எனது சுற்றுலா அனுபவங்கள் - ஹிலாக்கோட்டே , மீயண்எல்ல இலங்கையின் ஆச்சர்ய அனுபவ பயணம்
நான் சென்ற பயணங்களில் என்னை பெரிதும் ஈர்த்த "hialakotte" (ஹிலாக்கோட்டே) மீயண்எல்ல(meeyan ella) நீர்வீழ்ச்சி பயணத்தைப் பற்றிய இந்தப் பதிவு அமைகிறது. - நிரஞ்சனிதினேஷ்

இவ்வுலகில் அழகு கொட்டி கிடக்கிறது அவற்றைக் காண கண்கள் மாதவம் செய்தல் வேண்டும். காணும் காட்சிகளே கற்பனை துணை கொண்டு கதைகளாய் கவிதைகளாய் சில சந்தர்ப்பங்களில் தூரிகைகளின் துணை கொண்டு ஓவியங்களாகவும் மாறுகின்றது. பல இலக்கியங்கள் உருவாக காரணமாக இருப்பதும். இவ் இயற்கை காட்சிகளே. இக் காட்சி தரிசிக்க வாய்பை தருவது பயணங்களே. அதிலும் ரயில் பயணங்கள் இன்னும் மிகை படுத்திவிடும். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து பல பயணங்கள் செல்வது வழமை. இப்பயணங்கள் அனுபவங்களையும் புது விடயங்களையும் எமக்கு தர தவறியதில்லை
இதோ நான் சென்ற பயணங்களில் என்னை பெரிதும் ஈர்த்த "ihalakotte" (ஹிகலக்கோட்டை)
மீயண்எல்ல(meeyan ella) நீர்வீழ்ச்சி பயணத்தைப் பற்றிய இந்தப் பதிவு அமைகிறது.
யன்னலோரம்இ ஆம் அதுவும் புகையிரதத்தில் ஜன்னலோரம். நாம் காணும் காட்சிகளை எண்ணத்தில் பதிய வைப்பது பயணங்களில் ஜன்னலோரம் தானே. கம்பளையிலிருந்து கொழும்பு செல்லும் காலைரயிலில் நானும் எனது நண்பர்களும் செல்வதாக
தீர்மானித்தோம். ரயில் நிலைய கவுண்டரில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கவும்இ ரயில் மேடையை வந்தடையவும் நேரம் சரியாக இருந்து.
சனநெரிசலில் நுழைந்து ஒரு வழியாக அமர இடம் பிடித்து விட்டோம்.
நான் நினைத்த படியே ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து விட்டேன். பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்த பெருமிதம் எனக்குள்.ஜன்னல் ஓரத்தில் நான் கம்பளையிலிருந்து கொழும்பிற்கு ரயிலில் பயணிப்பது இது முதல் முறை அல்ல ஆனாலும் இதற்கு முன் காணாத பல காட்சிகளும் பல அனுபவங்களும் என் கண் கேமராவில் பதிந்து சென்றது.ரயில் தனது பயணத்தை தொடர்ந்து காலை நேரத்துக்காற்று எங்களை தீண்ட சுமார் ஏழு மணி அளவில் நாம் பேராதனைசந்தியைசென்றடைந்தோம். ஆங்கிலேய ஆட்சியில் 1867 ஆண்டு கட்டப்பட்ட பழமையான ரயில் நிலையம் இது. அதற்கு சாட்சி ஆக இன்றைய ரயில் மேடைக்கு எதிர்ப்புறத்தில் இன்னும் இவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத பழைய புகையிரத நிலையம் சாட்சியாக இப்பொழுது வரை.கொழும்பு செல்ல பலர் தங்களது பொதிகளுடன் கண்டியில் இருந்து ரயிலுக்காக காத்திருக்கிறார்கள். இடையில் வடைஇ லொவிஇமாங்காய் கூடையில் சுமந்து கூவி விற்கும் வியாபாரிகள். பதினைந்து நிமிட காத்திருப்பின் பின் ரயில் நிலையத்தை வந்தடைந்து. நாமும் போட்டி போட்டு கொண்டு ஏறினோம்.கொழும்புக்கு செல்லும் ரயிலில் ஏறிய நாம் மலைப்பிரதேசத்தில் இருந்து பாறைகளும் ரப்பர் மரங்களும் செறிந்த பகுதிகளைக் கடந்து தண்டவாளங்களின் வழியே ரயில் அதற்கே உரிய ரிதத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கைத் திருநாட்டில் அதுவும் மலைநாட்டில் பசுமைக்கு என்றும் பஞ்சம் இருந்தது இல்லை. ஜன்னலுக்கு வெளியே சிந்தனைகளை தந்தது போலவே பெட்டி உள்ளே பல பிராயணிகள் பல நோக்கங்களோடும்இசிந்தனைகளோடும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள பயணிகளை பார்த்தாலே பல கதைகள்இகவிதைகள் எழுதிவிடலாம் போல் இருந்தது.பல காரணங்களுக்காகஇ பயணிக்க சிறந்த போக்குவாரத்து ஊடகமாக ரயிலை குறிப்பிடுவது மிகச்சரி என்று தோன்றியது.ரயில் பயணங்கள் சிறப்பாக அமைவதற்க்கு பயண செலவை குறிப்பிடலாம் பஸ்இ கார்இவேன் போன்ற வாகனங்களோடு ஒப்பிடும் போது ரயில் செலவு மிக குறைவுஇ ரயிலின் தடக் தடக் ஓசையும்இ அலறல் ஹாரன் சத்தமும்இ ரயில் நிலையங்களுக்கே உரிய
இஸ்சோவடை வடை, ரயிலில் உள்ள இரும்பு வடை என ரயில்கான தனித்துவங்கள் பல . இத் தனித்துவங்களை தவிர பல விதமான மக்கள் ஒரே பெட்டியில் அன்பானவர்கள்இ கோபக்காரர்கள்இ காதலர்கள்இ குடும்ப சண்டைக்காரர்கள்இ எதையும் கண்டுகொள்ளாமல் தூங்குபவர்கள்.
பொருட்களை விற்பவர்கள், பாட்டுப் பாடி பிச்சை எடுப்பவர்கள், சுத்தம் செய்து பிச்சை கேட்பவர்கள் என்று பலவிதமான மக்கள்.இவற்றை கவனித்தாவாறே ரயில் பித்தளை பண்டங்களுக்கு பிரசித்தி பெற்ற பிலிமதலாவ ரயில் நிலையைத்தை அடைந்து அடுத்து கடுகண்னாவ ஆம் நாம் செல்ல வேண்டிய ஹிகலக்கோட்டை ரயில்நிலையம் மிக அருகில் நெருங்கி விட்டோம் என்ற உற்றசாகத்தில் நானும் நண்பிகளும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின் ஹிகலக்கோட்டைநிலையத்தில் நாம் காத்திருந்தோம்.
மனித நடமாட்டத்தை காட்டிலும் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.இஞ்சி தின்ன குரங்கு போல”, “குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல”, “குரங்குப் பிடி” என்ற பழமொழிகள் எல்லாம் மனக் கண் முன்னால் ஓவியமாகக் வந்து நின்றது.
விலங்குகளின் உலகமே சுவாரசியமானது தான். அதிலும் குரங்குகளை பற்றி கேட்கவே வேண்டாம். இயற்கையிலேயே சேட்டையும்இ குசும்பும் நிறைந்த குரங்குகளை பார்த்தாலே நமக்கு ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எந்தவொரு குரங்கும் சோம்பலாக இருந்து நாம் பார்க்க முடியாது. எப்போதும் சுறுசுறுப்பாகவும்இ சக குரங்குகளை சீண்டியபடி சேட்டைகளையும் செய்து கொண்டிருப்பதும் தான் குரங்குகளின் சிறப்பம்சமே. இவ்ளவு சிறப்பு நிறைந்த வானரங்களுடன் ஒரு புகைபடம் எடுக்கலாம் என தோன்றியது ஆனால் ஒருபுறம் சேட்டையும்இ குறும்புமாக இருக்கும் குரங்குகளுக்கு மற்றொரு பக்கமும் உண்டு. அதுதான் அவற்றின் மூர்க்க குணம். குரங்குகளை வம்புக்கு இழுத்தால் மட்டுமே அதன் மூர்க்க குணம் வெளிப்படும். எதற்கு வீண் வம்பு நாம் வந்த வேலையை கவனிப்போம் என்று ரயில் நிலையத்தில் இருந்து தண்டவாளத்தில் இறங்கினோம்.
தண்டவாளத்தின் வழியே ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் நாம் தரிசிக்க வந்த "மீயன் எல்ல " இந்த நீர்வீழ்ச்சி அலகல்ல உள்ளூர் பயணிகளிடையே பிரபலமான மலையேற்ற இடமாகும்இ கண்டி-கொழும்பு ரயில் பயணத்தின் போது இந்த மலையை காணலாம். மிக உயரமான இடமான அலகல்ல கடல் மட்டத்திலிருந்து 1140 மீ உயரத்தில் உள்ளது.இந்த மலைத்தொடர் 1505 முதல் 1948 வரை கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு அன்னியபடையெடுப்புகளின் போது கண்டிய இராச்சியத்தின் பாதுகாப்பு அரண் ஆக இருந்தாதாம் .
இவ் அழகிய மலையில் உருவாகி பாறையின் வழியே வலகொட மற்றும் தலகொட கிராமங்களில் பாய்கிறது.
நீர்வீழ்ச்சி என்றதுமே பாலருவியாய் பாயும் நீர்இ அருகில் செல்லமுடியாத வேகத்தில் நீரின் அழுத்தம்இ அருகில் உள்ளவர் கதைப்பதை கூட கேட்கமுடியாதளவு நீரின் இரைச்சல் என்று காட்சிகள் வந்து போகலாம். ஆனால் அதற்றகெல்லாம் மாறுபட்டது இந்த நீர்வீழ்ச்சி.சுமார் 50மீட்டர் இடைவெளியில் இரு பிரிவுகளாக விழுகிறது இவ் நீர்வீழ்ச்சிமழைகாலங்களில்மட்டுமேகண்களுக்கும்இஎடுக்கும்புகைப்படங்களுக்கும்சௌந்தர்யத்தைகாட்டுகிறதுமற்றயகாலங்களில் ஈரப்பதன் கொண்ட ஒரு ரயில்பாதை குகை அல்லது பாறை என்று மட்டுமே கூற முடிகிறது.
ஒரு காலத்தில் வேகமான நீர்வீழ்ச்சியாக பாய்ந்து கொண்டிருந்த இந்த மீயன்எல்ல இன்று இரு அருவிகளாக மாற்றமடைந்ததற்கு பின்னணியில் சுவார்ஷயமான கதைகளும் உள்ளன. அதிலும் வரலாற்று சம்பவம் ஒன்றினை குறிப்பிட வேண்டும்
இலங்கையின் கடைசி இராச்சியம் பிரித்தானியாவின் கைகளில் சிக்கிய பின்னர்இ மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும்பெறுமதியான தேயிலைஇ ரபர்இ கோக்கோஇ ஏலம்இ கருவாஇகோப்பி பொருட்கள ஏற்றுமதி செய்வதற்காக கொழும்பிலிருந்து கண்டி வரையிலான புகையிரதப் பாதையை உருவாக்கஆரம்பித்தனர். பொல்கஹவெல மற்றும் கண்டி இடையேயான ரயில் பாதையின் பகுதி 1800 களின் நடுப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது ஆனால் அலகல்லவில் மீயன் எல்லவின் பெரிய நீர்வீழ்ச்சியின் குறுக்கே ரயில் பாதையை அமைப்பது சவாலான கைய்ங்கரியமாக இருந்ததது.
மீயன் எல்லவைக் கடக்கஇ ஆங்கிலேயர்கள் அலகல்ல பாறையின் குறுக்கே ஒரு சுரங்கப்பாதையைக் கட்ட வேண்டியிருந்தது. இது மிகப் பெரிய பணி என்பதை உணர்ந்து மாற்று வழிகளைத் தேடினார்கள். ஆங்கிலேயர்களின் இறுதி முடிவுஇ நீர்வீழ்ச்சியை மேல்நோக்கித் தடுப்பது மற்றும் பாறையில் இரண்டு ஆழமான பள்ளங்களை வெட்டுவதுஇ இதனால் தண்ணீர் இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகளாக விழும்.
இந்தப் பணி நிறைவடைந்த நிலையில்இ 1867 ஆம் ஆண்டு கண்டி வரை கட்டி முடிக்கப்பட்ட ரயில் பாதையை அமைப்பதற்காக அலகல்ல பாறையில் 1400 அடி நீளமும் 18 அடி ஆழமும் கொண்ட கிடைவெட்டு ஒன்றை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். நீரோடையின் வேகத்தால் ரயில் பாதை பலமுறை அடித்து செல்லப்பட்டதாம்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்இ இந்த தீர்வு மழைக்காலத்தில் ஒரு மரணப் பொறி என்பதை உணர்ந்துஇ முதலில் திட்டமிட்டபடி சுரங்கப்பாதையை உருவாக்க முடிவு செய்தது ஆங்கிலேய அரசு . அலகல்ல பாறையின் குறுக்கே 1307 அடி (400 மீட்டர்) நீளமான சுரங்கப்பாதை 1905-1906 இல் கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதை சுரங்கப்பாதை 5 மற்றும் 6 க்கு இடையில் இருப்பதால்இ இது சுரங்கப்பாதை 5யு என்று பெயரிடப்பட்டது. இது இலங்கையின் இரண்டாவது நீளமான ரயில்வே சுரங்கப்பாதையாகும்இமுதலாவது நீளமான சுரங்க பாதையாக
சிங்கமலைசுரங்கப்பாதை குறிப்பிடப்படுகிறது சிங்கமலை சுரங்கப்பாதை என்பது ஹட்டனில் அமைந்துள்ள ஒரு ரயில் சுரங்கப்பாதையாகும். இது ஹட்டனில் இருந்து கொட்டகலை வரை நீண்டு செல்லும் நாட்டிலேயே மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையாகும்.
புவியல்ரீதியாக சவாலாக இருந்த இந்த மீயன்எல்ல இருந்த காரண னால் . இவ் நேரவீழ்ச்சியின் குறுக்காகவே ரயில் பாதை அமைத்தாக வேண்டிய கட்டாயம். வேறு மாற்றுவழிகள் தேடியும்பயன்இல்லாதநிலையில்
விசாலமாகபாய்ந்துகொண்டிருந்தநீர்வீழ்ச்சியைமேல்நோக்கிதடுத்தும் இ
மேலும்பாறையில் இரண்டு ஆழமான பள்ளங்களை வெட்டுவது என தீர்மானித்தன் பயனாகவே பாரிய இவ் நீர்வீழ்ச்சி சிறிய இரு அருவி அமைப்பில் எம் முன்னால்.
ஹிலகோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 150மீட்டர் தூரத்தில் உயரவளர்ந்த மான புற்களுக்கு மத்தியில் அழகிய அருவியை இல்லை இல்லை நீர்வீழ்ச்சியை கண்டோம் மகிழ்ந்தந்தோம்.
அருவிக்கு எதிர்புறத்தில் சுமார் 75மீட்டர்தொலைவில்இடதுசுவரில் ஒருபெரியதுளை அமைந்துள்ளது. இங்கு அழகான புகைப்படங்கள் எடுக்கலாம் அத்துளை வழியாக தொலபேசிடார்ச்உதவியுடன்
முன்னோக்கிசெல்ல செல்லமீயன்எல்லயின்ஆரம்பத்திற்கேவந்துவிட்டோம்நீர்த்துளிகளைநம்கரங்களிலேயேதொட்டுவிட முடியுமாக இருந்து.தரையில் கொட்டும் அருவி தலையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூட்டும் அனுபவம் தரும்.
"இதை நீர்வீழ்ச்சி என்பது
பொருட்குற்றமல்லவா?
நீருக்கு இது வீழ்ச்சி அல்ல‐ எழுச்சி!"
ஏதோ சினிமா பாடலில் கேட்ட ஞாபகம். காலையில் தொடங்கிய எமது பயணம் சுமார் 12மணி ஆகும் போது நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. அருகில் இருந்த கடையில் பொல்ரொட்டியும்இசம்பலும் களைத்து போயிருந்த நமக்கு புது உத்வேகத்தை தந்தத.எமது பயணம் நிறைவடைந்தநிலையில் மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
பாய்ந்தோடியநீர்வீழ்ச்சியை ஆங்கிலேயர்கள் நீரோடயாய் மாற்றிவிட்டர்களே என்று எண்ணி வியப்பு அடைவதா? இல்லைசுதந்திரமாக பாய்ந்த நீர்வீழ்ச்சி இன்று அதிகாரபலத்தால் நீரோடையாகஸ்தம்பித்து விட்டதே என எண்ணிஆதங்கபடுவதா? என்ற தெளிவான குழப்பதோடு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்க எம்மை போலவே புகையிரத நிலையத்தில் இருந்த அனைவரும் தயாராகினோம் புகைப்படங்களை மட்டும் நினைவுளாக எடுத்தது கொண்டு கொழும்பில் இருந்து பதுல்லை நோக்கி சென்றது உடரட்ட மெனிக்கே ரயிலில் ஏறினோம் வீடுகளுக்கு.
நன்றி :- திருமதி. நிரஞ்சனிதினேஷ்