வெண்பா குறும்படத்தின் விமர்சனம் || Venba Short Film Review
Director EelaNila (Jonisha) PRODUCER RJ STUDIO (VAANI) public TAMIL CREATORS Cinematographer & Editing Sasikaran Yo Music prashanth & Robertson lyrics EelaNila Vocal Mary sathya john kenady, Franka Make up Fashion beauty Vani Sound PK studio CAST Eazlil, Aasha, Lajeepan, Vaani, Dinesh, Charan, Sayanthan, Ajoopan, Inastan
வெண்பா 2022 பிப்ரவரி 13ஆம் திகதி வெளியாகிய இக் குறும் படம் 22 நிமிடங்களும் 34 வினாடிகளும் கொண்டது.
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் இன்றைய உலகத்தில் படும் கஷ்டங்களை மையக் கருவாக கொண்டு இப்படத்தை படமாக்கியுள்ளனர். இக்குறுந்திரைபடத்தில் எழில்,ஆஷா,லாஜிபான்,வாணி போன்றவர்களின் நடிப்பிலும் மோனிஷாவின் இயக்கத்தில் சுது ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
கதை எப்படி? - Spoiler Alert
பாடசாலை வயது மாணவன் ஒருவன் சற்று பெண்.உணர்வுகள் தன்னுள் இருப்பதை உணர்கிறான். அதனால் தன்னுடன் படிக்கும் மற்றைய மாணவர்களால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றான்
ஆனாலும் அவனுடன் அன்பாக பழகும் கதிர் என்னும் அவனுடைய வகுப்பு மாணவன் மேல் காதல் வயப்படுகிறான். இதனால் கதிருடன் சற்;று பாலியல் ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்த முயல்கிறான். ஆனால் கதிர் இந்த விடயத்தை அவனுடைய சக நண்பர்களுக்கு கூறிவிடுகின்றான்
இவன் பெண்ணின் இயல்பை கொண்டிருந்ததால் பாடசாலைகளிலும்,வீட்டிலும் நிறைய அவமானங்களை சந்திக்கின்றான். பின்னர் வீட்டை விட்டு வெளியே தன்னை ஆதரிக்கும் சமூகத்தை தேடி செல்கிறான். அங்கே சென்று அவன் முழுமையாக ஒரு பெண்ணாக உருவெடுத்து வெண்பாவாக மாறினான்.
சில காலங்களின் பின் வெண்பா படித்து ஒரு தாதியாக வைத்தியசாலையில் வேலை செய்யும்போது அங்கு அவனை அவமதித்த கதிர் ஒரு நோயாளியாக வெண்பாவிடம் வருகின்றான். அதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை
சொல்ல வரும் கருத்து
-----------------------------------
அதாவது இன்றைய உலகத்தை பொருத்தமட்டில்.உலகத்தில் கேலிக்கும்,அவமானத்துக்கும் அதிகமாக உள்ளாவது இந்த திருநங்கைகள் இனமாகும். அதிகமான தற்கொலைகளையும் செய்து கொள்வது இத் திருநங்கையர் இனம் ஆகும். அந்த வகையில் இன்று திருநங்கைகளுக்கு சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறுந்திரைப்படமாக இது கருதப்படுகின்றது. மற்றும் இக் குறுந்திரைபடத்தில் திருநங்கைகளின் கஷ்டங்களை தெளிவாகக்கூறியதோடு திருநங்கைகளையும் இந்த சமூகத்தில் ஒரு பிரஜையாக மதிக்கப்பட வேண்டும். என்பதை வலியுறுத்துகிறது.
எடுத்த விதம் எப்படி
-------------------------------
உண்மையில் இதில் நடித்த கலைஞர்கள் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள். மற்றும் எடிட்டிங்கில் சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் சரியான முறைக்கு படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ரேப்பினும் இப்படத்தில் ஒளிப்பதிவு பேசத்தக்கதாக இருக்கவில்லை. கதை வழியாக படத்தை செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை வழியாக இப்படத்தை மக்கள் கண்களுக்கு புலப்படுத்துவதில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. மற்றும் சொல்ல வந்த விடயங்களை அழகான முறையில் மக்கள் இலகுவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு காட்டியிருக்கிறார்கள்.
மொத்தத்தில்
.
தொழில்நுட்ப ரீதியாக சற்று குறைபாடுகள் இருந்தாலும்; கதை மற்றும் கதை சொன்ன விதத்தில் படம் நெஞ்சில் பதிகிறது.