இலங்கை திரைப்பட துறை
இலங்கையில் சினிமாவின் பாரிய வளர்ச்சி

நாம் தற்போது நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய உலகத்தைப் பொறுத்தவரை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இயங்குகின்ற சமூகமாக நம் உலகம் மாறிவிட்டது. அதன் அடிப்படையில் ஒரு சில விடயங்களை உற்று நோக்கும்போது இன்று உலகத்தில் எல்லா துறைகளும் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சி அடைந்து இருக்கும் அதேவேளை, இந்த சினிமா துறைக்கு என்றும் சிறந்த மதிப்பு இருந்து வருகின்றது. ஆகவே சினிமா துறை உலகளாவிய ரீதியில் எல்லோராலும் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம். உலகம் என்ற போர்வையில் சினிமா ஒரு பங்கு என்றாலும், இலங்கையை பொறுத்த வரை.. சினிமா வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடாகவே உள்ளது.
உலக சினிமாவோடு இலங்கை சினிமாவை ஒப்பிடும்போது, உதாரணமாக; அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தயாரித்து வெளியிடும் திரைப்படம் மற்றும் குறுந்திரைப்படம் போன்றவை வணிகத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவும், அந்நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்க கூடிய படங்களாகவும், இருந்து வருகிறது. அதேபோல் நம் நாடான இலங்கையை பொறுத்தவரை வணிகத்தை நோக்கி சினிமா வளர்ச்சியடையவில்லை. ஆனால், உலகத்தில் நம் நாட்டின் பாரம்பரியத்தையும் மண்வாசனைகளையும் கூறுகின்ற திரைப்படங்களாக உள்ளது. மற்றும் நமது திரைப்படங்கள், நம் மக்களின் தேவைகளை உலகம் அறிய வைக்கின்ற படங்களாக உள்ளது. அதாவது சினிமாவின் உண்மைத்தன்மையை நம் நாட்டு திரைப்படம் மற்றும் குறும்படம் காட்டி நிற்கின்றது.
source - news.lk
நம் நாட்டு சினிமாவானது உலக சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது. அத்தோடு நமக்கான அடையாளம், நமக்கான மொழி, நமக்கான வாழ்க்கை முறை, நமக்கான கேள்வி என்று உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லக்கூடிய சினிமா முறையாகவே நம் நாட்டு சினிமா அமைய பெற்றுள்ளது. உதாரணமாக, அண்மையில் வெளியான இலங்கை தமிழ் திரைப்படங்களான பாலை நிலம், ஆறாம் நிலம், அறுவதை, மங்கம்மா போன்ற திரைப்படங்கள் உண்மையில் நம் நாட்டு மக்களின் அவல நிலையை உணர்த்தும் வகையில், எடுக்கப்பட்ட கண்கலங்க வைத்து திரைப்படங்களாக உள்ளது. மற்றும் நம் நாட்டு மக்களின் வாழ்வியல் படிமுறைகளை தத்ரூபமாக, காட்சிகளால் காட்டப்பட்ட திரைப்படங்களாக இருக்கிறது. இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருகின்ற போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் நம் வாழ்வியலை காட்சிகளாக மாற்றி உலகத்துக்கு வெளிக்கொண்டு வரும்போது, நமக்கான தீர்வுகள் இந்த சினிமா மூலம் நிறைவு பெறக்கூடிய சந்தர்ப்பம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்தோமையானால், அதை படம் ஆக்கினால் இதன் மூலம் உலக மக்களிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும்.. சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இலங்கை சினிமாவில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால் இன்று மக்கள் மத்தியில் நின்று பேசக்கூடிய ஒன்றாக நம் ஈழத்து சினிமா மாறி வருகிறது.
அவ்வகையில், இன்று நாட்டில் நிறைய கலைஞர்கள் உருவாகி வருகின்ற சூழல் நிலவியுள்ளது. இதன் மூலம் பாடகர்கள். இயக்குனர்கள், நடிகர்கள், கலை, இயக்குனர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று ஏராளமான கலைஞர்கள் இருப்பதால் மென்மேலும் ஈழத்து சினிமா வளர்ச்சி அடைந்து வரும் ஒன்றாகவே காணப்படுகிறது.
அதேவேளை அதன் வீழ்ச்சியும் இன்றி அமையாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஒரு சில இலங்கை சினிமாவானது, இன்று மாறி வருவது வழக்கம். அதாவது இலங்கை சினிமாவின் வீழ்ச்சிக்கான படியாக, இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவரும் தென்னிந்திய சினிமாவை பார்த்து பழகியவர்கள் அதிகமாக உள்ளனர். முழுவதிலும் இளைஞர்கள் இவ்வாறான படங்களில் அதிகமாக ஈர்ப்பு உள்ளவராக உள்ளனர்.
ஆகவே, நாளை இவ்வாறு இளைஞர்கள் நம் நாட்டு சினிமாவுக்குள் காலடி வைக்கும் போது இலங்கை சினிமாவின் வீழ்ச்சிக்கு ஒரு படியாக மாறிவிடுகிறது. அதாவது அவர்கள் கே.ஜி.எப்., மாஸ்டர், பாகுபலி, எந்திரன் ஆகிய இந்திய பிரம்மாண்ட திரைப்படங்களை பார்த்து ரசித்து இருப்பார்கள். மற்றும் சிலர் இப்படங்களை பார்த்து சினிமாவுக்குள் வந்திருப்பார்கள். இதன் மூலம், இவர்களை இப்படியான படங்களின் சாயலில் படங்களை எடுக்க முற்படுவார்கள். ஆனால் அனைத்தையும் தோல்வியில் முடியும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இதனால் இலங்கை சினிமாவில் பாரிய மாற்றத்தை கொண்டு வருவதோடு பின்னடைவையும் ஏற்படுத்தக்கூடிய காரணியாக அமையக்கூடும். உதாரணமாக, இலங்கையில் தயாரிக்கப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களான காஞ்சனா, கில்லி திரி(3) ஆகிய திரைப்படங்கள் நமது சகோதர மொழியான சிங்கள மொழியில் எடுக்கப்பட்டு வெளியிட்ட போது விடுக்கப்பட்டு வெளியிட்ட போது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு நம் நாட்டு சினிமாவை கேலிக்குள்ளாக்கியது.
source- IMDb
இதனால் உலகத்தில் இலங்கை சினிமா ஒரு தரமற்ற படைப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆகவே இதன் விளைவுகள் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. அதேபோல் இளம் சமுதாயம், எதிர்காலத்தில் ஈழத்து சினிமாவின் பாணியை விட்டு அவர்களுக்கு சாதகமான சினிமா பாணியை உருவாக்க நேரிடும். இதனால் பாதிக்கப்படுவது நம் நாட்டு சினிமா துறையே. அந்த வகையில் நம் நாட்டின் சினிமாவில் நிகழ்ச்சிக்கான காரணங்களாக இவ்வாறு எடுத்துரைத்தாலும், இது ஒரு சிறிய காரணமாகவே கருதப்பட்டு வருகிறது. இதன் முக்கிய காரணமாக இன்று நம் நாட்டில் உருவாக்கப்படும் படங்கள் உண்மையில் ஆச்சரியமிக்க ஒன்றாக இருந்தாலும், ஒரு சிலராலும் மற்றும் சினிமா நேஷனலாலும் அதனோடு தொடர்புடைய கலை ஆர்வலர்களால் மட்டுமே இந்த சினிமாவை போற்றி வருகிறது.
மக்கள் மத்தியில் பெரிதான வரவேற்புகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. அத்தோடு இங்கு சினிமாக்கான தொழில் முறைகளும் குறைவாக உள்ளது. மற்ற துறைகளுக்கு நம் நாட்டின் முக்கியத்துவம் கொடுக்கும் நம் அரசாங்கமும் மக்களும் இந்த சினிமா துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நான் அறிந்தமட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதுவும் ஈழத்து சினிமாவின் வீழ்ச்சியில் முக்கிய காரணியாக பங்கு வகிக்கிறது. அதோடு நம் நாட்டில் பல இன மக்கள் வாழ்வதால் உதாரணமாக, பௌத்தம்,தமிழ்,முஸ்லீம் மூன்று முக்கிய இனத்தவர்கள் வாழும் நம் நாட்டில், உண்மையில் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையாகவே இருந்து வருகின்றனர். இதன்போது இந்த சினிமாவில் பெரும்பான்மையின மக்களில் இருந்து வரும் கலைஞர்கள், நின் ஆதிக்கம் அதிகமாகவே ஈழத்து சினிமாவில் அண்மைக்காலமாக இருந்து வருகிறது.
ஈழத்து சினிமா
தமிழ் பேசும் கலைஞர்களுக்கு இங்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகவும் உள்ளது. இதுவும் இலங்கை சினிமாவின் கண்ணோட்டத்தில் ஒரு வீழ்ச்சிக்கான காரணமாகவே இருந்து வருகிறது. அதேபோல் நம் நாட்டு கலைஞர்கள் இந்த சினிமா மூலம் சரியான வருமானம் மற்றும் தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், சினிமா ஊடான தொழில்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதன் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் எம்.ஜி ராமச்சந்திரன் உண்மையில் கண்டியில் வசித்தவர். தனது வாய்ப்புக்காக தென் இந்திய சினிமாவை தேடி சென்று பல சாதனைகளை நிகழ்த்தினார். அது மட்டுமல்ல அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன். லோஸ்லியா, ஜனனிக்கு போன்ற கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதாவது தங்களது திறமைகளை காட்டுவதற்காக வாய்ப்புக்காக தென்னிந்திய சினிமாவை தேடிச் சென்றனர். இவ்வாறான காரணங்களை வரிசையாக கூறிக்கொண்டே செல்லலாம். இக்காரணங்கள் இலங்கை சினிமாவின் வீழ்ச்சிக்கு முக்கிய அம்சங்களாக இருந்து வருகிறது. இவ்வாறான இலங்கை சினிமாவானது, இன்று உலகுக்கு அறிமுகமாகி நிறைய விதத்தில் சாதனைகளை செய்தது. அவ்வாறு இருந்தாலும் அதன் ஆரம்ப கால வளர்ச்சி மிகவும் மோசமான நிலையை கொண்டிருந்தது. அதாவது உலகத்தில் அன்றைய காலத்தில் மேற்கத்திய திரைப்படங்கள் மிகவும் பாரிய வளர்ச்சியில் இருந்தது.
source - timesofindia.com
நம் நாடு ஒரு கீழேத்தேய நாடாக இருந்து, ஒரு பின்தங்கிய வளர்ச்சி பாதையில் இருந்தது. அக்கால கட்டங்களில் இலங்கை சினிமா துறையில் எந்த ஒரு அனுபவமோ வளர்ச்சியோ இல்லாத காலம். அப்போது இலங்கையில் பாரம்பரிய கலைகள் தலைதூக்கிய காலம். உதாரணமாக, கண்டி பெரஹரா நடனம், தெருக்கூத்து, மேடை நாடகங்களும் நம் நாட்டு பாரம்பரிய கலைகளாக காணப்பட்டது. அந்த நேரங்களில் சினிமா என்பது காணக் கிடைக்காத அதிசயமாக இருந்தது. அக்காலகட்டத்தில் திரையரங்குகள் தொலைக்காட்சிகளோ வானொலிகளோ இல்லாத காலம் என்றதால் திரைப்படம் தொடர்பான அறிகுறிகள் யாரிடமும் இல்லாமல் இருந்தது. பிற்காலத்தில், வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் நம் நாட்டில் கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சில நன்மைகளும் கிடைக்கப் பெற்றது. அதாவது புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகம் ஆகியது. இது நமக்கு நமது நாட்டுக்கும் பெரிய உதவியாக இருந்தது. இதன் மூலம் நிறைய துறைகள் உருவாக்கப்பட்டு இருந்தது. அத்தோடு சினிமாக்கான காலங்களும் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது. அன்று மேடை நாடகமாக இருந்தது இன்று நம் திரையில் பார்த்து ரசிக்கும் காட்சிகளாக வந்தது. தென்னிந்திய திரைப்படங்களை நாம் எவ்வாறு திரையில் பார்த்து ரசித்தமோ அவ்வாறு நாம் ஈழக் கலைஞர்களின் படைப்புகளையும் ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
source- trendceylon.com
அதேபோல் தற்கால சினிமாவை பார்க்கும்போது, இன்று திரைப்படமாக இருக்கட்டும் குறுந்திரைப்படமாக இருக்கட்டும் நம் ஈழத்தில் தினம்தோறும் வெளிவருகின்ற ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. அதேபோல் நாளுக்கு நாள் நம் நாட்டு கலைஞர்களும் அதிகரித்து வருவதை நாம் அறிந்திருப்போம். உலக சினிமாவை ஒப்பிட்டு பார்க்கும்போது, அங்குள்ள கலைஞர்கள் உண்மையில் சினிமா அனுபவம் கொண்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் அங்கு சினிமாவிற்கான கல்வி அறிவும் இல்லை, இளைய வயதில் அவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களுக்கு சினிமாவை உருவாக்குவதில் பெரிய சிரமங்கள் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஒரு பெரிய பொருட் செலவில் திரைப்படம் ஆக இருக்கட்டும், குறுந்திரைப்படமாக இருக்கட்டும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஏதோ ஒரு வகையில் வெளியிடுவார்கள். அதற்கான காரணம் அங்கு சினிமா என்பது தொழில் என்பதால், அவர்களுக்கு ஊதியம் சரியான முறையில் கிடைப்பது அங்குள்ள சினிமா மேலும் வளர்ச்சி பெறுவதற்கு காரணமாக இருக்கிறது. இங்கு பார்த்தால் ஈழக் கலைஞர்களின் வகிபாகம் என்பது நம் சினிமாவில் தொழில் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதன் போது இங்குள்ள கலைஞர்களும் அவர்களின் சுயதேவையின் நிமிர்த்தம் வேறு வேலை வாய்ப்புகளில் ஈடுபடுகின்றார்கள். ஆதலால் நாம் ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்றால் பல தியாகங்களுக்கு மத்தியில் தனது மேலதிக உழைப்பை பயன்படுத்தினால் மட்டுமே முடியும். இவ்வாறு இருந்தும் காலங்கள் தாமதித்தாலும் ஒரு தரமான திரைப்படத்தை குறும்படத்தையோ நம் கலைஞர்கள் நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாங்களும் உலகுக்கு ஒரு சிறந்த கலைஞர்களாக நிருபிக்கின்றார்கள்.
நம் கலைஞர்கள்
நம் நாட்டின் அடிப்படை பாரம்பரிய விடயங்களை இந்த மண்ணின் வாசனையையும் காட்டத் துடிக்கும் நம் கலைஞர்கள், உண்மையில் நம்மால் போற்றப்படக் கூடியவர்களே. ஆகவே நம்நாட்டு சினிமாவை மதிப்பதும் நம் கடமையாகும்.இவ்வாறு இன்றைய உலகத்தில் சினிமாவின் ஆதிக்கம் வளர்ச்சி அடைந்து சென்று கொண்டிருக்கிறது.
தற்போது உள்ள காலங்களை பொறுத்தவரை நம் இலங்கை சினிமாவும் இன்று உலக அரங்கிற்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது. சிறந்த கலைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இலங்கை சினிமாவானது எதிர்காலத்தில், உலகில் பேசக்கூடிய சினிமாவாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
source - youtube.com
மற்றும் இன்றைய சமூகத்தில் நம் ஈழ சினிமா போற்றப்பட்டு நிறைய ஆதரவுகளையும் பெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். உதாரணமாக மக்களுக்கு மட்டக்களப்பில் வெளியான வேட்டையன், ஆபத்தாண்டவன், ஓடியான் அதேபோல் திருகோணாமலையில் வெளியான ஒற்றைச் சிறகு, தவறு மற்றும் யாழ்ப்பாணத்தில் விரல்விட்டு என்ன முடியாத அளவுக்கு இவ்வாறு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி, மக்களால் வரவேற்கத்தக்க அளவுக்கு இருந்து வருகிறது. இவ்வாறான சான்றுகளை பார்க்கும்போது உண்மையில் இலங்கை சினிமா நாளை உலக சினிமாவோடு போட்டி போடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய சமுதாயம் சினிமாவின் அவசியத்தை உணர்ந்து விட்டது. நம் வாழ்வியலோடு இணைந்து ஒவ்வொருவரின் மனதில் இரத்தத்தில் கலந்தது. சினிமா என்ற ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டது ஆதலால் இலங்கை சினிமாவானது வளர்ச்சியடைவதோடு தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் இலங்கையும் உலக சினிமாவை போல் ஒரு சினிமா அனுபவம் உள்ள நாடாக மாறுவதில் நாம் பெருமிதம் அடைகிறோம். இனிவரும் காலங்களில் வரப்போகும் சந்ததிகள் சினிமா வாசனையோடு தான் நம் மண்ணில் பிறக்கும் என்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகிறேன். மற்றும் இலங்கை சினிமா எதிர்காலத்தில் தலைசிறந்த சினிமா வரலாற்றை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.