காதலால் காதலுடன்..-5 (தொடர்கதை)
வாழ்வியல் கதைகளின் இனிமையான இணைப்பு. உணர்வுப்பூர்வமான கதைகளுடன் உங்கள் மனதை மயக்கும் ஒரு பயணம்
காவியாவின் பேச்சை பொருட்படுத்தாமல் கதிர் உள்ளே செல்ல அங்கே இருந்தவர்களை கண்டு முழு ருத்ரனாகவே மாறி போனான்.
உள்ளே மேஹாவின் ஒட்டு மொத்த சொந்தக்கார கூட்டமும் இருந்தது மேஹாவை தவிர.
அதான் தம்பியே வந்துட்டாரு நீங்கலே விஷயத்தை சொல்லிடுங்க என மேஹாவின் தந்தை சிவராமனிடம் சொல்ல அவரோ சங்கடமாய் கதிரின் முகத்தை பார்த்தார்.
கதிரோ காவியாவை முறைத்து பார்த்தான்.வீட்டுக்குள்ள வரும் போதே சொல்லியிருக்கலாமே என்பதை போல இருந்தது அந்த பார்வை.
என்ன விஷயம் சொல்லனும் அப்பா இவங்க எல்லாரும் எதுக்கு இங்கே வந்திருக்காங்க முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பேசினான் கதிர்.
அவர்கள் எதற்காக வந்திருக்கிற்ர்கள் என்று தான் நன்றாய் அறிவானே.மேஹாவை பற்றியோ அவள் குடும்பத்தாரை பற்றியோ கேட்கும் போதே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல இம்சையாய் உணர்வான் கதிர்.
என்ன தம்பி இப்படி கேட்டுட்டிங்க எல்லாம் உங்க கல்யாண விஷயமா தான் பேச வந்துருக்கோம் இவங்க பொண்ண நீங்க விரும்ப முன்னாடியே உங்களுக்கும் மேஹாவுக்கும் நிச்சையம் ஆனதுதானே இவங்க பொண்ணு இடைல வரவும் தான் நீங்க என் பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டிங்க..அதனால என்ன இப்போ அந்த பொண்ணு தான் உயிரோட இல்லையே பேசாம மேஹாவையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ற வழிய பாருங்க என மேஹாவின் அப்பா பேசிக்கொண்டு போக கதிர் கொண்ட கோபத்தின் அளவு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அவர்கள் பேச்சு சிவராமன் ராதிகாவிற்கு கூட சங்கடத்தையே விளைவித்தாலும் கதிரின் வாழ்வு கருதி அமைதியாகவே இருந்தார்கள்.அவனும் எத்தனை நாளைக்கு தான் இறந்தவளையே நினைத்து கொண்டிருப்பான் அவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டாமா என எண்ணியவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவன் இறந்தவளை நினைத்து கொண்டு இல்லை அவள் உணர்வுகளோடு கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் என.
கதிரோ கோபத்தில் கையை முறுக்கி கொண்டு இருக்க கூட்டத்தில் தங்கள் மகன் அமைதியாய் இருப்பான் என்ற நம்பிக்கையில் அழையா விருந்தாளியாக வந்து சேர்ந்தார்கள் ராஜாவும் மேகலாவும்.
அட இன்னும் என்ன அண்ணே அவன் கிட்ட கேட்டுட்டு இருக்கிங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்க போறான் நீங்க தட்ட குடுங்க அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை முடிச்சிடுவோம் எல்லாம் போக போக சரியாகிடும் என மேகலா நிலவரம் உணராது வாயை விட மேஹாவின் தாய் தட்டை எடுத்து மேகலாவிடம் கொடுக்க போன சமயம் தட்டு பறந்து போனது வாசலுக்கு கதிர் விட்ட உதையில்.
இதுக்கு தான் எல்லாரும் திட்டம் போட்டு என் காவியாவ சாகடிங்களோ இப்போ தானே எனக்கு புரியுது.எல்லாரும் கூட்டு களவாணிங்க தான்னு.காவியாவ கொன்னுட்டு கொஞ்ச நாள்ல நா அவள மறந்திடுவேன் அதுக்கு அப்புறமா அந்த மேனா மினுக்கிய எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சிங்களோ...
தம்பி பார்த்து பேசுங்க வார்த்தை தடிக்குது என்ன எங்க முன்னாடியே எம் பொண்ண மேனா மினுக்கினு சொல்றிங்க மேஹாவின் தாய் எகிறி கொண்டு வர கதிரின் முறைப்பில் வாயை மூடிக்கொண்டாள்.
நாங்க ஏன்டா அவள கொல்லனும் அவளே நடத்தை கெட்டவ காலைல கல்யாணத்தை வச்சிக்கிட்டே ராத்திரி இன்னொருத்தன அறைக்கு வர சொல்லிருக்க.அது எல்லாருக்கும் தெரிஞ்சு போகவும் உண்மை சுட போய் தற்கொலை பண்ணிக்கிட்டாஆஆஆ...சொல்லி முடிக்கும் முன் கதிரின் கையால் அறை வாங்கியிருந்தாள் மேகலா.
கதிர்...சிவராமனும் ராதிகாவும் அதிர்ச்சியில் கத்த.. அம்மா அப்பா நீங்க அமைதியா இருங்க இதுக்கு ஒரு முடிவு கட்டாம நா இன்னைக்கு விட போறது இல்ல.என மேகலாவின் புறம் திரும்பியவன் என்ன சொன்னே நடத்தை கெட்டவளா..??ஹாங் என் அம்மு நடத்தை கெட்டவனு நீ பார்த்தியா அழகுலயும் அறிவுலயும் அவள மாதிரி ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனா குணத்துல அவ கோடில ஒருத்தி அவள எப்படி நீ அப்படி சொல்லலாம்.
மேகலாவ் வாயில் இன்று சனீஸ்வரன் பரதநாட்டியம் ஆடுகிறார் போல அவள் வாய் ஓய்ந்த பாடில்லை.ஆமாண்டா ஆயிரம் தடவை சொல்லுவேன் அவ நடத்தை கெட்டவனு.அவ உத்தமியா இருந்தா அவ அறைக்கு ஏன் இன்னொருத்தன் வர போறான்..அவ அன்னைக்கு உன்ன மயக்குன மாதிரியே இன்னைக்கு அவ அம்மா அப்பா உன்ன மயக்கிட்டாங்க எல்லாம் நம்ம சொத்துக்காக தான்..
சொல்லி கொண்டிருக்கும் போதே அந்தரங்கத்தில் மிதந்தாள் அம்மா காரி உக்கிர விழியோடு மகன் காரன் தான் அவள் கழுத்தை பிடித்து தூக்கியிருந்தாள்.அவனும் எவ்வளவு தான் பொறுமை காப்பான்.அங்கிருந்த அனைவரும் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்க்க ராஜாவோ கதிரை தடுக்க முயன்றார்.
காவியாவை தப்பாக பேசியதால் சிவராமனும் ராதிகாவும் தடுக்க முன்வரவில்லை.
கதிரு அம்மா பாவம்பா ஏதோ தெரியாம பேசிட்டா விட்ருப்பா ஆயிரம் தான் இருந்தாலும் அவ உன் அம்மா இல்லையா சென்டிமென்ட் டயலாக் பேசிய ராஜா ஒரு மூலையில் பல்லியை போல ஒட்டி கொண்டார் வாங்கிய அடியில்.
உயிர் மேல ஆசை இருக்கவன் ஒழுங்கா ஓடி போய்ருங்க நா இருக்குற கொலைவெறில எவன் எவன் உயிர் போகும்னு தெரியாது மேகலாவை விடாது பின்னால் திரும்பி கண்களை உருட்டி மிரட்டியவனை கண்டு அஞ்சி நடுங்கிய மேஹாவின் உறவினர் கூட்டம் மொத்தமும் துப்பாக்கி சத்தம் கேட்ட கொக்கு கூட்டமாய் நொடி பொழுதில் காணமல் போயின.
உனக்கு எத்தனை வாட்டி சொன்னே காவியாவ பத்தி தப்பா பேசாத தப்பா பேசாதனு கேட்டியா கூட்டம் இருக்க தைரியத்துல தானே பேசிட்டே போன இப்போ பேசு பார்ப்போம் என்ற கதிர் மேகலாவின் கழுத்தை இன்னும் இறுக்க தொண்டை குழி வரண்டு போனது,கண்கள் சொருகி மேலே போக மூச்சுக்கு ஏங்கி காலை உதைத்து கொண்டிருந்தவளை விடுவித்தான் கதிர்.
அவன் விட்ட வேளையில் தொப்பென்று தரையில் விழுந்தவள் வேகமாக மூச்சு விட்டு இரும்மி கொண்டிருக்க ராஜா பதறி போய் மேசையில் இருந்த தண்ணீர் கிளையை எடுக்க போக சட்டென்று ஒரு உதை விட்டான் கதிர்.
நா கொலை காரனா மாற முன்னாடி ஒழுங்கு மரியாதையா உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு ஓடிரு.அப்பறம் ரெண்டு பேர் உயிருக்கும் நா உத்திரவாதம் கிடையாது என்க இருமிக்கொண்டிருந்த மேகலாவை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு சென்றார் ராஜா.
புயலடித்து ஓய்ந்ததை போல ஒரு அமைதி அந்த வீட்டினில்.தலையை பிடித்து கொண்டு சோஃபாவில் அமர்ந்து விட்டான் கதிர்.அவனை பார்க்கவே பாவமாய் இருந்தது காவியாவின் பெற்றோருக்கு.
அவன் முன்னால் தண்ணீரை நீட்டினாள் ராதிகா குடிச்சிட்டு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா நா சமைச்சிட்டு கூப்பிடுறேன் என்றிட தண்ணீரை வாங்கி குடித்தவன் அமைதியாய் அறைக்கு செல்ல அங்கே அவன் வருகைக்காகவே காத்திருந்தாள் ஒருத்தி.
அறையில் இருந்த காவியாவை கண்டு கொள்ளாமல் குளியலறைக்கு சென்ற கதிர் ஷவரை திறந்து விட்டு தண்ணீருக்கு இணையாய் தன் கண்ணீரை வெளியேற்றினான்.
முடிந்த மட்டும் அழுது தீர்த்தவன் வெளியே வர காவியாவின் விழிகளில் இருந்து அவனின் அழுத விழிகள் தப்பவில்லை.
வா என்பதை போல அவள் கை நீட்டி அழைக்க அடுத்த நிமிடம் அவள் மடியில் தலை சாய்த்திருந்தான் காதலியை இழந்த காதலனவன்.
சில நேரம் வார்த்தைகளால் உணர்த்த முடியா விடையங்களை மௌனங்கள் உணர்த்தும்.இருவருக்கிடையிலும் நெடிய அமைதியே வியாபித்திருக்க இருவரின் இதயங்கள் மட்டும் மௌன பாஷையில் தங்கள் வலிகளை பரிமாற்றி கொண்டன.
காவியா கதிரின் தலையை கோதி கொடுக்க தன்னவள் ஸ்பரிஸத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றான் காவியாவின் கதிர்.
எங்கோ கனவில் கதவு தட்டும் ஓசை மட்டும் கேட்க நீண்ட நாள் கழித்து வந்து நித்திரையை கைவிட மனமின்றி காவியா மடியிலேயே உறங்கியிருந்தான் கதிர்.வெளியே ராதிகா அவனை உணவு உண்ண அழைக்க தான் கதவை தட்டி கொண்டிருந்தாள்.
கதிர் உண்ணாமல் இருப்பது காவியாவிற்குமே வருத்தத்தை கொடுக்க மெல்ல அவனை சுரண்டினாள் காவியா.
கதிர் கதிர் அம்மா கூப்பிடுறாங்க பாரு எழுந்து போய் சாப்பிட்டு வந்து தூங்கு.. ம்ஹும் அவள் எவ்வளவு நெம்பியும் அவன் எழுந்த பாடில்லை.
கேடி பயலே இருடா உனக்கு செய்றேன் வேலை என அவன் காதினருகே குனிந்தவள் கதிர் அத்தான்..என்றாள் மென்மையாக.அதற்கு மேல் உறக்கமாவது உரமாவது எல்லாம் தூரப்போக அடித்து பிடித்து எழுந்தான் கதிர்.
என்ன சொன்ன அம்மு திரும்ப சொல்லு சரியா கேக்கல என காதை காட்ட.
நா என்ன சொன்னே கதிர் எழும்பு அம்மா கூப்பிடுறாங்கனு தான் சொன்னேன் விழிகளை உருட்டி உதட்டை பிதுக்கி அப்பாவியாய் சொன்னவளை அள்ளி கொஞ்ச தோன்றியது அவனுக்கு ஆனால் முடியாதே.
ஏக்கமாக அவளை அவன் பார்த்திருக்க.அவன் பார்வையில் கலக்கமுற்ற காவியா மீண்டும் அவன் அருகில் வந்து அத்தான் கதிர் அத்தான்....என காதுக்குள் கத்த வெட்கத்தில் கன்னம் சிவந்தான் ஆண்மகன்.
பெண்களின் வெட்கம் அழகென்றால் ஆண்களின் வெட்கம் பேரழகல்லவோ.அவள் ஒவ்வொரு முறையும் அத்தான் என்று விழிக்கும் போது அவனுள்ளே உண்டாகும் பரவசத்திற்கு அளவே இருக்காது.ஆயிரம் முறை கேட்டாலும் முதல் முறை கேட்பதை போல வெட்கத்தில் சிவந்து போவான்.
ஐயோ என் க்யூட் பேபிடா அத்தான் நீ என அவனை நெட்டி முறித்தவள் போய் சாப்பிட்டு வா அம்மா அப்பா வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க என்று அவனை அனுப்பி வைத்தாள்.
கதிர் கீழே வர டைனிங் டேபிளில் சிவராமன் கதிருக்காய் காத்திருந்தார்.
சாரிபா கொஞ்சம் தூங்கிட்டேன் என அவர் அருகில் வந்து கதிர் அமர.. அதுக்கென்னபா பரவாயில்ல சாப்பிடு என அவனுக்கும் பரிமாறினாள் ராதிகா.
ராதிகா கண்ணை காட்ட தலையசைத்த சிவராமன் கதிரிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.
கதிர் அப்பா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதப்பா..உன்ன இப்புடி பார்க்கவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு.உன் வாழ்க்கைய நீயே இப்படி அழிச்சிக்கிறத காவியா என்னைக்கும் விரும்ப மாட்டா அதனால நீ..
மேஹாவ கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்ல வாரிங்கலா அப்பா என்றான் கதிர் சட்டென்று.
அதுக்கில்லபா அந்த புள்ளைய பார்த்தாலும் நல்ல புள்ளை மாதிரி தான் இருக்கு உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்ச புள்ளை வேற அவள கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தான் நாங்க சொல்றோம்..ராதிகா பொறுமையாக எடுத்து சொல்ல.
கண்ணை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து விட்ட கதிர் நா யோச்சு சொல்றேன் மா என உணவை உண்ண அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்தான் என்பதே தாய் தந்தையர் இருவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
தொடரும்....