WhatsApp-இல் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு சிறந்த செயலா?
Whats app status வைக்கும் பாவனையாளர்கள் மனநிலை எப்படி இருக்கும்.

WhatsApp-இல் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு சிறந்த செயலா?
சாதாரணமானவர்கள் - தேவையென்றால் மட்டும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் வைப்பவர்கள்.
கால் பைத்தியம் - அவருடைய தினசரி நடவடிக்கைகளை அப்படியே போடுபவர்கள்.
அரை பைத்தியம் - ஏதாவது விழாக்கள், வித்தியாசமான மனநிலையில் இருந்தால் அன்றைக்கு மட்டும் ட்ரெயின் விடுவார்கள். மற்ற நாட்களில் தினமும் ஸ்டேட்டஸ்.
முழு பைத்தியம் - எப்போதும் ட்ரெயின் விடுவார்கள்
இப்படி நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள்.
சிலர் Always Sad - நேர்ல பார்த்தால் சிரிச்சுட்டு சுத்தும்
Always Motivated - சோம்பேறியா இருக்கும் ஆனால் வேற லெவல்ல ஸ்டேட்டஸ் வைக்கும்
Always Happy - சிலநேரம் சந்தோஷம், சிலநேரம் கவலை. ஆனால் பாக்குற நம்மள சந்தோஷமா வச்சுக்கிற மனசு இருக்கே அதான் சார் கடவுள்
Always Love/Mom/ Dad கால் பண்ணி பேசுனா எரிஞ்சு விழுவான் ஆனால் ஸ்டேட்டஸ் வேற மாதிரி இருக்கும்
Always Devotional தம்மை பக்திவான்களாக காட்டி கொள்ள நினைப்பவர்கள்
Always News Updates - இந்த மாதிரியான ஆட்கள் ரொம்ப ரேர். ஆனால் என்னோட வாட்ஸ்அப் லிஸ்ட்ல ஒருத்தன் இருக்கான் Tech Update கம்பெனிகளில் இருந்து ரிலீஸ் ஆகுதோ இல்லையோ அவன் அப்டேட் போட்ருவான்.
இவற்றையும்பார்க்க--- ஐபோன் விலை மட்டும் ஏன் அதிகம்.?
Always Hero/Heroin/ movies இந்த ஆளுங்கள திருத்தவே முடியாது
WhatsApp Status வைக்கிறது நல்லது தான். ஆனால் உருப்படியாக வைக்க வேண்டும். ட்ரெயின் விட்டால் மியூட்டில் போட்டு விடுவோம் நல்ல ஸ்டேட்டஸ் வைத்தால் கூட பார்க்க முடியாது ?