குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? -குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நற் சிந்தணையாளர்களாகவும் வளர்க்க சூப்பர் டிப்ஸ் இதோ
இப்பகுதியில் பச்சிளம் குழந்தைகள் குழந்தைகள் தொடக்கம் ஐந்து வயது வரையான மழலைகளை பராமரிப்பது தொடர்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை என்றாலே பேயும் இரங்கும் என்று அனைவரும் அறிந்ததே ஆகும். குழந்தைகளை விரும்பாதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை.நமது எதிர்கால சந்ததியினரை இன்றே நல்ல முறையில் பராமரித்து வலுவானவர்களாக உருவாக்க கடமை கொண்டுள்ளோம்.
அந்த வகையில் பிறந்தது முதல் கிட்டத்தட்ட பன்னிரெண்டு வயது வரையில் குழந்தை பருவத்தினர் என்பதனை மறுக்க முடியாது. இக் குறிப்பிட்ட வயது வரும் வரையில் பெற்றோரின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்வது இக்காலத்தின் முக்கியமான ஒரு விடயம் ஆகும்.
இப்பகுதியில் பச்சிளம் குழந்தைகள் குழந்தைகள் தொடக்கம் ஐந்து வயது வரையான மழலைகளை பராமரிப்பது தொடர்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
1 உணவுப்பழக்கவழக்கங்கள்
2 சுகாதாரபழக்கவழக்கங்கள்
3 நற்பழக்கவழக்கங்கள்
மேற்கூறப்பட்ட மூன்று கருப்பொருளின் அடிப்படையிலேயே இப்பகுதியின் குழந்தைகள் பராமரிப்பதன் தொடர்பாக கூறப்படுகின்றது.
*உணவுபழக்கவழக்கங்கள்
குழந்தை பிறந்தது தொடக்கம் ஆறுமாதம் காலம் வரை தாயின் அரவணைப்பில் தாய்ப்பால் மட்டுமே அருந்தி வளரும் குழந்தைகளுக்கு அதன் பிறகு கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி அறிந்திருப்பதும் அவ் உணவுகளை எப்படி தர வேண்டும் என்பதிலும் பெற்றோர் நிதானமாக இருக்க வேண்டும்.
விரைவில் சமிபாடடைய கூடிய உணவுகள் கொடுப்பது பிரதானமாகும். ஆறுமாதத்தில் சோறு ஊட்டும் வழக்கம் தமிழ் மரபில் காலம் காலமாக உள்ளது. முதலாவதாக உணவு ஊட்டும் குழந்தைகளுக்கு திரவ வடிவில் சோறு மற்றும் உணவுகளை கொடுப்பது மிக நன்று ஆகும்.சத்து நிறைந்த கிழங்கு வகைகள்,கீரை வகைகள், பருப்பு தானிய வகைகள்,முட்டை, இறைச்சி வகைகள் போன்ற உணவுகளை மசித்து கொடுப்பது மேலும் நன்மை செய்யும் ஒன்றாகும்.
அதன் பின்னர் பற்கள் முளைத்த சிறார்களுக்கு அதாவது ஒரு வயதிற்கு பிறகு பெரியவர்களுக்கு சமைக்கும் உணவினை கொடுக்கலாம்.உணவு கொடுப்பது எல்லோராலும் முடியும் ஆனால் ,கொடுக்கும் உணவு சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். மிக முக்கியமான ஒன்று தண்ணீர் குடிக்க கொடுப்பது என்பது தேவையாக கருதப்படுகிறது.நீர் சத்து அவசியமாக உள்ளது.அதனிலும் கொதித்து ஆறிய பிறகு நீரை பருகுவது இன்னும் சிறப்பாகும்.
உணவு வேளை முடிந்த பின்னர் பழங்களை கொடுக்காமல் சிறு தீனியாக அல்லது தேநீர் நேரங்களில் சேர்ப்பது நன்று. பொதுவாகவே கீரை வகைகள் உடம்பிற்கு ஏற்ற மற்றும் சத்து நிறைந்த உணவு ஆகும். அதன்படி,கீரை வகைகளில் பொன்னாங்கன்னி , வல்லாரை,போன்ற கீரைகள் கண் பார்வைக்கும்ம் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் என்பவற்றிற்கு சிறந்த கீரைகள் ஆகும். இதனடிப்படையில் நோக்குவோமானால் விட்டமின் கூடிய உணவுகளை கொடுப்பது போன்று கொடுக்க கூடாத உணவுகள் பற்றியும் அறிந்து செயற்படுவது சிறப்பான ஒன்றாகும்.
உடனடி உணவு வகைகளையும் விற்பனை கடைகளில் தயாரித்து விற்கும் உணவுகளையும் அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து ஏற்புடையது அல்ல. பொழித்தினால் அடைக்கப்பட்ட ஏற்கனவே தாயரித்த உணவுகள் உடம்பிற்கு எந்தவித சத்துக்களையும் கொடுப்பதில்லை.அவ்வாறான இரசாயணமூட்டபட்ட செயற்கை உணவு பொருட்களை அளிப்பதில் துளியெனும் பயனும் இல்லாமல் போகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
குளிரூட்டப்ட்ட உணவுகள் நாட்கள் கடந்த சிற்றுண்டிகளும் அவ்வளவு நல்லதல்ல.இந்த உணவுகளை கொடுக்கும் பட்சத்தில் சளி,இருமல், தடிமன் ஆகிய நோய்களும் ஏற்படலாம். முக்கியமாக உணவகங்களில் தினமும் உணவு உட்கொள்வது என்பது தீமையான விடயம் ஆகும்.அதிக எண்ணெய் நிறைந்த கொழுப்புகள் கூடிய உணவுகளை தவிர்ப்பது பிற்காலத்தில் கொலஸ்ட்ரோல்,சீனி நோய், தைரோட் போன்ற நோய்களை விரட்டி அடிக்க ஒரு முன் எச்சரிக்கையாக அமையும் என்று கூறலாம்.
*சுகாதாரப்பழக்கவழக்கங்கள்
சுகாதாரம் என்றவுடன் நீராட்டி விடுவதும் ,புது உடைகள் அணிவித்தும் அழகுபடுத்துவது என்பது தான் நினைவில் வரும். பொதுவாகவே குழந்தைகள் அழகிற்கு குறைவு இல்லாதவர்கள்.நோயின்றி சோர்வின்றி சுறுசுறுப்பாக வளர்வதற்கு சுகாதார பழக்க வழக்கங்கலுடன் குழந்தைகளை பராமரிப்பது அவசியம். தினமும் நீரட்ட வேண்டிய அவசியம் இல்லாவிடினும் வாரத்திற்கு நான்கு நாட்கள் குளிப்பாட்டி விடலாம்.முக்கியமாக கை ,கால் முகங்களை காலை மற்றும் மாலையும் கழுவி விட வேண்டும் இதனால் தொற்று நோய்கள் அருகிலேயே வர தயங்கும். இயற்கை உபாதைகளின் பின்னர் நீரினால் சுத்தப்படுத்தி விடலாம்.பச்சிளம் குழந்தைகளுக்கு துணிகளில் நீர் சேர்த்து சுத்தப்படுதலாம். இவைகள் பெரியவர்கள் ஆனதும் கைவிட்டு போகாத பழக்க வழக்கங்களாக மாறிவிடும்.நகங்களை விட்டி விடுவதும் நல்லது ஆகும்.நகம் கடிக்கும் குழந்தைகளை ஏராளமாக காண்கின்றோம்.ஆரம்ப நக கடித்தலின் பின் விளைவு மனஉளைச்சலுக்கு ஆளாவதாகும் என்று வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளை தொலைபேசிகலிலும் தொலைக்காட்சிகள் முன்னும் அமர வைத்து நமது வேலைகளை முடித்து கொள்ளலாம் என்று மட்டும் ஒரு போதும் நினைக்காதீர்கள்.உல மற்றும் உடல் ரீதியாக சிறந்த ஆளுமையுடன் விளங்க விளையாட்டில் ஈடுபட செய்வது நன்று.
ஓடி ஆடி விளையாடி மற்ற குழந்தைகளுடன் சிரித்து பேசி கூடி மகிழ்ந்து அதில் வரும் இன்பகளை எந்த விலை உயர்ந்த தொலைபேசியும் கொடுத்து விட முடியாது என்பது உண்மையே.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதினை யாராலும் மறுக்க இயலாது.
குழந்தை பராமரிப்பில் சுகாதாரம் பகுதியில் வாய் சுகாதாரம் என்பது முதன்மையானது ஆகும்.ஒன்பது அல்லது ஒரு வயதிற்கு பிறகு தான் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்.ஒரு வயதிற்கு பின் சிறிய பற்தூரிகையில் கடலை அளவு பற்பசை சேர்த்து பற் துலக்கி விடுவதும் அல்லது கற்று கொடுப்பதும் நன்று ஆகும்.
காலையும் மாலையும் என ஒரு நாளைக்கு இரண்டு வேலைகள் பல் துலக்க கற்றுக் கொடுக்க வேண்டும். இச் செயற்பாட்டினால் பற்கள் மஞ்சள் நிற கறை படிந்து இருப்பதும்,பல்வலி ,வாய் துர்நாற்றம் என்பவற்றை தடுத்து விடுகிறது.
அடுத்த சுகாதார பழக்கமாக செருப்பு அணிந்து கொண்டு வெளியில் செல்ல பழக்க வேண்டும்.முக்கியமாக மலசலக்கூடங்களூக்கு செல்லும் போது கட்டாயமாக அணிய வேண்டும் எனக் கூற வேண்டும்.விஷக்கிருமிகள் தொற்றில் இருந்து தடுத்து கொள்ள முடியுமாக இருக்கும்.
எல்லா குழந்தைகளும் நடை பழகிய பின்பு வீட்டிலுள்ள மற்ற உறவினர்களினுடைய உணவுக் கோப்பை , தேநீர் கோப்பைகள் போன்றவற்றை உபயோகிக்க ஆரம்பிப்பர் .இது குழந்தைகளின் தவறு அல்ல என்றாலும் அவர்களினுடய பொருட்களை விட மற்றவர்களின் பொருட்களை பெருவதிலே ஆசை கொள்வர்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளியில் பார்ப்பதற்கு அழகாக நோயின்றி இருந்தாலும் தொற்று கிருமிகள் குழந்தைகளிடம் இலகுவாக தொற்றுக் கொள்கின்றன.வீட்டிலுள்ள நம் உறவினர்கள் ஏன் தந்தை தாய் என்றாலும் கூட அவர்களினுடைய கோப்பைகளில் கொடுப்பதினை தவிர்த்து கொள்வது அவசியம் ஆகும்.
குழந்தைகளின் உடைய பொருட்களையே பாவணை செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சிறப்பாகும். குழந்தைகளுக்கு என்று தனியாக பொருட்களை உபயோகிப்பது நல்லது தான்.ஆனால் நெகிழி தன்மையற்ற பொருட்கள் கோப்பைகள் போன்றவற்றை உபயோகிபோது இன்னும் நன்மையாகும்.
பழங்காலத்தில் அரிசி கழுவிய நீரிணை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கை, கால் மற்றும் முகங்களை சுத்தபடுத்த முன்னோர்கள் இவ்வாறான முறையினை கையாண்டு உள்ளனர்.உண்மையில் இதன் பின்புலத்தை நோக்கினால் ,அரிசி கழுவிய நீர் உடம்பிற்கு பலம் அதிகரிக்க உதவுகிறது என்பதாகும்.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் இவ்வாறான பழக்கங்கள் குறைவு எனலாம் .
இவ்வாரான சுகாதார பழக்க வழக்கங்களை கற்று கொடுப்பதால் வைத்திய செலவினை குறைத்து விடு வதொடு வைத்தியர்களை நாடி செல்ல வேண்டிய அவசியம் இன்று ஏற்படாது.
நல்ல பழக்கவழக்கங்கள்
உணவு பழக்க வழக்கங்கள்,சுகாதார பழக்க வழக்கங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டாலும் மிக முக்கியமான ஒன்று நல்லபழக்க வழக்கங்களுடன் குழந்தைகளை வளர்ப்பது தான்.நூற்றில் பெரும்பான்மை சிறார்கள் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களை கவனத்திற் கொண்டே வளர்க்கின்றனர்.அவர்கள் என்ன செய்கிறார்கலோ அதையே தாமும் செய்ய வேண்டும் என ஆசை கொள்கின்றனர்.
அதனால் பெரியவர்கள் ஆகிய வீட்டில் உள்ளோரும் பெற்றோரும் நல்ல விடயங்களை குழந்தைகள் முன் செய்வது நன்மை எனலாம்.இவ்வாறு சில நல்ல பழக்க வழக்கங்கள் கூறப்படுகின்றது.
உண்மை பேச கற்றுக் கொடுப்பது நல்ல பண்பு ஆகும்.தான் என்னதான் தப்பு செய்திருந்தாலும் அதனை மறைக்காது தவறினை ஒத்துக்கொள்ளும் பழக்கத்தினை வளர்க்க வேண்டும்.
தொட்டில் பழக்கம் தான் முதிர்ந்த காலம் வரைக்கும் என்பதினை கவனத்திற் கொண்டு நல்ல விடயங்களை பழக்க கொடுக்க வேண்டும்.
சக பாலின நண்பர்களையும் ஊன முற்ற நபர்களையும் மனம் நோகும்படி நடக்க விடாமலும் அவர்களை பற்றி அறிய செய்வதும் நன்று ஆகும்.
மற்றவர்களின் ஏழ்மைகளை ஏளனமாக கூறாமல் நடந்துக் கொள்வதற்கு வீட்டினுடைய வறுமையினை பற்றியும் சொல்லிக் கொடுப்பது அவசியம் ஆகும்.பொதுவாகவே குழந்தைகளுக்கு அடம் பிடிக்கும் பழக்கம் உண்டு. கேட்டவுடன் பெற்றுக் கொடுக்காது சற்று அல்லது ஒரு வாரம் கழித்து பெற்று கொடுப்பது நல்ல ஒழுக்க பண்பு ஆகும்.
மற்றவர்களின் கருத்துகளுக்கும் வயதிற்கும் மதிப்பு அளிக்க கூற வேண்டும். இனம் ,மதம் ,ஜாதி என்பவற்றை குறிப்பாக குழந்தைகளுக்கு பாகுபாடு ஏற்படும் வண்ணம் கற்றுக் கொடுப்பதினை தவிர்த்து அனைவரும் தம்மை போன்ற சக மனிதர்கள் என்பதினை தெளிவுபடுத்துதல் முக்கியமாகக் கருதப்படுகிறது.
அனைவரும் ஒரு குலம் மனித குலம் என்பது நன்மையாகும்.இதனால் சிறந்த உதவும் தன்மை மற்றும் ஆளுமை தன்மைகள் விருத்தியடையும்.
உள ரீதியான மன ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்து செயல்படுவது மிக சிறப்பாகும்.
நேர் மறையான சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.என்னால் முடியும் என்ற கொள்கையை செயற்படுத்த வேண்டும்.என்னால் முடியாது எனக்கு அது பிரச்சினை இவை பிரச்சினை என்று சொல்லும் எதிர் மறையான சிந்தநைகள் மற்றும் எண்ணங்களை அடியோடு முடக்க வழி செய்ய வேண்டும்.
உன்னால் முடியும் முயற்சி செய்க என்று உற்சாகமூட்டி தைரியமாக செயல்படவும் வழி செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் பிரச்சினைகள் சண்டைகள்,கெட்ட வாய் வார்த்தைகள் என்பவற்றை குழந்தைகள் முன் இடம் பெறாத நிலையில் நடந்துக் கொள்வது பிற்காலத்தில் பெற்றோர்களுக்கு நண்மை பயக்கும்.
இவ்வாறு நம் எதிர்கால சமுதாயத்தினை இன்றே கருத்திற் கொண்டு பராமரிப்போம் என்றால் உறுதியான நோயற்ற சிறந்த மனிதத்தன்மை உள்ள தலைவர்களை உருவாக்க காரணங்களாக அமையும் என்பதில் ஐயமே இல்லை. நாளைக்காண உறுதியான அடித்தளத்தை இன்றே வித்திட வழி செய்ய துணை நிற்போம்
Whats Your Reaction?






