5000 ரூபாய் குறும்திரைப்பட விமர்சனம் | Five Thousand short film Review
Review By :- Ak Tamil Release Date :- Jan 28 2020 Movie Run Time :- 03 minutes 40 second's Genre :- Realistic Production :-Thaththa & Colombo Film and Television Academy Direction :- Nerun Kalpajith Art Director :-N.K.Rahul
ஐயாயிரம் ரூபா எனும் குறுந்திரைப்படம் நமது சகோதர மொழி கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு குறுந்திரைபடமாகவும் இப்படத்தை Nerun Kalpajith இயக்கியுள்ளார். மற்றும் Colombo Film & Television Academy படத்தை தயாரித்துள்ளது.
இப்படமானது 2020 ஜனவரி 28ஆம் திகதி Youtube தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கருத்தானது நம் வாழ்வில் நடக்கும் ஒரு வழக்கமான நடைமுறை பாணியை பாடத்தில் கொண்டுள்ளது
அதாவது நகர வாழ்க்கையில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனைக்கு தீர்வாகத்தான் இப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது.
Spoiler Alert:
கடைத்தெருவின் ஓரத்தில் ஒரு முதியவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு சற்று கால் ஊனமுற்ற நிலையில் இருந்தார் அப்போது அக்கடைக்கு வந்த ஒரு நபரின் பணம் 5000 ரூபாய் கீழே விழுந்தது அப்பணத்தை எடுத்து இந்த முதியவர் செலவு செய்வதற்காக ஒவ்வொரு கடையாக சென்று பணத்தை மாற்றுவதற்காக அலைந்து கடைசியில் யாரும் மாற்றி கொடுக்காத நிலையில் இவர் ஒரு ஓரமாக நின்று யோசிக்கும் போது அது கனவாக மாறி மறுபடியும் இவர் கடையில் நிற்கும் போது ஒரு நபர் வரும்போது பணம் விழும் போது பணத்தை எடுத்த நபரிடமே கொடுக்கின்றார்.
சொல்லவரும் கருத்து
அதாவது இவர்கள் இப்படத்தில் சொல்ல வருவது என்னவென்றால் நகரங்களில் பொதுவாக மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஏதாவது பொருளை வாங்குவதற்கு ஒரு கடைக்கு செல்லும் போது அவர்கள் பணத்தை தவற விடுவது அடிக்கடி எம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களாகும்.
அந்த வகையில் ஒருவருடைய தவற விட்ட பணத்தை எடுத்தால் மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் எனும் நற்பண்பை வளர்க்க வேண்டும் என்பதை தான் இப்படம் கூறுகிறது.
எடுத்த விதம் எப்படி
கதை வழியாக பெரிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை ஆனால் இவர்கள் பயன்படுத்திய உயஅநசயஇ நுனவைiபெ ரூ ஆரளiஉ என்பன நன்நாக உள்ளன. முக்கியமாக நகர வாழ்க்கையில் உள்ள வாகன இரைச்சல்கள் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறை என்னவற்றை மிக அழகான முறையில் நமக்கு காட்டி இருக்கிறார்கள்
இப்படமானது மொழி பேசாப்படமாக இருப்பதுதான் இப்படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பொயிண்ட். அதாவது மொழி தெரியாவர்களும் இசை உணராதவர்களும் இப்படத்தை பார்க்க கூடிய ஒரு சந்தர்ப்பத்தை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்
உண்மையில் சைகை மூலமாக படங்களை எடுக்கும்போது உலகத்தில் உள்ள யார் வேண்டுமென்றாலும் படங்களை பார்க்கலாம்.
படத்தில் பெரிதாக ஒன்றும் குறைகள் இல்லை வழக்கமான வாழ்வியலில் நடக்கும் ஒரு சம்பவத்தை கொண்டு ரசிகர்களுக்கு சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார்கள். இப்படத்தை தயாரித்தவர்களும் படத்தில் வேலை செய்த அனைத்து கலைஞர்களும் உண்மையில் பாராட்டப்பட கூடியவர்கள்