மற்றவர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

தொடரும்...

<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>


HTML5 Icon


HTML5 Icon


HTML5 Icon


HTML5 Icon