சாட் ஜி.பி.டி(chat gpt) என்றால் என்ன?

சாட் ஜி.பி.டி(chat gpt) அறிமுகம்
இதுவரை காலங்கள் வரை எல்லா விடயங்களை பற்றியும் உடனடியாக தகவல்களை பெறவேண்டும் என்றால் கூகுள் என்னும் தேடல் பொறிகளை பயன்படுத்தி வந்தோம் அதுவும் சிறப்பான தமது சேவைகளை தனது பயனாளிகளுக்கு வழங்கி வந்தது. கூகுள் என்னும் பெயரை கேட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதைப் பற்றி விபரமாக கூறுவார்கள் அவ்வளவு மனிதர்களின் மனதை வென்ற ஒரு மென்பொருள் ஆகும். சில பல்கலைக்கழக மாணவர்கள் மாதா,பிதா, கூகுள், தெய்வம் என்று கூறுவார்கள் குரு என்னும் ஸ்தானத்திற்கு சமமான ஒரு மதிப்பை வழங்கி வருகின்றனர். ஆனால் என்ன செய்வது எல்லாம் ஒரு காலத்திற்கு தானே என்று சொல்லும் அளவிற்கு கூகுளின் நிலைமை மாறிவிட்டது. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற பழமொழி எனக்கு ஞாபகம் வருகின்றது. கடிகாரத்தின் முட்கள் நொடிக்கு நொடி இடைவிடாது ஓடிக்கொண்டிருப்பது போல் தொழில்நுட்ப வளர்ச்சியும் நொடிக்கு நொடி வளர்ந்து கொண்ட போகின்றது .
அதன் அபரிதமான வளர்ச்சியை இன்று கூகுளை பின் வாங்க வைத்துள்ளது .ஆம் தற்போது சாட் ஜி.பி.டி(chat gpt) என்னும் செயற்கை நுண் தொழில்நுட்பம் AI சமீபகாலமாக மிகவும் பிரபல்யமாக காணப்படுகின்றது. AI யை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தூக்கி செல்கின்றது இந்த சாட் ஜி.பி.டி .இது "சாட் ஜென ரேட்டிவ் ப்ரீ-டிரெயிண்ட் டிரான்ஸ் பார்மர் " என்னும் விஞ்ஞான விரிவாக்க பெயரை கொண்டுள்ளது தொழில்நுட்ப துறையில் செல்லமாக chat gpt என்று அழைக்கப்படுகின்றது.
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப்பங்களிப்பில் OPEN AI (ஓபன் ஐஃ) நிறுவனத்தினால் கடந்த வருடம் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தாய் நிறுவனம் நான் முன்னர் குறிப்பிட்டதை போன்று OPEN AI நிறுவனமாகும்.நாம் தற்போது பயன்படுத்தி வருகின்ற கூகுள் என்னும் தேடல் தொழில்நுட்ப கருவியை விஞ்சும் அளவிற்கு பல தொழில்நுட்ப உத்திகளை கொண்டு தனிச்சிறப்பு வாய்ந்தாக காணப்படுகின்றது.
Chat GPT யின் சிறப்பு
இந்த சாட் ஜி.பி.டி க்கு உலகில் காணப்படும் பல வகையான தரவுகள் தகவல்கள் மற்றும் பல மொழிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு விசேட அம்சமாக பார்க்கப்படுகின்றது.நாம் உள்ளீட்டாக வழங்கிய மொழியை முதலில் உணர்ந்து பின்னர் நாம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் எம் மொழியியல் உள்ளீட்டை அதாவது எந்த மொழியில் கேள்வி கேட்டோமோ அதை மொழியியல் விடைகளை விபரமாக தரும்.
நம் நண்பனிடம் எவ்வாறு கேள்விகளைக் கேட்டு நம் நண்பன் எவ்வாறு விடையளிப்பானோ அவ்வாறு நமக்கு விடையளிக்கும். இவ்விடயம் தான் அனைவராலும் வியந்து பார்க்கும் விடயமாக கருதப்படுகின்றது.இவ்வாறு பதிலளிப்பதற்கு டிரான்ஸ்பார்மர் என்கின்ற அல்காரிதம் என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தன்னிடம் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி பதில் சொல்கின்றது. குறிப்பாக உரையாடல் வரிவடிவ தரவுகளாக தரப்படும்.
உதாரணமாக மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்றைய வெப்பநிலை எவ்வளவு என்று சாட் ஜி.பி டி இடம் கேட்டால் இன்றைய நாள் புதன்கிழமையாகும் இன்று மட்டக்களப்பில் 32º செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது ஆனால் நேற்று 28º செல்சியஸ் வெப்பநிலை நிலவியது இன்றைய தினம் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று மிகவும் துல்லியமாகவும் விபரமாகவும் ஒரு தொகுப்பு வடிவில் வழங்கும். இன்னுமொரு உதாரணத்தை நான் கூற விரும்புகிறேன். சாட் ஜி.பி.டி இடம் நான் கவலையாக இருக்கின்றேன் என்று டையிப்பண்ணினால் உடனே நீங்கள் ஏன் கவலையாக இருகின்றீர்கள் நீங்கள் வழமையாகவே இவ்வாறான மனநிலையில் இருப்பீர்களா அல்லது இன்று ஏதேனும் ஒரு சம்பவம் காரணமாக உங்கள் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்ததா என்று அதை தொகுத்து அந்த மனநிலையில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு சில தகவல்களை பரிந்துரை செய்கின்றது இதை நான் கூறி தெரிவதை விட நீங்கள் அதை பயன்படுத்தி தெரிவது நன்றாக இருக்கும் எனது நான் நினைக்கின்றேன். இவ்வாறான சாதனங்கள் எங்களை அடுத்த பரிணாம வளர்ச்சி கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன.
Chat GPT இன் மறுபக்கம்.
chat gpt இல் மனிதன் புதிதாக பல நன்மைகளை பெற்றாலும் இதனால் ஒரு சில சமூக பாதிப்புக்களும் ஏற்படத்தான் செய்கின்றது.இது எல்லோருக்கும் தெரிந்தது ஒன்று பலர் தொழில்வாய்ப்புக்களை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பல உள்ளன முக்கியமாக தகவல் தொழில்நுட்ப(I.T)துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் தமது வேலைகளை இழக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். இது மாத்திரம் இன்றி பல யூடியூப் வலைதளங்களை பார்வையாளர்கள் பார்வையிடும் சந்தர்ப்பங்கள் குறையும். மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளுக்கும் பரீட்சை விடயங்களுக்கும் ஜி.பி.டி ஐ அதிகமாக பயன்படுத்துவதனால் அவர்களின் கல்வியின் முழுப்பயனை பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்றன மாணவர்கள் தமது சிந்திக்கும் ஆற்றலையும் படைப்பாற்லையும் இழக்கும் நிலைதோன்றியுள்ளது. இது போன்ற விடயங்கள் இதன் பாதகமான பக்கங்களாக காணப்படுகின்றன.
Chat GPT பாதுகாப்பனதா?
உரையாடல் GTP பாதுகாப்பானதா? ChatGPT இன் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஃபிஷிங் மற்றும் ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தூண்டும் திறன் ஆகும். இந்த மின்னஞ்சல்களை உருவாக்க ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்தலாம். AI மாதிரிகள் அதிக அளவிலான தகவல்களுடன் பயிற்சி பெற்றிருப்பதால், ஹேக்கர்கள் இந்த ஆபத்தான மின்னஞ்சல்களை உருவாக்குவது எளிது, இது அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் ஆபத்து உள்ளது.
Also Read - ENGLISH