இந்து மதத்தில் திருமணம்

திருமண வேலைகள், கம்மாளர் திருமணம், திருமண முறைகள், பெண் பார்க்கும் முறை, காலை அகற்றி எடுத்து வைக்கும் அடி, பெண் அழைப்பு

Mar 17, 2023 - 17:30
 0  61
இந்து மதத்தில் திருமணம்
source - malaimalar.com

தமிழின வரலாற்றில் மனித தோற்றம் முதலே தோன்றிய முதன்மை மதமாக இந்து மதமானது அடையாளப்படுத்தப் படுகின்றது. இவ் இந்து மதத்தின் தனித்தன்மையின் சிறப்பே இன்று மேற்கைத்தேய சமூகத்திலும் விருப்பத்துக்குரிய மதமாக இந்து மதமானது மாற்றமுற்று வருகின்றது. இந்து மதத்தின் தனிச் சிறப்பு அதன் வரலாற்று ரீதியான உண்மைத் தன்மைகளும் இன்று வரையிலும் அர்த்தமுள்ளதாக இடம் பெற்று வரும் சடங்குகள் கிரியைகள் முதலானவைகளாகும். இவ்வாறு சிறப்பு பெற்ற இந்து மத சடங்குகள் மற்றும் கிரியைகள் இன்றைய விஞ்ஞான அறிவியல் தன்மையினை தோற்ற காலம் தொட்டே சுமந்து பயணிக்கின்றமையே இன்றும் இவ் இந்து மத நிலைப்பிற்கும் பன்மை சமூகத்தவர்களது இணைவிற்கும் காரணமாகும். தோற்ற கால கட்டத்தில் சிவனை முழுமுதற் கடவுளாக கொண்ட சைவ மதமும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக கொண்ட வைணவ மதமும் சமச்சீர் பாதையில் பயணிக்க, சங்கமருவிய கால கட்டத்தில் பிற மதங்களின் தோற்றத்தால் மத மாற்றங்கள் இடம் பெற கூடும் என்ற நிலைபாட்டில் இவ் இரு மதங்களும் கைகோர்த்து அரிஹரனை முதற் கடவுளாக கொண்டு இந்து மதமாக வளர்ச்சியுற்றது. இவ்வாறு இன்று வரை சற்றும் குறையா தனிச் சிறப்பை கொண்டு பயணிக்கும் இந்து மதத்தின் கிரியைகள் மற்றும் சடங்கு முறைகளானது இரு பிரிவுகளின் கீழ் இடம் பெறுகின்றது. 

இவ்வாறு மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கை காலப்பகுதியில் இடம் பெறும் கிரியைகள் மற்றும் சடங்குகள் பூர்வ கிரியைகள் என்றும் இறப்பின் பின்னராக இடம் பெறும் கிரியைகள் அபரக் கிரியைகள் என்று இந்து மதத்தால் அடையாளப் படுத்தப்படுகின்றன. இவ்வாறு இந்து மதம் கூறும் பூர்வ கிரியைகளாக குழந்தை பிறந்த உடன் அக் குழந்தைக்கு முதன் முதலில் உணவு ஊட்டும் சடங்கான அன்னப்பிராசனம், கல்வியை அக் குழந்தை ஆரம்பிக்கும் போது எழுத ஆரம்பிக்கும் சடங்கான வித்தியாரம்பம், மற்றும் அக் குழந்தை கல்வி அறிவால் தேர்ந்து பின் தன் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது இடம் பெறும் சடங்கான திருமணம் முதலான சடங்குகள் இந்து மதத்தில் இன்று வரையிலும் தனிச் சிறப்பு கொள்கின்றன. மறு புறத்தில் அபர கிரியைகளாக இறந்த பின்னர் இடம் பெறுகின்ற ஈமக் கிரியை,சபிண்டிகரணம் ,அந்தியொட்டி,சிரார்த்தம் முதலானவை இன்று வரையிலும் இந்து மதத்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இடம் பெறுகின்ற இந்துமத ரீதியிலான கிரியைகள் மற்றும் சடங்குகள் அனைத்துமே அறிவியல் சார் தனி அடையாளத்தை கொண்டிருக்கின்றமையினாலேயே அர்த்தமுள்ள இந்து மதமாய் இன்று வரையிலும் உலகளாவிய ரீதியில் தனி இடம் கொண்டு வளம் வருகின்றது. 

இவ்வாறு பல தனித்துவ சிறப்புக்களை கொண்ட இந்து மத பூர்வ கிரியைகள் மற்றும் சடங்குகளுள் பிரதான இடம் வகிக்கின்ற திருமணம சடங்கு முறை பற்றிய மிக தெளிவான இந்துமத அர்த்தப்படுத்தல்கள் மற்றும் சம்பிரதாய முறைகள் முதலானவற்றை மிக தெளிவாக ஆராய்வதே இக் கட்டமைப்புரை. மானிட பிறப்பின் இலட்சியமான இல்லற வாழ்வியலில் இரு மணங்களை இணைத்து இன்பியல் வாழ்க்கையை துவக்கி வைக்கும் சடங்கு முறையாக இந்த திருமணச் சடங்கானது அடையாளப் படுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு குடும்ப கட்டமைப்பில் கல்வி நிலையை முடித்து தன் சொந்த உழைப்பால் வருமானம் ஈட்டக் கூடிய இளைஞர் யுவதிகளுக்கு வாழ்வின் அடுத்த கட்ட அடித் தளமாக இத் திருமணச் சடங்கானது இடம் பெறுகின்றது. இவ்வாறு திருமண வயது மற்றும் தகுதிகளை உடைய மணமகனுக்கு வரன் பார்த்தல் எனும் சம்பிரதாய முறை ஊடாக திருமண சடங்கானது இந்து குடும்ப கட்டமைப்பில் ஆரம்பமாகின்றது.

இவ்வாறு வரண் பார்த்தல் சம்பிரதாய முறைகளின் படி மணமகனது தகமைக்கும் குணாம்சத்துக்கும் ஏற்றாற் போலான மணமகளையும் மணமகளுக்கு ஏற்ற குணாம்சம் கொண்ட மணமகன் என ஏற்ற துணையாக தெரிவு செய்து இவ் இருவரினதும் குணாம்ச மற்றும் ஜாதக பொருத்தங்கள் ஏற்புடையதாக அமையப் பெற்றதும் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்கு சென்றும் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டுக்கு சென்றும் பூ,பழம்,வெற்றிலை இனிப்புக்கள் முதலான சுப மங்கல பொருட்களை பரிமாற்றிக் கொண்டு திருமணத்திற்கான நிச்சயமானது பெரியோர்,சுற்றத்தோரை முதன்மையாக கொண்டு இடம் பெற்று திருமண சடங்குக்கான திகதியானது தீர்மாணிக்கப்படும். இச் சம்பிரதாய முறைக்கு அடுத்ததாக மணமகன் வீட்டாரால் பொண்ணுருக்கல் எனப்படுகின்ற திருமண திருமாங்கல்யம் செய்யும் சுப நிகழ்வானது அரங்கேரும். இதனையொட்டி திருமணத்திற்கு சொந்தங்களையும் சுற்றத்தாரையும் அழைக்கும் திருமண சுப மூர்த்த அழைப்பிதழ்களை கொண்டுஇரு வீட்டாராலும் தன் சுற்றம் நட்பு சொந்தம் முதலானோருக்கு குடும்ப பெரியவர்களால் அழைப்புக்கள் விடுக்கப்படும் இதனையடுத்து திருமண சடங்குக்காக தீர்மாணிக்கப்பட்ட ஒரிரு தினங்களுக்கு முன்பாக திருமண பந்தத்தில் இணையவிருக்கும் மணமக்கள் இருவரது வீட்டிலும் கன்னிக்கால் (முகூர்த்தக்கால்) நாட்டும் சம்பிரதாயமானது அரங்கேறும். இக் கன்னிக்காலானது வீட்டின் ஈசான மூளையில் முள்முருங்கையை கொண்டு நாட்டப்பட்டு நவதாணியங்கள் இடப்படும், இதனையொட்டி வீட்டிற்கு பந்தலிட்டு  வாழைமரங்கள்,மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு மணமக்கள் வீடானது மங்கல கலை நிறையும் இது வரையான சுப சம்பிரதாய முறைகள் பூர்வாங்க சம்பிரதாயங்கள் என அடையாளப்படுத்தப்படும். 

இதனை தொடர்ந்து இடம் பெறுகின்ற சடங்குகளானது திருமணம் இடம் பெறும் தினத்தில் அரங்கேறுவதால் இச் சம்பிரதாயங்கள் திருமண சம்பிரதாயங்கள் என அடையாளப் படு்தப்படுகின்றன. அவ்வாறு திருமண தினத்தில் அதிகாலையில் பால்,சருகு முதலானவற்றை கொண்டு மணமக்களை நீராட்டி மணமகளை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருவதோடு திருமணம் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அடுத்த படியான சடங்குகள் இடம் பெறுகின்றன. அவ்வாறு திருமணத்திற்காக அழைக்கப்பட்ட சொந்தங்கள் சுற்றம், நட்பு முதலானோர் கூடி நிற்க அலங்கரிக்கப்பட்ட மேடையின் இடது புறம் மணமகனை அமரச் செய்து அர்ச்சகர் ஊடாக ஆரபம்பிக்கும் சுப காரியம் சிறப்பாக நடந்தேர சங்கற்பம் செய்யப்பட்டு காப்பு கட்டல் சடங்கானது இடம் பெறும். இதன் தொடர்ச்சியாக பெண்வீட்டாரால் கன்னிதானம் என்று அழைக்கப்படுகின்ற மணமகளை மணமகனிடம் ஒப்படைக்கும் சடங்கானது அறங்கேறும் இதனையடுத்து மணமகனால் மாங்கல்யம்,கூறைப் பட்டு,மாலை முதலான மங்கல பொருட்கள் மணமகளிடம் கையளிக்கப்பட்டு  மணமகளின் திருமண அலங்காரங்கள் ஆரம்பமாகும்.

இவ்வாறு மணக்கோளத்தில் வீற்றிருக்கின்ற மண மகளை வடக்கு நோக்கி அமரச் செய்து சிவன் சக்தியை நோக்குவதாக மணமகளுக்கு மணமகனால் திரு மாங்கல்யம் அணிவிக்கப்படும். பின் சிவசக்தி ரூபமாக இடது பக்கம் மணமகளை அமரச் செய்து மணமக்களுக்கு பால் பழம் புசிக்க கொடுக்கப்படும் இதனையொட்டி அக்கினியை சாட்சி கொண்டு கைபிடித்தல் எனும் சடங்கு இடம் பெற்று அக்கினியை மணமக்கள் வளம் வர மணமகள் பாதங்களை அம்மியில் வைத்து மணமகனால் மெட்டி அணிவிக்கப்பட்டு அம்மி மிதித்தல் சடங்கானது இடம் பெறும்.  இதற்கு அடுத்ததாக இல்லறம் சிறக்க அருந்ததி பார்த்தல் எனும் சடங்கு முறையானது இடம் பெற்று முடியும். இருதியாக தங்களுக்கு திருமணச் சடங்கை நிகழ்த்திய அர்ச்சகர் அல்லது சிவாச்சாரியாரால் மணமக்களுக்கான மந்திரங்களாலான வாழ்த்து இடம் பெறும் அதேவேளை மணமக்களால் தமக்கு திருமணத்தை நிகழ்த்தி வைத்த அரச்சகருக்கு மணமக்களால் வஸ்திரம் முதலான மங்கல பொருட்கள் வழங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் சடங்கோடு சுபமாக திருமண கிரியைகள் இனிதே நிறைவடையும் அதேவேளை திருமண நிகழ்வில் பங்கு கொண்ட சுற்றம்,நட்பு,உறவுகள் முதலானோரால் புதுமணத் தம்பதிகளை ஆல் போர் தழைத்து அருகு போல் வேரூன்றி வாழ இறைவனை வேண்டிய வாழ்த்துகள் பகிரப்படும். அத்தோடு திருமணத்தில் இணைந்து கொண்ட சுற்றத்துக்கும் உறவுகளுக்கும் விருந்துபசாரமானது அரங்கேறி  இரு குடும்பங்களுக்குள்ளும் மகிழ்ச்சி நிரம்ப திருமண சடங்கானது இனிதே இடம்பெறும்.

இவ்வாறு இந்து மதத்தால் மிக சிறப்பாகவும் கலாச்சார மகிமையோடும் இடம் பெறுகின்ற திருமண சடங்குகளை இந்து மத முன்னோர்கள் முற்காலம் தொட்டே வரையறைப் படுத்தி வைத்ததற்கான காரணம் தனித் தன்மைக்காக மட்டுமல்ல. அவற்றுக்கு அறிவியல் ரீதியில் பல ஆதாரபூர்வமான நன்மைகளையும் அடைந்து கொள்ள கூடியதாக அடையாளப்படுத்துகின்றது. அவ்வாறு வரன் பார்த்தலில் தொடங்கி திருமணம் வரையிலும் சமூகத்தவரது உறவு நிலையானது மேலும் மேலும் நிலையானதாக பலப்படும் அதே தருணம் திருமண நிகழ்வில் பயன்படுத்தப்படும் மங்கல பொருட்களானது தொற்று நோய் முதலான நோய் நிலைகளில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் நோய் நிலைமைகளை கட்டுப் படுத்துவதாகவும் அமைகின்றன. திருமண சடங்கு மூலம் அணிவிக்கப்படும் மங்கல நாண்,திரு மாங்கல்யம்,மெட்டி  முதலானவைகளும் விஞ்ஞான ரீதியாக பெண்களின் உடல் சார் இயல்புகளை கட்டுப்படுத்தும் அதே வேலை பெண்ணியத்தை காப்பதாகவும் அமையப் பெருகின்றமையானது அர்த்தமுள்ள இந்து மதத்தின் தனி சிறப்பாகும்.

இந்து மதத்தின் தனி தன்மை கொண்ட திருமண சடங்கில் இன்றைய நவீனத்தின் கலப்பால் குடும்ப கட்டமைப்பின் தன்மையால் பல ஆடம்பர செலவுகளும் மேலதிக கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றம் பெருகின்றன. அதே போல ஆரம்ப காலத்தில் ஆலயங்களில் இடம் பெற்று வந்த திருமணங்களானது இன்று ஆளணியினரது தொகைக்கு ஏற்றாற் போல கலாச்சார மண்டபங்களில் அரங்கேற்றம் பெருகின்றது. இதே போல மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சியூட்டும் விதமாக இசை நிகழ்ச்சிகளும் இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை ஒட்டியதாக அரங்கேறுகின்றன. இதே போல இன்றைய பெரும்பாலான இளம் சமூத்தினரது திருமணங்கள் காதல் திருமணங்களாக அரங்கேற்றமாக அமைவதால் இந்து மதத்தின் பூர்வாங்க சம்பிரதாயங்களான வரண் பார்த்தல், மணமக்களது திருமண பொருத்தம் பார்த்தல் முதலான சம்பிரதாயங்களை இன்றைய திருமணச் சடங்குகளில் காண முடியாதவைகளாக அமைகின்றன.

மேலும் இன்றைய நவீனத் தன்மையால் பொண்ணுருக்கல் சடங்கானது இடம்பெறாமல் விரும்பிய வடிவங்களிலான மாங்கல்யங்களை நகை விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள கூடிய தன்மையானது காணப்படுகின்றது. என்றாலும் கூட இவை தவிர்ந்த இக் கால இந்து மத திருமண நிகழ்வுகளானது முன்னோர்கள் உரைத்துச் சென்ற வழியிலேயே இடம் பெற்று வருகின்றன. இந்து மதத்தை விரும்புகின்ற சமூகத்தினரது மத ரீதியிலான சடங்கு முறைகளில் எல்லா குடும்பங்களிலும் கட்டாயமானதாக இடம் பெறும் சடங்கு முறைமையாக இத் திருமண சடங்கானது அங்கம் வகிக்கின்றது.

இன்றைய கால ஓட்டத்தில் மேற்கைத்தேய சமூகத்தினர் கூட தன் திருமணத்தை இந்து மத சடங்கு முறைகள் ஊடாக எற்பாடு செய்து கொள்வதும் இந்து மத சடங்கு முறையால் அமைந்த திருமணத்தை மிகவும் விரும்புகின்றமையானது. இன்றைய வலையத்தல பதிவுகளை துணைக் கொண்டு அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. இதற்கு தற்கால பெரும் உதாரணமாக அவுஸ்திரெலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் கிலயின் மெக்ஸ்வெல் அவர்களது திருமணத்தை அடையாளப்படுத்த முடிகின்றது.

இவ்வாறு அர்த்தமுள்ள இந்து மதத்தின் அறிவியல் கலந்த சடங்கு முறைகளில் முதன்மைச் சடங்காகிய திருமணச் சடங்கு பற்றி முழுமையானதும் தெளவானதுமான சம்பிரதாய ரீதியிலான தகவல்களை பெற்று கொண்ட நாமும் நமது குடும்ப கட்டமைப்பில் அரங்கேறும் திருமண நிகழ்வில் மேற் குறிப்பிட்ட சடங்கு சம்பிரதாய முறைமைகளை நடைமுறைப் படுத்தி இந்து மதம் கூறும் அறிவியல் சார் நன்மைகளை அடைந்து கொள்வோம். இந்து மத வழிப்படுத்தலில் இன்பியல் வாழ்க்கையதை சிறப்புற வாழ்ந்து முடிப்போம். மானிட பிறவி என்பதில் பெரும் எதிர்பார்ப்பே இல்லற வாழ்க்கை. இவ் வாழ்வியலை ரசித்து இன்பித்து வாழ்வோம். இந்துமதம் காட்டும் வழியதில் நடப்போம். அன்பு நிறைந்த மனித சமூகத்தில் அன்புடன் வாழ்ந்திடுவோம். 


அன்புடன் மலையக கவிஞன் :- மு.அனுஷன்

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow