அமிர்தத்தின் சாகரமே -5
காதல்

கார் அந்த கம்பனி வளாகத்தில் நிறுத்தப்பட காரின் உள்ளேயிருந்து இறங்கினாள் அமிர்த வர்ஷினி.சாகரனுக்கே இணையான கம்பீரம் கண்களில் புது வித தைரியம் முகத்தில் புதிதாய் ஒரு இறுக்கம் அதோடு சேர்ந்து கொஞ்சம் திமிர்,நிமிர்ந்த நடை என வந்தவளை அனைவரது கண்களும் அதிர்ச்சியில் உறைந்து பார்த்தது.
ஒரு சில நாட்களில் முன்னர் சாகரனின் கைப்பிடித்து தத்தி தத்தி நடந்து வரும் குழந்தையாய் கம்பனிக்கு வந்தவள் இன்று சாகரனை போலவே ஆளுமை நிறைந்த பெண்ணாய் வந்தால் யாருக்கு தான் அதிர்ச்சி இருக்காது.
வெல்கம் மேம் என ஒரு பெண் அவளிடம் பொக்கேவை கொடுக்க திரும்பியவள் சித்தார்த்தை முறைத்தாள்.
என்ன இதெல்லாம் அங்கு மாலையும் கையுமாக நின்றிருந்த ஊழியர்களை பார்த்து அந்த பெண்ணிடம் கேட்க..மேம் எல்லாரும் உங்கள வெல்கம் பண்ண தான் இங்கே வெய்ட் பண்றாங்க என்றாள் அந்த பெண்.
நா என்ன இன்னைக்கா ஃபர்ஸ்ட் டைம் ஆஃபிஸ்க்கு வாரேன்.எதுக்கு எல்லாரும் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கிங்க போய் வர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.. சித்தார்த் இன்னும் கொஞ்ச நேரத்துல இதெல்லாம் க்ளியர் பண்ணுங்க.. அன்ட் பென்டிங் வர்க்ஸ் எல்லாம் நாளைக்குள்ள முடிச்சாகனும் கட்டளையிட்டவள் சாகரனின் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு செல்ல வாயில் ஈ நுழைவது கூட தெரியாத வகையில் அமிர்தாவை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.
சாகரனை ஒரு புறம் அமர வைத்து விட்டு அவன் மீது ஒரு கண்ணையும் கணிணியில் ஒரு கண்ணையும் பதித்திருந்த அமிர்தாவின் எம்டி அறைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தான் கவின்.
இடியட் பர்மிஷன் கேட்டுட்டு உள்ளே வரனும்னு தெரியாதா உனக்கு என்று அமிர்தா கணிணியில் பதித்த பார்வையை விலக்காது கேட்டு வைக்க தன் முன் தலையை கூட நிமிர்த்தாத அமிர்தாவா இது என பேயறைந்ததை போல நின்றான் கவின்.
தன் பார்வையை கவின் பக்கம் திருப்பியவள் என்ன என்பதை போல புருவத்தை ஏற்றி இறக்கி அவனை பார்க்க ஒன்றுமில்லை என தலையாட்டியவன் வெளியே ஓடி மீண்டும் அனுமதி கேட்டு உள்ளே வந்தான்.
இந்தா அமி என்னோட சர்டிபிகேட் என்று கவின் ஃபைலை அமிர்தாவிடம் நீட்ட கால் மீ மேடம் என்றாள் கண்டிப்பு குரலில்.
அமிர்தா ஃபைலை பார்ப்பதை உறுதி செய்து கவின் மெதுவாய் சாகரன் பக்கமாய் திரும்பி சாகரனை எள்ளலாக ஒரு பார்வை பார்த்தான்.
கவின்..மேஜையை அழுத்தமாக அமிர்தா தட்டியதில் சிறு திடுக்கிடலுடன் அவள் பக்கமாய் திரும்பினான் கவின்.
அங்கே என்ன பார்வை நீ இன்டர்வியூக்கு வந்தியா இல்ல சாகரன பார்க்க வந்தியா என்றாள் நுனி மூக்க சிவக்க..
சாரி மேடம்.. நீங்க என்ன இன்டர்வியூ பண்ணலாம் என்று கவின் நிமிர்ந்து அமர.. அமிர்தாவோ இன்டர்காமில் சித்தார்த்தை அழைத்தாள்.
ஹாங் சித்தார்த் மிஸ்டர் கவினுக்கு அபோய்மன்ட் லெட்டர் கொடுத்திடுங்க அப்பறம் கவினுக்கு இங்கே என்ன ஜாப்னும் விளக்கமா சொல்லிடுங்க அவ்வளவு தான் என்பதை போல தன் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
ஓக்கே மேடம் என்றவன் கவினிடம் சில பல காகிதங்களில் சைன் வாங்கி கொண்டான்.மிஸ்டர் கவின் உங்களுக்கான ஜாப் வந்து எங்க சாகரன் சார கவனிச்சிக்கிறது தான்.அதுவும் ஆஃபிஸ் டைம்ல மட்டும் கவனிச்சிக்கிட்டிங்கனா போதும் என சித்தார்த் பவ்வியமாக சொல்ல கவினோ முறுக்கி கொண்டு வந்தான் சித்தார்த்திடம்.
டேய் என்னடா நினைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல..ரோட்ல சாக போனவன புடிச்சி வேல தாரேன்னு இழுத்துட்டு வந்து இப்போ என்னனா ஒரு உரு ஜடத்துக்கு கேர் டேக்கர் வர்க் பாக்க சொல்றிங்க என சித்தார்த்திடம் கத்த..
கரெக்டா சொன்னிங்க சார் ஆமா நீங்க ஏன் ரோடு நிறைய பெரிய லாறி கன்ட்டனர் போகும் போது எங்க வண்டில வந்து விழுந்திங்க.. அதான் உங்கள கேர் டேக்கர் வர்க் பண்ண நாங்க தேர்வு செஞ்சோம் என்றான் சித்தார்த்.
அவன் இப்படி கேட்டதில் கவினுக்கு சிறு தடுமாற்றம் வந்தாலும் அதனை காட்டி கொள்ளாது..நா என்ன உங்க வண்டினு தெரிஞ்சா விழுந்தேன் ஏதோ ஒரு வண்டினு வந்து விழுந்தேன் கடைசில பார்த்தா அது உங்க கார் நா என்ன பண்றதாம்.
இதோ பாரு எனக்கு இங்கே கேர் டேக்கர் வர்க்லாம் பார்க்க முடியாது எனக்கு ஒன்னும் நீங்க தார வேல வேணாம் என்னோட சர்டிபிகேட்ட கொடுங்க நா போறேன் எனும் போதே..
Mr.அமிர்த சாகரனை கவனித்து கொள்ளும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.. அத்துடன் சாகரனின் மீது சிறு கீறல் ஏற்பட்டாலோ அவரது உடல் நலனில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலோ அல்லது அவரது உயிருக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்தாலோ அதற்கு கவினாகிய நானே முழு காரணமென கூறி என் முழு சுயநினைவுடனும் யாரின் தூண்டுதலும் இன்றி கையொப்பம் இடுகிறேன் என சத்தமாக வாசித்த அமிர்தா சற்று நேரத்தின் முன்பு கவின் சைன் செய்த பத்திரத்தை மேசை மீது தூக்கி போட்டு அ இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
ஆர்வ கோளாற்றில் பத்திரத்தை படிக்காமல் கையெழுத்து போட்ட தன்னை எந்த செருப்பால் அடித்தால் தகும் என்றிருந்தது கவினிற்கு.
அக்ரிமென்ட்ல சைன் பண்ணிட்டு வேலைய பார்க்காம போனா என்ன பண்ணலாம் சித்தார்த் கவினை கண்களால் அளந்து கொண்டே அமிர்தா கேட்க...
வேற என்ன பண்றது மேடம் போலீஸ்ல சொல்லலாம் இல்ல சைன் பண்ணிட்டு தகுந்த காரணம் இல்லாம வேலைய ரிசைன் பண்றாருனு நஷ்ட ஈடு வழக்கு கூட போடலாம் மேடம்.
இப்போ என்ன உங்களுக்கு உங்க எம்டிய நேரத்துக்கு கவனிச்சக்கனும் அவ்வளவு தானே கவனிச்சிட்டா போச்சு என பல்ட்டியடித்தவன் சாகரனை தள்ளி கொண்டு போக அவனை சொடுக்கிட்டு அழைத்தாள் அமிர்தா.
பாழைய பகைய மனசுல வச்சிக்கிட்டு ஏதாவது பண்ணலாம்னு நெனச்சா உன்னோட உயிருக்கு நா உத்திர வாதம் இல்ல கவின்.ஞாபகம் இருக்கட்டும் அவர் உடம்புல சின்னதா கீறல் பட்டா கூட அதுக்கு நீ தான் பொறுப்புனு சைன் பண்ணி கொடுத்திருக்க என அமிர்தா கவினுக்கு மறைமுக மிரட்டல் விடுக்க உள்ளுக்குள் பொங்கி வந்த வஞ்சத்துடன் வெளியே தலையை மட்டும் ஆட்டி விட்டு சென்றான் கவின்.
திருடன் கைலயே சாவி..என்ற படி இதழ் வளைத்து சிரித்து கொண்டார்கள் சித்தார்த்தும் அமிர்தாவும்.
நா கேட்ட டீட்டைல்ஸ் என்னாச்சு சித்தார்த்.
யாஹ் இதோ இருக்கு மேடம்..நாம வேணும்னா போலீஸ் கிட்ட ஹெல்ப் கேக்கலாமா என்ற படி ஒரு ஃபைலை அமிர்தாவிடம் கொடுத்தான் சித்தார்த்.
சாகரனுக்கு ஆக்சிடன் ஆகி ரெண்டு வாரமாகியும் இன்னைக்கு வரைக்கும் எந்த போலீஸும் வந்து என்கொய்ரி பண்ணல..அப்படியிருக்கும் போது போலீஸ்க்கு போறதுல ஆபத்து இன்னும் அதிகமாகலாம்.
மறுபடியும் சாகரன் அட்டாக் பண்ண கூட வாய்ப்புகள் அதிகம்..ஸோ யாருக்கும் தெரியாம சாதரண வர்க்கரஸ் மாதிரி காட்ஸ் போடுங்க செக்யூரிட்டிய இன்னும் டைட் பண்ணுங்க அன்ட் கவினோட எவ்ரி முமன்ட்ட வாட்ச் பண்ணுங்க.
நம்ம கம்பனி பெஸ்ட் ஹேக்கர் வச்சி இந்த ரெண்டு மொபைல் நம்பரையும் ஹேக் பண்ணுங்க.நீங்க அம்ப வாட்ச் பண்ணுங்க நா வேடன் பார்த்துக்குறேன் என அமிர்தா சொல்லி கொண்டிருக்கும் போதே ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வந்தது.
சித்தார்த் அழைப்பை ஏற்க அந்த பக்கம் சொல்ல பட்ட சேதியில் முகத்தை சுழித்தவன்.. ஓக்கே நா மேடம் கிட்ட சொல்லிடுறேன் என்றவன் அமிர்தாவிடம் சொல்லும் முன்னமே அவள் கணித்து விட்டாள்.
மிஸ்டர் நேஹன் வந்திருக்காரா சித்தார்த்..? நோ ப்ராப்ளம் வர சொல்லுங்க என்று தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள் அமிர்தா.
சித்தார்த் புன்னகைத்து விட்டு வெளியேற கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் நேஹன்.
ஹாய் மிஸ் அமிர்த வர்ஷினி ஐம் நேஹன் என அவள் முன்பு கையை நீட்ட அவளோ வணக்கம் சொல்ல முகம் சுருங்கி போனான் நேஹன்.
வந்த விஷயம் என்னனு சொல்லிட்டு கிளிம்புனா நா என்னோட வேலைய பார்க்கலாம்.. முகத்தில் அடித்தால் போல இருந்த அமிர்தாவின் பேச்சில் கண்கள் சிவந்து போன நேஹனோ தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்து அதனை ஒரு எத்து விட சுவற்றில் பட்டு தெறிக்க அமிர்தாவோ சலனமற்ற முகத்துடன் நேஹனை பார்த்தாள்.
ஒரு விஷயம் எனக்கு புரியல மிஸ் அமிர்தா.. இன்னும் நீ அந்த சாகரனுக்கு வைஃப் ஆகவே இல்ல அதுக்குள்ள எப்படி உனக்கு அவனோட சொத்துக்கு power of Patani எழுதி கொடுத்தான் அந்த அளவுக்கு உங்களுக்குள்ளே என்ன மாதிரியான உறவு இருக்கு என இரட்டை அர்த்தத்தில் பேச..
நேஹன்.....என கொந்தளித்த அமிர்தாவோ அவனது கழுத்தை பிடித்தாள்.
இன்னொரு தடவை எங்க உறவை பத்தி தப்பா பேசுன உயிரோட இங்கிருந்து வெளியே போக மாட்ட ஜாக்கிரதை.. விழிகளில் அனல் தெறிக்க மிரட்டியவளை பார்க்கும் போது நேஹனுக்கு இவள் சாகரனின் male versionஓ என்ற சந்தேகம் எழலாமல் இல்லை.
என்னடி மிரட்டி பாக்குறியா.. இந்த நிமிஷமே உன்ன நாசம் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்.எவன் கேட்பான் வீல் சார்ல கிடக்குறானே உன் ஆசை நாயகன் அவன் கேட்பானாஆஆஆ....நேஹனின் வாயில் இருந்து குருதி கொப்பளித்தது அமிர்தா அடித்த அடியில்.
சாகரன் கொடுத்த தன்னம்பிக்கையும் தைரியமும் என் கிட்ட இருக்கும் போது என்ன காப்பாத்த எதுக்கு இன்னொருத்தன் வரனும்.
தேவையில்லாம என்ன சீண்டி பார்த்த அப்பறம் நா பேச மாட்டேன் என்றவள் இடுப்பு சேலையில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தாள்.சாகரனை அழைத்து கொண்டு கவினும் அறைக்குள் வந்து விட இந்த காட்சியை கண்டு ஆடிப்போய் விட்டான்.
அமிர்தாவை சாதாரணக எடைபோட்டு பார்க்க வந்தது தவறோ என்று காலம் கடந்து யோசித்தான் நேஹன்.. சித்தார்த்...அறை அதிர அமிர்தா கத்தியதில் பவ்வியமாக வந்து நின்றான் சித்தார்த்.
மிஸ்டர் நேஹன் அமிர்தன் க்ரூப் ஆஃப் கம்பனி எம்டி அமிர்த வர்ஷினி கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண பார்த்தான்னு women's Associationக்கு இன்ஃபோம் பண்ணு.
சீசிடீவி ஃபுட்டேஜ அவங்களுக்கு அனுப்பி வை என அவள் கூறிய அடுத்த நொடியே அதனை சித்தார்த் செயட் படுத்தியும் விட மாதர் சங்கம் போலீஸோடு வந்து நேஹனை கைது செய்து அழைத்துச் சென்றத.
பழி உணர்ச்சியுடன் அவன் அமிர்தாவை பார்த்த படியே செல்ல நெஞ்சு கூடு ஏறியிரங்க உக்கிரம் கொண்ட விழிகளுடன் சாகரனை அழைத்து சென்ற அமிர்தா கவின் கண்களுக்கு காளி தேவியை போல தெரிய பயத்தில் எச்சிலை விழுங்கினான் கவின்.
தொடரும்...