தொல்லை இல்லா தொலைபேசி
இன்றைய மனிதனின் முதல் நண்பன் தொலைப்பேசி

மனித இனத் தோற்றம் முதலே மனித பிரிவினருடனான தகவல் பரிமாற்ற நடைமுறைகளை கையாண்டு தம் செய்திகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலானவற்றை பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளான். அவ்வாறு தம் தகவல்களை முதற்கால மனிதன் பரிமாற்றி கொள்ள விலங்குகள்,பறவைகள் மற்றும் மனித வலு முதலானவற்றை கையாண்டு தூது அனுப்புதல் முறைமைகளை பின்பற்றி வந்தான் இவ்வாறான நிலையில் கால ஓட்டத்தில் அறிவியலின் அறிமுகம் காரணமாக சில தகவல் பரிமாற்ற ஊடகங்கள் கண்டு பிடிக்கப்பட மனிதனது தகவல் பரிமாற்ற முறையை மிக துள்ளியமாகவும் விரைவுத்தன்மையுடனும் வினைத்திறனா க பகிர்ந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு நவீன விஞ்ஞான தொழிநுட்பத்திலான தகவல் பரிமாற்ற முறைக்கு ஏற்புடையதாக கண்டுபிடிக்கப்பட்ட தொலைப்பேசியானது இன்றைய தொழில்நுட்ப உலகில் வாழ் மனித சமூகத்தின் முதல் நண்பனாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அதனை மறுக்க முடியாது. இவ்வாறான தனித் தன்மை கொண்ட தொலைப்பேசி பற்றிய விரிவான தொகுப்பே இக் கட்டுரை.
புவியியல் பரப்பில் வாழ் மனித சமூகத்தில் அறிவியல் சார் துரித தொழிநுட்ப வளர்ச்சி போக்கின் பின்னணியில் பத்தொண்பதாம் நூற்றாண்டுகளில் தகவல் பரிமாற்ற முறைமைக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டுபிடிக்கப்பட்டதே இத் தொலைப் பேசி சாதனமாகும். இது முதற் காலத்தில் சர்வதேச மற்றும் நாடளாவிய பாதுகாப்பு கருதி பல பகுதிகளில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ படையினரிடம் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் அறிவிப்புக்களை கொண்டு சேர்க்கும் முனைப்போடு இராணுவ துறைக்கு பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு தன் இராணுவ குழுக்களுக்குள் மிக துள்ளியமாகவும் விரைவு தன்மை மூலமாகவும் தகவல்களை பரிமாற்றும் நம்பகத் தன்மை கொண்ட இத் தொலைப்பேசி சாதனமானது கால ஓட்டத்தில் அரசவைகள் அரச நிறுவணங்கள் முதலான பல முக்கிய துறைகளுக்குள் உள்வாங்கப்பட்டு வளர்ச்சி நிலை அடைந்தது.
இவ்வாறு மேற்குலக அரச கட்டமைப்பில் இருந்து காலணித்துவத்திற்கு உற்பட்டிருந்த வளர்முக கீழேத்தேய நாடுகளுக்குள் அறிமுகமாகி கேள்வி நிலையை தூண்டிய தொலைப்பேசி சாதனத்தால் சர்வ தேசம் வரையிலும் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் அமையப் பெற்றது. இவ்வாறு அலக்ஸ்டான்டர் கிரகஹம் பெல் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் தொலைப் பேசியால் தொலைத் தொடர்பை மாத்திரமே ஏற்படுத்திக் கொள்ள முடிந்தாலும் கூட பிற்கால விஞ்ஞான துரித வளர்ச்சி போக்கின் விரைவோட்டத்தால் பல விதமான சிறப்பு தன்மைகளை கொண்டு செயற்படும் அளவில் தற்கால நவீன ரக தொலைப்பேசிகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலைக்கு மாற்றமுற்றுள்ளது. என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இவ்வாறு தொலைப்பேசியின் தோற்றம் முதல் இன்று வரையிலும் தொலை பேசியின் மூலமான அழைப்புக்கள் கட்டுபாட்டு மையத்தில் செம்மையாக்கப்பட்டு பின் வான் வெளியில் நிருவப் பட்டிருக்கின்ற செய்மதிகள் மற்றும் செயற்கை கோள்களுக்கு அனுப்பப்படும் அதே வேளை இவ்வாறு அனுப்பப்படும் செம்மையாக்கப்பட்ட அழைப்பை பிரதேச அலைவாங்கிகள் மற்றும் அண்டரனாக்குக்கு செலுத்தப்பட்டு அவை அழைப்பை எதிர்பார்க்கும் தொலை பேசிக்கு வழங்கும் செயன்முறையானது உணர்வலைகள் ஊடாக இன்று வரையிலும் இடம் பெறுகின்றது. எனினும் அழைப்பு தகவல்கள் முதற் காலத்தில் தொடுப்பு கம்பிகளை கொண்டு உணர் கருவிகள் ஊடாக கடத்தப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான உணர்வலைகள் மூலமாக முதற் காலத்தில் தொலைப் தொடர்புகள் மாத்திரம் தொலைப்பேசி சாதனத்தால் இடம் பெறும் தகவல் பரிமாற்ற முறையாக வரையறுக்க பட்டிருந்தாலும் கூட படிப்படியாக குறுஞ் செய்திகளையும் இத் தொலைப் பேசி வழியதில் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் தொலைப் பேசியில் நிழற் திரை (screen) தொழிநுட்பத்தை உள்வாங்கி வினைத்திரன் மிக்கதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தி வந்தனர் நவீன கண்டுபிடிப்பாளர்கள். இவ்வாறு பயணித்த தொலைப்பேசி சாதனங்களின் உருவாக்கத் தன்மை அதிகரிக்கப்பட்டதன் விளைவாகவும் பல தனியார் நிறுவணங்கள் போட்டி தன்மையின் அடிப்படையில் தொலைப்பேசி சாதனங்களை உருவாக்க எடுத்த முயற்ச்சியின் விளைவாக இதுவரை தன் அளவு மற்றும் வடிவத்தால் தொலைப்பேசிகளது தன்மையானது மாற்றமுற தொடங்கியது. இவ்வாறான வளர்ச்சியின் பின்னணியில் இது வரையிலும் தொடுப்பு கம்பிகளூடாக வழங்கப்பட்டு வந்த தொலை தொடர்பு அழைப்புக்களானது தொடுப்பு கம்பிகளுக்கு அப்பாற் பண்பலைக் காவிகள் (ஏரியல்ஸ்) மூலமாக இடம் பெறத் தொடங்கின.
இவ் வளர்ச்சியின் துரிதத்தால் இதுவரை மேசைக் கட்டமைப்பில் இருந்த தொலைபேசிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அளவு மற்றும் வினைத் திறனில் மாற்றம் கொண்ட கையடக்க தொலைபேசி சாதனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன இந் நிலையே பிற்காலத்தில் சமூகத்தில் வாழ் அத்தனை மனிதர்களையும் ஈர்த்து தன் வசப்படுத்தி இன்று மனித கட்டமைப்பின் முதல் நண்பனாக தொலைப்பேசி சாதனத்தை அடையாளப்படுத்தும் வகையில் மாற்றமுற்றுள்ளமைக்கு காரணம் என்றால் அது பொய்யாகாது. இவ்வாறு கால மாற்றத்தின் துரித அறிவியல் வளர்ச்சியின் விளைவினாலும் தொலை பேசி உருவாக்க சர்வதேச கம்பனிகளின் போட்டி தன்மை காரணமாகவும் நாளுக்கு நாள் உருவாக்கப்படும் தொலைப்பேசிகளில் சில வினைத் திறன் மிக்க மாற்றங்களை கொண்ட தோற்றமானது சந்தை கேள்விக்கு ஏற்ற நிரம்பலாக சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நவீனத்தின் விரைவோட்ட கால தன்மையில் ஒரு சாமாணியராலும் கொள்வனவு செய்து பயன்படுத்த கூடிய வகையில் அதன் விலை மற்றும் பயன்பாட்டு முறைமையிலும் இலகு தன்மை கொண்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றமையானது குறிப்பிடத்தக்கதே. இந்நிலை இன்றைய இளைஞர் யுவதிகளை கொண்ட இளைய சமுதாயத்தில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தெரியாத அல்லது கையடக்க தொலைபேசி சாதனங்களை விரும்பாத ஒருவரை அடையாளங்காண முடியாத வகையில் விருத்தி பெற்றுள்ளமையானது அதன் தனித் தன்மையே ஆகும்.
இவ்வாறு தனி சிறப்புடன் பயணிக்கும் தொலைப்பேசி சாதனங்களது வளர்ச்சி பாதையில் இன்றைய சந்தையில் நிலவுகின்ற தொலைப்பேசி சாதனங்களுக்கான கேள்விக்கான நிரம்பலை வழங்கும் தொலைப்பேசி தயாரிப்பு முன்னிலை கம்பனிகளின் போட்டி தன்மையின் விளைவாக அறிவியல் துரித தன்மையை முதற் கொண்டு தொலைத் தொடர்பு மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்ற முறை முதலானவற்றோடு இணைந்ததாக தொலைபேசி சாதனங்களில் இணைக்கப்பட்டு வரும் படபிடிப்பு சிறிய ரக கமராக்கள் ஊடாக கையடக்க தொலைபேசியை புகைப்பட கருவியாகவும் வீடியோ பதிவு கருவியாகவும் பயன்டுத்தி கொள்ளும் வகையில் உருக்கப்பட்டன. இதற்கு மேலாக தொலைப்பேசி சாதனங்களில் இணைக்கப்படும் நினைவகங்கள் ஊடாக தொலை பேசியில் புகைப்படங்கள்,வீடியோ பதிவுகள்,ஒலி பதிவுகள் முதலானவற்றை களஞ்சிய படுத்தி பயன்படுத்தி கொள்ள கூடிய வகையிலான நடைமுறைகளும் தொலைபேசி சாதனங்களில் இணைந்த தொழிநுட்பமாக உருக்கப்பட்டமையானது அதிக மக்களின் தேவைகளுக்கு ஏற்ற சாதனமாக தொலைப்பேசி சாதனங்கள் மாற்றமுற வழி வகுத்தது.
இதற்கு மேலாக கணனி மூலமாக அது வரைக் காலமும் பயன்படுத்தப்பட்டு வந்த இணைய வசதியானது கையடக்க தொலைபேசி சாதனங்களிலும் மேலதிக இணைப்பு சேவைகளானது இணைக்கப்பட்ட நாளதில் தொடங்கி தொலைப்பேசிகளின் சமூக இருப்பானது இன்றி அமையாததாக அமைந்தது. இதனை ஒட்டியதாக உருவாக்கம் பெற்ற இணையத்தை மையமாக கொண்டு இயங்கும் செயலிகளின் உருவாக்கத்தால் இன்று வரையிலும் கணனியையும் பின் தள்ளி முதன்மை தொலைத் தொடர்பு ஊடகமாக இத் தொலைப் பேசிகள் மனித சமூகத்தில் இருப்பை பெற்றுக் கொண்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இணையத்தை மையமாக கொண்டு இன்றைய நவீனத்தின் மாற்று வடிவமாக நாளுக்கு நாள் தோற்றம் பெற்று வருகின்ற மற்றும் மாற்றமுற்று சேவை வழங்குகின்ற தானியக்க செயலிகளின் வளர்ச்சியின் அங்கமாக திகழும் முகப்புத்தகம்,வட்சப், ன்ஸ்டாக்றாம்,டிவிட்டர் சேர்செட் முதலான செயலிகளின் தோற்றமானது தொலைப்பேசி வழியான தகவல் பரிமாற்ற தன்மையின் உச்ச கட்ட வினைத்திறனை அடையாளப்படுத்தியது.
இதே போல மேலதிக சேவையாக பொழுதுபோக்கு அம்சங்களையும் மின்னியல் விளையாட்டுக்களையும் தற்கால தொலைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களானது அறிமுகப்படுத்தி நடைமுறை படுத்தி வருகின்றமையின் விளைவாக கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டு தன்மையானது இன்றைய சிறுவர்களின் இடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை கொண்ட இன்றி அமையாத விளையாட்டு பொருளாக மாற்றமுறும் அளவிற்கு வலு பெற்றுள்ளது. இவ்வாறு குழந்தைகள் பற்றும் சிறுவர்களிடத்தில் நவீன விளையாட்டு பொம்மை மற்றும் தொலைப்பேசி ஆகிய இரண்டு பொருட்களையும் தெரிவாக வழங்கும் போது அவர்களின் முதல் மற்றும் ஒரே தெரிவாக கைபேசிகள் அமையும் அளவிற்கு இன்றைய சமூகத்தில் இவை இன்றி அமையாத முதன்மை சாதனங்களாக வலுப் பெற்றுள்ளமையானது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இன்றைய சமூகத்தில் தனக்கென தனி இடத்தை கொண்டு பயணிக்கின்ற தொலைபேசி சாதனங்களின் பரிணாம வடிவமான கையடக்க தொலைபேசி சாதனங்களில் தட்டச்சி கைபேசிகளில் இருந்து வர்ண திரைகளால் ஆன அதி சிறந்த கைபேசிகளின் தோற்றமானது இன்றைய மனித சமூகத்தில் மனித எதிர்பார்ப்புகளுள் நூற்றுக்கு தொன்னூற்றொண்பது சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளமையானது மனிதனானவன் இன்று தன் கைப்பேசியின் துணையோடு தனித்து தன் வாழ்வை நடாத்தி செல்லும் அளவிற்கு வலு பெற்றுள்ளது. இதனாலேயே இன்றைய மனிதர்களது முதல் நண்பன் என அடையாளப்படுத்தும் வகையில் சிறப்பு தன்மை கொண்டுள்ளது.
இவ்வாறான தனி திறன் கொண்ட கைப் பேசிகளது வருகையின் சாதக தன்மைகளாக நோக்கும் போது, வினைத்திறனானதும் விரைவு தன்மையானதுமான தகவல் பரிமாற்ற நடைமுறைகள், பொழுதுபோக்கு,இணைய வசதிகளை பெற்றுக் கொள்ள முடிதல் முதலானவைகள் அடையாளப் படுத்தப்படும் அதே வேலை கணனியின் தனித் தன்மை கொண்ட சிறப்புகளை அதனிலும் பார்க்க வினைத்திறனாக தொலைப்பேசி சாதனங்களில் பெற்றுக் கொள்ள முடிகின்றமை மற்றும் கணனியை கொள்வனவு செய்வதை விடவும் கையடக்க தொலைபேசி சாதனங்களை கொள்வனவு செய்வதற்காக ஒப்பிட்டளவில் குறைந்த அளவிலான பண மூலத்தை மாத்திரமே செலவிட வேண்டிய தன்மைகள் முதலானவைகள் இதனாலான சாதக தன்மைகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு பல சாதக பக்கங்களை கொண்டிருக்கும் இன்றைய நவீன கைப் பேசிகளின் ஊடாக பல பாதக விளைவுகளும் மனித சமூகத்துள் தோற்றம் பெற்ற வண்ணமே உள்ளன. அவ்வாறு குடும்ப கட்டமைப்பிலும் சமூக கட்டமைப்பிலும் மனித பிரிவினருடனான நேரடி உறவாடலானது முழுமையாக முடக்கப்பட்டு கையடக்க தொலைபேசியே ஒற்றை துணையாக முதல் நண்பனாக தோற்றம் பெற்றுள்ளமை, இதனால் மனித உறவு கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளமை, இவ்வாறு மனிதன் கண்விழிப்பதில் தொடங்கி இரவு உறக்கத்திற்கு செல்லும் வரையிலும் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசி சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் உடலியல் மற்றும் உளவியல் சார் பல பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய தன்மை இவற்றுக்கு மேலாக இன்றைய மாணவர் சமூகமும் கையடக்க தொலைபேசி சாதனங்களில் பெறும் ஆர்வம் கொண்டுள்ளமையினால் அவர்களது தேடல் அறிவு மற்றும் கல்வி அறிவு மட்டுப்படுத்தப்பட்டு மந்த நிலைக்கு வித்திடுகின்றது. இவற்றுக்கு மேலாக இளம் சமூகத்தின் தகாத தேடல்கள் இரகசியத் தன்மை முதலானவற்றால் பல்வேறு சிக்கல் நிலைகள் தோற்றம் பெறுகின்றமை. இவற்றுக்கு மேலாக பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி மூலமான மின்னியல் விளையாட்டுக்கள் இன்று சூதாட்டமாக மாற்றமுற்றுள்ளமை முதலான காரணிகள் இன்றைய தொலைபேசி சாதனங்களின் வழியில் பெறும் பாதக தன்மைகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு பல சாதக பாதக தன்மைகளை கொண்டு இன்றைய உலக இருப்பில் மனித சமூகத்திடையே தனி இடம் பிடித்து மனிதனின் முதல் நண்பன் எனும் போர்வையில் ராட்சகனாக தன் கட்டுபாட்டுக்களுள் மனித சமூகத்தை நகர விடாமல் கட்டி வைத்துள்ள இன்றைய நவீன ரக தொலைப்பேசியின் பாவணையானது இன்றைய உலகில் தவிர்க்க முடியாததாக அமைந்தாலும் கூட இவற்றின் முழுமையான விளக்கம் மற்றும் சாதக பாதக தன்மை முதலானவற்றை மிக விரிவாக அறிந்து கொண்ட நாம் இன்றைய நவீன தொலைப்பேசி சாதனங்களை தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தி இயன்றளவில் பாதக தன்மைகளை தவிர்த்து நன்மைகளை மாத்திரம் பெற்று கொள்வோம்.
அன்புடன் மலையக கவிஞன் : மு. அனுஷன்