மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் (வெ.சாமிநாத‌சர்மாவின்‌ பயணம்)

Mar 16, 2023 - 20:05
 0  46
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் (வெ.சாமிநாத‌சர்மாவின்‌ பயணம்)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் (வெ.சாமிநாத‌சர்மாவின்‌ பயணம்)

படிப்பதற்கு மிகவும் சுவாரசியமானது எது என்று யாரையும் கேட்டாலும் நாவல் தான் என்று தயக்கம் இல்லாமல் பதில் சொல்லி விடுவார்கள். படிப்பதற்கு நாவல் தான் சுவாரஸ்யம் என்பது அதைவிட சுவாரஸ்யமானது துப்பறியும் நாவல் தான் என்பது ரொம்ப சரியாகத்தான் சொல்கிறார்கள்.

ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்து துப்பறியும் நாவல்களை படித்துக் கொண்டு போவாறானால் அவருக்கு படிக்கும் பழக்க வழக்கம் சுவாரஸ்ய மிக்கனவாக இருக்கும். ஆனால் என்றாவது ஒருநாள் அவர் படித்த பழைய துப்பறியும் நாவலின் கதாநாயகன் யார் கதாநாயகி யார் என்று அவரிடம் கேட்டால் அவரால் சட்டு என்று பதில் சொல்லிவிட முடியாது. எந்த நாவலில் வந்தது என்று யோசிப்பார்கள் குழப்பம் அடைவார்கள்

படிப்பதற்கு சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் அது வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவதாகவும் பயன் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். எத்தனை வருடங்களுக்குப் பிறகும் மறக்க முடியாத மனதில் பசு மரத்தாணி போல் பதிந்து விடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் தமிழில் உண்டா என்று கேட்டால் ஏன் இல்லை நிச்சயம் இருக்கின்றது என்று ஓங்கி அடித்து சொல்லிட்டு இதோ அப்படிப்பட்ட புத்தகங்கள் என்று சாமிநாத சர்மா எழுதிய 60க்கும் மேற்பட்ட நூல்களை எடுத்து மேசை மீது பரவி விடலாம்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு காலகட்டங்களில் மனித குலத்துக்கு வழிகாட்டும் பெரியவர்களும் சுதந்திரக்காக போராடும் தியாகத் தலைவர்களும் விஞ்ஞானிகளும் வாழ்கிறார்கள். அந்த நாடுகளைப் பற்றி அந்த நாடுகளில் தோன்றிய புகழ்மிக்க சாதனையாளர்கள் பற்றி தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தானே? இதோ அப்படிப்பட்ட அருமையான நூல்கள் என்று எழுதி குவிந்த தமிழ் புத்தக உலகில் ஒரு புதிய திருப்புமுனை உண்டாகித் தந்தவர் சர்மாதி என்ற அன்புடன் அழைக்கப்பட்ட வே. சாமிநாத சர்மா ஆவார். வேறு எந்த எழுத்தாளர்களையும் விட சர்மாவுக்கு இரண்டு சிறப்புக்கள் உள்ளன.



அவர் பத்திரிக்கையில் எழுதி பிரபலம் அடைந்தவர் என்பதை விட புத்தகங்களை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் என்பதே ஒரு தனிச்சிறப்பு. மற்றொன்று சர்மாவின் நூல்களை வெளியிட என்றோ ஒருவர் ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்தார். சர்மாவின் நூல்களைத் தவிர வேறு யாருடைய நூல்களையும் பறிப்பதில்லை என்று வைராக்கியத்துடன் அந்த நண்பர் "பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்" என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை தொடங்கினார். சர்மாஜியை சந்தித்தது பற்றி அவரோடு இணைந்து பதிப்பகம் நடத்த முன் வந்தது பற்றியும் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் அதிபர் அறு சொக்கலிங்கம் கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

"சர்மாஜி அவர்களை முதன் முதலில் ரங்கோனில் 1935 ஆம் ஆண்டு பிற்பகுதியில் சந்தித்தேன் அது என் அதிர்ஷ்டமும் தமிழ் தாயின் நல்ல அதிர்ஷ்டமும் சேர்ந்ததாகும். அப்பொழுது சர்மாஜி 48வது வீதியில் ஒரு கடையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது கடைக்கு பாரத பந்தர் என்று நாமம் இட்டும் இருந்தார். அங்கு துணிகளும் நல்ல தமிழ் புத்தகங்களும் சில சுயதேசிய பண்டங்களும் கிடைக்கும் என ஒரு நண்பர் மூலமாக கேள்விப்பட்டேன். நண்பரே என்னை அழைத்துச் சென்று சர்மாஜியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் நல்ல புத்தகங்கள் வாங்க வேண்டி அடிக்கடி நான் பாரத பந்தலுக்கு போக தலைப்போட்டேன்.

தமிழ் பத்திரிகைகளைப் பற்றியும் திரு வி கா பற்றியும் ஒரு நாள் பேச்சு வந்தது அப்பொழுதுதான் சர்மா ஜி திரு க வின் நவசக்தி பத்திரிகையிலும் தொண்டாட்டியவர் என்று புலப்பட்டது. நவசக்தியில் அதற்கு முன் எனக்கு இருந்த ஈடுபாடுகளைப் பற்றி நான் விவரித்தேன். அதிலிருந்து சர்மாஜியின் எழுத்துத்திறன் பற்றியும் எனக்கு புலப்பட்டிருந்தது.

சர்மாஜியுடன் பழக ஆரம்பித்திருந்த உலக விஷயங்களைப் பற்றி அரசியல் பற்றி அறிவு வளர தமிழுக்கு நாம் என்ன செய்ய இயலும் என்ற எண்ணமும் என்னை ஆட்கொண்டது. சர்மாதியை போல் எழுந்த அறிஞரைக் கொண்டு அரசியல் நூல்களை வெளியிட வேண்டும் என்று அளவுக்கு அந்த எண்ணம் மெதுவாக வளர்ந்தது. வியாபாரியாக காலத்தை ஓட்டும் சர்மாஜியிடம் அதற்கான உதவி கிடைக்குமா என்று முதலில் தயங்கினேன். துணிந்து ஒரு நாள் அவரிடம் சென்று புத்தகம் எழுதி தரலாமே ?தர முடியுமா ?என்று கேட்டேன் நன்றாக எழுதலாம் என்று அடக்கத்துடன் சொன்னார் "என்கின்றார் அரு சொக்கலிங்கம்.

முதல் புத்தகமாக அன்று சர்வதேச அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரியவராக பேசப்பட்டுக் கொண்டிருந்த இத்தாலி சர்வாதிகாரி முசோலியின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவது என்று முடிவு செய்தார்கள். 248 பக்கங்களுடன் ஒன்னேகால் ரூபாய் விலையில் முசோலியின் கதை வெளிவந்தது.

அதன் பின் சாமிநாத சர்மாவின் எழுத்தில் புத்தகங்கள் மலமலவென்று வெளியாகின்றன. 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்மாவை ஆசிரியராகக் கொண்டு ஜோதி என்ற பெயரில் ஒரு மாத பத்திரிகை ஆரம்பம் ஆயிற்று. முதல் இதழில் பண்டித ஜவகர் பால் நேருவின் வாழ்த்து செய்து இடம்பெற்று இருந்தது. பர்மாவில் சர்மாதியின் நண்பர்கள் பலர் சேர்ந்து அறிவுச்சுடர் என்ற தொடரில் சர்மாஜியின் நூல்கள் மூன்றையும் வெளியிட்டிருந்தனர். வேறு சில நண்பர்கள் புது மலர்ச்சி நோட் மதிப்பு கழகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை தொடங்கி சர்மா எழுதிய நான்கு நூல்களை பதிப்பித்தார்கள்.

ஒரு பக்கம் நூல் எழுதும் பணிகள் நடந்து கொண்டிருந்தது 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜப்பானியர் படை ரங்கோனுக்குள் நுழைவதற்கு முந்தநாள் வரை ஜோதி மாத இதழ் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடைசி இதழைக்கிட்டு முடித்துவிட்டு தான் சர்மாதியை தனது மனைவியாருடன் கால்நடையாக பர்மாவை கடந்து மணிப்பூர் வழியாக வந்து சேர்ந்தார். சர்மாயி நூல்கள் எழுதும்போது எப்படிப்பட்ட மனலையில் இருப்பார்? பதிப்பாளர் சொக்கலிங்கமே அதை பற்றி கூறுகின்றார். அவர் ஒரு நூலை எழுத தடை பட்டால் அதில் அபகார ஈடுபாடு கொண்டு விடுவார். அந்த நூலின் இலட்சிய புருஷனையே அந்த இலக்கிய புருஷனின் தேசத்தையோ தமதாக்கிக் கொள்ளும் அளவுக்கு ஈடுபட்டு விடுவார். சுருங்கச் சொன்னால் அந்த இலட்சிய புருஷன் ஆகவே அந்த நூல் முடியும் வரை மாறிவிடுவார் அவர். அடிக்கடி அவரைப் பற்றிக் கொண்டு விடு நோய்தான் அவரை கவலைக்கு உள்ளாக்கியது. கார்ல் மார்க்ஸ் வாழ்க்கையை சர்மாதி எழுதும் போது அவரது கால்களை இழந்த நிலையில் இருந்தார் அதை பொருட்படுத்தாமல் எழுதி முடித்தார்.

பிளேட்டோவின் அரசியலை இரு கூறாகப் பிரித்து முதல் பாகத்தை ரங்கோனில் வெளியிட்டோம். இரண்டாவது பாகத்தை தொடங்கும் போது ஜப்பானிய ரங்கோனில் குண்டு மாறி பொழிய தொடங்கிவிட்டனர். மக்களின் உயிர் ஒவ்வொரு நிமிடமும் ஊசலாடிக் கொண்டிருந்தது இந்த நேரம் என்று இல்லாமல் பதுங்கும் குழியில் எந்நேரமும் பதுங்கிக் கொள்ளும் கட்டாயம் உண்டானது அந்த சமயம் தான் பிளேட்டோ பற்றி இரண்டாம் பாகம் மொழிபெயர்க்கப்பட்டது. பதுங்கு குளியல் இருந்து கொண்டே சர்மாஜி மொழிபெயர்த்த பகுதிகள் தான் அதில் அதிகம் என்று சொல்ல வேண்டும். நோயும் சரி மற்ற சூழ்நிலைகளும் சரி அவரது எழுத்து பணியை ஒருபொழுதும் தடை படுத்தியதில்லை என்கின்றார் சொக்கலிங்கம் ஒரு சிரிப்புடன்.

பிரபஞ்ச ஜோதி பிரசவ ஆலயத்தின் சார்பில் வெளியிட்ட 40 ஆவது நூல் சாமிநாத சர்மாவின் அவள் பிரிவு தனது இந்த 40 ஆவது நூலில் இந்தியா வந்தபின் தனது மனைவி மரணம் அடைய அதை ஒட்டி எழுந்திய துயரத்தை தமது பதிவாளரோடு பகிர்ந்து கொண்டிருந்தார் சர்மா. பதிவாளர் சொக்கலிங்கத்திற்கு அவர் எழுதிய 10 கடிதங்கள் தான் அந்த நூல். தமது எழுத்துப் பணி இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதற்கு தனது மனைவியும் மங்கலமே முழு முழு காரணம் என்பதை அந்த நூலில் இடம் பெற்றுள்ளது. கடிதங்களில் சர்மா மிக உருக்கமாக விளக்கி இருக்கின்றார்.

எனது வாழ்க்கை வெளிச்சம் அழித்து வந்த ஒளி விளக்கு அடைந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரத்தில் அதை நினைக்கவும் இல்லை இரண்டு வருடங்களுக்கு மேலாக அது மங்கலாக எரிந்து கொண்டிருந்த என்பது வாஸ்தவம். அந்த மங்களமான வெளிச்சத்தை துணையாக கொண்டு இன்னும் சிறி காலம் தட்டு தடுமாறியாவது வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் வாழ்க்கை பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கையும் தைரியமும் இருந்தன. இப்போது என்னை சுற்றிலும் ஒரே இருட்டு வேறொன்றும் எனக்கு இப்போ தெரியவில்லை என்று பெருமைகளை படிப்போர் நெஞ்சம் நெகிழும் வகையில் எழுதி இருந்தார் சர்மா. அவள் பிரிவு நூலை கடித இலக்கிய வரிசையில் தனி சிறப்பு மிக்க நூல் என்று சொல்லலாம். மங்களம் அம்மையாரை பற்றி ஒரு நீண்ட கட்டுரையை எழுதுகிறார்கள் ஒரு நல்ல மனைவி என்பவள் கணவனிடம் இருந்து வேறல்ல என்பதை படிக்கும் போதே உணர்த்தும் நூல் அது.

இவரை ‌பற்றி கண்ணதாசன் சிறப்பான முறையில் வர்ணித்துள்ளார்.

"உலகத்து அறிவெல்லாம் ஒன்று திரட்டி தமிழர்களின் மூளையில் ஏற்றிய உன்னத தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்றிருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் இருக்கின்றது தான் சாமிநாத ஷர்மா நான் பெற்ற பொது அறிவியல் 20% சாமிநாதன் நூல் தந்தவை ஆகும் "என்று வர்ணித்துள்ளார்.

சாமிநாதனின் படைப்புக்களாக கருதப்படுவது ஒன்று நமது ஆர்யாவர்த்தம் இரண்டாவது சீனாவின் வரலாறு ரஷ்யாவின் வரலாறு ஐந்தாவது ஸ்பெயினின் வரலாறு ஆறாவது ராஜதந்திர யுத்தக்கடை பிரசங்கம் ஏழாவது காந்தி நகர் எட்டாவது மாஸ் அந்தாதூர் ஒன்பதாவது போட்டோவின் அரசியல் பத்தாவது மாஜினி பதினோராவது சன்னியான்சன் பன்னிரண்டாவது பாலஸ்தீனம் என்பனவாகும். இவருடைய ஒவ்வொரு நூல்களும் நாம் அறியாத பல பல வாழ்வியல் கருத்துக்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு வாழ்வியல் கருத்துக்களையும் வாழ்க்கை சிறந்த கடைபிடிக்க வேண்டிய நிறைய உன்னதமான செயல்களையும் நமக்கு சொல்லிக் கொடுத்தவர் தான் சாமிநாதன் ஆகவே இவரது நூல்களை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் நமது பழக்க வழக்கங்கள் இந்த உலகத்தில் நடந்த நாம் அறியாத பல தகவல்களை அறிந்து கொள்ள இது உதவுகிறது அதுமட்டுமின்றி நாவல் வாசிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கமாகும் அதை நீ வாசிப்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையிலிருந்து தான் தொடங்க வேண்டும் இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இன்னும் ஏராளமானோர் உங்களிலும் இருக்கிறார்கள் கண்டுபிடிங்கள் அழகிய நாவல்களை புதுப்பியுங்கள் இன்னும் பல நாவல்களை எழுதுங்கள் இதன் மூலம்  சிறப்பு பெறும்.

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow