செவ்வானம் நானே நீ அவந்திகையே..!-4

காதல் தொடர்கதை

செவ்வானம் நானே நீ அவந்திகையே..!-4

அவந்திகாவின் நிலை உயிர் உருகும் வலியை உண்டு பண்ணியது வேந்தனுக்கு.இதோ ஹாஸ்பிடலுக்கு தூக்கி வந்து விட்டான்.உயர் ரத்த அழுத்தத்தால் மூக்கில் இரத்தம் வந்தது என டாக்டர்கள் தெரிவித்தனர். முழுமையான சிகிச்சை முடியும் முன்னமே மயக்கம் தெளிந்து எழுந்தவள் வைத்தியர் முதற்கொண்டு தாதியர் வரை யாரையும் அருகில் விட மாடேன் என்கிறாள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லா தூக்கி வீசுகிறாள்.

வேந்தன் உள்ளே சென்றாலும் சரமாரியாக அவனை தாக்குகிறாள் மொத்ததில் ஒரு மனநோயாளியை போல நடந்து கொள்பவளை யாராலும் கட்டுபடுத்தவே முடியவில்லை.

வேந்தா அந்த புள்ளைக்கு இப்போ எப்படி இருக்குபா..கோபி மட்டும் தான் வந்திருந்தார் அனைவரது கண்ணிலும் மண்ணை தூவி விட்டு.

ட்ரீட்மெண்ட் பண்ண விட மாட்டேங்குறாபா யாராலையும் அவள கன்ட்ரோல் பண்ண முடியல..ஒரு வித தவிப்புடன் வேந்தன் சொல்ல அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தார் கோபி.

ராத்திரி சாப்பிட்டு நல்லா தானே தூங்க போனா அதுக்குள்ள என்ன ஆச்சு..அவள தான் அவள காய படுத்திக்கிட்டாளா இல்ல நீ அவள அடிச்சு கொடுமை பண்ணியா என்றார் கோபி.

அப்பா நா ஏன் அவள அடிக்க போறேன் நா ஒன்னும் அந்த அளவுக்கு கொடுமை காரன் கிடையாது வெளியே தூங்க சொல்லி அவள பால்கனியில விட்டேன் காலைல எழும்பி பார்த்தா இப்படி இருக்கா என்றான் வேந்தன் ஆழ்ந்த குரலில்.

அதானே பார்த்தேன் உங்கம்மா ரெத்தம் தானே உன் உடம்புலயும் ஓடுது அந்த பணக்கார திமிர் இல்லாம போகுமா என்ன..? ராத்திரினு கூட பார்க்காம ஒரு பொண்ண வெளியே தள்ளியிருக்க அவளுக்கு எதாவது ஒன்னு ஆனா அவங்க வீட்டுக்கு நீ பதில் சொல்லுவியா...ஓரமா ஒதுங்கி நில்லு இனி உன் நிழல் கூட அந்த பொண்ணு மேல பட கூடாது..அவள அவங்க அப்பா கிட்டயே ஒப்படைக்கிறேன்..என்ற கோபி முதலில் ஜனனிக்கு அழைத்து தகவலை சொல்லி ராமிற்கும் தெரிய படுத்துமாறு கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்.

அவசர அவசரமாக ஜனனியும் பிரபுவும் வந்து சேர்ந்தார்கள்..அவள் வருவதற்கு முன்னமே ராமும் மித்ரனும் வந்தும் கூட உள்ளே செல்ல வில்லை அவர்கள்..மித்ரனின் பார்வை வேந்தனை கொன்று கூறு போட வேந்தனோ அவன் குற்றம் சாட்டும் பார்வையை எதிர் கொள்ள திராணியற்று தலையை தாழ்த்தி கொண்டான்.

சித்தப்பா ..அதி எங்கே வேகமாய் கேட்ட படி ஜனனி வர..உள்ளே தான்டா இருக்கா நீ கொஞ்சம் போய் பாரேன் என்றார் ராம் சோர்ந்த குரலில்.

ஜனனி மட்டுமே உள்ளே செல்ல அவந்திகாவோ முட்டியில் முகத்தை புதைத்து கட்டிலில் அமர்ந்திருந்தாள்..

அதி...ஜனனி அழைக்க மெதுவாக தலைய தூக்கி பார்த்த அவந்திகாவின் கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவந்திருக்க ஜனனியே அவள் அருகில் செல்ல சற்று தயங்கினாள்.

ஜானு அக்காஆஆ...அவளை பார்த்ததுமே அழ ஆரம்பித்து விட்டாள் அவந்திகா..தங்கையானவள் அழுதால் அக்காவானவள் மனது தாங்குமா என்ன ஓடிச்சென்று அவளை அணைத்து கொண்டாள்..

ஒன்னும் இல்லடா... ஒன்னும் இல்ல ரிலாக்ஸ் என அதியின் முதுகை ஜானு வருடி கொடுக்க அழுகை கொஞ்சம் மட்டு பட்டது..ஏன் அதி அடம் பிடிக்கிறே..வா மருந்து போட்டுக்கலாம் அப்பா அண்ணாலாம் வெளியே வெய்ட் பண்றாங்க அடம் பிடிக்காம ட்ரீட்மெண்ட் பண்ணிக்கோ அதி இல்லனா அப்பா மனசு கஷ்ட்டப்படும் என ஜனனி பேசி புரிய வைக்க சமத்து பிள்ளையாய் மருந்து போட்டு கொண்டாள் அவந்திகா.

பிரபு உணவு வாங்கி வந்து கொடுக்க ஜனனி ஊட்டி விட்டாள் மித்ரன் தலையை சீவி விட்டான்..ஒரு ஓரமாக ராம் நின்றிருக்க தயங்கி தயங்கி அவரிடம் சென்ற கோபியோ... மச்சான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க..கொஞ்ச நாள் அவந்திகா உங்க கூடவே இருக்கட்டுமே..என முடிக்கும் முன்னரே கொஞ்ச நாள் என்ன மாமா கொஞ்ச நாள் இனி அவ உங்க வீட்டு பக்கமே வர மாட்டா..என் தங்கச்சி விருப்பம் இல்லாமையே உங்க மகன் தாலி கட்டுனதும் இல்லாம கல்யாணம் ஆன முதல் நாளே அவள வெளியே தள்ளி கொடுமை படுத்தியிருக்கான்.

இனியும் உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சா அவ உயிருக்கு உத்திரவாதம் இல்ல என் தங்கச்சி என் கூடவே இருக்கட்டும் மித்ரன் பொறிந்து தள்ளினான்.

நீ சொல்றது சரிதான் தம்பி..டேய் வேந்தா என் பேச்சுக்கு மரியாதை இருந்தா இனி நீ அவந்திகா வாழ்க்கைல வர கூடாது..இல்ல உங்க அண்ணன மாதிரியே என்ன மதிக்க மாட்டனா ஒரு பிரச்சனையும் இல்ல இனி ஒரு மகனா நீ எனக்கு எந்த கடமையும் செய்ய கூடாது கோபி உறுதியாய் சொல்ல வேந்தனோ அமைதியாய் நின்றான்.

என்ன நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறிங்க என் கிட்ட யாராச்சும் ஒரு வார்த்தை கேட்டிங்களா..?? என்றாள் அவந்திகா ஜூஸை குடித்த படி..

உன் கிட்ட என்ன கேட்கனும் சாப்பிட வேற எதாவது வேணுமானா கேக்கனும் நேர்ம காலம் தெரியாமல் கலாய்த்து தள்ளினான் பிரபு.

அது வேற டிபார்ட்மெண்ட் இது வேற டிபார்ட்மெண்ட்.. கொஞ்சம் வாய மூடிட்டு ஓரமா நில்லு இல்ல லன்ச்க்கு உன் பர்ஸ காலி பண்ணிடுவேன் என்று பிரபுவை அவந்திகா மிரட்டிட வாயில் கை வைத்து நின்று விட்டான் புது மாப்பிள்ளை.

என்ன சொன்ன அண்ணா பையா உன் கூடவே இருக்கனுமா நோ... முடியாது நா அந்த தாய் கெழவி வீட்டுக்கு தான் போவேன்..உன் கூட வர மட்டேன் உன்னோட வந்தா இவன யாரு பழி வாங்குறதாம்..

அவன எதுக்குமா நீ பழி வாங்க போற கோபி புரியாமல் கேட்க..வேற எதுக்கு அங்கிள் என்ன கேக்காம தாலி கட்டுனதுக்கும் விடிய விடிய வெளியே தள்ளுனதுக்கும்..ஹாஹா பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம் வாங்காம விட மாட்டா இந்த அவந்திகா...வீர வசனம் பேசி அவள் வேந்தனை பார்த்து சிரிக்க..அவனுக்கோ மீண்டும் கோபம் வந்து சேர்ந்தது.

எனக்கு மட்டு உன் கூட வாழ ஆசையா என்ன..நீ தானே ஜானுவ ஓடி போக வச்சே அதுக்கு பழி வாங்க தான் உன்ன கட்டிக்கிட்டேன் என்றான் வேந்தனும் கெத்து குறையாமல்.

அட யார்டா நீ..சும்மா நான் தான் ஓடி போக வச்சேன் ஓடி போக வச்சேன்னு தேஞ்சி போன ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க...

நீ பாத்தியா அவ ஓடி போனத இவ சுவரேறி குதிக்க ஏணி மட்டும் தான் நா எடுத்து கொடுத்தேன் அப்போ அவளுக்கு உதவி செஞ்ச ஏணிய பழி வாங்கு, இல்ல இவள கூட்டிட்டு போன ஆட்டோ டிரைவர பழி வாங்கு, அதுவும் இல்லையா இவளுக்கு ரெஜிஸ்டர் பண்ணி வச்ச அந்த ஆஃபிசர பழி வாங்கு இதெல்லாம் விட்டுட்டு ஏணி தூக்குன என்னைய மட்டும் எதுக்கு மேன் டார்கெட் பண்ற.

உனக்கு அவந்திகானா என்ன தக்காளி தொக்கா நுனி மூக்கு சிவக்க அவள் கத்தி வைக்க ஐயோ பாவம் என்ற ரீதியில் அனைவரும் வேந்தனை பார்த்து வைத்தார்கள்.

உங்க மனசுல என்ன மாமா நினைச்சிட்டு இருக்கிங்க நா பண்ண தப்புக்கு நீங்க எதுக்கு அவள பழி வாங்க பாக்குறிங்க..தப்பு பண்ணது நா தண்டனைய எனக்கு குடுங்க என எவுந்து நின்றாள் ஜனனி.

உனக்கு எப்படி ஜானுமா என்னால தண்டனை கொடுக்க முடியும்..கலங்கி போனவன் அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் சென்று விட்டான்.

அதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார் கோபி.. மற்றவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டார்கள்..வேந்தனோ தன் ஃபேக்டரிக்கு செல்ல தயாராகி கீழே வர அதியும் கோபியும் வீட்டிற்குள் வந்தார்கள்.

ஹோ இவ உயிரோட தான் இருக்காளா..நா என்னவோ இன்னேரம் கதை முடிஞ்சிருக்கும்னுல நெனச்சேன்..ஜாடை பேசிய படி சாரதா தட்டில் இருந்த சிக்கனை எடுக்க வெடுக்கென அதனை பிடுங்கி கொண்டாள் அவந்திகா.

காடு வா வாங்குது வீடு போ போங்குது நீயே உயிரோட இருக்கும் போது சின்ன வயசுலயே நா ஏன் சாகனும் தாய் கெழவி..அப்பறம் இவ்வளவு சிக்கன் சாப்பிட்டா கொலஸ்டிரால் கொழுப்பு எல்லாம் கூடி இன்னைக்கே செத்தாலும் செத்துற போற..என மேசையில் சிக்கன் வைத்திருந்த தட்டை தன் கையில் எடுத்து கொண்ட அவந்திகா.

அங்கிள் இந்த வீட்டுல உள்ள ஒரு நல்ல மனுஷன் நீங்க மட்டும் தான் அதனால உங்களுக்கு மட்டும் சிக்கன் பீஸ் தாரேன் என்றவள் கோபிக்கு மட்டும் சிக்கன் கொடுத்து விட்டு தட்டோடு அறைக்கு தூக்கி கொண்டு போய்விட சாரதாவால் அவளை முறைத்து பார்க்க மட்டுமே முடிந்தது.

காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே...கண்ணதாசன் இல்லையே கவிதை எழுதவே..

கண்ணாடி முன் நின்று தலை சீவி கொண்டிருந்தவனை பாட்டு பாடி வேண்டுமென்றே சீண்டி பார்த்தாள் வேந்தனின் மனைவியானவள்.

இப்போ நீ வாய மூடல பல்ல உடைச்சிடுவேன்..பற்தளை கடித்து உறுமினான் அவன்.

சரிங்க மாமா குட்டி..ஆமா ஃபேக்டரிக்கா போற என்னையும் கூட்டிட்டு போறியா இந்த கந்தர்வ கோட்டைக்குள்ள இருக்க ரொம்ப போரடிக்கிது.

எதுக்கு அங்கேயும் வந்து வம்பு பண்ணி என்னை டென்ஷன் பண்ணவா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் வீட்லயே இரு..

எவ்வளவு நேரம் தான் வீட்டலயே இருக்கதாம் நீ அந்த பக்கம் போனதும் உங்கம்மா சொன்ன மாதிரி என்ன கிணத்துல தூக்கி போட்டுட்டா நா என்ன பண்றது.. எனக்கு வேற நீச்சல் தெரியாதே..நீ கூட்டிட்டு போ நா எப்படி வேல செய்வேன் தெரியுமா வேலைனு வந்துட்டா நா வெள்ளைக்காரி காலரை தூக்கிவிட்டு சொன்னவளை ஏற இறங்க ஒரு மாதிரியாக பார்த்தான் வேந்தன்.

நீ வேலைக்கு போய் ஒரு நாள் கூட நா கண்டதே இல்லையே..எப்போ பாரு ஊரை சுத்திக்கிட்டு வெட்டி வம்பு வளர்த்துக்கிட்டு இல்ல திரியுவே..ஆமா என்ன படிச்சிருக்க நீ..

ஃபேஷன் டிசைனிங்..படிச்சிருக்கேன் மாமா குட்டி இது வரைக்கும் எனக்கு எவனும் வேலை குடுக்கல நீ குடுத்து பாரு தீயா வேலை செய்வேன்.

இது வரைக்கும் வேலை குடுக்கலையா ஏன் என்றான் வேந்தன் புருவம் சுருக்கி.

ஏன் குடுக்கலனா இது வரைக்கும் வேலை கேட்டு நா எங்கேயும் போகல அதனால யாரும் எனக்கு வேலை குடுக்கல என்றவளை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதென்றே வேந்தனுக்கு தெரியவில்லை.

நீ ஒரு அரகிறுக்குனு தெரியாம கேட்டுட்டேன் தாயே..வா போவோம் என அவளையும் அழைத்து கொண்டு வேந்தன் செல்ல அவளோ ஹாலில் அமர்ந்திருந்த சாரதாவிற்கு பழிப்பு காட்டிய படியே வேந்தன் பின்னால் சென்றாள்.

தொடரும்...

<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>


HTML5 Icon


HTML5 Icon


HTML5 Icon


HTML5 Icon