மனித உரிமைகளும் சமகாலப் பின்னனியும்

ஆய்வு கட்டுரை

Mar 15, 2023 - 22:10
 0  44
மனித உரிமைகளும் சமகாலப் பின்னனியும்

ஞாயிற்றுத் தொகுதியில் உயிரினப் படைப்பே பிரபஞ்சத்தின் சிறப்பு. அதிலும் மானிட படைப்பென்பது மாண்டோரும் மறுக்க முடியா தனித்துவ சிறப்பு. இவ்வாறு புவியின் சிறப்புடையோனான மனிதனானவன் தன் தோற்ற காலம் முதல் உலக விரைவோட்ட கால மாற்றத்துக்கேற்ப தன்னில் உடல், உள ரீதியான பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு பயணித்துள்ளான் என்பது வரலாற்று சான்றுகளூடாக நாம் அறிந்த ஒன்றே.

இக்கால கட்டங்களில் மனிதனானவன் தனது தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தமது குடும்ப கட்டமைப்புக்குள், குழுக்களுக்குள், சமுதாயக் கட்டமைப்புக்குள் பல் கட்டங்களில் துலங்கல்களை ஏற்படுத்தியுள்ளான். அவ்வாறு தன் இருப்புக்காக, இருப்பிடத்துக்காக, சமூகத்துக்காக என ஒவ்வொறு சந்தர்ப்பங்களிலும் தனது குரல்களை தனிட்சயாகவும் கூட்டாகவும் வெளிப்படுத்தி வந்துள்ளான்.

கால மாற்றத்தின் பின்னனியில் மனிதனது சுயாதீனக் குரல்கள் கல்வி அறிவு மற்றும் அரசியல் வளர்ச்சி அதன் எஸ்திர தன்மையை முதற்கொண்டு ஆய்வுக்குற்படுத்தி மனிதனது துலங்கள்களுக்கான காரணம் அவனது உரிமைகள் மறுக்கப்படுவதாலும் அவ்வாறு மறுக்கப்படும் உரிமைகளை அடைந்துக் கொள்ளும் நோக்கிலேயுமே என்பதை கண்டறிந்து அதற்கான தீர்வாக மனித உரிமைகள் எனும் ஏற்பாடானது தோற்றுவிக்கப்பட்டது.

மனிதனானவன் தான் வாழும் புவியியல் பரப்பினுள் பிறருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அனுபவிக்கத்தக்க உரிமைகளை மனித உரிமைகள் என அடையாளப்படுத்துகின்றனர் கல்வியியல் வல்லுனர்கள். இவ்வாறு மனிதனானவன் புவியியற் பரப்பினுள் வாழ்வதற்கான உரிமை, கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான உரிமை, தனிட்சையாக செயற்படுவதற்கான உரிமை முதலான வாழ்வியல் சார் மற்றும் சமூக அரசியல் ஈடுபாடுகள் வரையிலும் இவ் உரிமைகளானது விரிவடைந்துள்ளது.

இவ்வாறு மனித உரிமைகளானது வகுக்கப்படுவதற்கான காரணம் மனிதனது தேவைகளும் விருப்பங்களும் கால மாற்றத்துக்கேற்ப மாற்றமுறும் அதே தருணத்தில் அவற்றை அடைந்து கொள்வதற்காக மனிதனது துலங்கள் நிலையும் சமூக பாதிப்புக்கான வீரியத்தன்மைக் கொண்டதாக அமைந்திருந்தமையும் அதன் செயற்பாட்டுத் தன்மையானது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும் தன்மைக் கொண்டதாக அமைந்தமையும் ஆகும்.

இதனை அறிந்தே அதற்கான முட்டுக்கட்டையாகவும் மாற்றுத் தீர்வாகவுமே இவ் மனித உரிமைகள் எனும் ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டது.

இதன் ஊடாக மனித சமூகமானது தமது உரிமைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளவும் இதனை பாதுகாக்கவும், அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு வழு சேர்க்கும் வகையில் உள்நாட்டு அரசியல் ஏற்பாடுகளும் மனித உரிமையினை பாதுகாப்பதற்கான சர்வதேச அரச சார் மற்றும் மனித சமூக நலன் கருதிய தொண்டு நிறுவனங்களும் தலையீடு செலுத்தியமை மற்றும் இன்று வரையிலும் செலுத்தி வருகின்றமையானது மனித உரிமைகளை அடைந்துக் கொள்வதில் சுதந்திரத் தன்மையை பேணிக்கொள்ள வாய்ப்பாக அமைந்து வருகின்றது. சர்வதேச மனித உரிமைப் பேரவை, ஐக்கிய நாடுகள் ஸ்தாயனம், உலக சமாதான பேரவை உள்ளடங்களான சர்வதேச சமூக நல அமைப்புக்கள் இவ்வாறு மனித உரிமை பாதுகாப்புக்கான தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச மட்டத்திலிருந்து கட்டமைப்பு ரீதியாக பல்வேறான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தாலும் கூட சர்வதேச மட்டத்திலும் மனித உரிமை மீறல்கள் என்பது மறுக்க முடியாதவைகளாகவே இன்று வரையிலும் அமைகின்றன. அவ்வாறு சர்வதேச தீவிரவாத அமைப்புக்கள் வல்லரசு நாடுகளின் தான்தோன்றித்தனம் முதலானவற்றின் இடையுறுகள் மனித உரிமைக்கு பாதக விளைவுகளையே தோற்றுவிப்பதாக அமைகின்றன. சமகால சர்வதேசத்தில் மனித உரிமை மீறலுக்கான ஒத்திசைவை ரஷ்யா மற்றும் உக்ரேன் உடனான போர் ஊடாக அவதானிக்க கூடியதாக உள்ளது. இவ்வாறு காலத்துக்கு காலம் மனித உரிமை மீறலுக்கான சான்றுகளை சர்வதேச மட்டங்களிலும் தொகுத்தறியக் கூடியதாகவே உள்ளது.

உள்நாட்டை பொருத்தமட்டில் ஆரம்ப கட்டத்தில் மனித உரிமை என்பது கருத்திற் கொள்ளப்படா ஒன்றாகவே அமைந்திருந்தமையை சான்றுகளூடாக அறிய முடிகின்றது. குறிப்பாக இலங்கை உள்ளிட்ட மன்னராட்சி நிலவிய நாடுகளில் அரசும் அரசாங்கமும் மன்னனாகவே செயற்படும் ஆட்சி கட்டமைப்பு நிலவியத் தருணத்தில் தம் ஆட்சிப் பரப்பிற்கு உட்பட்ட மக்களது உரிமையானது மன்னனின் கையிருப்பிலேயே இருந்தது. அது சில சமயங்களில் கேள்விக்குறியாகியமையையும் அறிய முடிகின்றது குறிப்பாக இலங்கையில் முதலாம். குடியரசு அரசியலமைப்பின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பானது மனித உரிமைகள் ஏற்பாடுகளுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டே அமையப்பெற்றிருந்தது. அவ்வாறு மனிதனானவன் பிறருக்கு பாதகமேற்படா வகையில் கருத்து தெரிவிக்கும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை, அரசியல் சார் முடிவுகளை எடுக்க வாக்குரிமையை பயன்படுத்தும் உரிமை முதலான உரிமைகள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாப்பு ரீதியாகவே இன்றுவரையிலும் நடைமுறையிலுள்ள இரண்டாம் குடியரசு அரசியலமைப்பானது மனித உரிமை எனும் ஏற்பாட்டை யாப்பு ரீதியாக கொண்டிருந்தாலும் கூட அவ்வப்போது ஆட்சி பீடமேறிய ஆட்சியாளர்கள் தமக்கு இசைவானதாக திருத்தங்களை மேற்கொண்டு மனித உரிமைகளுக்கு பாதக தன்மையை ஏற்படுத்துவதாக அமைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதே. சமகாலத்தில் கூட 20ம் திருத்தத்தின் பின்னனியும் மனித உரிமைக்கு பாதகம் விளைவிப்பதாகவே அமைந்துள்ளமையும் அதற்கு மக்கள் எதிர்ப்பு  வழுப்பெற்றுள்ளமையும் அறியக் கூடியதாகவே உள்ளது.

நாடு எனும் போது நாட்டு மக்களினுடைய மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக தனியானதோர் உரிமை பாதுகாப்பு சார் கட்டமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது அந்தவகையில் ஆணைக்குழுக்கள் நீதிமன்ற கட்டமைப்புக்கள் முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் என்ற வகையில் கட்டமைப்பானது அமையப்பெற்றுள்ளது. அவ்வாறே இலங்கையை பொருத்தவரையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கென மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றங்கள் பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் கட்டமைப்பு என்பன மனித உரிமையை மேற்கொள்கின்றன. பாதுகாக்கும் பணியை

நாடளாவிய ரீதியில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான தனியான சுயாதீனக் கட்டமைப்புக்கள் காணப்படினும் அவ்வப்போது அரசியல் தலைவர்களாலும் அடிப்படை வாத குழுக்களாலும் தீவிரவாத அமைப்புக்களாலும் மனித உரிமைகளுக்கு இடையுறுகள் ஏற்படுகின்றமையானது இடம்பெற்ற வண்ணமே உள்ளது இலங்கையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது வடகிழக்கு மக்கள் தமது பிராந்தியத்துக்கான தனியானதோர் ஆட்சி கட்டமைப்பை கோறி கிளர்ந்தெழுந்த போது அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவக்கட்டமைப்பை அரசானது கையாண்டிருந்தமையானது மக்களின் மனித உரிமையில் கேள்விக்குறியாய் அமைத்த அதே வேலை பிற்காலத்தில் உள்நாட்டு சிவில் யுத்தம் தோற்றம் பெறவும் தூண்டுகோளாய் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகாவம்சம், தீபவம்சம் முதலான அரச வம்ச சான்று நூல்களை துணைக்கொண்டு அது சார் தரவுகளை அறியத்தக்கதாக அமைகின்றது. தொடர்ச்சியாக அன்னியராட்சிக்குள் உட்படுத்தப்பட்ட கீழைத்தேய நாடுகளிலும் மனித உரிமைகளானது மறுக்கப்பட்ட ஓடுக்கப்பட்ட அடக்கு முறைகளை கொண்ட ஆட்சிக்கட்டமைப்பு நிலவியிருந்தமையையும் அறியத்தக்கதாகவே உள்ளது. இலங்கையில் 1505 தொடங்கி 1833 வரை மனித சமூகத்தினது அடிப்படை உரிமைகள் கூட கீழைத்தேய நாடுகளில் மறுப்புக்குள்ளான ஒடுக்குமுறையிலான அன்னியராட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்பது கவலைக்குறியதே ஆகும்.

அன்னியர் ஆட்சியால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களது தம் உரிமை சார்ந்த துலங்கல்களின் விளைவாகவே படிப்படியாக கீழைத்தேய நாடுகளில் அரசியல் பின்னனியில் அரசியல் யாப்பு ரீதியான மனித உரிமைகளும் மக்களிடத்து கையளிக்கப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கது. இலங்கையை பொருத்தமட்டில் 1833 ம் ஆண்டு கோல்புறூக் அரசியலமைப்பில் தொடங்கி படிப்படியாக 1910 ம் ஆண்டில் குறூ மக்கலம், 1920-21ம் ஆண்டுப்பகுதியில் மனிங் 1924ம் ஆண்டு மனிங் டெவன்சியர், 1931களில் டொனமூர் அரசியலமைப்பு, 1947ம் ஆண்டுகளில் சோல்பரி அரசியல் யாப்புக்களூடாக மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மனித உரிமைகளாக படிப்படியாக மக்கனிடத்து கையளிக்கப்பட்டு வந்துள்ளமையானது யாப்புக்களை ஆதாரமாகக் கொண்டு அறிய முடிகின்றது.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதிகளில் தம்மை பிறதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஊடாக அரசியல் அமைப்புக்களில் மனித உரிமை எனும் ஏற்பாடானது ஓர் பிரதான அங்கமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது அவ்வாறே இலங்கையில் சுதந்திரத்தின் பின் உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு மற்றும் இரண்டாம் குடியயரசு அரசியலமைப்பு என்பவற்றில் மனித உரிமைகள் எனும் ஏற்பாடு சரத்துக்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வாயிலாக

முதலாம் குடியரசு அரசியலமைப்பினூடாக 29ம் சரத்தினூடாக மனித உரிமைகள் எனும் ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தது எனினும் மிக சூசகமான இலங்கை அரசியலமைப்பு உருவாக்குனர்கள் 29ம் சரத்தை வழுவிழக்கச் செய்யும் வகையில் 30ம் சரத்தை ஏற்படுத்தியிருந்தமையானது யாப்பானது தோல்வியடைய காரணமாக அமைந்தது. இதன் பின்னனியே இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு தோற்றத்துக்கான காரணமாக அமைந்ததென்றாலும் பொய்யாகாது.

இங்கையை பொறுத்தமட்டில் இலைமறைக்காயாய் இன்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே. உள்ளது. ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான மற்றும் வழுக்கட்டாயமான அரசியல் தீர்மானங்கள் என்பன மனித உரிமைகளுக்கு இடையுறு விளைவிக்கின்றன முடிவுகள் என்றால் அது பொய்யாகாது.சமகாலத்திலும் இராஜபக்ஷக்கள் அரசாங்கம் தமது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மக்கள் எதிர்ப்புக்கு எதிராக ஊரடங்கு உத்தரவுகளை பிரப்பித்தலி, மக்கள் கருத்துக்களுக்கு இடமனிக்காமை அரசியலமைப்பில் திருத்தங்களை தமக்கு சார்பாக அமைத்துக் கொள்ளல் (20ம் திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கான பாராளுமன்ற வாய்யை தன் குடும்பத்துக்காக மாத்திரம் பயன்படுத்திக் கொண்டமை) முதலானவை சான்றுகளாக குறிப்பிடத்தக்கவைகளாகும்.

இவ்வாறான பின்னனி தொடருமானால் இலங்கையிலும் இலங்கையை போன்ற நாடுகளிலும் மனித உரிமை என்பது பெரும் கேள்வியாகவே அமைந்திடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறு மனிதனது உரிமையை அடைந்துக் கொள்வதில் சிக்கல் நிலைத் தொடரும் போது மக்கள் தெருக்களில் இறங்கி தம் உரிமைக்காக போராடும் நிலையே தோற்றம் பெறுகின்றது.சமகாலத்தில் இலங்கை மக்களின் நிலை கூட இதுவாகவே அமைகின்றது. உரிமைகளை மறுத்த அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பியக்கங்களும் சுயாதீன மக்கள் போராட்டங்களும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இதன் உச்ச நிலை சமூக போராளிகளையும் தீவிரவாதக் குழுக்களையுமே தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு கேள்விக்குறியாகியுள்ள மனித உரிமையை மீட்டெடுக்க போராட்டத்தில் களம் கண்டுள்ள மக்கள் போராட்டத்தில் பெறும் வெற்றி மற்றும் ஆட்சியாளர்களின் போராட்டத்துக்கு ஒத்திசைவான செவிசாய்ப்பு என்பவற்றின் மூலமாகவே தம் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மீட்டெடுக்கப்படும். உரிமைகள் மீண்டும் இவ்வாறு மனித உரிமைகளுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க தமது வாக்குபலத்தை சரியான மற்றும் சிறந்த முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக மட்டுமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது சட்டவியளாலர்களின் கருத்தாகும்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக தனிமனிதனானவன் தனது வாக்குரிமையை சரியான ஊடகமாக பயன்படுத்திக்கொள்ளும் அதே வேலை மனித குழுக்களானது தமது பங்களிப்பை சரியானதாகவும் சமூக பின்னனி சார்ந்ததாகவும் அமைத்தல் வேண்டும். அதேப்போல அரச சார்பற்ற நிறுவனங்களதும் இளைஞர் குழுக்களதும் அதேபோல சமூக ஊடகங்களினதும் மனித உரிமை சார் கயாதீனத்தன்மையும் ஸ்திரத்தன்மையும் மேலானதாக அமைய வேண்டும் என்பதே எனது கருத்து.

பிரதேச அலகொன்றில் சுதந்திரமாக மனித உரிமையை அனுபவிக்க முடியுமாயின் அதனை அடிப்படையாகக் கொண்டு மனித சமூகத்தின் விருத்தி மற்றும் சுதந்திரத் தன்மை அதன் மூலமான தொழிற் துறை விருத்தி பொருளாதார வருவாய்கள் முதலான சாதகத் தன்மையினை அனுபவிக்கத் தக்கதாக அமையும். மேலும் இன, மத, மொழி வேறுபாட்டை கடந்து மனித சமூக ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்தையும் பேணிக் கொள்ள கூடியதாக அமையும்.

மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு தொகுத்து நோக்குகையில் மனித உரிமையின் தோற்றக் காரணம் அதன் பின்னனியிலான மனித சமூகத்தின் தனிமனித சமூக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான விருத்தி மற்றும் ஸ்திரத்தமை முதலானவற்றை தெளிவுற அறிய முடிகின்றது. இதனடிப்படையில் மனித உரிமை மற்றும் மனித உரிமை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் அவசியத் தன்மை புவியியல் அலகொன்றினுள் இன்றியமையாததாகவும் அத்தியாவசியமானதுமாக அமைந்துள்ளது. எனும் முடிவை முடிகின்றது. அடைய

மனிதம் காப்போம்: மனித உரிமைகளை வென்றெடுப்போம்: சுதந்திரத்தோடும் கயாதீனமாகவும் செயற்படுவோம்: இலக்கை எட்டிப்பிடிப்போம்.

எமது உரிமை : எமக்கான உரிமை : எம் மனித சமூகத்துக்கான உரிமை

நன்றி :- மலையக கவிஞன்  மு.அனுஷன்

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow