அமிர்தத்தின் சாகரமே -3

காதல்

அமிர்தத்தின் சாகரமே -3

வான் தொட்டு நின்ற அந்த கட்டிடத்தை கண்கள் விரிய பார்த்தபடி சாகரனுடன் உள்ளே நடந்து சென்றாள் அமிர்தா.

சாகரன் ஆஃபிஸ் உள்ளே வந்ததுமே மரியாதை நிமித்தமாக பணியாட்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்ல.. அனைவருக்கும் சிறு தலையசைப்பை மட்டுமே கொடுத்தவன் தன் பீஏவிடம் கூறி மீட்டிங்கிற்கு ஒழுங்கு படுத்துமாறு கூறி விட்டு அமிர்தாவை தன் ஆஃபிஸ் அறைக்கு அழைத்து சென்றான்.

கைப்பிடித்து அழைத்துச் சென்றவன் அமிர்தாவை அ எம்டி சீட்டில் அமர வைக்க அதிர்ந்து எழுந்து விட்டாள் அமிர்தா.

சார் என்ன பண்றிங்க உங்க சீட்ல என்ன போய் உட்கார வைக்கிறிங்களே...என எழுந்து நின்று கொள்ள..சிட் பேபி எதுக்கு உன்னோடது  என்னோடதுனு எதுக்கு பிரிச்சு பேசறே.. எனக்கு சொந்தமானது எல்லாம் உனக்கும் சொந்தமானதுது தான் என்றபடியே அவள் தோள் பற்றி மீண்டும் சீட்டில் அமர வைக்க சங்கடமாய் உணர்ந்தாள் அமிர்தா.

சார் மீட்டிங்க்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு   ஸ்டாஃப்ஸ் எல்லாரும் மீட்டிங் ஹால்க்கு வந்துட்டாங்க என கதவை தட்டி அனுமதி கேட்டு தகவலை சொல்லிச் சென்றான் சாகரனின் பீஏ..

கம் பேபி என அவளை அழைத்து கொண்டு சென்றவன் அமிர்தாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்..

குட் மார்னிங் எவ்ரியோன் இவ அமிர்த வர்ஷினி  என்னோட வருங்கால மனைவி.. எனக்கு இந்த கம்பெனில உள்ள எல்லா உரிமையும் இவங்களுக்கு இருக்கு எனக்கு நீங்க கொடுக்குற மரியாதைய அமிர்தாவுக்கும் கொடுக்கனும் ஓக்கே..

நா கம்பனில இல்லாத நேரம் கம்பனிய கவனிச்சிக்கிற எல்லா அதிகாரமும் அமிர்தாவுக்கு இருக்கு என்று தன் உரையை சாகரன் முடித்து கொள்ள அனைவரும் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தாலும் அங்கிருந்து சில பெண்களின் பார்வை அமிர்தாவின் மேல் பொறாமையாக படிந்தது.

இப்போ எதுக்கு நீங்க எல்லார் முன்னாடியும் அப்படி சொன்னிங்க எகிறிக் கொண்டு வந்தாள் அமிர்தா சாகரனிடம்..

ஏன் பேபி உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் இல்லாயா வருதத்துடன் அவன் கேட்க..

நா அத கேக்கல.. நீங்க எதுக்கு உங்கள மாதிரியே என்னையும் நடத்த சொன்னிங்க..நா இங்கே சாதரணமா இருக்கவும் எல்லாரை போலவும் இருக்க தான் ஆசைப்படுறேன் முதலாளியோட காதலியோ இல்ல மனைவிங்கிற பகட்டு எனக்கு வேண்டாம் என முகத்தை தூக்கி வைத்து நின்றவளை கண்கள் பளிச்சிட காதல் பொங்க பார்த்தான் சாகரன்.

இருக்காதா பின்னே கல்யாணத்துக்கு தான் மறைமுகமாக சம்மதம் சொல்லி விட்டாளே.. அந்த மகிழ்ச்சி.

உங்கள் கூற்றுக்கு மறுப்பேது தேவி தங்கள் இஷ்ட்டம் போல இந்த அலுவலகத்தில் எங்கு வேண்டுமானாலும் வளம் வரலாம்..என்று பவ்வியமாக சொன்னவனை பார்த்து சத்தமாக சிரித்து விட்டாள் அமிர்தா..

வா பேபி உனக்கு நானே எல்லா வர்க்கும் சொல்லி தாரேன் என்ற சாகரனோ தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு அடி மட்டத்தில் இருந்து ஒவ்வொரு வேலையாக சொல்லி கொடுத்தான்.

அவன் கத்து கொடுத்த வேலைகளை கருத்தோடு கத்துக்கொண்டாள் அமிர்தா ஒரு சில இடங்களில் அவள் தவறு விட்டாலும் பொறுமையாக மீண்டும் அதனை விளக்க படுத்தினான்.

வேலைகளை அவள் கற்று கொண்ட பின்னர் கம்பெனி கணக்கு வழக்குகளை சரி பார்க்க சொல்லி சில பைல்களை அவளிடம் கொடுக்க ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக கணக்கிட்டு அவனிடம் காட்டிம அமிர்தாவை சாகரனால் மெச்சிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

சாகரனிடம் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்கி செல்லும் அமிர்தாவை அவனும் கண்டு கொண்டு தான் இருக்கிறான்.அவள் மனம் புரியாதவனா அவன்..

பேபி வேலை பார்த்தது போதும் வா வீட்டுக்கு போவோம் என கணிணியில் கண்ணை பதித்து கொண்டே அவளை அழைக்க... அதுக்குள்ளவா  இன்னும் லன்ச் டைம் கூட வரலையே ஏன் இவ்வளவு சீக்கிரமா என்றாள் அமிர்தா ஒன்றும் புரியாமல்.

எனக்கு இதுக்கு மேல வேலை செய்ய மூட் இல்ல வா போவோம் என அவன் எழுந்து முன்னால் நடக்க அவளும் ஓட்டம் நடையுமாக அவன் பின்னால் சென்றாள்.

காரில் அவளுக்காக காத்திருந்தவன் முகம் இறுகியிருக்க ஏனென்று மட்டும் அவளுக்கு விளங்க வில்லை.அமைதியாக அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

கார் அவர்கள் வழக்கமாக வீட்டுக்கு செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்ல அமிர்தாவின் உள்ளம் பயத்தில் படபடத்தது.அவன் வேறு பாதையில் சென்றாலே கவினின் நிலை தான் கண்முன் வந்து போகும் பேதை பெண்ணவளுக்கு.

பயப்படாதே பேபி..நீ பயப்படுற அளவுக்கு நா உன்ன எங்கேயும் கூட்டிட்டு போகல நீ ஹேப்பியா இருக்க போற இடத்துக்கு தான் கூட்டிட்டு போறேன்..என சாலையில் இருந்து கண்ணை அகற்றாமல் அவன் சொல்லவும் தான் அமிர்தாவிற்கு இதய துடிப்பு சீரானது.

சில மணி நேர பயணத்தின் பின்னர் கார் ஒரு அழகிய வீட்டின் முன்பு நின்றது..கீழே இறங்கியவன் கார் கதவை திறந்து விட்டு அமிர்தாவின் கைப்பிடித்து அழைத்து கொண்டு கேட்டை திறந்து வீட்டு உள்ளே செல்ல வீட்டுக்குள் இருந்து அக்கா என்றபடி துள்ளி குதித்து ஓடி வந்தாள் அமிர்தாவின் தங்கை பிரவளி..

பிரவளி...என தங்கையை அனைத்து கொண்டாள் அக்கா காரி..

ஏன்க்கா இத்தனை நாள் எங்கள பார்க்க வரல உன்ன எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா..தங்கையவள் கண்ணை கசக்க சரி சரி அதான் இப்போ வந்திச்சில்ல வழிய விடு டார்லிங் என்றான் சாகரன்.

ஹே மாம்ஸ் நீங்க எப்போ வந்திங்க நா உங்கள கவனிக்கவே இல்ல அசடு வழிய சிரித்து வைத்தாள் பிரவளி.

இப்போ தான் நா கண்ணுக்கு தெரியுறேனாக்கும் என் மச்சினிச்சிக்கு..

தள்ளுடி அந்த பக்கம் வீட்டுக்கு வந்த பிள்ளைங்கள வாசல்லையே வச்சி பேசிக்கிட்டு என சின்ன மகளை நொடிந்து கொண்ட பார்வதி உள்ள வாங்க தம்பி உள்ள வா அமிர்தா என இருவரையும் வரவேற்க அக்காவை விட்டுவிட்டு மாமனின் கையை பிடித்து தொங்கி கொண்டே சென்றாள் பிரவளி.

அட வாங்க தம்பி வாமா அமிர்தா என உள்ளேயிருந்து அவர்களை வரவேற்றார் குணசேகரன்..இங்க என்னடா நடக்குது கடத்திட்டு வந்தவன இப்படி உபசாரம் பண்றிங்களே என்பதை போல அமிர்தா அனைவரையும் பார்த்து திருதிருவென விழிக்க..

அவள் காதினருகே குனிந்த சாகரனோ நா ஒன்னும் இவங்கள கிட்னாப் பண்ணல பேபி உண்மைய சொல்லி கூட்டிட்டு வந்தேன்.. நம்ம ஃபேமிலி சோ ஸ்வீட் உன்ன மாதிரி இல்ல சொன்னதுமே என்னோட லவ்வ அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க என்று சொல்ல அவனை முறைக்க முயன்று தோற்று போனாள் சாகரனின் பேபியானவள்.

உன்னோட ஃபேமிலி என்று கூறாமல் நம்ம ஃபேமிலி என்று அவன் கூறியதில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி..நாடே அன்னாந்து பார்க்கும் ஒருவன் தன் காதலுக்காக இறங்கி வந்து தன் குடும்பத்தாருடன் ஒன்றி போய் கிடந்தால் எந்த பெண்ணுக்கு தான் காதல் வராமல் இருக்கும்.அமிர்தாவிற்கு காதலோடு சேர்த்து கர்வமும் பொங்கியது தன்னவன் அன்பை கண்டு.

சாகரன் பிரவளியுடன் கதையளந்து கொண்டிருக்க அமிர்தா சமைத்து கொண்டிருந்த பார்வதிக்கு உதவி செய்தாள்..ஏனோ தாய் தந்தையரிடம் மனம் விட்டு பேச சிறு தயக்கம் பிறக்கவே அமைதியாய் அடுப்படியில் நின்று கொண்டிருந்தாள்.

எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியா அமிர்தா என்று சட்டென்று அவள் தந்தை கேட்டு விட தடுமாறி போனாள் பாவை.

அது வந்து..அப்பா.. கல்யாணம் என அவள் திக்கி திணறி கொண்டிருக்க.. எதுக்குடா பயப்படுற எங்களுக்கு உன் மேல எந்த கோவமும் இல்ல சாகரன் தம்பி மேலேயும் எந்த கோவமும் இல்ல..அந்த தம்பிக்கு உனக்கு மாதிரி அம்மா அப்பா இல்ல நல்லது கெட்டது சொல்லி கொடுத்து வளரக்க அதான் உன்ன கடத்திட்டு போய் கிறுக்குத்தனமா நடந்து கிட்டாரு ஆனா எல்லா உண்மையவும் எங்க கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டுட்டாருடா.. மகளின் தலையை வருடியபடி தந்தையவர் சொல்லிட தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள் அமிர்தா.

சாகரன தவிர உன்ன யாராலும் சந்தோஷமா பார்த்துக்க முடியாது அமிர்தா..எங்கள சாகரன் கடத்திட்டு வரல உண்மையெல்லாம் சொல்லி கூட்டிட்டு தான் வந்தாரு..சாகரன மருமகனா இல்ல ஒரு மகனா நா பாக்குறேன் அமிர்தா இந்த வீட்டுல ஒரு ஆம்பிளை பையன் இல்லாத குறைய தீர்த்து வச்சதே அந்த பையன் தான்.

அந்த தம்பி ரொம்ப நல்லவரு அமிர்தா..என்ற தாயை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் அமிர்தா..என்னடா பார்த்த கொஞ்ச நாள்லயே நல்லவன்னு சொல்றேன்னு பாக்குறியா..உன்ன அந்த பையன் கடத்திட்டு போய் இத்தனை நாளாகியும் நீ எங்க பொண்ணாவே திரும்பி வந்திருக்கியே... அவர் நினைச்சிருந்தா உன்ன என்ன வேணும்னாலும் பண்ணிருக்கலாம்.

எங்கள வச்சி மிரட்டியே உன்ன கல்யாணம் கூட பண்ணிருக்கலாம் ஆனா சாகரன் அப்படி எதுவும் செய்யலயே இது ஒன்னு போதாதா நல்லவன்னு சொல்ல.தாயவள் கூறிய ஒவ்வொன்றும் கலங்கி போயிருந்தவளின் மனதை தெளிவுற செய்ய அழகாய் புன்னகைத்தாள்.

அப்போ கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடலாம் தானே மாமியாரே என்று பார்வதியின் தோளில் கைப்போட்டான் சாகரன்.

மாம்ஸ் இவ சரியான தத்தி நீங்க பேசாம என்ன கட்டிக்கோங்களே நல்ல என்டர்டெயின்மென்ட்டா இருக்கும் என கண்ணடித்தாள் பிரவளி.

உனக்கு சரியான வாய் கொழுப்பு இரு சாப்பிட்டு வந்து உன்ன கவனிச்சிக்கிறேன் என பொய்யாய் அவளை மிரட்டியவன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ள அனைவருக்கும் உணவை பரிமாறினாள் பார்வதி.

உண்டு முடித்து விட்டு மற்றவர்கள் மறுக்க மறுக்க அமிரிதாவை அழைத்து கொண்டு.. இல்லை இல்லை தூக்கி கொண்டு சென்று விட்டான் சாகரன்.

மீண்டும் அவன் முகத்தில் இறுக்கம் குடி கொள்ள அதனை கண்ட அமிர்தாவோ சரன்...என்றாள் மென்மையாக.

என்னாச்சு எதுக்கு இப்போ மூஞ்ச தூக்கி வச்சிருக்கிங்க நா என்ன பண்ணேன் என்றாள் உதடு பிதுக்கி..காரை சாலை ஓரம் நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி என்ன கேட்ட பேபி ஏன் மூஞ்சிய தூக்கி வச்சிருக்கேன்னா.. உனக்கு எதாவது தேவைனா என் கிட்ட உரிமையா கேட்க மாட்டியா.. அம்மா அப்பாவ பார்க்க போகனும்னு சொன்னா நா மாட்டேன்னா சொல்ல போறேன்.

காலைல இருந்து இது கேக்க தானே தயங்கிட்டு இருந்த..அத என் கிட்ட கேட்டா தான் என்ன என அவன் படபடவென பொறிந்து தள்ள..

சரி இனி எதுவா இருந்தாலும் கேக்குறேன் என்று காதை பிடித்து மன்னிப்பு வேண்டினாள் அவள்..

ஒன்னும் தேவை இல்ல போ.. முகத்தை திருப்பி கொண்டான் அவன் பொய் கோபம் கொண்டு..

 

அவன் முகத்தை தன் பக்கம் திருப்பியவள் அழுத்தமாய் முத்தம் வைக்க அவளது சீட் பெல்ட்டை கலட்டிய சாகரன் கார் கதவை திறந்து வேகமாய் அமிர்தாவை வெளியே தள்ளி விட்டான் வெளியே விழுந்த அமிர்தா சுதாரித்து எழும்பும் முன்னரே அதி வேகமாக வந்த ஒரு லாறி மோதி காரோடு சாகரன் தூக்கியடிக்கப்பட்டான்.

தொடரும்...

இக் கதையின் அனைத்து பாகங்களையும் பார்வையிட---